சினிமா செய்திகள்
கவிஞர் கண்ணதாசன் விரும்பிய கார்; கிடைக்காமல் ஏமாந்தும் போனார்
கவியரசர் கண்ணதாசனிடம் ஏற்கனவே ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பர் வைத்திருந்த வெளிநாட்டு கார் மீது விருப்பம். அந்த நண்பரும் அதை விற்கப் போகிறார்
ரஜினிகாந்த் மனதில் எழுத்தாளர் பாலகுமாரன்
மே 15 - 2018.எழுத்தாளர் பாலகுமாரன் இறந்து போனார்.அஞ்சலி செலுத்தி விட்டு வந்த ரஜினி அன்றைய தினம் ஒரு முக்கிய முடிவையும் எடுத்தார்.- பாட்ஷா 2- இனி இல்லவ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் எஸ்தர் அனில்
கமல்ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள்
 ‘ராயன்’ திரைப்படம் குறித்த சில தகவல்
தனுஷ் நடித்து முடித்துள்ள ஐம்பதாவது திரைப்படம் ராயன் என்பதும் தனுஷ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பண
வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸ்
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் "கங்குவா". இதுவரை தமிழ் திரையுலகம
குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது
அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்ப
சினிமாவில் திறமைலாம் தேவையில்ல- மனம் திறந்த பிரபல நடிகை
பெங்காலி மொழி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகையாக வளர்ந்தவர் ரிமி சென். இந்தியில் பிரபலமான தூம், தூம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர்
அபராதத் தொகை செலுத்தினார் எம்.ஜி.ஆர்.
1987.எம்ஜிஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். அப்போதுதான் 'ஆனந்த விகடன்' அட்டையில் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்த அந்த ஜோக் வெளிவந்தது. அதை எடுத்துச்
ஸ்டராப்லெஸ் உள்ளாடையில் ஜான்வி கபூர்
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்வி கபூர் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.இவர் வ
புத்தம் புது லுக்கில் லெஜண்ட் சரவணன்
ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘தி லெஜண்ட்’. இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன், விவேக், நாசர், சுமன் உள்ளிட்ட பலர் நடித்திருந
அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு படமாக்கப்பட்ட கார் காட்சி ஒன்றின் வீட
சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்
இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இ
Ads
 ·   ·  582 news
  •  ·  0 friends
  • 1 followers

சர்வதேச T20 போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஓய்வு

சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஏழு ஓட்டங்களால் வீழ்த்தி இரண்டாவது முறையாக இந்தியா கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.

இதன் பின்னர் இருவருமே தங்களின் ஓய்வை அறிவித்துள்ளனர். இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை விருதை வெற்றி விராட் கோலி, இதுவே தனது கடைசி சர்வதேச T20 போாட்டி என தெரிவித்திருந்தார்.

“எதை அடைய வேண்டும் என நினைத்தோமோ அதை அடைந்துள்ளோம். இதுவே எனது கடைசி T20 உலகக் கிண்ணம், அடுத்த தலைமுறை பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது” என விராட் கோலி தெரிவித்திருந்தார்.

இதனிடையே, போட்டியின் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மாவும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

"T20 போட்டிகளில் இருந்து விடைபெற இதைவிட சிறந்த நேரம் எதுவுமில்லை," இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம்.

என் வாழ்க்கையில் இந்த ஒரு தருணத்திற்கான நான் மிகவும் ஆசைப்பட்டேன். இறுதியில் நாங்கள் இலக்கை அடைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று அவர் கூறினார்.

இதேவேளை, இதுவரை 125 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 48.69 சராசரியுடன் 4188 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதில் ஒரு சதம் மற்றும் 38 அரைச்சதங்கள் அடங்கும். மேலும் சர்வதேச T20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்திருக்கிறார். இதுவரை அவர் 16 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

அதேபோன்று 159 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் ஷர்மா 32.05 சராசரியுடன் 4231 ஓட்டங்களை குவித்துள்ளதுடன் தற்போது T20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களில் முதலிடத்தில் இருக்கின்றார்.

அத்துடன், ஐந்து சதங்கள் மற்றும் 32 அரைச்சதங்களையும் அவர் பெற்றுள்ளார். மேலும் 14 முறை ஆட்டநாயகன் விருது வென்றிருக்கிறார்.

இதேவேளை, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் நேற்றையப் போட்டியுடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

  • 480
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads