- · 5 friends
-
I
எட்டி பழுத்து என்ன? ஈயாதார் வாழ்ந்து என்ன?
எட்டிமரம் பழுத்து என்ன,
ஈயாதார் வாழ்ந்து என்ன?
கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்
கனிகள்உப காரம் ஆகும்;
சிட்டரும்அவ் வணம்தேடும் பொருளைஎல்லாம்
இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்,
மட்டுஉலவும் சடையாரே! தண்டலையா
ரே! சொன்னேன்! வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும், ஈயாதார்
வாழ்ந்தாலும் என்உண் டாமே?
இதன் பொருள் ---
மட்டு உலவும் சடையாரே --- மணம் கமழும் திருச்சடையை உடையவரே!
தண்டலையாரே --- திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே எழுந்தருளி உள்ள இறைவரே!
வனங்கள் தோறும் எட்டி மரம் பழுத்தாலும் --- காடுகள் எங்கிலும் எட்டி மரம் பழுத்து விளங்கினாலும்,
என் உண்டாம் --- அதனால் என்ன பயன் உண்டாகும்?
ஈயாதார் வாழ்ந்தாலும் --- பிறருக்குக் கொடுத்து உதவும் பண்பு இல்லாதவர் வாழ்வதனாலும்,
என் உண்டாம் --- அதனால் என்ன பயன் உண்டாகும்?
கட்டு மாங்கனி வாழைக்கனி பலவின் கனிகள் உபகாரம் ஆகும் --- பழுப்பதற்காகக் கட்டி வைக்கப்படுகின்ற மா, வாழை, பலா ஆகிய இவற்றின் பழங்கள் எல்லோருக்கும் பயன்படும்;
அவ்வணம் --- அது போலவே
சிட்டரும் தேடும் பொருளை எல்லாம் இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் --- அறிவில் சிறந்த நல்லோர் தாம் சேர்க்கும் பொருள் முழுவதையும் இல்லை என்று வருபவருக்கே அளித்துச் சிறப்புடன் வாழ்வார்கள்.
விளக்கம் --- சிட்டர் --- அறிவு உடையோர், நல்லோர், சான்றோர்.
பயன் மரம் உள் ஊர்ப் பழுத்து அற்றால், செல்வம்
நயன் உடையான்கண் படின்
என்றார் திருவள்ளுவ நாயனார்.
‘எட்டி பழுத்து என்ன? ஈயாதார் வாழ்ந்து என்ன?' என்பன பழமொழிகள்.
எட்டி மரம் பழுத்தாலும், அந்த பழங்களை உண்ண முடியாது. அதுபோல் மற்றவர்க்கு உதவி செய்யாதோர் வாழ்ந்து என்ன பயன் என்பதே இதன் விளக்கம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·