வன்னி

 • 49
Membership
Administrator
Info
Who can post to my profile:
Array
Organization Name:
வன்னி
Category:
Friends count:
Followers count:
Achievements

Basic

Total points: 531

4471 point(s) to reach

வன்னி தளத்தில் இணையுங்கள்.

வன்னிய பற்றிய (மட்டுமே) உங்கள்

வீடியோ, புகைப்படங்கள், செய்திகள்,

கட்டுரைகள், கதைகள் மற்றும் பலவற்றை

நீங்கள் பதிவிடலாம்.  நன்றி


வன்னி இலங்கை வட மாகாணத்தின் ஒரு பகுதியாகும்.  முல்லைதீவு, கிளிநொச்சி , மன்னார், பரந்தன், மற்றும் வவுனியா ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கிய பெருநிலப் பரப்பு வன்னி அல்லது வன்னிப் பெருநிலப்பரப்பு எனப்படுகின்றது. இது தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமாகும்.

வன்னி
Empty
typing a message...
Connecting
Connection failed
Added a post 
வன்னியை பொறுத்த வரையில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாக  காணப்படுகின்ற போதும் கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விவசாயிகள் வருடந்தோறும்  பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.தற்போது காலபோக பயிர் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அவற்றைக்கட்டாக்காலி கால் நடைகளிடமிருந்து பாதுகாத்தல் என்பது விவசாயிகளுக்கு பாரிய பிரச்சனையாகவுள்ளது.அதேபோன்று கால்நடைப்பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பயிர்ச்செய்கை காலங்களில் வீதிகளிலும் பிறஇடங்களிலும் வைத்துப் பராமரிப்பதில் பாரியநெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிய நிலை காணப்படுகின்றது.தற்போது நவீன முறையிலான உள்ளக முறைகளில் கால்நடைகளை வளர்ப்பதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்ற போதும் அதற்குள் பண்ணையாளர்கள் உடனடியாக செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது.அதாவது கால்நடை வளர்ப்பில் திறந்த வெளி வளர்ப்பு முறையையே பண்ணையாளர்கள் விரும்புகின்றனர்.கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போது இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன. ஆனால் அதற்கான மேச்சல் தரவைகள் என்பது இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனை அமைப்பதற்கு அதிகாரிகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றபோதும் அது கை கூடுவதாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக செய்கையின்போது சுமார் ஐம்பத்தி ஒன்பதாயிரம் ஏக்கர் வரையான நிலப்பரப்பில் காலநெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் சுமார் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் இவற்றைவிட ஆயிரத்திற்கும் மேற்பட்ட எருமை மாடுகளும் உள்ளன. இவ்வாறு பயிர் செய்கை காலங்களில் இவற்றை வைத்து பராமரிக்கக்கூடிய மேச்சல் தரவைகள் எவையும் கிளிநொச்சி மாவட்டத்தில்  இல்லை.  இவற்றுக்கான மேச்சல்தரவைகளை அமைப்பதிலும் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.கடந்த காலங்களில் கால்நடைகளின் மேச்சல் தரவைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் பல குடியிருப்பு நிலங்களாகவும் பயிர் செய்கை நிலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.இதனால் கால் நடை பண்ணையாளர்கள் பயிர்செய்கை காலங்கள் தவிர்ந்த ஏனைய காலங்களிலும் சிறுபோக செய்கை காலங்களிலும் பயிர்செய்கை மேற்கொள்ளப்படாத வயல் நிலங்களில் வைத்து தமது கால்நடைகளை பராமரித்து வருகின்றனர்.ஆனால் காலபோக செய்கை காலங்களில் அவ்வாறு பராமரிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.இவ்வாறான காலப்பகுதிகளில் கால்நடைகளை பெரும் சிரமங்களின் மத்தியில் இடத்திற்கு இடம் மாற்றிமாற்றி பராமரித்து வருகின்றனர். இதனால் பல சட்டரீதியான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.பண்ணையாளர்கள் மேச்சல் தரவைகள் இன்மையால் பயிர்செய்கை காலங்களில் குளங்களின் அலைகரைப்பகுதிகளில் வைத்து பராமரித்து வருகின்றபோது குளங்களின் நீர் மட்டம் அதிகரிக்கும் போது அவற்றை அங்கிருந்து வெளியேற்றி காடுகளிலும் ஏனைய இடங்களிலும் வைத்து பராமரித்து வருகின்றனர்.இவ்வாறு கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் திறந்தவெளி வளர்ப்பு முறைகளில் கால்நடைகளை வைத்து பராமரித்து வரும் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு மேச்சல்தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.கால்நடை வளர்ப்பு என்பது மாவட்டத்தின் உற்பத்தி மக்களின் போசாக்கு அதனை மேற்கொள்ளும் குடும்பங்களின் வாழ்வாதாரம் என பல்வேறு விடயங்களில் முக்கிய பங்கினை வகிப்பதால் இதனை மேம்படுத்த வேண்டிய தேவையே உள்ளது.இன்று நவீன முறைகளில் உள்ளக வளர்ப்பு முறைகள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளபோதும் அதற்குள் திடீரென செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் பண்ணையாளர்கள் உள்ளக வளர்ப்பு முறைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டங்கள் உரியமுறைகளில் முன்னெடுக்கப்படவேண்டும்.பாரம்பரிய முறையாகவும் பரம்பரை பரம்பரையாகவும் மேற்கொள்ளப்;பட்டு வரும் திறந்த வெளி வளர்ப்பு முறைகளையே மேற்படி பண்iயாளர்கள் பின்பற்றி வருகின்றனர். எனவே மேற்படி மேச்சல் தரவைகள் மிகமிக முக்கியமன ஒன்றாக காணப்படுகின்றது.எனவே மக்களின் வாழ்வாதாரம் போசாக்கு என்பவற்றைக் கருத்திற்கொண்டு கால்நடைகளுக்கான மேச்சல்தரவைகளை அமைப்பதற்குரிய காணிகளை விடுவித்து மேச்சல் தரவைகளை அமைத்துத்தருமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 • 59
Added a post 
மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அவர்கள் தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம் வன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.இதனால் இவ்வாறான கிராமங்களில் வாழ்ந்து வரும் ஏனைய வறிய மக்கள் வாழ்வில் அன்றாடம் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பிரதேசமாக காணப்படும் மாந்தைகிழக்கு பிரதேசத்தில் கடந்த 10 வருடங்களாக மிகவும் பழமை வாய்ந்த பல கிராமங்களில் இருந்து வசதி வாய்ப்புக்கள் நோக்கி மக்கள் குடி பெயர்து செல்லும் நிலை காணப்படுகின்றது.மாந்தை கிழக்கின் பழமைவாய்ந்த பனங்காமம் மூன்று முறிப்பு போன்ற கிராமங்களில் இவ்வாறான நிலை காணப்படுகின்றது.குறிப்பாக, இந்த பிரதேசங்களில் மாணவர்களுக்கான உரிய கல்வி வசதி இன்மை மருத்துவ வசதி, போக்குவரத்து வசதிகள் இன்மை என்பன பிரதான காரணிகளாக அமைந்துள்ளன.மாந்தைகிழக்கில் 1962ம் ஆண்டுகளுக்கு பிற்பகுதியில் பாண்டியன்குளம் கரும்புள்ளியான் விநாயகபுரம் பாலிநகர் கொல்லவிளான்குளம் சிவபுரம் போன்ற கிராஙம்கள் உருவாகுவற்கு முன்புள்ள வரலாற்று தொன்மை கொண்ட மேற்படி கிராமங்கள் எதிர்காலத்தில் இல்லாது போய் விடுமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.பனங்காமம் மிகவும் பழமையான வன்னியின் பழம் பெரும் கிராமமாகும். அதாவது கி.மு. ஏழாம் நூற்றாண்டு முதல் இலங்கையின் கரையோர மாகாணங்களில் பெரும் கற்கால பண்பாட்டு மக்கள் குடியேறி வாழ்ந்தனர் என்றும் அக்காலப்பகுதியில் கிராமங்கள் நகரங்கள் பண்டமாற்று நிலைகள் குறுநில அரசுகள் உருவாகின.அவ்வாறு உருவாகிய கிராமங்களில் ஒன்று தான் பனங்காமம் பற்று என்றும் 17ம் 18ம் நூற்றாண்டுகளில் ஒல்லாந்தர் அடங்காப்பற்று என்பதை வன்னி என்று குறிப்பிட்டனர் என்றும் இதில் பனங்காமம் கரிக்கட்டுமூலை கருநாவல் பற்று முள்ளியவளை மேல் பற்று, தென்னைமரவாடி, என்ற ஆறு பிரிவுகள் காணப்பட்டன என்று பனங்காமம் பகுதியில் அமைந்துள்ள பஞ்சிங்கேஸ்வரர் ஆலய வரலாற்று நூலின் வாயிலாக அறியமுடிகின்றது.இதேவேளை பாணன்கமம் என்ற பெயரே காலப்போக்கில் பனங்காமம் என்று மருவி வந்துள்ளதையும் அறியமுடிகின்றது.அதாவது, இராவனேஸ்வரனின் தம்பியின் பரம்பரையினர் இலங்கை இராசதானியில் ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவில் இருந்து வந்த பாணன் குலத்தைச்சேர்ந்த அந்தகன் ஒருவர் அரசன் முன்னிலையிலே யாழ் வாசித்து பரிசில் பெற்றான் என்றும் அவனுக்கு பரிசாக வழங்கப்பட்ட கமம் என்பதே மருவி காலப்போக்கில் பனங்காமம் என்று பெயர் பெற்றுள்ளதாகவும் வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.இவ்வாறு வரலாற்றுத்தொன்மை கொண்ட பனங்காமம் மற்றும் அதனை அண்டிய பழம் பெரும் விவசாயக்கிராமங்களான மூன்றுமுறிப்பு வீரப்பராயர் குளம், இளமருதன்குளம், கொம்புவைத்தகுளம், போன்ற கிராமங்களுக்கான பிரதான போக்குவரத்து பாதையில் எந்தவித போக்குவரத்து வசதிகளும் இல்லை மாறாக மாலை 4.00 மணியில்இருந்து மறுநாள் காலைவரையும் காட்டுயானைகளின் ஆக்கிரமிப்பு, கிராமங்களில் கல்வி வசதிகள் எதுவுமில்லை, மருத்துவ வசதிகள் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்யவும் விவசாயவிளை பொருட்களை சந்தைப்படுத்தவும் போக்குவரத்து வசதியில்லை சீரான வீதியின்மை என்ற போராட்டத்திற்கு மத்தியில் இருபது இருபத்தி ஐந்து கிலோமீற்றர் சென்று அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.இவ்வாறான நிலையில் மேற்படி பழம் பெரும் கிராமங்களில் மீள்குடியேறி வாழ்ந்த எண்பது வீதமான குடும்பங்கள் அன்மைக்காலமாக இங்கிருந்து இடம்பெயர்ந்து வவுனியா யாழப்பாணம் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்துள்ளன.இந்நிலையில் வருமானம் குறைந்த மற்றும் வறுமை நிலையில் வாழும் பல குடும்பங்கள் குறித்த கிராங்களில் வாழ்ந்து வருகின்றன. இங்கிருந்து பெருமளவான குடும்பங்கள் வசதி வாய்ப்புக்களை தேடிச்சென்றுள்ள நிலையில் மேற்படி குடும்பங்கள் அன்றாடத்தேவைகளுக்காகவும் பிள்ளைகளின் கல்விக்காகவும் மருத்துவத்தேவைகளுக்காகவும் அன்றாடம் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருகினறனர்.இதனை விட இரவு வேளைகளில் காட்டுயானைகளின் தொல்லை வாழ்வாதார பயிர்களை பாதுகாக்க முடியாத நிலை காட்டுயானை மற்றும் ஏனைய விலங்குகளால் தொல்லை உயிரச்சுறுத்தல்கள் என்று பல்வேறு துன்பங்களை அன்றாடம் எதிர்நோக்கி வருகின்னர்.இங்கு அபிவிருத்தி என்பதில் மின்சாரம் மாத்திரமே 98 வீதமான மக்களுக்கு கிடைத்திருக்கின்றது. ஏனைய தேவைகள் என்பது இது வரை நிறைவுற்றதாகவில்லை என்றே கூறமுடியும்.இவ்வாறான கிராமங்களில் அடிப்படைப் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்து தருமாறு மேற்படி கிராம மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் எப்போது நிறைவேற்றப்படும்.
 • 61
Added a news 
18, 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.  நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நேற்றைய தினம் எமது மாவட்டத்தின் கொவிட் நிலவரம் தொடர்பான மாவட்ட மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் கொவிட் நிலைமை எவ்வாறு அமைந்துள்ளது என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றாளர்களுடைய எண்ணிக்கை குறைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. தொடர்ந்துமாக எமது மாவட்டத்தினுடைய மக்கள் தங்களுடைய அன்றாட விடயங்களை செய்கின்றபொழுது தங்களையும், தங்கள் சார்ந்தவர்களையும், சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.அதேவேளை, எதிர்வரும் 21ம் திகதி 200 மாணவர்களிற்கு குறைந்ததான மாணவர் தொகை கொண்ட ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்கின்ற செயற்பாடு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.அந்த வகையில் எமது மாவட்டத்தில் 52 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த 52 பாடசாலைகளையும் ஆரம்பிப்பதற்கு வேண்டியதானமுன்னேற்பாடுகள் தொடர்பாகவும் இன்றைய தினம் ஆராயப்பட்டது.அதற்கு ஏற்றதான விடயங்களை கல்வி திணைக்களம் முன்னெடுத்துள்ளது. அதேவேளை குறித்த நாளில் பாடசாலை ஆரம்பிப்பதில் ஏற்படுகின்ற சிக்கல் நிலைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு அவ்வந்த பிரதேச செயலாளர்கள் ஊடாக கண்காணிக்கப்பட்ட உடன் நடவடிக்கை எடுக்கப்படும் வகையிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.பாடசாலை மாணவர்களிற்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பான செயற்பாடுகள் இடம்பெறவுள்ளது. 18, 19 வயது மாணவர்களிற்கான தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகளும் வரும் 21ம் திகதி பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுதுவரை 7057 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது 166பேர் நோயாளர்களாக சிகிச்சை பெற்ற வருகின்றனர். நேற்றைய தினம் 14பேர் மாத்திரமே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அதேவேளை இறப்பு வீதமும் குறைந்தே காணப்படுகின்றது.ஒவ்வொரு வயது பிரிவினராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கும், பின்னர் 30 தொடக்கம் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களிற்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வந்தது.அந்த வகையில் எமது மாவட்டத்தில் 38428 பேர் தடுப்பூசி ஏற்றாதவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்களிற்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளும் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் அவர்கள் ஆர்வம் இன்மையைதான் அவர்கள் காண்பித்திருக்கின்றார்கள். அதேவேளை 60 வயதுக்கும் மேற்பட்டவர்களும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் பின்னிக்கின்றார்கள்.அவ்வாறானவர்களை ஊக்குவித்து அவர்களிற்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கு பிரதேச செயலாளர்கள் ிகராம மட்டத்திலே வீடு வீடாக சென்று அவர்களை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டார்.
 • 219
Added a news 
21ம் திகதி பாடசாலைகள் திறக்க ஆசிரியர்கள் வராவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணியிலமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.2 நாட்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயன்படுத்தி அவர்களிற்கான விளையாட்டு, கலை பாடங்களை புகட்டக் கூடிய திறமை வாய்ந்த உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களில் உள்ளனர்.நீண்ட நாட்கள் இடைவெளியின் பின்னர் பாடசாலைக்கு திரும்பும் மாணவர்களை அன்புடன் வரவேற்க வேண்டும். அன்று ஆசிரியர்கள் சமூகமளக்காவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயன்படுத்தி அவர்களிற்கான விளையாட்டு, கலை பாடங்களை கற்பிக்க முடியும்.அனைத்து பிரதேச செயலாளர்களும் பாடசாலை நடவடிக்கைகளை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர் என கலந்துரையாடலின் போது மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
 • 182
Added a news 
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணி 5 ஏக்கரை கடற்படையினருக்கு அளவீடு செய்து வழங்க எடுத்த முயற்சி பொது மக்களின் எதிர்பால் கைவிடப்பட்டுள்ளது.அளவீட்டு பணிக்காக நில அளவையாளர்கள் அப்பகுதிக்கு காலை சென்றுள்ளனர். இந்த நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
 • 182
Added a news 
17.10.2021 இரவு 07.30 மணி அளவில் முகமாலை வடக்குப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக பொருட்களை வாங்கிக் கொண்டு வந்த ஒருவர் மீது இனந்தெரியாத குழுவினர் சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இதனால் தலை மற்றும் கை கால்களில் பலத்த காயமடைந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முகமாலை வடக்கை சேர்ந்த தனபாலசிங்கம் விஜயகாந்த் வயது 47 என்பவர் இவ்வாறு காயமடைந்த நிலையில் பளை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மைக்காலமாக முகமாலை பகுதியில். சட்டவிரோத செயற்பாடுகள் களவுகள் போன்ற இடம்பெற்று வருவதுடன், தற்பொழுது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறான நிலை தொடர்பில் கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதனை உரியவர்கள் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் வேண்டுகோள் வருகின்றனர்
 • 181
Added a news 
கிளிநொச்சி டிப்போ சந்தியில் ரிப்பர் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று காலை 9 மணியளவளவில் இடம்பெற்றது. வவுனியா திசையிலிருந்து ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்த ரிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.ஏ9 வீதியில் கிரவல் ஏற்றி பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திற்கு சென்று விபத்துக்குள்ளாகியது. குறித்த விபத்து சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 • 197
Added a news 
கிளிநொச்சி கிழக்கு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயச் செய்கைக்கு தேவையான உரத்தை பெற்றுத் தருமாறு கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது டன் மாவட்ட அரசாங்க அதிபர்ஊடாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இருந்து மாவட்ட செயலகம் வரை சென்ற பேரணி மாவட்ட செயலகத்தில் நிறைவடைந்து.  இலங்கை ஜனாதிபதி விவசாய அமைச்சர் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான மகஜர் கையளிக்கப்பட்டது மேற்படி மகஜர்களை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் பெற்றுக் கொண்டுள்ளார் குறித்த போராட்டத்தின்போது சேதனப் பசளை உரிய தரத்தில் கிடைப்பதில்லை.மாவட்டத்தில் தேவையான 40 விதமான நிலம்  பயிர் செய்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை  பெற்று தருமாறு கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
 • 182
Added a news 
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த இருவரும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியை, யாழிலிருந்து மின்கம்பங்கள் ஏற்றிவந்த வாகனம் மோதியுள்ளது.குறித்த மின்சார சபை வாகனம் மற்றுமொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோதே முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே படுகாயமடைந்துள்ளனர். சம்வம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
 • 200
Added a news 
தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் மண் ஏற்றியமைக்காக வனலாகா திணைக்கள ஊழியர்கள் தன்னை தாக்கியதாக சாரதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பெரிய பரந்தன் பகுதியை சேர்ந்த சந்திரமோகன் சஜிதன் என்ற 31 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று இரவு அக்கராயன் வீதியை அண்மித்த பகுதியில் ரிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வனலாகா திணைக்களத்தினர் தன்னை இரும்ப கம்பியினால் தாக்கியதாக அவர் குறிப்பிடுகின்றார்.பின்னர், தமது அலுவலகத்திற்கு தன்னை அழைத்து சென்று அதன் பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, தாக்கப்பட்டமை தொடர்பில் குறிப்பிட வேண்டாம் எனவும், வாகனத்திலிருந்து தவறி விழுந்ததாக கூறுமாறும் கூறியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.
 • 169
Added a news 
கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இராணுவ வாகனமும் பாரவூர்தியும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று (14) காலை இடம்பெற்ற விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,படகு ஒன்றினை இழுத்து சென்ற இராணுவ வாகனமும் சீமெந்து மூடைகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தியும் கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத்தினை அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகி வீதியை விட்டு விலகியுள்ளன.குறித்த விபத்தில் இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் மற்றும் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 • 190
Added a news 
வறுமைக் கோட்டில் உள்ள குடும்பத்திற்கு இராணுவத்தினரால் வீடு கட்டி கையளிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி நகரில் இவ்வாறு படையினரால் வீடு முழுமையாக்கப்பட்டு நேற்றைய தினம் கையளிக்கப்பட்டது.குறித்த கையளிப்பு நிகழ்வு இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது, குறித்த பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு இடை நடுவில் கைவிடப்பட்டிருந்த வீடு இராணுவத்தினரின் நிதி மற்றும், ஆளணியுதவியுடன் பூரணப்படுத்தப்பட்டு இன்றைய தினம் கையளிக்கப்படது.குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய கலந்துகொண்டு வீட்டினை கையளித்ததுடன், அன்பளிப்பு பொருட்களையும் வழஙிகியிருந்தார். தொடர்ந்து மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.இதேவேளை குறித்த நிகழ்வில் 72வது இராணுவ தினத்தையொட்டி 20 குடும்பங்களிற்கு 2000 ரூபா பெறுமதியான உலருணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.குறித்த நிகழவ்ில் முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய , 55வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எம்.கே.ஜயவர்த்தன, பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவையாளர், இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 • 191
 • 223
Added a news 
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்களிடம்  அன்பளிப்புகள் என்ற பெயரில் கட்டாயப்படுத்தி உதவிகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்ற நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் நன்கொடைகள் என்ற பேரில் கட்டயப்படுத்தி உதவிகள் பெறப்படுகின்றன .அண்மையில் ஒருவரிடம் சுமார் ஆறு லட்சம் ரூபா நிதி பெறப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.இவ்வாறு வைத்தியசாலையின் தேவை கருதி கொடையாளர்கள் தாமாக முன் வந்து நன்கொடைகளை வழங்குவதற்கு மாறாக அவர்களிடம் கட்டாயப்படுத்தி உதவிகளை பெற்றுக் கொள்ளுகின்ற நிலைமை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படுகின்றது.குறிப்பாக கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப் படும் நோயாளர்கள் அவர்களது உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இவ்வாறு கட்டாயப்படுத்தி இந்த உதவிகள் பெறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
 • 253
Added a video 
 • 251
வன்னி Videos
My Posts
வன்னி News