Featured News
நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் இதோ:-● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962● கல்வி அமைச்சு – 1988● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905● IMEI மீளாய்வு அலகு – 1909● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977●
Latest News
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்கப் பாடகி கேட்டி பெர்ரி இடையேயான காதல் வதந்தி மாதக்கணக்கில் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக இருந்து வருகிறது.அண்மையில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிதா தன் மனைவியுடன் சேர்ந்து ட்ரூடோ மற்றும் பெர்ரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, இந்த வதந்தி மேலும் தீவிரமடைந்துள்ளது.கிறிஸ்துமஸ் மரம் முன் நின்று பெர்ரியின் தோளில் கை வைத்தபடி ட்ரூடோ இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.அந்த பதிவில் கிஷிதா, கேட்டி பெர்ரியை ட்ரூடோவின் “பங்காளர்” என குறிப்பிட்டது கனடியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.ட்ரூடோவும் அந்தப் பதிவை மீண்டும் பகிர்ந்து, “கேட்டி மற்றும் நான் உங்களுடனும் யுகோவுடனும் அம
கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விடயத்தை கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், கனடாவில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை முன்னதாக சிறு அளவிலான வேலை இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த நிலையில் வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வேலை இல்லா விகிதமும் ஒக்டோபரில் இருந்த 6.9 வீதத்தில் இலிருந்து நவம்பரில் 6.5 வீதமாக குறைந்துள்ளது. இந்தநிலையில், செப்டம்பர் முதல் நவம்பர் வரை மொத்தம் 181,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடா முழுவதும் மருத்துவமனைகள் குழந்தைகளில் காய்ச்சல் தொற்றுகளின் அதிகரிப்பை சந்தித்து வருகின்றன.கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 17 குழந்தைகள் மட்டுமே காய்ச்சல் வைரஸிற்கு உள்ளாகியிருந்த இருந்த நிலையில், இந்த ஆண்டு அதே மாதத்தில் 145 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது எட்டு மடங்கு அதிகரிப்பு என கிழக்கு ஒண்டாரியோ குழந்தைகள் மருத்துவமனை (CHEO) வெளியிட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 12 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவர்கள் பாதுகாப்பு உருவாக இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால் உடனடியாக காய்ச்சல் தடுப்பூசி எடுக்குமாறு மக்களிடம் வலியுறுத்துகின்றனர்.பிற குழந்தைகளுடன்
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம் ஒன்றை மூட கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்ததைத் தொடர்ந்து அந்நிறுவன உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்.இந்நிலையில், அந்த உணவகத்தை கனேடிய நிறுவனம் ஒன்று வாங்கி விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. லண்டனிலுள்ள Regent Street என்னும் பிரபலமான தெருவில் அமைந்துள்ள Victory House என்னும் கட்டிடத்தில் வீராஸ்வாமி உணவகம் என்னும் இந்திய உணவகம் அமைந்துள்ளது.சுமார் 100 ஆண்டுகளாக லண்டனின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன வீராஸ்வாமி உணவகம் அமைந்துள்ள கட்டிடத்தை அலுவலகமாக மாற்ற அதன் உரிமையாளரான Crown Estate என்னும் அமைப்பு முடிவு செய்துள்ளது.உணவகத்துக்கு Crown Estate மாற்று இடம் தருவதாக கூறியுள்ளது என்றாலும், பாரம்பரியத்தை எப்படி இடம் மாற்ற முடியும் என பிரபல பிரி
டிட்வா புயல் பாதிப்பு காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.இலங்கை கடல் பகுதியில் கடந்த மாதம் 26ம் தேதி உருவான டிட்வா புயல் இலங்கையை தாக்கிய பின் வங்கங் கடல் பகுதியில் கடந்த 29-ம் தேதி நுழைந்தது. இந்த புயல் காரணமாக இலங்கையில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.இதையடுத்து இலங்கையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. பாதிக்கப்பட்ட 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1,500 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா சார்பில் நிவாரண பொருட்கள் கடற்படை
கனடாவில், ஸ்காபரோவில் அமைந்துள்ள Church of the Holy Wisdom என்னும் தேவாலயம் சார்பில் ஒரு உணவு வங்கி இயங்கிவந்தது. தேவாலயத்தில் அத்தியாவசிய கட்டுமானப்பணி செய்யவேண்டிவந்ததால் அந்த உணவு வங்கி மூடப்படும் நிலை உருவானது. அப்படியானால், இவ்வளவு நாட்களாக உணவு வங்கியை மட்டுமே நம்பியிருந்த மக்கள் என்ன செய்வார்கள் என்ற கவலை அந்த தேவாலய பாதிரியாரான கெர்லின் ஹென்றிக்கு (Rev. Gerlyn Henry) உருவானது. கெர்லின் இந்திய வம்சாவளியினர் ஆவார். ஆகவே, தன் கணவரிடமும், தேவாலய நிர்வாகிகளிடமும் பேசிய கெர்லின் ஒரு முடிவு எடுத்தார்.அவரது வீட்டில் இருந்த சேமிப்பகம் மற்றும் கார் நிறுத்தும் இடத்திலிருந்த (garage) பொருட்களை எல்லாம் அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தையே உணவு வங்கிக்காக பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்தார் கெர்லி
டொராண்டோவில் இன்று இரவு இரண்டு முதல் நான்கு சென்றி மீற்றர் அளவுக்கு பனி பெய்யக்கூடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த பனிப்பொழிவு, வாரத்தின் குளிர்ச்சியான தொடக்கத்துக்கு பின் வருகிறது. இன்று பகல் அதிகபட்ச வெப்பநிலை –1°C ஆக இருக்கும் என்றும், காற்றின் வேகத்தால் –12°C போல உணரப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.இரவு வெப்பநிலை –5°C வரை குறையும். வாரத்தின் மீதிப் பகுதியிலும் மேகமூட்டமும் லேசான பனிப்பொழிவும் காணப்படும் நிலையில், வெப்பநிலை பனி உறையும் நிலையைச் சுற்றியே இருக்கும்.
இலங்கையில் தித்வா ( ditwah ) சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அந்தவகையில், இன்று திங்கட்கிழமை (01) காலை 9:00 மணி வரை 355 பேர் உயிரிழந்துள்ளதோடு, 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 59,266 குடும்பங்களைச் சேர்ந்த 209,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கண்டி (88) , நுவரெலியா (75) , பதுளை (71), குருநாகலை (37) , மாத்தளை (23) மற்றும் கேகாலை (12) ஆகிய பகுதிகளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அவரது நீண்டநாள் காதலி ஹெயிடனை திருமணம் செய்துகொண்டார்.ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கும், அவரது நீண்டநாள் காதலி ஜோடி ஹெயிடனுக்கும் இன்று கான்பெரா நகரில் திருமணம் நடைபெற்றுள்ளது.இதன்மூலம், பதவியேற்ற பிறகு திருமணம் செய்துகொண்ட முதல் ஆஸ்திரேலிய பிரதமர் எனும் பெருமையை அவர் அடைந்துள்ளார்.இதனைத் தொடந்து, பிரதமர் அல்பானீஸ் - ஹெயிடன் தம்பதிக்கு ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.முன்னதாக, பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கும், அந்நாட்டின் முன்னாள் அரசியல் தலைவர் கார்மல் டெபட் என்பவருக்கும் திருமணமாகி, கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உ
கனடா நாட்டில் உள்ள பிராம்டன் நகரின் மேக் லாக்லின் சாலை மற்றும் ரீமெம்பரன்ஸ் சாலை சந்திக்கும் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.இதில் கீழ் தளத்தில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். மேல் தளத்தில் வசித்தவர்களில் 4 பேர் தீயில் சிக்கி உடல் கருகினர்.கர்ப்பிணியான ஆரஷ்வீர் கவுர் என்ற பெண் உயிர் பிழைக்க ஜன்னலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். எனினும் கருவில் இருந்த குழந்தை இறந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். தீயில் கருகியவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.தீ விபத்தில் காயமடைந்த ஒரு சிறுவன் உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும்
கனடாவின் ஒண்lடாரியோ மாகாணத்தில் 30000 டொலர் பெறுமதியான டிசைனர் சன்கிளாஸ்கள் திருடிய பெண் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.ஒண்டாரியோவின் பிகரிங் நகரின் ஒரு மாலில் இருந்து 30,000டொலர் மதிப்புள்ள டிசைனர் சன்கிளாஸ்கள் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில், டொரண்டோவைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிகரிங் சிட்டி சென்டர் மாலில் உள்ள லென்ஸ் கிராப்ட்ஸ் விற்பனையகத்திற்கு மூன்று பெண்கள் நுழைந்து, 60-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த டிசைனர் கண்ணாடிகளை கொள்ளையிட்டுள்ளனர். காவல்துறையினர் பின்னர் மூன்று சந்தேகநபர்களில் இருவரை அடையாளம் கண்டுள்ளனர்.அதன்படி, அக்டோபர் 26 அன்று டொரண்டோவில் டுன்டாஸ் மேற்கு வீதி மற்றும் ஸ்கார்லெட் வீதி பகுதியிலுள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தப்ப
கனடாவின் பிரம்டன் நகரில் உள்ள சிறி கற்பக விநாயகர் ஆலயத்தில் முகமூடியணிந்த நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அண்மை காலமாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது. ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற வேளையில் உள்ளே புகுந்த முகமூடியணிந்த கொள்ளையர்கள் உண்டியலை கொள்ளையிட்டு தூக்கிக்கொண்டு செல்லும் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.இவ்வாறு கொள்ளையர்கள் கொள்ளையிடும் சந்தர்ப்பத்தில் பக்தர்களும் ஆலய மதகுமாரும் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது.