நான் ஒரு ஏலியன்..உலகைக் காப்பாற்ற வந்திருக்கிறேன் - பகீர் கிளப்பிய சிறுவன்...!!
வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றனரா என்று அவர்களை தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஒரு சிறுவன் தான் ஒரு செவ்வாய் கிரகவாசி என்று கூறி வருகிறான்.டெய்லி ஸ்டாரின் அறிக்கையின்படி...வோல்கோகிராட்டைச் சேர்ந்த போரிஸ் கிப்ரியானோவிச் என்ற ரஷ்ய சிறுவன், தான் ஒரு வேற்று கிரக உயிரினம் என்று கூறுகிறான்.அணுஆயுத அழிவிலிருந்து உலகைக் காப்பாற்றுவதற்காக செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்திருப்பதாகவும் சொல்லிக்கொள்கிறான்.விண்மீன்களுக்கு இடையேயான பயணங்களை மேற்கொள்ளக்கூடியவர்களுடன் முந்தைய வாழ்க்கையை மேற்கொண்டதாக போரிஸ் கூறுகிறான்.மனித இனத்தை அழியாமல் பாதுகாக்க பூமிக்கு அனுப்பப்பட்ட இண்டிகோ குழந்தைகளில் நானும் ஒருவன்.பல ஆண்டுகளாக பூமிக்கு பல முறை விஜயம் வந்து போவதாகவும் அச்சிறுவன் கூறியுள்ளான்.போரிஸின் தாயும் அவரது மகன் மார்ஸிலிருந்து வந்திருப்பதாகக் கூறுகிறார்.