Sign up
Added a news
வட மாநிலங்களில் வேலை வாய்ப்பு இல்லாததால் தினமும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் சென்னையில் தினமும் 1000 முதல் 2000 குடும்பங்கள் குடியேறி கொண்டிருப்பதால் பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் அவர்கள் நிச்சயம் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் எனவே அதை முறியடிக்க வேண்டிய நிலை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னைக்கு தினமும் வந்து குடியேறும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்களால் சென்னை உள்பட தமிழகம் முழுவதற்கு ஆபத்து என அமைச்சர் கே என் நேரு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் தங்கி இருக்கும் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
Added a news
சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக திருப்பூரில் தமிழ் தொழிலாளர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களாக வட மாநில இளைஞர்கள் தமிழகத்தை நோக்கி வேலை தேடி வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் வடமாநிலத்தவர்களின் மக்கள் தொகை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் திருப்பூரில் தமிழ் தொழிலாளர்களை வட மாநில தொழிலாளர்கள் கூட்டமாக தாக்கும் பரபரப்பு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் தமிழ் தொழிலாளர்கள் வட மாநில தொழிலாளரை தாக்கிய நிலையில் அவர்கள் பதிலுக்கு தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
Added a news
உலகம் போர், சுற்றுசூழல் மாசு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணிகளால் மெல்ல அழிந்து வருகிறது. இந்நிலையில் உலக அழிவு குறித்து அபாயத்தை எடுத்துரைக்கும் விதமாக 1947ம் ஆண்டு நோபர் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் உருவாக்கியதுதான் டூம்ஸ்டே கடிகாரம் (Doomsday Clock).இந்த கடிகாரத்தில் முள் நள்ளிரவு 12 மணியை தொட்டுவிட்டால் இந்த உலகம் அழிந்துவிடும் எனப்படுகிறது. உலகம் முழுவதும் ஏற்படும் போர், சூற்றுசூழல் பாதிப்புகளை கொண்டு டூம்ஸ்டே கடிகாரத்தின் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டில் டூம்ஸ்டே கடிகாரத்தின் நேரம் 12 மணி ஆக 3 நிமிடங்களே உள்ளதாக செட் செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த கடிகாரத்தின் நொடிமுள் 12 மணி ஆக 90 வினாடிகளே உள்ளதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல், உக்ரைன் போர், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் பூமி அழிவதற்கு அதிக வாய்ப்புள்ள நிலையை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
Added a news
ஜனவரி 26, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டம் நடப்பது தமிழகத்தில் வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திருவாரூரில் கிராம சபை கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் தென்னங்கன்றுகள் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கிராம சபை கூட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தென்னங்கன்று கொடுக்கப்பட்டது இந்த நிலையில் தென்னங்கென்றை வாங்கியவுடன் கூட்டத்தில் முழுமையாக பங்கேற்காமல் பொதுமக்கள் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் ஒரு சில நபர்களை மட்டுமே வைத்து கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
Added a news
ஆண்டுதோறும் இந்தியாவில் கலை, சமூக சேவை, மருத்துவம், விளையாட்டு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை சிறப்பிக்கும் விதமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள பத்ம விருதுகளில் தமிழர்கள் சிலரும் தேர்வாகியுள்ளனர். 2023ம் ஆண்டிற்கான பத்ம விபூஷன் விருதுகள் ஓவியர் ஷாகிர் உசைன், எஸ் எம் கிருஷ்ணா, மறைந்த முலாயம் சிங் யாதவ் ஆகிய 6 பேருக்கு வழங்கப்படுகிறது.பத்ம பூஷண் விருதுகள் எழுத்தாளர் எஸ் எல் பைரப்பா, தொழிலதிபர் குமார் மங்களம் பிர்லா, பாடகி வாணி ஜெயராம், இன்போசிஸ் சுதா மூர்த்தி உள்ளிட்ட 9 பேருக்கு வழங்கப்படுகிறது.
Featured Discussions
Like us on Facebook
Membership
Unauthenticated
Exchange Rates
My points
Quote of the Day
பழமொழி
"பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்"
Featured Discussions