சிறிலங்கா - இந்தியா பயணிகள் படகு சேவை தொடங்குகிறது
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மிகவும் தாமதமான பயணிகள் படகுச் சேவை ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
" ஏப்ரல் 29 ஆம் தேதி , யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள துறைமுகத்தில் காரைக்கால் மற்றும் காங்கேசன்துறை இடையே படகு சேவை தொடங்கும். ஒவ்வொரு பயணிக்கும் 100 கிலோ தொகுப்புப்படி (பேக்கேஜ் அலவன்ஸ்) மிகவும் சலுகை விலையில் அனுமதிக்கப்படும் ” என்று அமைச்சர் கூறினார்.
இரு நாடுகளின் எந்தவொரு பயணிகள் படகு நடத்துனருக்கும் இந்த சேவையை நடத்துவதற்கான வாய்ப்பு திறக்கப்படும் என டி சில்வா கூறினார். காங்கேசன்துறையில் சிறிலங்கா கடற்படையினரால் பயணிகள் முனையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சேவை நான்கு மணி நேர பயணமாக இருக்கும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.