GomathiSiva
ஒரு பெரிய தொழிற்சாலை, கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் வேலை பார்க்கும் தொழிற்சாலை, எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது.ஒரு நாள் அந்த முதலாளி தொழிற்சாலைக்குள் வலம் வந்தாராம், அப்போது ஒருத்தன் 'மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்' அப்படின்னு படுத்து கிடந்தான்.அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவனை எழுப்பினார், “தம்பி நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ரூபாய் சார் “ அப்படின்னான். உடனே அவர் பாக்கெட்டில் இருந்து பண முடிப்பினை எடுத்து ஒரு பத்தாயிரம் ரூபாயை எடுத்து தூக்கி எரிஞ்சாரு... “இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமா இருக்கு, நான் இங்க சும்மா படுத்துகிட்டு இருக்கிறவனுக்கு சம்பளம் கொடுக்கறதுக்கு இந்த தொழிற்சாலையை நடத்தல..” அப்படின்னு சொன்னாரு.அவன் ஒரு நிமிஷம் அவரை குறுகுறுன்னு பார்த்தான். அப்புறம் அந்த பணத்த வாங்கிகிட்டு வேகமா வெளிய போய்ட்டான். எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க.அப்புறம் முதலாளி எல்லாரையும் கர்வமா பார்த்து… “இனிமே எல்லாம் அப்படி தான் ” (தமிழ் பட டயலாக்) அப்படின்னாரு. அப்புறமா கணக்குபிள்ளயை கூப்பிட்டு “யார்யா அவன் ?” அப்படின்னு கேட்டாரு…அதுக்கு அந்த கணக்கு பிள்ளை சொன்னான் ” டீ கொண்டு வந்த பையன் மொதலாளி .. “இது எப்படி இருக்கு…டீ கொடுக்க வந்தவனுக்கு பத்தாயிரம் குடுத்த முதலாளிய நெனைச்சா எப்படி தெரியுமா இருக்கு?
புருசன் செத்துட்டான்... பொட்டப்புள்ளையை காப்பாற்ற புளியமரத்தடியில் நைட்டு டிபன் கடை போட்டாள் இளவயது ப்ரியா.கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான். பர்மிசன் யார்கிட்ட கேட்டு வச்சது, மிட்நைட் ஆச்சு கடையை சாத்துன்னு எதையாவது சொல்லி தினமும் ஓசியில வயிறுமுட்ட தின்பான்.பணம் குடுத்து சாப்பிடுபவர்கள் இன்னும் ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடமாட்டார்களா என ஏக்கமாயிருக்கும். அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறுவாள் ப்ரியா.ஆனால் இந்த ஓசிபோலீஸ் ஒருதோசை குறைவாக சாப்பிடமாட்டானா என நினைத்தாள். அவன் தான் ஆற அமர உட்கார்ந்து நிறைய தின்னுட்டுபார்சலும் வாங்கிட்டு போவான்.என்ன செய்ய? புளியமரத்தடியில் கடைபோட்டால் இப்படித்தான் வருவார்கள்... நம்ம தலைவிதி அப்படின்னு போலீசுக்கு வேண்டா வெறுப்பாக பரிமாறுவாள்.என்ன சுவையா சமைத்தாலும் .... டவுனுக்குள் நாலுகடை சாத்தின பிறகுதான் நாலுசனம் வரும் ப்ரியாவின் கடைக்கு... நாலு வருசம் ஆகியும் நயாபைசா மிச்சம் பண்ணமுடியலை. தனது கைப்பக்குவத்தின் மீது நம்பிக்கை வைத்து வாரக்கடனுக்கு பணம் வாங்கி டவுனுக்குள் கடையை பிடித்தாள்.ஒரே வாரத்தில் ப்ரியாவுக்கு நம்பிக்கை வந்திடுச்சு அப்பாடா இனி ஓரளவுக்கு தப்பிச்சிடலாம்ப்பா கடை வாடகை, கந்துவட்டி போக நாலுகாசை கண்ணுல பார்த்திடலாம்னு நினைச்ச நேரம் மறுபடியும் அதே ஓசி போலீஸ் உள்ளே வர்றான்.வாடி வா, இன்னைக்கு உன்னை நாலுவார்த்தை நல்லா கேட்கனும். இனி உனக்கு நான் பயப்படத் தேவையில்லைஇன்னிக்கு சாப்பிட்டதுக்கு இப்பவே காசைக் குடுடான்னு சட்டமா கேட்கனும்னு நினைச்சவேளையில்.உள்ளே வந்த போலீஸ்காரர் பிரியாவை கூப்பிட்டு இந்தாம்மா ப்ரியா இதுல ஒரு லட்ச ரூபாய் இருக்கு, நாலு வருசம் நான் உன் புளியமரக்கடையில் சாப்பிட்டதுக்கான பில்.உன்புருசன் என்னோட படிச்சவன் தான், புருசன் இல்லாம அந்த நைட்டுநேரம் நீ அந்த இடத்தில் வியாபாரம் பண்றது எவ்வளவு ரிஸ்க் எனத் தெரிஞ்சதால் உன்னோட பாதுகாப்புக்காகத்தான்நான் தினமும் அங்கே வந்தேன்.நான் கொடுக்கும் இந்தப்பணம் தான்.... புளியமரத்தடிக்கடையின் லாப பணம். வச்சிக்கோ.... கையில் கொடுத்தான்ப்ரியாவுக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை, கண்கள் நனைந்தன, தொண்டை வரண்டது. கடைசியாக சொன்னாள்...வாங்க... சாப்பிடுங்க அண்ணா.வாழ்க்கையில நமக்கு வர வேண்டியது வந்தே தீரும்.
ஆட்டுக்கல் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல.. அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு தயாராவார்கள்.மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.“தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.“சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.“மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.” பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும்.” அடைமழை” – ஐப்பசியில் பெய்வது” கனமழை” – கார்த்திகையில் பெய்வது..இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது:மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.மழையைப் பற்றித் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "மாறாநீர்" என குறிப்பிட்டிருக்கிறார். இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக்கு அணி.(குறள் 701)இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார் நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்குஇனத்தியல்ப தாகும் அறிவு.(குறள் 452)எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.ஒரு உழவு மழை :‘பொதுவாக ஊர்ப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீஅளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு.பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.’நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்....பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்.அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்...இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...
*குடமுழா* ........ அழிந்து போன தமிழர்களின் இசைக் கருவி!!கி.பி 1-ம் நூற்றாண்டு.இந்த குடமுழுவம் இசைக் கருவி,தேவாரத்தில் "குடமுழா"என்று குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்து,ஒரு காலத்தில் சோழ மண்டலத்தில் பெருவாரியாக இந்த அரிய இசைக் கருவி பாவனையில் இசைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.தேவாரத்திற்கு முந்திய கி.பி முதலாம் நூற்றாண்டின் சிலப்பதிகாரத்திலும் இந்த "கடமுழுவம்" இசைக்கருவி இசைக்கப்பட்டிருக்கிறது...இந்த இசைக் கருவி தற்போது,ஈழம் மற்றும் தமிழத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது,திருவாரூர் தியாகராசர் மற்றும் திருத்துறைபூண்டி மருந்தீசுவரர் கோயில்களில் மட்டுமே இந்த அரிய இசைக்கருவியான குடமுழுவத்தை காண முடியம்.வார்ப்பு வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட உயரமான குடத்தில் ஐந்து வாய்கள் இருக்கும். வாய்கள் அனைத்தும் மான் தோல்களால் மூடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு வாயிலிலும் வெவ்வேறு விதமான பண்(இசை) எழுப்பப்படும். சங்க இலக்கியங்கள் குடமுழுவத்தை பற்றி ஏராளமான பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன.மேலும், பாேர் வீரர்களின் தோல் வலிமைக்கும், பலாப்பழத்திற்கும், பனைமரத்தின் அடிக்கும் இக் கருவியை ஒப்பிட்டு பல சங்ககால பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன...
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology Of Money புத்தகத்தையும் இளைஞர்கள் எல்லோரும் வாங்கிப் படியுங்க என்று சொல்லியிருப்பார். நீங்க இதுவரை புத்தகமே படிக்காதவரா இருந்தாக்கூட இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்க. இதுக்கு மேலேயும் புத்தகங்கள் படியுங்க என்று சொல்லியிருப்பார். மார்கன் ஹௌஸ்ஸல் எழுதிய இந்தப் புத்தகம், பணம்சார் உளவியல் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இதற்கு முன்னர் பலரும் இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைத்திருந்தாலும், அரவிந்த்சாமி சொன்னபிறகு, இப்பொழுது பலரும் தேடிப் படிக்கும் புத்தகமாக மாறிவிட்டது. "ஒரு நடிகர் சொன்னதும் இந்தப் புத்தகத்துக்கு ஏன் இவ்வளவு கேள்வி? படிச்சு பணக்காரரா ஆகவா போறீங்க? தீவிர இலக்கியங்கள் படியுங்க. மனித மனங்களைப் படியுங்க" என்றெல்லாம் இலக்கியவாதிகள் என்று தம்மை நினைப்பவர்கள் இளைஞர்களுக்குச் சொல்கிறார்கள். உண்மையில் தீவிர இலக்கியங்கள் *பெரும்பாலும் உங்களுக்கு Rational thinking, அதாவது எதையும் பகுத்தறிந்து பாருங்கள், எதையும் வருமுன் முன்னோக்கிச் சிந்தியுங்கள் என்றெல்லாம் சொல்லிக்கொடுக்காது. அது வாழ்வியல். அவை பெரும்பாலும் உணர்வுகள் சார்ந்தவை. சிலது, அந்த மாதச் செலவையே சமாளிக்க முடியாதவர்களைப் பற்றியும், சிலது காதுகுத்தை பெருமையாக ஊர் மெச்ச செலவழித்துச் செய்யமுடியவில்லை என்று கலங்குபவர்களைப் பற்றியும், கடன் வாங்கி திருமணம் செய்துகொடுத்துவிட்டு வீட்டையும் நிலத்தையும் வித்து கடன் அடைப்பவர்களைப் பற்றியும், பிறர் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து வாழ்பவர்களைப் பற்றியும் பேசும். ஆனால் இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க பணம் குறித்து பகுத்தறிந்து சிந்திப்பது எப்படி என்று பேசுகிற புத்தகம். சிறுகச் சேர்க்கிறது என்னாகும்? Compounding effect பற்றி பேசுகிற புத்தகம். எப்பிடி சம்பாதிக்கிற பணத்துக்கு safety net போட்டு வெச்சுக்கிறது என்று பேசும் புத்தகம். Wealth என்றால் என்ன Rich என்றால் என்ன? Sustainable Financial Security னா என்ன என்றெல்லாம் பேசும் புத்தகம். இந்தப் புத்தகம் பணம் குறித்த உங்களின் உளவியலைப் பேசுகிறது. எல்லா விதமான புத்தகங்களையும் படிப்பது நல்லதொரு பார்வையைக் கொடுக்கும். படியுங்கள். நல்ல இலக்கியங்களையும் படியுங்கள். இதையும் படியுங்கள். உங்களை வாசிப்புக்குள் இந்தப் புத்தகம் கூட்டிவருகிறது என்றால் வாருங்கள். Peter Lynch ஐ படியுங்கள். பெஞ்சமின் கிரஹாம் எழுதிய தி இன்டெலிஜென்ட் இன்வெஸ்டரை படியுங்கள். விஞ்ஞானத்தைப் படியுங்கள். க. நா. சு, தி. ஜா, பத்மநாபன், பாரதியார், நகுலன் எல்லோரையும் படியுங்கள். இந்தப் பணம்சார் உளவியல் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டால் நாளையே பில்கேட்ஸ் என்றில்லை. ஆனால் சம்பாதிக்கிற பணத்தை, இருக்கிற பணத்தை எப்படிப் பாதுகாப்பது என்பது எல்லாவற்றையும் விட முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். அதற்காகவேனும் வாங்கிப் படியுங்கள். முடிந்தால் ஆங்கிலத்திலேயே வாங்கிப் படியுங்கள். Rule No. 1 : Never lose money. Rule No. 2 : Never forget Rule No. 1. - Warren Buffett (எந்தப் புத்தகத்தையும் உங்களுக்குத் தேவையென்றால் ஒருசில பக்கங்களைப் படித்துப் பார்த்துவிட்டு வாங்குங்கள். இந்த வகையான புத்தகம் படியுங்க. இதைப் படிக்காதீங்க என்று சொல்பவர்களுக்காக இந்த பதிவு எழுதப்பட்டது. புதிதாக வாசிப்பவர் என்றால் படியுங்க. பிடிக்கலயா? வேற புத்தகம் வாங்கிப் படியுங்கள். உங்களுக்கான புத்தகங்களைத் தேடிக் கண்டறிந்து படியுங்கள்)