அபராதத் தொகை செலுத்தினார் எம்.ஜி.ஆர்.

1987.

எம்ஜிஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். அப்போதுதான் 'ஆனந்த விகடன்' அட்டையில் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்த அந்த ஜோக் வெளிவந்தது. அதை எடுத்துச் சென்று எம்ஜிஆரிடம் காட்டினார்கள் அவரது கட்சிக்காரர்கள்.

எத்தனையோ கேலிகளையும் கிண்டல்களையும் பார்த்து விட்ட எம்ஜிஆர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. புன்னகையோடு அடுத்த வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

ஆனால் உடன் இருந்தவர்கள் விடாமல் உசுப்பேற்ற ஆரம்பித்தார்கள் : "தலைவரே... விகடன் ஆசிரியர் நம் கட்சிக்காரர்களைத்தான் மறைமுகமாக கிண்டல் செய்திருக்கிறார். சும்மா விடக் கூடாது அவரை..!"

"என்ன செய்ய வேண்டும் ?"

"உடனே கைது செய்து ஜெயிலில் தள்ளுங்கள். கம்பி எண்ணினால்தான் புத்தி வரும்."

கட்சிக்காரர்கள் மாறி மாறி அழுத்தம் கொடுக்கவே, வேறு வழியின்றி, அந்த ஜோக்கை வெளியிட்டதற்காக 'விகடன்' ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியனை, கைது செய்யச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். மறுத்தார் பாலசுப்பிரமணியன்.

மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவ்வளவுதான் !

எம்ஜிஆரே எதிர் பார்க்காத ஒரு திடீர் திருப்பம், அங்கு நிகழ்ந்தது. பொங்கி எழுந்தார் ‘விகடன்’ எஸ். பாலசுப்பிரமணியன்.

எம்.ஜி.ஆர் அரசின் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடுத்தார். வாதாடினார். விடுதலையும் பெற்றார் .

அடுத்து நடந்ததுதான் எவரும் எதிர்பாராதது.

“காரணம் இல்லாமல் விகடன் ஆசிரியரை கைது செய்து அவமானப்படுத்தியதற்காக 1000 ரூபாயை அபராதமாகக் கட்ட வேண்டும்”- எம்.ஜி.ஆர் அரசுக்கு இப்படி அதிரடி உத்தரவிட்டது நீதிமன்றம்.

திகைத்துப் போன எம்ஜிஆர்

வேறு வழியின்றி, சத்தமில்லாமல் அபராதத் தொகையை ஆனந்த விகடன் ஆசிரியருக்கு செலுத்தினார்.

(அது இப்போதும் விகடன் அலுவலகத்தில் ஃபிரேம் செய்து மாட்டப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.)

எத்தனை எத்தனையோ பேருக்கு, ஆயிரம் ஆயிரமாக அள்ளி அள்ளிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

ஆனால் அவர் இப்படி அபராதமாக ஆயிரம் ரூபாயை கட்டிய அந்த அவஸ்தை நிலைக்குக் காரணம், உடன் இருந்து உசுப்பேற்றிய ஒரு கூட்டம்தான்.

உசுப்பேற்றி விடுபவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்கு நல்லதொரு உதாரணம் இந்த சம்பவம்..!

  • 240
  • More
சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் மனதில் எழுத்தாளர் பாலகுமாரன்
மே 15 - 2018.எழுத்தாளர் பாலகுமாரன் இறந்து போனார்.அஞ்சலி செலுத்தி விட்டு வந்த ரஜினி அன்றைய தினம் ஒரு முக்கிய முடிவையும் எடுத்தார்.- பாட்ஷா 2- இனி இல்லவ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் எஸ்தர் அனில்
கமல்ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள்
 ‘ராயன்’ திரைப்படம் குறித்த சில தகவல்
தனுஷ் நடித்து முடித்துள்ள ஐம்பதாவது திரைப்படம் ராயன் என்பதும் தனுஷ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பண
வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸ்
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் "கங்குவா". இதுவரை தமிழ் திரையுலகம
குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது
அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்ப
சினிமாவில் திறமைலாம் தேவையில்ல- மனம் திறந்த பிரபல நடிகை
பெங்காலி மொழி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகையாக வளர்ந்தவர் ரிமி சென். இந்தியில் பிரபலமான தூம், தூம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர்
அபராதத் தொகை செலுத்தினார் எம்.ஜி.ஆர்.
1987.எம்ஜிஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். அப்போதுதான் 'ஆனந்த விகடன்' அட்டையில் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்த அந்த ஜோக் வெளிவந்தது. அதை எடுத்துச்
ஸ்டராப்லெஸ் உள்ளாடையில் ஜான்வி கபூர்
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்வி கபூர் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.இவர் வ
புத்தம் புது லுக்கில் லெஜண்ட் சரவணன்
ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘தி லெஜண்ட்’. இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன், விவேக், நாசர், சுமன் உள்ளிட்ட பலர் நடித்திருந
அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு படமாக்கப்பட்ட கார் காட்சி ஒன்றின் வீட
சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்
இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இ
சிவப்பு நிற உடையணிந்து  முன்னழகு தெரிய புகைப்படம் வெளியிட்டார் ரைசா வில்சன்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு