வடமராட்சி

Followers
Empty
Membership
Administrator
Info
Who can post to my profile:
Array
Organization Name:
வடமராட்சி
Category:
Friends count:
Followers count:
Administrators
Achievements

Basic

Total points: 1536

3466 point(s) to reach
Comments (0)

    வடமராட்சி: இலங்கையின் வட முனையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது  வடமராட்சிப் பகுதியானது.    வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு, மற்றும் வடமராட்சி தென்மேற்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

    இங்கு வசிக்கும் மக்கள் வடமராட்சியார் என அழைக்கப்படுகின்றனர். முன்னர் வடமறவர் என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்த இடமாக இருந்தமையால் வடமறவர் ஆட்சி என அழைக்கப்பட்டு வடமராட்சி என மற்றம் அடைந்தது.

    Members
    வடமராட்சி
    Empty
    typing a message...
    Connecting
    Connection failed
    இன்று வல்வெட்டி துறை மாவீரர் துயில் இல்லத்தில் பெரும் திரளான பெற்றோர்கள் மாவீரர்களுக்கு ஈகைச் சுடரேற்றி கண்ணீர் மல்க அஞ்சலியைச் செலுத்தினார்கள்.
    +1
    • 292
    Added a news 
    சந்தேக நபர்களுக்கு எதிராக 40இற்கும் மேற்பட்ட பிடியாணைகள் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 60இற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையிலும் பொலிஸாரால் சந்தேக நபர்களைக் கைது செய்ய முடியாதிருந்தது.இந்தநிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபர்களை நேற்று கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்ஸிஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்கள் பிரதீப், மேனன் மற்றும் கொன்ஸ்டாபிள்களான கவியரசன், புவனச்சந்திரன், சுயந்தன், சம்பத், அரஹம், அசாத், யோசப், பிரவீன், கரன், பெண் பொலிஸ் கொன்ஸ்டாபிள் வர்ணகுலசூரிய ஆகியோரைக் கொண்ட குழுவே சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது.அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் வயோதிபர்களை இலக்கு வைத்து கத்தி முனையில் அச்சுறுத்திச் சங்கிலி அறுக்கும் சம்பவங்கள் அதிகரித்திருந்தன.இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை. அதையடுத்து யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.விசாரணைகளின் அடிப்படையில் 42 மற்றும் 43 வயதான சந்தேக நபர்கள் இருவர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். நாவற்குழி மற்றும் அல்வாயைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.முதன்மை சந்கேக நபரான சின்னவன் என்பவர் மீது 15 திகதியிடப்படாத பிடியாணைகளும், 8 பிடியாணைகளும் மற்றைய சந்தேக நபரான ஜெயா என்பவர் மீது 5 திகதியிடப்படாத பிடியாணைகளும், பருத்தித்துறை நீதிமன்றில் 10 பிடியாணைகளும், மேல் நீதிமன்றில் ஒரு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.சந்தேக நபர்களிடம் இருந்து கோப்பாய் பகுதியில் வழிப்பறிக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும், நெல்லியடியில் திருடப்பட்டு வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கோப்பாய், நெல்லியடி, கொடிகாமம் ஆகிய இடங்களில் வழிபறி செய்யப்பட்டது என்று நம்பப்படும் 3 சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டன.அதேநேரம், சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் நுட்பமான முறையில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி, வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், கடந்த 3 மாதங்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடந்த வழிப்பறிக் கொள்ளைகளுடன் இவர்களுக்குத் தொடர்பு உண்டு என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
    • 361
    Added a news 
    வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாவத்தை பகுதியில் 21 பவுண் தங்க நகைகளை வீட்டில் யாருமில்லாத பகல் வேளை (21)ம் திகதி திருடப்பட்டதாக பொலிசாருக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய உடுப்பிட்டி நாவலடியைச்சேர்ந்த 25 வயதுடைய சந்தேகபரையும் களவாடப்பட்ட 35 லட்சம் பெறுமதியான தங்க நகைகளையும் வல்வெட்டித்துறை பொலிசார் மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
    • 368
    • 193
    வவுனியா கனகராயன் குளம் பகுதியில் வியாழன் காலை யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்து டிப்பருடன் மோதி விபத்து!
    +1
    • 295
    வடமராட்சி Photos
    My Posts
    வடமராட்சி News
    My Albums

    வடமராட்சி வயல்கள்

    வடமராட்சி வயல்கள்

    புலோலி விக்னேஸ்வரா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு பதிவுகள்

    புலோலி விக்னேஸ்வரா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு பதிவுகள்

    வல்லிபுரமாயவனின் இன்றைய வீதி உலா

    வல்லிபுரமாயவனின் இன்றைய வீதி உலாவின்போது

    கம்பர்மலை முன்பள்ளியில் நடைபெற்ற சிறுவர்தின இவ்நிகழ்வுக்குஅனுசரணை வழங்கியவர்கள்

    கம்பர்மலை முன்பள்ளியில் நடைபெற்ற சிறுவர்தின இவ்நிகழ்வுக்குஅனுசரணை வழங்கியவர்கள்1.சுப்பிரமணியம் ரகுநாதன்2.சுந்தரம்பிள்ளைபுனிதா3.பசுபதி குழந்தைவேல்4.சிறப்புரை வழங்கியவர்கள் வல்வெட்டித்துறைப் பொலிஸ்ஓய்வுநிலை அதிபர் !சுவிஸ்நாட்டில் வசிக்கும் சயந்தனுக்குஅனுசரணை வழங்கி உள்ளார்.