Latest News

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கோல்ட் லேக் பகுதியில் வீட்டில் இருந்து காணாமல் போன 6 வயது சிறுவன், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் என்று அல்பர்ட்டா பொலிஸார் அறிவித்துள்ளனர்.அந்த சிறுவன் மாலை 5 மணியளவில் தனது வீட்டில் கடைசியாக காணப்பட்டதாகவும், ரொக் வேய் (Rocky Way) பகுதியில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.மாலை 8 மணிக்கு முன்பாக அவர் காணாமல் போனதைப்பற்றி அவசர அறிவிப்பை வெளியிட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சிறுவன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளனர்.சாவுக்கு பின்னே ஏதாவது சந்தேகத்துக்கிடமான சூழ்நிலை இல்லை என்றும், மரண காரணம் குறித்து வெளிப்படையாகக் கூறாமல், குடும்பத்தின் தனியுரிமையை மதிப்பதற்காக அறிவிக்கப

ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கையான ஜென்சிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டையில் பிறந்த திருநங்கையான ஜென்சி, இளநிலை ஆங்கிலப் படிப்பை திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியர் அரசு கலை கல்லூரியில் படித்துள்ளார்.அதன்பின் எம்ஏ மற்றும் எம்பில் வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் முடித்து, பிஏ மற்றும் எம்ஏ இரண்டிலும் தங்கப்பதக்கத்துடன் முதல் திருநர் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் முடித்துள்ளார். இதையடுத்து லயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவி பேராசிரியராக திருநங்கை ஜென்சி பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற மு

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் ஈரானை தொடர்ந்து தாக்கிவரும் நிலையில் வடக்கு ஈரானில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இருப்பினும், உயிரிழப்புக்கள் ஏதுவும் ஏற்படவில்லை என ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை 3 வயதுச் சிறுமி ஒருத்தி காணாமல்போன சம்பவத்தில் அவளது தாய் சிறை செல்லும் நிலை உருவாகியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை, கியூபெக் மாகாணத்தில் வாழும் மூன்று வயதுச் சிறுமி ஒருத்தி மாயமான நிலையில், பொலிசார் அவளை தீவிரமாகத் தேடிவந்தார்கள். புதன்கிழமை மதியம் 2.00 மணியளவில், ட்ரோன் ஒன்று நெடுஞ்சாலை 417இன் ஓரமாக குழந்தை கிடப்பதைக் கண்டறிய உதவியது.உடனடியாக பொலிசார் அங்கு விரைய, அந்தக் குழந்தை நீரிழப்பினால் அவதியுற்றிருந்தது தெரியவந்தது. மற்றபடி அவள் பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது.காணாமல் போன அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார்கள். அதே நேரத்தில், குழந்தையை கவனிக்காமல் விட்டதற்காக அதன் தாய் மீது குற்றச்சாட்டு பதிவு

கனடிய ஹாக்கி வீரர் ஒருவர் இஸ்ரேலில் சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.“நான் ஹாக்கி விளையாட வந்தேன் – ஆனால் இப்போது குண்டு சத்தங்களுக்கு நடுவில் உயிர் பாதுகாப்பிற்காக ஓடிக்கொண்டு இருக்கிறேன்” என 29 வயதான கனடா ஹாக்கி வீரர் டிமொத்தி பேய்ன் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் எலீட் ஹாக்கி லீக் (IEHL)-ல் ஜெருசலேம் கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடும் அவர், கடந்த வாரம் தான் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். ஆனால் அதைத் தொடர்ந்து ஈரானுடன் தொடங்கிய போரால், தோற்றுப்போனவனாக உணர்கிறார் என அவர் தெரிவித்துள்ளார். “இரவு 11, 12 மணிக்கு எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்குகிறது.எங்கள் வீடு அருகே குண்டு விழுந்தது. சாளரங்கள் உடைந்தன, சுவர்கள் இடிந்தன,” என அவர் குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் தங்கிய வீட்டில் குண்டுபுகலிடமும் இல்

கனடாவின் சில பகுதிகளில் கன மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒன்ராறியோ மற்றும் க்யூபெக் மாகாணங்களில் வியாழக்கிழமை முழுவதும் கனமழை எச்சரிக்கை தொடருகிறது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.டொரண்டோவின் வடபகுதி மற்றும் ஓட்டாவா புறநகர் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மழை எச்சரிக்கை அமலிலுள்ளது. பேரி சவுண்ட் (Parry Sound), ரோஸோ (Rosseau), கில்பியர் மாகாண பூங்கா (Killbear Provincial Park) ஆகிய பகுதிகளில் 40 முதல் 60 மில்லிமீட்டர் வரையான மழை பெய்யக்கூடும் என்றும், இது மதியம் வரை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மழை நேரத்தில் வாகனங்களை

டொரண்டோவில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மாஃபியா போன்ற கும்பலான ‘த யூனியன்’ (The Union) தொடர்பாக விசாரணை ஒன்றின் போது, டொரண்டோ போலீசார் 20 பேரை கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 111 குற்றச்சாட்டுகளை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். ‘ப்ராஜெக்ட் யாங்கீ’ (Project Yankee) எனப் பெயரிடப்பட்ட இந்த விசாரணை கடந்த 2024 அக்டோபரில் தொடங்கப்பட்டது.டொரண்டோ பெரும்பாக பகுதியில் வாகனங்களை பழுதுபார்த்தல் மற்றும் பொருத்துதல் நிறுவனங்களுக்கு உதவுவதாக கூறி இந்தக் கும்பல் பல்வேறு வன்முறைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.தற்போது இந்த விசாரணை நிறைவடைந்து, கடந்த வாரம் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இக்கும்பல் வன்முறையும்

கனடா பிரதமர் மார்க் கார்னியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.பயணத்தின் முதல் நாடாக அவர் கடந்த 15ம் திகதி சைப்ரஸ் நாட்டுக்குச் சென்றார். அங்கு அந்நாடு ஜனாதிபதி கிறிஸ்டோடவுலிட்சை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் செவ்வாய்க்கிழமை (17) நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்துள்ளார். அத்துடன், இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி சந்தித்துள்ளார். கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து குரோஷியா

கனடாவின் ஹாமில்டனில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 11 மற்றும் 15 வயதான சிறுவர்களை ஹாமில்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.நயாகரா பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பொன்றின் வாகனத் தரிப்பிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து வாகனம் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஒரு 2015 வெள்ளை நிறமுடைய செல்வர்டொ சில்வெர்டோ (Chevrolet Silverado) மற்றும் ஒரு 2015 வெள்ளை ஜீப் (Jeep Cherokee) வாகனங்களின் சாவிகளை திருடி வாகனங்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.ஆபத்தான முறையில் வேகமாக வாகனங்கள் செலுத்தப்படுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்திய போது இரண்டு வாகனங்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து போதைப் பொருட்கள் சிறிதளவு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒண்டேரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டின் எட்டோபிக்கோ வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த காரை திருட முயற்சித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு காரை திருட முயற்சித்தவர்கள் குறித்து அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.“நால்வர், முகமூடிகள் அணிந்து, தெருவில் வேகமாக வந்து என் டிரைவ்வேயில் இருந்த காரை எடுத்து செல்ல வந்தார்கள்,” என ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.கனடாவின் குற்றவியல் நீதித்துறையை முதல்வர் கடுமையாக விமர்சித்தார். குறித்த நபர்களை ‘முட்டாள் குற்றவாளிகள்’ என அவர் விவரித்துள்ளார்.ந்தேக நபர்களை கைது செய்ததாக டொராண்டோ பொலிஸார், தெரிவித்திருந்தனர்.கைதான நான்கு பேரில் இரண்டு பேர் 17 மற்றும் 16 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மக்கள் அனைவரும் வாட்ஸ் அப் செயலிலை நீக்க வேண்டும் என்று ஈரான் உத்தரவிட்டுள்ளது.ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் கடந்த 13 ஆம் திகதி தொடங்கியது. ஈரான் அணுசக்தி நிலையங்கள், இராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இருநாடுகளின் இடையேயான போர் உலக நாடுகளை கவலை கொள்ள செய்துள்ளது.ஈரான் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்தி வருவதாக அரபு, இஸ்லாமிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இஸ்ரேலுடன் மோதல் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதால், ஈரான் தமது குடிமக்களை தங்கள் செல்போன்கள் மற்றும் இன்னபிற எலக

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை 932 தட்டம்மை (Measles) நோய்களுக்கான உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.கடந்த வார இறுதியில் மட்டும் 53 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அல்பெர்டா மாகாண அரசின் தரவுத்தள விவரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த 40 ஆண்டுகளில் அல்பர்ட்டா மாநிலம் சந்தித்த மிக உயர்ந்த தட்டம்மை பாதிப்பு இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. தட்டம்மை நோய்தடுப்பை கட்டுப்படுத்துவது சவாலான நிலை” என அல்பெர்ட்டா மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஷெல்லி டுகன் கூறியுள்ளார்.கனடா 1998 ஆம் ஆண்டு தட்டம்மை நோயாளர்கள் இல்லாத நாடுகளின் வரிசையில் இடம்பிடித்திருந்தது. எனினும், தற்போது நோய் வேகமாக பரவும் நிலை உருவாகியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்ற

ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் மில்லியன் கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.‘நோ கிங்ஸ்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம் டிரம்பின் பிறந்த நாளான நேற்றுமுன்தினம் (14) மாலை இராணுவ அணிவகுப்பு வொஷிங்டன் டி.சியில் இடம்பெற்ற போது நடத்தப்பட்டுள்ளது.அமெரிக்க இராணுவத்தின் 250 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.டிரம்பை விமர்சிக்கும் பதாகைகளை அசைத்த வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் சட்டமியற்றுபவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் உரையாற்றினர்.இத்தகைய கூட்டங்கள் நியூயோர்க், பிலடெல்பியா மற்றும் ஹூஸ்டன் உள்ளிட்ட நகரங்களில் இட

டேவிட் ஜாக்சன் என்னும் கனேடியர், தனது 76ஆவது வயதில் Mount Royal பல்கலையில் வரலாற்றில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். 1975ஆம் ஆண்டு, ஏற்கனவே கணிதத்தில் பட்டம் பெற்றவர் டேவிட். பிறகு பல இடங்களில் வேலை செய்த டேவிடுக்கு கல்வியின் மீதான ஆர்வம் மட்டும் குறையவேயில்லை.Dr. Scott Murray என்னும் வரலாற்றுத்துறை பேராசிரியரின் பயிற்றுவிப்பு முறையால் ஈர்க்கப்பட்ட டேவிட், 2007ஆம் ஆண்டு பகுதி நேரக் கல்லூரிப்படிப்பில் இணைந்தார்.இளைஞர்களுக்கு இணையாக வகுப்பில் ஆர்வம் காட்டுபவர் என ஆசிரியர்களாலும் சக மாணவர்களாலும் பாராட்டப்படும் டேவிட், சமீபத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அடுத்தபடியாக, 2033இல் ஒரு பட்டம் பெறும் வகையில், மீண்டும் பகுதி நேர கல்லூரிப்படிப்பை டேவிட் துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்த

கனடாவின், நார்த் யோர்க்கில் உள்ள ஓர் குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்தில் 60 வயதுடைய ஒரு நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மதியம் 4 மணியளவில் டான் மில்ஸ் சாலை மற்றும் ரோஷெஃபார்ட் டிரைவ் சந்திப்பில் உள்ள வீட்டில் நிகழ்ந்தது என டொராண்டோ காவல்துறை தங்கள் "X" (முன்பு ட்விட்டர்) கணக்கில் தெரிவித்துள்ளது.தீயணைப்பு வீரர்கள் முதன்மை தேடலின் போது அந்த நபரை கண்டுபிடித்து உடனே வெளியே கொண்டுவந்தனர். ஆனால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டொராண்டோ தீயணைப்பு சேவையின் தலைவர் ஜிம் ஜெசப் தெரிவித்துள்ளார்."தந்தையர் தினமான இந்நாளில், டொராண்டோ தீயணைப்பு, காவல் மற்றும் மருத்துவ உதவி சேவைகளின் சார்பாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை த

Pratik Joshi என்பவர் கடந்த ஆறு வருடமாக லண்டனில் வேலை செய்துவருகிறார். அவரின் மனைவி வைத்தியர் Komi Vyas. 2 நாட்களுக்கு முன் தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார். கணவர் மற்றும் 3 குழந்தைகளோடு லண்டனுக்கு குடிபெயரும் நோக்கத்தில் இன்று விபத்துக்குள்ளான விமானத்தில் புறப்பட்டுள்ளார்கள்.. 5 பேரும் இப்போது உயிருடன் இல்லை...அவர்கள் இன்று விமானத்திற்குள் எடுத்த இறுதி selfie இது 💔அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை 🥲

குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது; பயணிகள் 242 பேர்!இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஆமதாபாத் விமான நிலையத்திற்கு அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஆமதாபாத் செல்ல இருந்த 3 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆமதாபாத்தில் 242 பயணிகளுடன் விபத்துள்ளான விமானத்தில் இந்தியர்கள் 169 பேர், பிரிட்டனை சேர்ந்தவர்கள் 53 பேர், கனடாவை சேர்ந்த ஒருவர், போர்ச்சுக்கல்லை சேர்ந்த 7 பேர் இருந்துள்ளனர். இரு விமானிகள், 10 பணியாளர்களும் விமானத்தில் பயணித்துள்ளனர்.விபத்தில் சிக்கிய பயணிகள் விமானத்தில் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி பயணம் செய்துள்ளார் என்று சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.விமானம் விழுந்து நொறுங்கியதில் கரும்புகை வெளியேறி வரு

குஜராத்தின் மேகனி நகரில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான காரணம் தெரியவரவில்லை. விமானம் விபத்துக்குள்ளான இடம் ஒரு குடியிருப்பு பகுதி என்று கூறப்படுகிறது.விபத்துக்குள்ளானது அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் என்றும் விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பயணிகள் இருந்தனர் என்றும் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதிக்கான அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. விமான நிலையத்திலும் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.இதனை குஜராத் மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறையும் ஏர் இந்தியா நிறுவனமும் உறுதி செய்துள்ளன. பிற்பகல் 1.30 மணி அளவில் புறப்பட்ட விமானம், திடீரென வேகத்தைக் குறைத்

கனடாவின் மார்க்ஹாம் பகுதியில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் தகாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த பயிற்றுவிப்பாளர் ஒன்பது ஆண்டுகளாக பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யார்க் பிராந்திய காவல் துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.2024 மே மாதம் ஒரு பாதிக்கப்பட்டவர் முன்வந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.இந்த தாக்குதல்கள் 2015ம் ஆண்டில் ஆரம்பித்து 2024ம் ஆண்டு வரை தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த குற்றச்சாட்டுகள் ஆரம்பமான போது பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்கு கீழ் இருந்ததாக காவல்துறை கூறியுள்ளது.58 வயதான மார்க்ஹாம் நகரத்தைச் சேர்ந்த கார்த் மோரிஸ் என்பவர், கடந்த 5ம் திகதி கைது செய்யப்பட்டார்.மோர

கடந்த பெப்ரவரி மாதத்தில் டொராண்டோ மேற்கு பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. நபர் ஒருவரை இந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.44 வயதான ஒரு பெண் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் பெப்ரவரி 21ஆம் திகதி அதிகாலை 2:30 மணியளவில் டொவர் கோர்ட் வீதி Dovercourt Road மற்றும் கிரேய் அவன்யூ Geary Avenue பகுதிக்கு அருகில் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சையின் பின்னர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.38 வயதான டொராண்டோ

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று நியூஜெர்சி மாகாணம் மோரிஸ்டவுண் விமான நிலையத்தில் இருந்து மேரிலண்ட் மாகாணத்திற்கு ஏர்போர்ஸ்ஒன் விமானத்தில் புறப்பட்டார்.விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டில் டொனால்டு டிரம்ப் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென அவர் நிலைதடுமாறினார். படிக்கட்டில் கீழே விழுவதுபோல் கால் தடுமாறிய டிரம்ப் உடனடியாக சுதாரித்துக்கொண்டார். பின்னர், அவர் பட்டிக்கட்டில் ஏறி விமானத்திற்குள் நுழைந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் இதோ:-● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962● கல்வி அமைச்சு – 1988● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905● IMEI மீளாய்வு அலகு – 1909● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977●

இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவர்களுடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்த திரு. சிவஞானம் அவர்கள், வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகத்தினை தமிழர்களே ஆழவேண்டும் என்ற அண்ணன் பொன்.சிவகுமாரனின் கனவை நினைவில் நிறுத்தி எமது பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தோழர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக முதல் உயிர் தியாகம் செய்த பொன். சிவகுமாரனின் 51 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.மேலும், கடந்த காலங்களில் எமது மக்களுக்கு எதிராக தென்னிலங்கை தரப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் அண்ணன் பொன். சிவகுமாரன் போன்றோரை வன்முறை சார்ந்த வழிமுறைக்கு தள்ளியிருந்தது. தொடர்ந்து எம்மைப் போன்ற ஆயிரக்கணக்கானோர் அந்த வழிமுறையில் பயணித்திருக்கின்றோம்.நாம் அனைவரும் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாகவே 13 ஆவது திருத்தச் சட்