சினிமா செய்திகள்
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ
கைதி படத்தில் கொடூரமான வில்லனாக நடித்தன மூலம் ரசிகர்கள் மனதில் அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அ
ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்
பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வல
வைரலாகும் ஒடேலா 2 டிரெய்லர்
அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஒடேலா 2 (Odela 2) திரைப்படம், ரசிகர்களை கவரும் வகையில் தயாராக உள்ளது. அசோக் தேஜா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில்
மேடையில் உண்மையை போட்டுடைத்தார் நடிகர் சிவகுமார்
சில உண்மைகளை அந்த மேடையில் படார் படார் என போட்டு உடைத்தார் நடிகர் சிவகுமார்.அது கதாசிரியர் கலைஞானம் அவர்களுக்கான பாராட்டு விழா.2019 ல் நடந்தது.சிவகுமா
நடிகர் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை
ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், வடிவேலு தனக்கு இன்னும் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தரவேண்டுமென்றும், அவரது படத்தில் நடிக்க வடிவேலு சம்மதித்தால் நன்றாக
கமல்ஹாசன் செய்த உதவி - இயக்குநர் மகேந்திரன்
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது."கமல் செய்த உதவி சிறியதுதான். ஆனால் இயக்குநர் மகேந்திரன் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற
Good Bad Ugly - சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜ
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
Ads
 ·   ·  8167 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கனடா பிரதமரின் புதிய குற்றச்சாட்டால் பரபரப்பு

கனடாவில் வசித்து வந்த சீக்கிய குருத்வாராவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். இந்நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் எதிரொலித்து, இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

நிஜ்ஜாருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் உள்ள தொடர்பு பற்றி, இந்தியா பல ஆண்டுகளாக, பல்வேறு முறை கனடாவை தொடர்பு கொண்டு அதுபற்றிய விவரங்களை பகிர்ந்து வந்துள்ளது.

2018-ம் ஆண்டில் ட்ரூடோவுக்கு, இந்தியா அனுப்பிய தேடப்படும் நபர்களின் பட்டியலில் நிஜ்ஜார் பெயர் இடம் பெற்றது. இதன்பின் 2022-ம் ஆண்டு, பஞ்சாப்பில் பயங்கரவாத பரவலுடன் தொடர்புடைய வழக்குகளில் அவரை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி பஞ்சாப் போலீசார் கேட்டு கொண்டனர்.

இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகளுக்கு பின்னர், 2020-ம் ஆண்டு அவரை பயங்கரவாதியாக இந்தியா அறிவித்தது. இந்த சூழலில் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்தியாவின் மீது கனடா பிரதமர் ட்ரூடோ குற்றச்சாட்டு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் ட்ரூடோ இன்று புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் கூறும்போது, இந்தியாவை பற்றி கடந்த திங்கட் கிழமை நான் பேசிய விசயங்களை பற்றி நம்பத்தக்க குற்றச்சாட்டுகளை அந்நாட்டிடம் இந்தியா பகிர்ந்து உள்ளது. சில வாரங்களுக்கு முன்பே அதனை நாங்கள் செய்து விட்டோம் என கூறியுள்ளார். இந்தியாவுடன் ஆக்கப்பூர்வ பணியை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். அவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், இந்த தீவிர விவகாரத்தின் அடித்தளம் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது இன்று கூறினார். நிஜ்ஜார் படுகொலையை இந்தியாவுடன் முதலில் தொடர்புப்படுத்தி ட்ரூடோ பேசினார். இதனை இந்தியா மறுத்தது.

 இந்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குறிப்பிட்ட தகவல் எதனையும் கனடா பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தது. இந்திய தூதரை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக கனடா தூதரை வெளியேறும்படி கடந்த செவ்வாய் கிழமை இந்தியா உத்தரவிட்டது. கடந்த வியாழ கிழமை, மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறும்போது, அரசியல்ரீதியாக தூண்டப்பட்டுள்ளது என கூறினார். இதேபோன்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடியிடம், கனடா பிரதமர் ட்ரூடோ கூறினார் என்றும் அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன என்றும் மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பொன்று தெரிவிக்கின்றது. 

இந்த நிலையில், கனடாவில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கவனத்தில் கொண்டு, விசா சேவையையும் இந்தியா சஸ்பெண்டு செய்தது. இந்த சூழலில், கனடா பிரதமரின் புதிய குற்றச்சாட்டால் தூதரக உறவில் தொடர்ந்து விரிசல் அதிகரித்து வருகிறது.   

  • 332
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads