ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்

ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.

சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.

அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன் பேசினார்.

பரிவுடன் நடந்து கொண்டார். கேட்டபோதெல்லாம் பேட்டிகள் கொடுத்தார். விதம் விதமாய் போட்டோக்கள் எடுக்க, வித்தியாசமான போஸ்களும் கூட கொடுத்தார்.

ஆனால் அப்படி அப்பிராணியாய் இருந்த அந்த இளையராஜாவை அடியோடு மாற்றியது,

ஒரு சில பத்திரிகைக்காரர்கள்தான்.

உள்ளொன்று வைத்து புறமொன்று கேட்டார்கள்.

அதில் உள்ளுக்குள் ஒளிந்திருந்த சூழ்ச்சி புரியாமல் வெள்ளந்தியாய் அவர் சொன்ன பதில்களை, வில்லங்கமாக மாற்றிப் போட்டார்கள்.

வேறு விதமாய் அர்த்தம் கொடுத்தார்கள்.

அதில் உச்சகட்டமாக அமைந்தது 1989 இல் வெளிவந்த ஒரு பத்திரிகை பேட்டி.

இளையராஜாவிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்:

"நீங்கள் எது இசை என்று எவ்வாறு வரையறை செய்கிறீர்கள் ?"

இந்தக் கேள்விக்கு வார்த்தைகள் எதையும் கட்டுப்படுத்தாமல், தன் மனதில் பட்டதை எல்லாம் சொன்னார் இளையராஜா.

"இசை என்பது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே இருப்பதாக நான் நினைக்கவில்லை.

கச்சேரி மேடைகளில் கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடும் ராகங்களில் மட்டுமே இசை இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள்.

இந்த உலகத்தில் எல்லாவற்றிலும் ஒரு இசை இருக்கிறது. ஒரு ராகம் இருக்கிறது. ஒரு தாளம் இருக்கிறது.

ஒரு மழைத்துளி மண்ணில் விழுவதில் இசை இருக்கிறது. ஒரு குழந்தையின் நடையிலும் இசை இருக்கிறது.

ஓடும் நதியில் ஒரு இசை இருக்கிறது. ஓங்கி விழும் அருவி சத்தத்தில் கூட சங்கீதம் இருக்கிறது.

அவ்வளவு ஏன் ?

நாய்கள் ஊளையிடும் சத்தத்தில் கூட ஒரு இசை இருக்கிறது.

கவனித்துப் பார்த்தால் உலகத்தின் ஒவ்வொரு அசைவிலும் இசை இருக்கிறது."

இதுதான் இளையராஜா சொன்ன பதில். ஆனால் இந்த பதில் மூலமாக ஒரு எரிமலை வெடிக்கப் போகிறது என்பது அப்போது அவருக்கு தெரியாது.

அடுத்த வாரம் வெளி வந்த ஒரு சில பத்திரிகைகளில், இளையராஜாவின் பேட்டிக்கு இப்படி ஒரு தலைப்பு கொடுத்திருந்தார்கள்.

"நாய்கள் ஊளையிடுவதும், கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடுவதும் எனக்கு ஒன்றுதான்."

பரபரப்பான அந்த பேட்டியை படித்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.

தொடர்ந்து இப்படி போனது அந்தப் பேட்டி.

"ஒரு நாய் ஊளையிடுவதைக் கேட்டுப் பாருங்கள். அதில் ஸ்வரப் பிரஸ்தானம் இல்லையா?

ஒரு நாய் ஊளையிடுவதற்கும் வித்வான்கள் பாடுவதற்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. உண்மையில் வெவ்வேறு சமயங்களில் ஒரு நாய் என்னென்ன ராகங்களில் குரைக்கிறது என்பதை இசைக்குறிப்புகளாக எழுத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். இது என் எண்ணத்தை நிருப்பிப்பதாக இருக்கிறது.

ஒலியன்றி வேறல்ல இசை.”

இப்படிச் சொல்லியிருந்தார் இளையராஜா.

கொதித்துப் போனார்கள்

கர்நாடக சங்கீத வித்வான்கள்.

எதிர்ப்புகள் எரிமலையாக சீறி வெடித்தன.

ஆவேசமான அர்ச்சனைகள்,

அடுக்கடுக்காய் பிரச்சினைகள்.

இசையைத் தவிர எதையும் நினைக்காத இளையராஜா இந்த வசைச் சொற்களால் வாடிப் போனார். வருத்தம் அடைந்தார்.

அப்போதுதான் தீர்க்கமாகச் சிந்தித்து தெளிவான அந்த முடிவை எடுத்தார்.

இனி தேவை இல்லாமல் மீடியாக்காரர்களிடம் பேசுவதில்லை.

இன்னொன்றையும் கூட அவர் புரிந்து கொண்டார்.

இசை அமைப்பது மட்டும் கலை அல்ல.

சொற்களைக் கையாளுதலும் கூட ஒரு கலைதான்.

ஒரு சொல் வெல்லும்,

ஒரு சொல் கொல்லும்.

வெல்லும் சொற்களையே எப்பொழுதும் சொல்வோம்.......

  • 83
  • More
சினிமா செய்திகள்
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
மூத்த நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் காலமானார்
பழம்பெரும் நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித
நடிகர் மாதவனும் இயக்குநர்  கே எஸ் ரவிக்குமாரும்
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் எந்த கேள்வி கேட்டாலும் வித்தியாசமாக சுவாரசியமாக பதில் சொல்பவர், சமீபத்தில் மாதவன் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி
அரிய ஆவணம்
"7-9-1949"இடையபட்டி நேத்தாஜி பாடசாலை கட்டிட நிதிக்காககலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களின்கிந்தனார்காலட்சேபம் 7-9-49 அன்று நடைபெற்றது
மனித வணக்கம்  -  கமல்ஹாசன் கவிதை
தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.தகப்பா, ஓ தகப்பா!நீ, என்றோ உதறிய மைபடர்ந்தது கவி
நடிகை மலைகா அரோரா பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தாரா?
நடிகை மலைகா அரோரா கவ்ஹாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியை காண வந்ததிலிருந்து ஒரு பெரிய கிசுகிசு தொடங்கியது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்
விஜய் சேதுபதியை இயக்குகிறார் புரி ஜெகன்நாத்
பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத். இவர், போக்கிரி, பிசினஸ் மேன், டெம்பர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ம் ஆண்டில், பான் இந்தியா படமாக ‘ல
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு