
அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ
கைதி படத்தில் கொடூரமான வில்லனாக நடித்தன மூலம் ரசிகர்கள் மனதில் அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த அந்தகாரம் திரைப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றது. அவர் கதாநாயகனாக நடித்த, வசந்தபாலன் இயக்கிய ‘அநீதி’ படம் பாராட்டுகளைப் பெற்றாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதே போல சாந்தகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ரசவாதி திரைப்படமும் ஒரு தோல்விப் படமாகவே அமைந்தது.
தமிழை தாண்டியும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் அர்ஜுன் தாஸ் அடுத்து மலையாள சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். ’ஜூன்’ மற்றும் ‘மதுரம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அகமது கபீர் அடுத்து இயக்கும் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் அஜித்துக்கு வில்லனாக அவர் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்துக் கலக்கியிருந்தார்.
தொடர்ந்து ஹீரோவாகவும் நடித்து வரும் அவர், அடுத்து புதுமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva