Category:
Created:
Updated:
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தேசிய தேர்தல் ஆணைக்குழுகளில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளது.
கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் தேசிய தேர்தல் முறைப்பாடுகள் மையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாடு மையங்களில் மொத்தம் 1,046 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் ஏப்ரல் 9 ஆம் திகதி, தேர்தல் சட்டங்களை மீறியதாக 98 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு நாளும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவவதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
000