
வைரலாகும் ஒடேலா 2 டிரெய்லர்
அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஒடேலா 2 (Odela 2) திரைப்படம், ரசிகர்களை கவரும் வகையில் தயாராக உள்ளது. அசோக் தேஜா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'ஒடேலா ரயில் நிலையம்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ஒடேலா மல்லன்னா சுவாமியால் பாதுகாக்கப்பட்ட ஒரு கிராமத்தை பற்றிய கதை இது. இதில் தமன்னா, சிவ சக்தியாக தீய சக்திகளை எதிர்த்து போராடுகிறார்.
தமிழில் வெளியான இந்த டிரெய்லர், நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான முடிவில்லா போரை கண்முன் நிறுத்தியது. தமன்னாவின் நடிப்பு, கிராமத்தை காக்கும் ஒரு தெய்வீக சக்தியாக வெளிப்படுகிறது. அதிரடி காட்சிகள் மற்றும் சிந்தனையை தூண்டும் வசனங்கள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன. இந்த டிரெய்லர் திரைப்படத்தின் மாயாஜால அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது. இது அமானுஷ்ய திரில்லர் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும்.
ஒடேலா 2 திரைப்படத்தில் தமன்னா, ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா, முரளி சர்மா, சரத் லோகிதஸ்வா, யுவா மற்றும் நாக மகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 17ந் தேதி திரைக்கு வர உள்ளது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva