
இரத்த அழுத்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு
கனடாவில் இரத்த அழுத்தத்திற்கு பயன்படுத்தப்படும் சில மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் 'Drug Shortages Canada' இணையதளத்தில், உயர் இரத்த அழுத்தத்தை (Hypertension) குறைக்கும் முக்கியமான மருந்தான Chlorthalidone வின் இரண்டு பிராண்டுகள் பற்றாக்குறையில் உள்ளன எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த மருந்து, உடலில் உள்ள நீரின் அளவை குறைக்கும் வகையில் சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரித்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பயன்பாட்டில் உள்ளது.
இத்தகவல், கனடாவின் மருந்து பற்றாக்குறை கட்டுப்பாட்டு அமைப்பான Drug Shortages Canada-ல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறைகள் 'Tier 3' பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'Tier 3' என்ற வகை என்பது நாட்டின் மருந்து விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்போது மட்டுமே வழங்கப்படுகிறது. மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள், சிகிச்சை மாற்றங்கள் குறித்து ஆலோசனைக்காக தங்கள் மருத்துவரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.