
கமல்ஹாசன் செய்த உதவி - இயக்குநர் மகேந்திரன்
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது."
கமல் செய்த உதவி சிறியதுதான். ஆனால் இயக்குநர் மகேந்திரன் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது, அந்த உதவிதான்.
'முள்ளும் மலரும்' படத்தில் வரும்,
"செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என்மீது மோதுதம்மா..."
இந்தப் பாடல் காட்சியைப் பார்க்கும்போதெல்லாம்,
ஜீப்பை ஓட்டி வரும் சரத்பாபு,
ஜீப்புக்குள் அமர்ந்திருக்கும் ஷோபா, அவரது தோழிகள், அனைவரையும் விட என் கண்களுக்கு அதிகமாகத் தெரிவது கமலஹாசன்தான். அவர் செய்த அந்த மகத்தான உதவிதான்.
ஆம். கமல் இல்லையென்றால் இந்தப் பாடலும் இல்லை. 'முள்ளும் மலரும்' படமும் இல்லை.
அந்தப் பாடல் உருவான பின்னணியை இப்படிச் சொல்கிறார் இயக்குநர் மகேந்திரன் :
“சினிமாவில் நான் நிலைத்து நின்றதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன்.
கமல் எனக்குச் செய்த உதவியைப் பற்றி இங்கு சொல்லவில்லை என்றால் நான் பாவி ஆகிவிடுவேன்.
ரஜினிகாந்த், ஷோபா, படாபட் ஜெயலட்சுமி நடிப்பில் உருவான ‘முள்ளும் மலரும்’ நான் இயக்கிய முதல் படம் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அப்போது நல்ல ஒளிப்பதிவாளரைத் தேடிக் கொண்டிருந்தபோது, கமல்தான் பாலுமகேந்திராவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிறகு படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்தது.
ஒருநாள் படத்தின் டபுள் பாசிட்டிவ்வைப் பார்க்க தயாரிப்பாளர் வந்தார். அமைதியாகப் பார்த்தார்.
அவருக்கு திருப்தி இல்லை. வசனம் ஆங்காங்கே இருக்கிறது. மற்றபடி படம் சைலன்ட்டாக இருக்கிறது என்று அதிருப்தி தெரிவித்து, ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’ பாடல் காட்சியையும், அதற்குமுன் வரும் லீடு காட்சியையும் படமாக்காமல் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார். படத்தின் ஜீவனே அதுதான் என்றேன். முடியாது என்று போய்விட்டார்.
இதுபற்றி நான் கமலிடம் சொல்லி வருத்தப்பட்டபோது, அவரே தயாரிப்பாளரிடம் சென்று பேசினார். அப்போதும் தயாரிப்பாளர் மசியவில்லை.
உடனே அந்தப் பாடல் மற்றும் லீடு காட்சியைப் படமாக்க கமல் தன் சொந்தப் பணத்தைக் கொடுத்தார். பிறகு சத்யா ஸ்டுடியோவில் லீடு காட்சியைப் படமாக்கினேன்.
இன்று ‘முள்ளும் மலரும்’ பற்றியும், என்னைப் பற்றியும் மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் அந்தப் பெருமை எல்லாம் கமலைத்தான் சேர வேண்டும். என் உயிர் உள்ளவரை கமல் செய்த இந்த உதவியை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.”
இப்படிச் சொல்லி இருந்தார் இயக்குநர் மகேந்திரன்.
இந்த விஷயத்தைப் படித்தபோது, கமல் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பு, இன்னும் ஒரு படி மேலே உயர்ந்தது.
"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது."
"தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது."

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva