Category:
Created:
Updated:
ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வத்திகான் திரும்பினார். தற்போது அங்கு முழு ஓய்வு எடுத்து வருகிறார்.
இதற்கிடையே, இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணியார் தம்பதி இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், வத்திகானில் ஓய்வு எடுத்து வரும் போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சார்லஸ் ஆகியோர் இன்று திடீரென சந்தித்தனர். அப்போது அவரது உடல்நலம் பற்றி விசாரித்ததாகக் கூறப்படுகிறது.