Category:
Created:
Updated:
கனடாவில் வாடகைக் குடியிருப்பாளர் ஒருவருக்கு எதிராக வீட்டு உரிமையாளர் விநோதமான வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வாடகைக் குடியிருப்பாளர் வீட்டின் மாடியில் புகைப்பிடித்தார் எனவும் அவரை வீட்டிலிருந்து வெளியேற்றுமாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். பால்கனியில் புகை பிடித்ததற்காக வாடகை குடியிருப்பாளர்களை வெளியேற்ற முயன்ற வீட்டு உரிமையாளர் (landlords) போதுமான காரணங்களை நிரூபிக்கவில்லை என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இதனால், வாடகை முடிப்பதற்கான அறிவிப்பை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த தீர்ப்பு நீதிபதி ஜான் எஸ். ஹார்வியினால் வழங்கப்பட்டது, மேலும் அது பிரிட்டிஷ் கொலம்பியாவின் குடியிருப்பு வாடகை மன்றத்தின் (Residential Tenancy Branch - RTB) முந்தைய முடிவை மாற்றியது.