2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3% ஆக வளர்ச்சி
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிறிலங்காவின் ஆண்டிற்கு ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் நேர்மறையான வளர்ச்சி வீதத்தின் 5.3% என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை) தற்போதைய விலை மற்றும் நிலையான (2015) விலை மற்றும் பிற பேரண்டப் பொருளாதார குறிகாட்டிகளில் மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியை வெளியிட்டுள்ளது.
நிலையான விலையில் (2015) 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 3,161,963 மில்லியனிலிருந்து ரூ. 3,329,583 மில்லியனாக அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் நேர்மறையான வளர்ச்சி விகிதத்தில் 5.3 சதவீதமாக பதிவாகியுள்ளது.
விவசாயம், கைத்தொழில் மற்றும் பணிகள் நடவடிக்கைகள் 2024 இன் முதல் காலாண்டில் முறையே 1.1 சதவீதம், 11.8 சதவீதம் மற்றும் 2.6 சதவீதத்தால் விரிவடைந்தன.