
தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான் - விஜய் சேதுபதி புலம்பல்
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா இன்று வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்த படத்துக்காக ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி தன்னுடைய திரைவாழ்க்கையின் பல மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் தயாரிப்பாளர் ஆனதால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் கடன் பற்றியும் பேசியுள்ளார்.
அதில் “ஒரு தயாரிப்பாளராக நான் வெற்றி பெறவில்லை. அதற்கு முதல் காரணம் நான்தான். ஏனென்றால் ஒரு படத்தை எப்படித் தயாரிக்க வேண்டும் என்ற அறிவு எனக்கு இல்லை. இதனால் ஒவ்வொரு படத்தின் போதும் கடனாளியாகிறேன். அந்த கடனை அடைக்க படங்களில் நடிக்கிறேன். கடன் அடைந்ததும் மீண்டும் படம் தயாரிக்கிறேன்.இனிமெல் அது குறித்து யோசிக்க வேண்டும். லாபம் படத்தின் கடனைதான் இப்போது அடைத்துக் கொண்டிருக்கிறேன். நான் என் மகளை வைத்து தயாரித்த முகிழ் என்ற திரைப்படம் மட்டும்தான் எனக்கு லாபம் கொடுத்தது” எனக் கூறியுள்ளார்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva