- · 5 friends
-
I
கனடாவில் காப்புறுதி கம்பெனி ஒன்று வங்குரோத்து நிலைமைக்கு சென்றால் அதில் காப்புறுதி வைத்திருக்கும் எங்கள் நிலைமை என்னவாகும்?
கனடாவில் காப்புறுதி கம்பெனி ஒன்று வங்குரோத்து (Bankruptcy - அதாவது திவால் ஆகும் நிலைமை) நிலைமைக்கு சென்றால் அதில் காப்புறுதி வைத்திருக்கும் எங்கள் நிலைமை என்னவாகும்?
இந்த கேள்வி பலருக்கும் எழலாம்.....
ஆனால், இங்கு தெளிவாக புரிந்து கொள்ளவேண்டியது என்ன?
"வங்குரோத்து" (Bankruptcy) நிலைமையில் காப்புறுதி கம்பெனியின் ஆயுள் காப்புறுதி உடன்படிக்கைகளில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமென என்றுமே அச்சப்பட தேவையில்லை.
கனடாவின் சகல காப்புறுதி நிறுவனங்களையும் கனடிய மத்திய, மாகாண அரசுகளின் நிதி அமைச்சு ஒவ்வொரு நிமிடமும் பின் தொடர்ந்து கண்காணித்து கொண்டேயுள்ளது.
எந்தவொரு காப்புறுதி நிறுவனமும் அரச கண்காணிப்பிலிருந்து தப்பவே முடியாது.
காப்புறுதி நிறுவனங்களின் நிதி நிலைமைகள், வருமானங்கள், செலவுகளை கூர்ந்து பார்த்துகொண்டிருக்கும் மத்திய மாகாண அரசுகளின் நிதி அமைச்சு, அந்த காப்புறுதி நிறுவனம் சரிந்து கொண்டுப் போகின்றது என்றால், வாடிக்கையாளர்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காக இன்னொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை மாற்றியமைத்து சரியான ஒழுங்குகளை செய்து கொடுப்ழுது என்பது அவர்களின் மரபுரீதியான சட்ட நடவடிக்கையாகும்.
இவை எனது 1/4 நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட காப்புறுதி கம்பெனிகளின் முகவர் தொழில் துறையில் கனடாவில் நான் எதிர்கொண்ட நிகழ்வுகளாகும்.
சில நேரங்களில் அரச நிதி அமைச்சுகளின் கண்காணிப்புகளையும் மீறி ஆயுள் காப்புறுதி நிறுவனம் ஒன்று வங்குரோத்து (Bankruptcy) நிலைமைக்கு உள்ளாக்கப்பட்டால் வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் பாதிப்படையாமல் இருப்பதற்கு ஓரளவு பாதுகாப்பினையும், உத்தரவாதத்தினையும் அரச நட்டஈடு வழங்கும் நிறுவனம் ஒன்று வழங்குகின்றது.
அந்த நிறுவனம் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:-
ASSURIS
250, Yonge Street, Suite # 3110
Toronto, Ontario M5B 2L7, CANADA
Phone : 1 - 866 - 878 - 1225
Email : [email protected]
இதற்கு மேலால்,
"நேர்மை, உண்மை என்ற அதிஉயர் விசுவாசத்தின் அடிப்படையில் கேட்கப்படும் சகல கேள்விகளுக்குரிய தகவல்களையும் ஒழுங்கான முறையில் வழங்கி உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள்"
கனடாவின் நீதிமன்றங்கள் என்றுமே கைவிடாது என்பது நீதிதுறை வரலாறுகள் சொல்லும் பாடமாகும்.
-- சிவ. பஞ்சலிங்கம்
1/4 நூற்றாண்டுகளுக்கு மேலாக கனடாவில் "காப்புறுதி முகவர்" தொழில்துறைகளில் அனுபவங்களை எதிர்கொண்டவர்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·