காய்கறி விற்பனையாளர் காமெடியனான கதை (அண்ணாச்சி)

சொல்லுங்கண்ணே சொல்லுங்க

இமான் அண்ணாச்சி

என் ஊர் தூத்துக்குடி மாவட்டம் எரல். எனக்கு சின்ன வயதில் இருந்தே சினிமாவில் காமெடியனாக நடிக்க வேண்டும் என்பது ஆசை. அதை போகிற போக்கில் ஒருவர் தூவிட்டு போனார். எல்லோரையும் சிரிக்க வெச்சிட்டிருக்கியே நீ ஏன் சினிமாவில் நடிக்க கூடாது என கேட்டார்.

அதே கேள்வி எனக்கும் வந்தது. உடனே சென்னைக்கு கிளம்பினேன். சென்னை எக்மோரில் வந்து இறங்கியதும் பாரதி ராஜா, கஸ்தூரி ராஜா அவர்கள் ஆளுக்கொரு வண்டி வைத்து எனக்காக காத்திருப்பார்கள் என பார்த்தேன். ஆனால் கடைசியில் இரண்டு போர்ட்டர் தான் நின்றார்கள். கையில் ஒரே ஒரு மஞ்சப்பை, ஷேர் ஆட்டோ பிடித்து பனகல் பார்க் போனேன். அப்போது அது தான் காசு கொடுக்காமல் தங்கும் விடுதியாக அப்போது இருந்தது. என்னை போன்ற சினிமா கலைஞர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்றது பனகல் பார்க் மட்டுமே.

வேறு வழி இல்லாமல் ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு ஒரு மாதம் தான் இருக்கமுடிந்தது. நான் ஞாயிற்றுக்கிழமை பல இடங்களுக்கு சென்று வருவதை கண்டுபிடித்து நான் சினிமாவில் நடிக்க தான் வந்திருக்கிறேன் என்கிற உண்மை ஓனருக்கு தெரிந்துவிட வேலையில் இருந்து அனுப்பிவிட்டார்கள்.

அதன் பின் ஒரு கேமரா விற்கும் பெரிய கடைக்கு போனேன். அங்கு ஓனரிடம் வேலை கேட்டேன். அவர் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர், அங்கு இருக்கும் எல்லோரும் ஆங்கிலம் மட்டுமே பேசுவார்கள், நான் மட்டும் தான் தமிழ். என்ன வேலை தெரியும் என கேட்டார், எல்லா வேலையும் தெரியும் என கூறினேன். நாளைக்குவந்து வேலைக்கு சேர்ந்துகொள் என கூறினார், இல்லை இப்போதே சேருகிறேன் என சொல்லி சேர்ந்துவிட்டேன். அதன் பின் மேல் மாடியில் தங்க இடம் கொடுத்தார்

அதன் பிறகு தான் என் முக்கிய நண்பர் ராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு சாப்பாட்டுக்கே கஷ்டமாக இருக்கிறது ஒரு ஆயிரம் ருபாய் கிடைக்குமா என அண்ணனுக்கு லெட்டர் எழுதினேன். அவர் உடனே ட்ரங்க் கால் செய்து அங்கு இருக்கும் செக்யூரிட்டியிடம் பேசி இருக்கிறார். 'என் நண்பர் 1000 ருபாய் கொடுப்பார், அதை வாங்கி என் தம்பியிடம் கொடுத்துவிடு' என சொல்லி இருக்கிறார். அதையும் அவர் வாங்கி கொடுத்தார்.

அன்று நான் நிம்மதியாக சாப்பிட்டேன். அப்போது இட்லி 1 ருபாய், பூரி 1 ருபாய், சாப்பாடு ஆறு ருபாய்.. நான் 90 ரூபாய்க்கு சாப்பிட்டேன். மீதம் இருக்கும் 910 ரூபாயை பையில் வைத்துகொண்டு தூங்கினேன், எழுந்து பார்த்தால் 10 மட்டும் தான் இருந்தது, 900 காணவில்லை. அதை யார் எடுத்தார் என தெரியவில்லை

இப்படி ஆரம்பித்த என் வாழ்க்கை, நாளைக்கு விடிந்துவிடும் என எதிர்பார்ப்போடு நகர்ந்தது. 18 வருடங்கள் காய்கறி வியாபாரம் ரோட்டில் பார்த்தேன். என் அம்மாவுக்கும் பணம் அனுப்பவேண்டும். அதனால் இதை செய்து கொண்டிருந்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணம் ஆகிவிடுகிறது என மனைவி பெயர் ஆக்னஸ் பிரியா. ஒன்னுமே இல்லாத எனக்கு 2 திருமணம் செய்து கொடுத்தார்கள். அதன் பிறகு கஷ்டத்தில் வாழ்க்கையை ஓட்டுவதற்காக என் மனைவி நகைகள் ஒவ்வொன்றாக கழற்றி கொடுத்தார். சினிமாவில் ஜெயித்த பிறகு அவருக்கு 100 பவுனாக திருப்பி கொடுத்துவிட்டேன்.

18 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு டிவியில் கூப்பிட்டார்கள், சுத்தமாக தமிழ் பேச வேண்டும் என சொன்னார்கள். அங்கு ஆரம்பித்த கலை பயணம் தான இது. நான் அதற்கு முன்பு டிவியில் சின்னதாக தோன்றி இருக்கிறேன். முதல் வாய்ப்பு கொடுத்தது விஜய் டிவி கலக்கப்போவது யாரு சீசன் 1 தான். அதன் பின் விஜய் டிவியில் தொடர முடியவில்லை, வேறொரு தனியார் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. அதில் என் 100 சதவீதத்தை கொடுத்ததால் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது.

உங்களுக்கு வாய்ப்பு ஒருமுறை தான் வரும், அதில் 100 சதவீதம் நிரூபித்தால் தான் ஒரு 20 சதவீதம் ரிட்டர்ன் வரும். அதன் பின் சன் டிவியில் குழந்தைகள் வைத்து (குட்டி சுட்டீஸ்) நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு கிடைத்தது.

நம்ம சீனு ராமசாமிதான். இவர்தான் கார் வாங்கிக்கோ, அப்போதான் வாய்ப்பு நல்லா வரும். இல்லைனா, கடைசி வரைக்கும் ஆக்டிவாலதான் போகணும்னு சொல்ல, உடனே கார் புக் பண்ணி வாங்கியிருக்கார், சொல்லப்போனா, அதுக்கு அப்புறம்தான் அடுத்தடுத்து வாய்ப்புகளும் வந்துச்சு.

(2006இல் சென்னை காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகரானார். மரியான், நையாண்டி (திரைப்படம்) போன்ற தனுஷின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார்)

பழசை மறக்காமல் இன்று தினமும் பழைய என் காய்கறி வண்டியை வணங்கி விட்டு தான் காரில் ஏறுவேன் என்று சொன்னார் இமான் அண்ணாச்சி.

  • 696
  • More
சினிமா செய்திகள்
எம். ஆர். ராதாவின் மனசு..
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கூறிய உண்மை
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஞ்சித் 1999
ஷாலின் ஷோயா கட்டிய கனவு வீடு
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலின் ஷோயா. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மலையாள
தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்
மூன்றாவது திருமணம் செய்ய போகும் நடிகர்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா  தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஓடிய போதும், இந்த படத்தில் வரும்
அமெரிக்காவில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலி
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகை அஞ்சலி. அவருக்கு ஏராளம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடைய
கங்குவா படம் பற்றிய அப்டேட்
நடிகர் சூர்யா நடித்துள்ள படங்களில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக உள்ளது கங்குவா.சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பட
கனிகாவிற்கு வளையல் அணியும் விழா
கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன்-கனிகா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள். இந்த நிலையில் கனிகாவின் 5வது மாத நிகழ்ச்சி அழகாக
9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் மொத்த வசூல்
தனக்கு கிடைத்த வாய்ப்பை வேட்டையன் என்ற படத்தை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் ஞானவேல்.இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரி
நடிகை ரம்யா கிருஷ்ணன் விவகாரத்து செய்கிறாரா?
தமிழில் 1983ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.ஐட்டம் டான்ஸ், அம்மன் வேடம், போல்டான கதாபாத
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு