·   ·  1070 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கனடா வாழ்வில் ஆயுள் காப்புறுதியில் சேரும் போது பலரும் தங்களுக்குள் எழுப்பும் ஒரு கேள்வி?

எத்தகைய காப்புறுதி திட்டத்தினை இங்கு தெரிவு செய்யலாம்?

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வலிமையுடையதாக இருக்கும் தவணை காப்புறுதி திட்டம் (TERM LIFE INSURANCE) உகந்ததா?

அல்லது

வாழ்நாள் முழுவதும் வலிமையாயிருக்கும் நிரந்தரமான ஆயுள் காப்புறுதி திட்டம் (PERMANENT WHOLE LIFE INSURANCE) உகந்ததா?

என்பதுவே இங்கு எழுப்பபடும் ஓர் முக்கியமான கேள்வியாகும்.

ஒவ்வொருவர் வாழ்விலும் அவரவர் நலம் சார்ந்த நோக்கங்கள், தேவைகள், பணம் செலுத்தும் வலிமைகள் என்பனவற்றினை அடிப்படையாக வைத்தே இங்கு ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டியுள்ளது.

அந்த நலன் சார்ந்த நோக்கங்கள் தேவைகளை இரு வகையாக பிரிக்கலாம்.

(1) குடும்பத்திற்கு ஆயுள் காப்புறுதியால் ஒரு பாதுகாப்பு! மட்டுமே தேவை என்ற நோக்கம்!

அதாவது காலம் தவறிய உயிர் இழப்பால் (PREMATURE DEATH), குடும்ப வாரிசுகள் தங்கள் வாழ்வில் சொந்த காலில் நிற்கும் வரை நிதி நிலைமைகளில் துயரங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதற்குரிய முழுமையான பாதுகாப்பு மட்டும் இருந்தால் போதும்.

இத்தகைய நோக்கம் மட்டும் இருப்பவர்களுக்கு தவணை காப்புறுதி (Term Life Insurance) உகந்தது என்ற முடிவுக்கு வரலாம்.

இதில்

20 வருடங்களுக்கு மட்டும் ஒரே விலை

30 வருடங்களுக்கு மட்டும் ஒரே விலை

40 வருடங்களுக்கு மட்டும் ஒரே விலை

65 வயது வரை ஒரே விலை

என பலவகை உண்டு. செலுத்தும் பணமும் மலிவானதாகவிருக்கும்.

(2) பாதுகாப்பும் தேவை! அதே நேரம் வாரிசுகளுக்கு ஆயுள் காப்புறுதியில் வரியில்லாத முதலீட்டு தொகையினையும் உருவாக்கி கொடுக்க வேண்டும்.

இத்தகைய இரண்டாவது நோக்கத்தில் இருப்பவர்களுக்கு நிரந்தரமான, வாழ்நாள் முழுவதும் வலிமைமிக்க ஆயுள் காப்புறுதி உகந்தது என்ற முடிவுக்கு வரலாம்.

(Permanent Whole Life Insurance Plan)

இதிலும் பலவகைகள் உண்டு. ஒவ்வொருவரின் வயதுக்கும் ஏற்றமாதிரி விலைகள் அதிகமாகவிருக்கும்.

சேமிப்பு முதலீட்டு திட்டங்கள் (Investment Plans), பண பெறுமதிகள் (Cash Values) என மேலதிகமாகவும் இருக்கும்.

மாத பணம் செலுத்த தவறினாலும் காப்புறுதியில் சேர்ந்துள்ள முதலீடுகள், பண பெறுமதியிலிருந்து பணம் செலுத்தலாம். தேவை என்றால் காப்புறுதியிலிருந்து கடனும் பெறலாம்.

இரு வகையான காப்புறுதி திட்டங்களையும் அனுகூலங்கள், பிரதிகூலங்கள் என்ற ஒப்பீட்டு அடிப்படையில் அலசி பார்க்கும் போது வாழ்நாள் முழுவதும் வலிமையாயிருக்கும் நிரந்தரமான ஆயுள் காப்புறுதி திட்டம் (PERMANENT WHOLE LIFE INSURANCE PLAN) சிறந்தது என்ற முடிவுக்கு எவரும் வரலாம். அதுவே சரியான முடிவுமாகும்.

அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்ட சில வருடங்களுக்கு பணம் செலுத்திவிட்டு தொடர்ந்து பணம் செலுத்தவே தேவையில்லை என்ற திட்டங்களும் உண்டு.

ஆனால் இங்கு செலுத்தப்படும் விலை என்பது அதிகமாகவே இருக்கும்.

விலை அதிகம் என்பதால் சிலர் முற்றாகவே ஆயுள் காப்புறுதி திட்டங்களில் சேராமலும் இருந்து கொள்வதுண்டு.

ஆயுள் காப்புறுதியில் சேர்ந்து கொள்ளாது காலதாமதம் செய்து கொண்டு போனால் என்ன விளைவுகள்?

• காலம் தவறிய குடும்பத்தவர்களில் ஒருவரின் இழப்பு என்பது ஏனையோரை நிதி நிலைமைகளில் நசுக்கிவிடும்.

• வயது அதிகரிக்க, அதிகரிக்க மாத கட்டுபணம் அதிகரித்துக் கொண்டே போகும்.

• உடல் நிலைமை பாதிப்படைந்தால் தொடர்ந்து ஆயுள் காப்புறுதியில் சேர முடியாத நிலைமைகள் ஏற்படலாம்.

சேரும்போது மட்டும் உடல்நிலை ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும்.

எனவே மலிவான தவணை காப்புறுதியில் என்றாலும் (CONVERTIBLE TERM INSURANCE) இப்போது சேர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில்,

   அது என்றும் ஓர் பாதுகாப்பாகவிருக்கும்.

   70 வயதிற்கு முன்பு மாற்றியமைக்கும் வயதிற்குரிய விலையில் எதுவிதமான மருத்துப் பரிசோதனைகளுமின்றி நிரந்தர பத்திரங்களுக்கு, வாரிசுகளுக்கு ஒருமுதலீடாக மாற்றியமைக்கலாம் என காப்புறுதி முகவல்கள் வழிகாட்டுவது வழமையாகும்.

கனடாவில் தங்களின் காப்புறுதி தேவைகள், ஆலோசனைகளுக்கு அழையுங்கள்

SIVA – PANCHALINGAM

(VETERAN IN CANADIAN INSURANCE INDUSTRY FOR MORE THAN ¼ CENTURY)

Phone: 416-321-0999

Cell: 416-990-4908

Email: [email protected]

  • 562
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்