·   ·  2224 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கனடா வாழ்வில் ஆயுள் காப்புறுதியில் சேர்வதில் காலதாமதம் செய்தால் என்ன பாதிப்பு?

கனடா வாழ்வில் ஆயுள் காப்புறுதியில் சேர்வதில் காலதாமதம் செய்தால் என்ன பாதிப்பு?

 

இப்படியொரு கேள்வி பலருக்கும் எழலாம்.

 

è துரதிர்ஷ்டவசமாக ஏற்படும் காலம் தவறிய உயிர் இழப்பினால் குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பாற்ற நிலைமை!

è ஒவ்வொரு வயதும் அதிகரிக்க, அதிகரிக்க செலுத்தும் கட்டணமும் அதிகரிக்கும்.

è உடல்நிலைமை, ஆரோக்கியம் குன்றினால், ஆயுள் காப்புறுதியில் அதிக கட்டணம் செலுத்தி சேரவேண்டிய நிலைமைகள் ஏற்படும்.

சில நேரங்களில் காப்புறுதி கம்பனி நிராகரிக்கும் நிலைமையும் ஏற்படும்.

è மேலதிக புலனாய்வுகளில் சாதகமான நிலைமை ஏற்படுவது சிரமமானதாகவும் இருக்கும்.

(ஒரு கம்பனிக்கு விண்ணப்பம் செய்து புலனாய்வு செய்யப்பட்ட விடயங்கள் இன்னொரு கம்பனிக்கு தொடர்ந்து மனு செய்யும்போது பதிவாக காட்டுவதால் அங்கு என்ன நடந்தது? என்ற பரிசீலனைக்கு பின்பே முடிவு பண்ணுவார்கள்.)

மேலதிக புலனாய்வுக்குரிய பல தகவல்ளை மனு செய்யும் விண்ணப்பத்தில் சமர்ப்பிக்கும்போது அவை நிஜமானதா? - என்பதனை தங்கள் சட்ட வரையறைக்குள் உறுதி செய்த பின்பே ஒவ்வொரு காப்புறுதி கம்பனியும் ஒப்பந்தத்தினை அங்கீகரிக்கும்.

அத்தகைய புலனாய்வுகள் பின்வருமாறு:

1. தனிப்பட்ட தகவல்களின் புலனாய்வுகள்.

வயதுக்கு ஏற்றவாறு செலுத்தும் விலை மாறும்.

ஒரே வயதில் உள்ள பெண்ணுக்கு விலை குறைவாகவும், ஆணுக்கு சற்று அதிகமாகவுமே என்றும் இருக்கும்.

2. மருத்துவ புலனாய்வுகள்!

ஓர் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்குஙம் தகவல்களை வைத்து முடிவு பண்ணுதல்.

"மருத்துவ தகவல் மையம்" (Medical Information Bureau) என்ற இடத்திலிருந்து பெறும் தகவல்கள்

நேரடி மருத்துவ பரிசோதனைகள் (Partly or Completely Direct Medical Checking)

குடும்ப மருத்துவர் மற்றும் சிகிச்சை பெற்ற வைத்திய நிலையங்கள், விசேட மருத்துவர்களிடமிருந்து மருத்துவ ஆவணங்களை பெற்று பரிசீலனை செய்தல்.

3. நிதி நிலைமைகளின் புலனாய்வுகள்

மாத வருமானம், தேறிய சொத்துகளின் மதிப்பீடு, சட்ட விரோத கறுப்பு பணம் முதலீட்டு திட்டங்களுடன் சேர்ந்த ஆயுள் காப்புறுதி திட்டங்களுக்குள் மறைத்து வைக்கப்படவில்லை என்ற உறுதிபாடுகள்.

4. காப்புறுதியின் தேவை தொடர்பான புலனாய்வுகள்

அதாவது காப்புறுதியின் தேவையில்லாத எவருக்கும் காப்புறுதி கிடைக்காது. சில நேரங்களில் அவர்களின் தேவை, வருமானம், நிதி வலிமைக்கு ஏற்ற மாதிரி தொகையினை குறைத்து அங்கீகரிக்கப்படலாம்.

5. செய்யும் தொழில் தொடர்பான நிலைமைகள்

உயிர் வாழ்வுகுகு ஆபத்தான நிலைமையில் தொழில் செய்வோருக்கு மிக அதிகமான விசேட கட்டணத்துடன் அங்கீகரிக்கப்படும்.

சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு ஆயுள் காப்புறுதியின் அங்கீகாரம் கிடைக்காதும் போகலாம்.

உதாரணமாக, இராணுவம் மற்றும் போர் படைகளில் தொழில் புரிதல், போர் விமானங்கள் ஓட்டுதல், அதி உயர் கட்டிடங்களில் விளிம்புகளிலிருந்து நிர்மாண வேலைகள் செய்வோர் என்பவர்களை குறிப்பிடலாம்.

6. வெளிநாடுகளில் தொழில் செய்தல், அந்த நாடுகளின் பிரயாணங்கள்!

"உலக சுகாதார நிறுவனம் " (WHO - World Health Organisation)

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் மருத்துவ, சுகாதார மதிப்பீட்டு ஆய்வு அறிக்கைகள் வைத்திருக்கின்றது. அந்த அறிக்கைகள், ஆவணங்களை அடிப்படையாக வைத்து காப்புறுதி கம்பனியும், ஆயுள் காப்புறுதி வழங்குதலில் முடிவு செய்யும்.

7. குடியுரிமை அந்தஸ்து தொடர்பான புலனாய்வுகள்

கனடாவின் பிரஜா உரிமை அல்லது நிரந்தர குடியுரிமையாளராக இருக்கும் நிலைமை விலைகளிலும், அதிகரிப்பதிலும் சாதகமாக இருக்கும். 

8. புகைத்தல், மதுபானம், போதை வஸ்துக்களின் உபயோகம் தொடர்பான புலனாய்வுகளில் விலைகள் பெருமளவு தொகைகளில் மாறுபடும்.

9. வாகனம் ஓட்டும்போது வீதி ஒழுங்குகளை மீறி அதிக தண்டனை ரிக்கற்றுகள் பெற்றவரா? என்ற புலனாய்வுகளும் கருத்தில் கொள்ளப்படும்.

ஏனெனில், வீதி சட்ட ஒழுங்குகளை மீறி அதிக தண்டனை ரிக்கற்றுகள் பெறுபவர் வாகனம் செலுத்துவதில் உயிர் ஆபத்தினை தேடுகின்றார் என்ற பார்வை விலைகளை அதிகரிக்க பண்ணலாம்.

10. குற்றவியல் பதிவுகள் ஏதாவது இருந்தால் அது உயிர் ஆபத்தினை உருவாக்கக் கூடிய குற்றவியல் பிரச்சனையா? என்பதும் பரிசீலனை செய்யப்படும்,.

ஆனால் ஆயுள் காப்புறுதியில் சேர்ந்து ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டு விட்டால் அதன் பின்பு எந்தவொரு கேள்விகளோ அல்லது புலனாய்வுகளோ இருக்க மாட்டாது.

எனவேதான், விலை குறைந்த குறிப்பிட்ட ஓர் வயதுக்கு முன்பு நிரந்தர ஒப்பந்தமாக மாற்றியமைக்கக் கூடிய தவணை காப்புறுதியேனும் (Converted Term Life Insurance Plans) சேர்ந்து கொள்ளுங்கள் என கனடாவின் முகவர் நிலையங்கள் ஆலோசனை வழங்குவது வழமையாகும்.

- சிவ.பஞ்சலிங்கம், கனடா.

காப்புறுதி முகவர் தொழிலில் 1/4 நூற்றாண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர்.

[email protected]

  • 622
  • More
Comments (0)
Login or Join to comment.