Ads
நீண்ட கால இழுபறிக்கு வழங்கப்பட்டது தீர்வு - சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர கட்டிடம் அமைக்க நடவடிக்கை
சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கு நகரப்பகுதியில் ஒர் இடத்தினை ஒதுக்கி கொடுப்பதில் பிரதேச செயலகம் நகரசபைகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவிவந்த இழுபறி நிலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு ஓர் இலகுவான சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டுவந்த அமைச்சர் குறித்த பகுதிக்கு இன்று நேரடி களவிஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்தறிந்துகொண்டார்.
அத்’துடன் நிலைமைகள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி A9 கண்டி வீதி நுணாவில் பகுதியில் சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கான இடத்தினை பெற்றுக் கொடுத்து நீண்டநாள் இருந்துவந்த இழுபறிக்கு தீர்வை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Info
Ads
Latest News
Ads