·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 158
  • More

மீசாலை சோலை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பொங்கல்

மீசாலை சோலை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பொங்கல்

Comments (0)
Login or Join to comment.
·
Added article

இறந்த பிறகும் நீங்கள் அழியாதவராக மாற விரும்பினால், இந்த திரைப்பட நடிகரைப் பின்பற்றுங்கள். அவர் இந்தியத் திரைப்படங்களில் பிரபலமான நடிகர். அவர் பெயர் சயாஜி ஷிண்டே. அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மராத்தி நடிகர்.

ஒரு நேர்காணலில், என் அம்மா நோய்வாய்ப்பட்டு, அவர் உயிர் பிழைப்பதற்கான நம்பிக்கை இல்லாதபோது, ​​"நான் எவ்வளவு பணக்காரனாக, சக்திவாய்ந்தவனாக அல்லது செல்வாக்கு மிக்கவனாக மாறினாலும், உன்னைக் காப்பாற்ற முடியாது, ஆனால் நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்..." என்று நான் அவரிடம் சொன்னேன் என்று அவர் வெளிப்படுத்தினார்.

சஞ்சய் கூறினார், "ஒரு நாள் நான் என் அம்மாவை எடை போடும் தராசின் ஒரு பக்கத்தில் வைத்து, மறுபுறம் பூர்வீக மரங்களின் விதைகளை வைத்தேன். அந்த விதைகளை மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் நட்டேன் - எங்கோ 1,000, எங்கோ 10,000, எங்கோ 5,000 மரங்கள் வளர்ந்தன. இப்போது இந்த மரங்கள் 20-20 அடி உயரமும் பழம்தரும் தன்மையும் கொண்டவை. இந்த மரங்கள் பழங்கள் மற்றும் பூக்கள், நறுமணம் மற்றும் பறவைகளுடன் இருக்கும் வரை, நான் என் அம்மாவுடன் இந்த மரங்களில் வாழ்வேன்..." என்றார் சயாஜி ஷிண்டே.

  • 212
·
Added a post

ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம் இது. ஜப்பான நாட்டில். பெரும்பான்மையான வீடுகள் மரத்தால், இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர். தன் வீட்டை புதுப்பிப்பதற்காக, மரத்தாலான சுவரை பெயர்த்து எடுத்தார். அப்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில். ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது எப்படி சிக்கியது என்று ஆராய்ந்தார். வெளிப்பகுதியிலிருந்து ஆணி அடிக்கும்போது. அந்த ஆணி. பல்லியின் ஒரு காலில் இறங்கி இருக்கிறது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆணி அடித்து குறைந்தது மூன்று ஆண்டுகள் இருக்கும். எப்படி இந்த பல்லி. மூன்று ஆண்டுகள் உயிருடன் இருந்தது என்ற சந்தேகம் வர, மேற்கொண்டு வேலை செய்யாமல், அந்த பல்லியை கண்காணித்து வந்தார்.

சிறிது நேரம் சென்றதும், இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதைக் கண்டார் அந்த பல்லி. தன் வாயிலிருந்து உணவை எடுத்து சுவரில் சிக்கிக் கொண்டிருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்து ஆச்சரியமடைந்தார் மூன்று ஆண்டுகளாக. சுவரில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்துள்ளது. இன்னொரு பல்லி

சாதாரண பல்லியால் முடியும்போது. நம்மால் முடியாதா? 10 மாதம் சுமந்த தாய்- தந்தைக்கு, அவர்கள் முடியாத காலத்தில் நம்மால் உணவளிக்க முடியாதா..?

  • 230

படித்ததில் பிடித்தது....

அடுத்த மனிதனோடு பகைமை கொள்வது மிக எளிது..

அடுத்த மனிதனின் மனதை காயப்படுத்துவது மிக எளிது..

அடுத்த மனிதர்களுக்கு கதை கட்டுவது எளிது..

அடுத்த மனிதர்களோடு தர்க்கம் செய்வது மிக எளிது..

அடுத்த மனிதர்களை வீண்வம்புக்கு அழைப்பது மிக எளிது..

ஆனால் அத்தனையும் தனக்கும் வந்தால் அதை ஏற்றுக் கொள்வது மிக எளிதல்ல..

அடுத்தவனுக்கு செய்வது எல்லாம் மிக எளிதாக தோன்றும்..

ஆனால் தனக்கு வந்தால் மட்டும் எதையும் தாங்கிக் கொள்ள முடியாது..

எதையும் செய்யும் முன் ..

பேசும் முன்..

கூறும் முன்..

சிந்தித்து செயற்படுங்கள்....

  • 228
·
Added a post

சரியாக தூங்காமல் எழுந்திருப்பவர்கள் அடுத்த நாள் தூங்கிக் கொள்ளலாம் என சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். அரைகுறையாக தூங்கி எழுந்து தங்கள் அன்றாட வேலையை பார்க்கச் செல்பவர்கள் பலர். இதனால் ஏற்படும் பின் விளைவுகளை யாரும் அறிவதில்லை. பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட தூக்கமின்மை என்பதும் பிரதான காரணமாகும்.

தூக்கமின்மையால் சிறு வயதிலேயே கண்களுக்குக் கீழே கருமை, சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது தவிர, நல்ல தூக்கம் இல்லாதபோது, ​​கண்களில் எரியும் உணர்வு இருப்பதையும் நீங்கள் அடிக்கடி உணர்ந்திருப்பீர்கள். கண் எரிச்சல் காரணமாக வாகனம் ஓட்டுவது, எழுதுவது, படிப்பது மற்றும் கவனம் செலுத்தும் பணிகளில் சிரமம் ஏற்படும். அதுமட்டுமின்றி சில சமயங்களில் கண்கள் வறட்சி அடையும் பிரச்சனையும் சந்திக்க வைக்கும்.

நீங்கள் நன்றாக தூங்கவில்லை என்றால் உங்கள் நினைவாற்றல் என்பதும் கேள்விக்குறியாகும். சிறிய விஷயங்களை நினைவில் கொள்வதிலும் சிரமம் ஏற்படும். நீங்கள் நன்றாக தூங்கினால் நினைவாற்றல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். தூக்கமின்மையால் ஒருவகை மந்தநிலை ஏற்பட்டு எதிலும் சரியாக செயல்படமுடியாது.

போதிய தூக்கம் இல்லாததால், எந்த விதமான செயலிலும் பங்கு கொள்ள முடியாது. குறைவான உடல் செயல்பாடு காரணமாக, பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. இது வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கிறது.

நீங்கள் நன்றாக தூங்கினால், உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதோடு, உணவிலும் கவனம் செலுத்துவீர்கள். சரியாக தூங்காமல் எது செய்தாலும் அவை முழுமை அடையாது. உடற்பயிற்சி போன்ற எந்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காது.

உங்களுக்கு நல்ல மற்றும் ஆழ்ந்த தூக்கம் வரவில்லை என்றால், இந்த மனநிலையும் மோசமான விளைவை ஏற்படுத்தும். பல நேரங்களில், தூக்கமின்மையால், அக்கறையின்மை, விரக்தி மற்றும் கோபமும் அதிகரிக்கிறது. இது மட்டுமின்றி, ஏற்கனவே ஏதேனும் பிரச்சனையால் ஒருவர் சிரமப்பட்டிருந்தால், அவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கலாம் அல்லது பதட்டம் ஏற்படலாம்.

  • 236
·
Added a news

தீபாவளி பண்டிகையையொட்டி, கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தீபாவளி என்ற வாா்த்தையுடன் பாரம்பரிய ரங்கோலி படமும் இடம்பெற்றுள்ளது.

இது தொடா்பாக கனடா அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கனடா உள்பட உலகம் முழுவதும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்த மதத்தினா், சமண மதத்தினரால் கொண்டாடப்படும் முக்கிய திருவிழா தீபாவளியாகும்.

கனடாவின் பன்முக கலாசாரக் கட்டமைப்பை அங்கீகரிக்கும் வகையில், தீபாவளி சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுவது பெருமைக்குரியது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அஞ்சல் தலை வெளியீட்டுக்காக கனடா அஞ்சல் துறைக்கு இந்தியத் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.

  • 247
·
Added a news

அமெரிக்கா தயாராக இருந்தால் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்குத் நடத்துவதற்கு தயாராக உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா வரிகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய வரிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கனடா ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தை வெளியிட்டது.

அந்த விளம்பரத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் வரி விதிப்புகள் வர்த்தக போர்களை உருவாக்கலாம் என்று உரையாற்றிய காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்நிலையில் கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தக் கனடா தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.

ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா சென்றுள்ள மார்க் கார்னி கோலாலம்பூரில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார்.

  • 249
·
Added a news

தாய்லாந்தின் முன்னாள் ராணி மற்றும் தற்போதைய மன்னர் மஹா வஜிரலொங்கோர்னின் தாயாருமான ராணி சிரிகிட் கிடியாகரா (Queen Sirikit Kitiyakara) தனது 93 வது வயதில் காலமானார்.

நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவர், வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 24, 2025) உயிரிழந்ததாக தாய்லாந்து அரச குடும்பம் அறிவித்துள்ளது.

  • 249
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பேச்சுகளில் கனிவு வேண்டும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை தவிர்க்கவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஊதா

 

ரிஷபம்

துணைவர் வழி உறவுகளால் ஆதரவு மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகளால் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

மிதுனம்

மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

கடகம்

புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். அரசு வழி செயல்களில் பொறுமை வேண்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர் ஆலோசனை நன்மை தரும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் அகலும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

சிம்மம்

பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் குறையும். சுபகாரிய செயல்களில் தாமதம் உண்டாகும். வாகன பராமரிப்பு தொடர்பாக விரயம் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கன்னி

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு ஏற்படும். நவீன பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

துலாம்

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் வரவுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் உயரும். ஞாபக மறதி பிரச்சனைகள் ஓரளவு குறையும். பயணத்தால் சாதகமான பலன் கிடைக்கும். வருமானம் திருப்தியை தரும். உத்தியோக உயர்வு பற்றிய செய்திகள் கிடைக்கும். உறவினர்கள் உதவி கேட்டு வருவர்கள். பகை குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

விருச்சிகம்

முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படவும். வியாபாரத்தில் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் - மனைவிக்கிடையே பொறுமை அவசியம். உடல் ஆரோக்கிய சிந்தனை மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

தனுசு

முன்பின் தெரியாதவர்கள் ஒத்தழைப்பாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

மகரம்

குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பெருந்தன்மையான செயல்களால் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களால் லாபம் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கும்பம்

தொழில் ரீதியான எண்ணம் சாதகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பெரிய மனிதர்களின் சந்திப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மீனம்

வாழ்க்கைத்துணை உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். கூட்டாளிகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த சில காரியம் சாதகமாக முடியும். எதிர்ப்பு விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

  • 348
·
Added a post

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 8 ஆம் தேதி சனிக்கிழமை 25.10.2025

இன்று முழுவதும் சதுர்த்தி.

இன்று காலை 07.08 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

இன்று அதிகாலை 05.16 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம் .

இன்று பிற்பகல் 12.46 வரை வனிசை. பின்னர் பத்தரை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=306&dpx=2&t=1761372453

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 371
  • 368
  • 367
·
Added article

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் எப்போதும் செய்திகளில் இருப்பவர். ஸ்ரீதேவியின் மகள் என்பதால், அவரைப் பற்றி நெட்டிசன்கள் அதிகம் விவாதிக்கின்றனர். பாலிவுட்டின் கவர்ச்சியான நடிகைகளில் ஜான்வியும் ஒருவர்.

கஜோல் மற்றும் ட்விங்கிள் தொகுத்து வழங்கிய 'டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்' நிகழ்ச்சியில், ஜான்வி தனது பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து வெளிப்படையாகப் பேசினார். தான் சர்ஜரி செய்துகொண்டதாகவும், அது தாய் ஸ்ரீதேவியின் வழிகாட்டுதலின்படி நடந்ததாகவும் கூறினார்.

நான் செய்த எல்லாவற்றிலும் புத்திசாலித்தனமான, சரியான முடிவுகளை எடுத்தேன். அம்மா ஸ்ரீதேவி எனக்குத் துணையாக இருந்தார். அவரது ஆலோசனையால் தவறுகள் செய்யாமல் முன்னேறினேன். ஒரு வீடியோவைப் பார்த்துவிட்டு, பஃபேலோ-பிளாஸ்டி செய்துகொள்ள நினைத்து தவறு நடந்தால் அது ஆபத்தானது. எனவே வெளிப்படைத்தன்மை முக்கியம்.

பஃபேலோ-பிளாஸ்டி என்ற வார்த்தை குறித்தும் ஜான்வி பேசினார். இனி மறைக்க எதுவும் இல்லை, எல்லா முடிவுகளையும் வெளிப்படையாகச் சொல்வேன் என்றார். சமூக ஊடகங்கள் மனதை பாதிக்கும், எனவே உண்மையைப் பேசுவது அவசியம். நம் உடலை ஏற்றுக்கொள்வது வெட்கமல்ல என்றும் அவர் கூறினார்.

அம்மா எப்போதும் எனக்கு பலம். என் முடிவுகளில் அவரது பங்கு எப்போதும் இருக்கும் என ஜான்வி கூறினார். தற்போது ராம் சரணுடன் 'பெட்டி' படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் 'தேவரா' படத்தில் நடித்துள்ளார்.

  • 563
·
Added a post

ஒரு நாள், ஒரு தந்தை தனது மகனுக்குச் சிறிய மரப்பெட்டியை அளித்தார். அதன் உள்ளே கையில் வரைந்த ஒரு வரைபடம், சில நாணயங்கள், சில ஆடைகள், மேலும் ஒரு குறிப்பும் இருந்தது. அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

“புதையலைத் தேடிச் செல்.”

மகன் தன்னிடம் இருந்த அந்த சிறிய பொருட்களுடன் பயணம் தொடங்கினான். பாதை மிகவும் நீண்டது, புதிதானது, சில நேரங்களில் கடினமானது. கையில் இருந்த சிறு பணத்துடன், உணவு, ஆடைகளை நிதானமாகச் செலவழிக்கக் கற்றுக்கொண்டான்.

அவன் காடுகளையும் பாலைவனங்களையும் நதிகளையும் கடந்து சென்றான். சிலர் அவனுக்கு அன்பு காட்டினர், சிலர் அவனை ஏமாற்றினர். அவன் இயற்கையின் அழகையும், வாழ்வின் வலியையும் ஒரே பாதையில் கண்டான். ஆனால் அந்த ஒவ்வொரு அனுபவத்திலும் அவன் அறிவும் ஆழ்ந்த புரிதலும் வளர்ந்தது.

இறுதியில் வரைபடத்தில் காட்டிய மலை உச்சிக்குச் சென்றான். அங்கிருந்த மண்ணைத் தோண்டினான், கற்களை நகர்த்தினான், மரங்களின் பின்னாலும் பார்த்தான். ஆனால் எங்கும் புதையல் இல்லை.

மனக்கசப்புடன், அவன் மீண்டும் வீடு திரும்பப் புறப்பட்டான். மறுபடி அவன் பயணம் தொடர்ந்தது. மீண்டும் இயற்கையை ரசித்தான். பலருடன் பேசி சிரித்தான், சில நேரங்களில் சோர்ந்தான், புது நண்பர்களைக் பெற்றான், தனிமையையும் உணர்ந்தான். ஆனால் இப்போது அவன் மனம் அமைதியாக இருந்தது. முடிவை விட பயணத்தின் அர்த்தம் அவனுக்குத் தெரிந்தது.

வீட்டிற்கு வந்தபோது தந்தை வாசலில் நின்றிருந்தார்,

மகன் கூறினான்,

“அப்பா, அங்கே எந்த புதையலும் இல்லை.”

தந்தை மெதுவாகச் சொன்னார்:

“மகனே, புதையல் மலைக்குள் புதைக்கப்படவில்லை. அது உன் பயணத்தில்தான் இருந்தது. நீ சந்தித்த மனிதர்கள், நீ கண்ட இயற்கையின் அழகு, நீ அனுபவித்த வேதனைகள். அவையே உன் உண்மையான புதையல்கள். நீ புறப்பட்டபோது ஒரு சிறுவனாக இருந்தாய், ஆனால் திரும்பியபோது ஒரு பக்குவப்பட்ட மனிதனாகிவிட்டாய்.”

அப்போது தான் மகன் உணர்ந்தான்.

வாழ்க்கையின் உண்மையான புதையல் இலக்கில் இல்லை; அது பயணத்தில்தான் மறைந்திருக்கிறது.

  • 594
·
Added article

“செத்து செத்து விளையாடுவோமா” என்ற ஒரே வசனம் மூலம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் தான் காமெடி நடிகர் முத்துக்காளை. இவர் 1965-ம் ஆண்டு பிறந்தவர், இவருடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சங்கப்பட்டி. சிறுவயதில் இருந்தே தற்காப்பு கலைகளில் ஒன்றான கராத்தேவில் தேர்ச்சி பெற்ற இவர், ­பிளாக் பெல்ட் வாங்கினார்.

பின்னர் ஒரு ஸ்டண்ட் கலைஞராக திரையுலகில் தன்னுடைய பயணத்தை துவங்கி, ஒரு சில படங்களில் காமெடி ரோலில் தலைகாட்டினார். இவருடைய தனித்துவமான நடிப்பு மற்றும் உடல்மொழி காரணமாக, வடிவேலுவுடன் பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார். குடி பழக்கத்தால் தன்னுடைய வாழ்க்கையை சீரழித்து கொண்டிருந்த இவரை, அதில் இருந்து மீட்டு கொண்டுவந்தது கூட வடிவேலுவின் அறிவுரைகள் தான். இதனை பலமுறை தன்னுடைய பேட்டிகளில் முத்துக்காளை கூறியுள்ளார்.

படிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு, 40 வயதுக்கு மேல் டிஸ்டன்ஸ் எஜிகேஷன் மூலம் படிக்க துவங்கி, தன்னுடைய 58-ஆவது வயதில் சுமார் மூன்று முதுகலை பட்டங்களை பெற்றுள்ளார். இவருக்கு சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்க அதிகப்படியான வாய்ப்புகள் கிடைத்த போதும், சிறிய வேடத்தில் நடித்தாலும், மக்கள் மத்தியில் அந்த கதாபாத்திரம் பேசும் படி இருக்க வேண்டும் என்பதால், தன்னை தேடி வரும் வாய்ப்புகளை நிராகரித்து வருவதாகவும் கூறினார்.

நடிப்பை தாண்டி பிஸ்னஸில் கவனம் செலுத்தி வரும் முத்துக்காளை, தன்னுடைய ஒரே மகனையும் நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்துள்ளார். 12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற இவருடைய மகனுக்கு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தன்னுடைய வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு அளித்தது மட்டும் இன்றி, படிப்புக்கு தேவையான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் முத்துக்காளை, ஆனந்த கண்ணீரோடு ரசிகர்களிடம் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவு. அப்படிப்பட்ட இவரின் பலவருட கனவு தற்போது நிறைவேறி உள்ளதாம். மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய சொந்த ஊரான ராஜபாளையம் அருகே உள்ள சங்கம்பட்டியில், சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்துள்ளாராம். இதே போல் சென்னையில் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தன்னுடைய கனவு என்றும், அது உங்கள் அனைவரின் ஆசியோடு நிறைவேறும் என்றும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும், முத்துக்காளைக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • 585
·
Added a news

அமெரிக்க ஜனாதிபதி கனடா மீது விதித்துள்ள வரிகளால் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு அதிகரித்துவருகிறது. இந்நிலையில், வரிவிதிப்பு தொடர்பில் கனடா வெளியிட்ட வீடியோ ஒன்று டிரம்பை ஆத்திரமடையவைத்துள்ளது.

கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசு சமீபத்தில் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ரொனால்ட் ரீகன், வரிவிதிப்பு தொடர்பில் வானொலியில் ஆற்றிய உரை ஒன்று இடம்பெற்றுள்ளது.

அந்த உரையில், ’வெளிநாடொன்றிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதிப்போம் என ஒருவர் கூறுவாரானால், பார்ப்பதற்கு அது நாம் அமெரிக்காவின் தயாரிப்புகளையும் வேலைகளையும் பாதுகாப்பதற்காக எடுக்கும் நடவடிக்கை போல் தோன்றும். ஆனால், காலப்போக்கில் அது ஒவ்வொரு அமெரிக்க பணியாளரையும் நுகர்வோரையும் பாதிக்கும். அதிக வரிகள் விதித்தல், மற்ற நாடுகள் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யும். அதனால், வர்த்தகப்போர்கள் உருவாகலாம்’ என்று கூறியுள்ளார் ரீகன்.

ஆனால், அந்த வீடியோ ட்ரம்பை ஆத்திரமடையச் செய்துள்ளது. அந்த வீடியோ குறித்து ரீகன் அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், அதில் கனடா போலியான ஒரு வீடியோவை மோசடியாக பயன்படுத்தியுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது சமூக ஊடகப் பக்கத்தில் இந்த விடயம் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள டிரம்ப், அது அமெரிக்க நீதிமன்றங்களின் முடிவுகளில் தலையிடுவதற்காக கனடா வெளியிட்டுள்ள விளம்பரம் என்றும், வரிகள் தேசிய பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் மிக முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கனடாவின் அந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், அதன் மோசமான நடத்தை காரணமாகவும், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

  • 599
·
Added a post

ஒரு நகரத்தில் ஒரு ராஜா இருந்தார். அவர் எந்தக் கலைகளையும் அறியாதவர். அவ்வளவாகப் புத்திசாலித்தனமும் கிடையாது. ஆனால் அவருக்கு மதியூகியான ஒரு மந்திரி இருந்தார். அவர் எல்லா ஞானமும் பெற்றவர்.

நல்ல கைதேர்ந்த பாடகர் ஒருவர் அந்த அரண்மனைக்கு வந்தார். அரசவையிலே பாட அரசரிடம் அனுமதி கேட்டார்.

சபாஷ் ராஜாஅரசர் மந்திரியைப் பார்த்தார். மந்திரி தலையை அசைத்தவுடன், பாடகருக்கு அடுத்தநாள் பாட அனுமதி கொடுத்துவிட்டார். பாடகரும் அடுத்தநாள் பாட வருவதாகக் கூறிவிட்டு அரண்மனையை விட்டுச் சென்றார்.

அரசருக்கு இசையை ரசிக்கத் தெரியாது. எப்படி இந்த இக்கட்டான நிலையைச் சமாளிப்பது என யோசித்துக் கொண்டு அங்கும் இங்குமாக உலவிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கே மந்திரி வந்து சேர்ந்தார். மந்திரியைப் பார்த்ததும் ராஜாவிற்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

“”வாருங்கள் மந்திரியாரே…. நாளை நடைபெறும் பாட்டுக் கச்சேரியை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்களே வந்துவிட்டீர்கள்…”

“”கவலைப்படாதீர்கள் மகாராஜா.. அதற்கு ஒரு தீர்வு கொண்டுவந்திருக்கிறேன்…” என்று மந்திரி கூறினார்.

“”நல்ல தீர்வாகக் கூறுங்கள் மந்திரியாரே…” என்றார் ராஜா.

“”உங்களுக்குத்தான் நீண்ட முடியிருக்கிறதே.. அந்த முடியில் யாருக்கும் தெரியாதவாறு நீண்ட கயிற்றைக் கட்டி நுனியை என் கையில் பிடித்துக் கொண்டு பாடகன் பாடும்போது இடையிடையே இழுப்பேன். அப்பொழுது “சபாஷ்’ மட்டும் சொல்லிக் கொள்ளுங்கள்…” என்று மந்திரி கூறினார்.

“”சரி” என்று ராஜாவும் ஒத்துக்கொண்டார்.

அடுத்தநாள் அவை கூடியது. யாருக்கும் தெரியாமல் ராஜா முடியில் கட்டப்பட்டிருந்த கயிற்றின் நுனியைப் பிடித்துக் கொண்டு மந்திரியும் அமர்ந்து கொண்டார். ராஜாவும் அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அவையினர் எல்லோரும் அமர்ந்திருந்தனர். பாடகர் வந்தார். அவருக்கு ஒரு தனி இருக்கை போடப்பட்டது. பாடகர் பாட ஆரம்பித்தார். சுவைமிகுந்த பகுதி வரும்போது மந்திரி கயிற்றை இழுக்க, ராஜா “சபாஷ்’ சொல்லிக் கொண்டே இருந்தார்.

பாடகர் பல பாடல்களைப் பாடினார். ராஜாவும் “சபாஷ்’ போட்டுக் கொண்டே இருந்தார். முடிவாக முகாரி ராகப் பாடல் ஒன்றை பாடகர் பாட ஆரம்பித்தார். ராஜா அழுதுகொண்டே சபாஷ் போட ஆரம்பித்தார். நிகழ்ச்சி முடிந்ததும், ராஜா, பாடகருக்கு பரிசில்கள் வழங்கி அனுப்பிவைத்தார்.

அன்று மாலை ராஜா தனிமையில் இருந்தார். மெதுவாக அவரிடம் வந்த மந்திரி, “”ராஜாவே நான் இழுக்க பாடல்களுக்கு சபாஷ் போட்டீர்கள் அதெல்லாம் சரிதான். முகாரி ராகப் பாடல்கள் வந்தவுடன் அழுது கொண்டே, சபாஷ் போட்டீர்களே.. உங்களுக்கு அது அழுகைப் பாடல் என்று தெரியுமா?” என்றார்.

“”என்ன மந்திரியாரே… இப்படியா என்னை நீங்கள் வதைப்பது? முடியை இழுத்து வலிக்கச் செய்துவிட்டீர்களே, வலிதாங்க முடியாமல்தான் நான் அழுதேன்…” என்றார் ராஜா.

  • 625
·
Added a post

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம் நடைபயிற்சி போனாங்க. ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க.

அப்போ அங்கே ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை பார்த்த ராஜா... "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்" ன்னு சொன்னார்.

மந்திரி பறிக்க போனார். அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான். ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.

ராஜா சொன்னார். யோவ் மந்திரி.!! அத பறிச்சு சாப்பிடு. வாந்தி வருதான்னு பாக்கலாம்.

வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.

ராஜா கேட்டார். யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.

அந்த குருடன் சொன்னான். அது பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும் ன்னு.

ராஜாவும் அப்படியே பண்ண... மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது.

ராஜா குருடனை பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.? எப்படி சரியா தீர்வு சொன்னாய்.? குருடன் சொன்னான். ராஜா..!! இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா.? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய கொடுத்தா இறைவன் பக்கத்துலயே ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார்.

ராஜாவுக்கு சந்தோஷம்.

இந்தா ஒரு டோக்கன். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் கொடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு. சொல்லிவிட்டு ராஜா போய்ட்டார்.

கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான்.

இது ஒரிஜினலா போலியா ன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு ராஜாவுக்கு குழப்பம். மந்திரிய கூப்பிட்டார்.

ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால...

வைரத்தை முழுங்கித்தொலைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு தெரியாதுன்னுட்டார்.

ராஜா சொன்னார். மந்திரி.!! போய் அந்த கபோதிய கூட்டிட்டு வா. அவன்தான் காரண காரியத்தோட சரியாக சொல்லுவான்.

மந்திரி போய் அந்த குருடனை கூட்டிட்டு வந்தார். ராஜா சொன்னார். டேய் இது ஒரிஜினல் வைரமா.? போலி வைரமா.? இல்லன்னா ரெண்டும் கலந்து இருக்கா ன்னு பார்த்து சொல்லு.

அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் கழித்து அதை கையில எடுத்து பிரிச்சு.... ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடின்னு பிரிச்சு கொடுத்துட்டான்.

வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்துட்டு நழுவிட்டான்.

ராஜாவுக்கு ஆச்சர்யம்.

எப்படிப்பா கண்டு பிடிச்ச.? விவரமா சொல்லு.?

குருடன் சொன்னான்.

ராஜா.!! வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம்ன்னும் பிரிச்சேன்.

ராஜா சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன குடுத்து பட்டை சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இருன்னு சொல்லி அனுப்பி வச்சார்.

இப்படியே கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சார். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி கொடுக்க தயாராக இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம்.

யாரை தேர்ந்து எடுப்பதுன்னு. மந்திரிகிட்ட கேட்கிறார். எல்லா பொண்ணுமே நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே மந்திரி சொல்றார்.

ராஜா பார்த்தார்.

கூப்புடுங்கடா அந்த கபோதிய.

குருடன் வந்தான்.

ராஜா குருடன் கிட்ட சொன்னார். என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்குறேன். எந்த ராஜாவோட குமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியத்தோட தெளிவா சொல்லு.

குருடன் சொன்னான்.

ராஜா..!! அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆயிட்டா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண கொடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்.

ராஜாவுக்கு ஒரே குஷி.

சபாஷ்.!! இந்தா டோக்கன். அரண்மனையின் வடக்கு வாசலுக்கு போடா. பட்டை சாதம் குடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னார்.

குருடனும் போய்ட்டான்.

கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடனை தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னார்.

டேய்.!!

நான் ஒன்னு கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லனும். அப்படின்னார். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல எல்லோரும் என்னைய

பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற.? சரியா சொல்லனும் என்றார்.

குருடன் அமைதியா இருந்தான்.

பதிலே பேசல.

ராஜா திரும்ப கேட்டார்.

குருடன் அமைதியா சொன்னான்.

ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன்.

நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம் அப்படின்னான்.

ராஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ரொம்ப வருத்தம். ஏன்டா என்னய பார்த்தா இப்படி கணிச்சே..?? ன்னு வருத்தமா கேட்டார்.

ராஜா...

முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க. ஆனா குடுத்தது பட்டை சாதத்துக்கு இலவச டோக்கன்.

நிஜமான ராஜாவா இருந்தா கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார்.

அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். நிஜமான ராஜாவா இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார்.

ஆனா நீங்க குடுத்தது பட்டை சாத டோக்கன்.

மூன்றாவது... ஒரு ராஜ்ஜியமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன். உண்மையான ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி குடுத்து இருப்பார்.

நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்டை சாத டோக்கன்.

ஆக.... சோத்தை தாண்டி உங்க எண்ணம் போகல. உலகத்துலேயே பெரிய விஷயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதுல இருந்து தெரியல.?

நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு.? ஏன்னா உங்க புத்தி டோக்கனோடவும் பட்டை சாதத்தோட வும் முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல என்றான்.

மன்னர் வெட்கி தலைகுனிந்தார்.

நீங்கள் யார் என்பதை உங்களிடம் இருக்கும் பணமோ,சொத்தோ,

பதவியோ தீர்மானிப்பதில்லை..

உங்கள் எண்ணங்களே தீர்மானிக்கின்றன ....

  • 700
·
Added a post

ஒரு நாள் ஒரு விவசாயியின் கழுதை கிணற்றில் தவறி விழுந்தது. அது மணிக்கணக்கில் சத்தமாக அழுதது, விவசாயி கழுதையை வெளியேற்றுவதற்கு ஏதாவது செய்ய முயன்றார்.

கடைசியாக, கழுதைக்கு வயதாகி விட்டதாகவும், ஏற்கனவே கிணறு வறண்டுவிட்டதாகவும், எப்படியும் மூடிவிட வேண்டும் என்றும் விவசாயி முடிவு செய்தார்;

உண்மையில் கழுதையை கிணற்றில் இருந்து வெளியே எடுப்பதால் எவ்விதப் பயனும் இல்லை என கருதினார்.

கிணற்றை மூட அக்கம்பக்கத்தினர் அனைவரையும் உதவிக்கு வருமாறு அழைத்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மண்வெட்டியைப் பிடித்து கிணற்றில் மண்ணை வீசத் தொடங்கினர். கழுதை என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து பயங்கரமாக அழுதது.

பின்னர், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், சில மண் வீச்சுகளுக்குப் பிறகு அது அமைதியாகிவிட்டது.

கடைசியாக கிணற்றுக்குள் இறங்கிப் பார்த்த விவசாயி, அவர் பார்த்ததைக் கண்டு வியந்தார்.. ஒவ்வொரு மண்வெட்டி மண்ணிலும், கழுதை நம்பமுடியாத ஒன்றைச் செய்து கொண்டிருந்தது.

அது மேல் விழுந்த மண்ணை உதறிவிட்டு, அந்த மண்ணின் மேல் மிதித்துக் கொண்டிருந்தது. மிக விரைவில், கழுதை கிணற்றின் வாயை அடைந்து, விளிம்பிற்கு மேல் சென்று வெளியே சென்றதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

வாழ்க்கை உங்கள் மீது மண்ணை வீசப் போகிறது. வெளியேறுவதற்கான தந்திரம், அதை உதறிவிட்டு, அதைப் பயன்படுத்தி மேலே செல்வதுதான்.

நம் ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு படி மேலே நம்மை இட்டுச் செல்லும். நாம் விட்டுக்கொடுக்காவிட்டால் ஆழமான குழிகளில் இருந்து வெளியேறலாம்...

மகிழ்ச்சியாக இருக்க 5 விதிகளை நினைவில் கொள்ளுங்கள்:

1. உங்கள் இதயத்தை வெறுப்பிலிருந்து விடுவிக்கவும்.

2. கவனச்சிதறல்களில் இருந்து உங்கள் மனதை விடுவிக்கவும்.

3. உங்கள் வாழ்க்கையை எளிமையாக்குங்கள்.

4. அதிகமாக கொடுங்கள் மற்றும் குறைவாக எதிர்பாருங்கள்.

5. அன்பு செலுத்துங்கள்.

மற்றும் உங்கள் மேல் வீசப்பட்ட மண்ணை உதறிவிட்டு மேலே ஏறி நிற்கவும், ஏனென்றால் இந்த வாழ்க்கையில் நீங்கள் ஒரு தீர்வாக இருக்க வேண்டும், பிரச்சனையாக அல்ல!

  • 756
·
Added a post

பேருந்து நிலையத்தில் ஒரு இளைஞன் ஆப்பிள் வியாபாரம் செய்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞன் எப்பொழுதும் சுறுசுறுப்பாக வேலை செய்யகூடியவன். அவன் கூடையில் இருக்கக்கூடிய ஆப்பிள்களும் காஷ்மீர் ஆப்பிள்களைப் போல பளபளவென்று இருக்கும். அது மட்டுமல்லாது மிகவும் புதிதாகக் காணப்படும்.

அவன் விற்பனை செய்வதற்காக பேருந்தில் ஏறி ஆப்பிள் துண்டுகளைப் பயணிகளுக்கு சாப்பிட கொடுத்தான். அந்த ஆப்பிள்களும் மிகவும் சுவையாக இருந்தது. அதன்பிறகு "ஆப்பிள் கிலோ 200 ரூபாய்" என்று கூவி கூவி விற்க ஆரம்பித்தான்.

சிலபேர் "விலை ரொம்ப அதிகம்" என்றார்கள்.

சில பேர் "தம்பி..! 150 ரூபாய்க்குத் தரியா?" என்று கேட்டார்கள்.

ஆனால், அந்த பையன் "அதெல்லாம் முடியாது. ஒரே விலை. 200 ரூபாய்" என்று அடாவடியாக இருந்தான்.

சில பேர் "தம்பி.. அட்லீஸ்ட் 180 ரூபாய்க்காவது விலையைக் குறைத்துக் கொடுப்பா" என்று கேட்டுப் பார்த்தார்கள்.

"முடியவே முடியாது.. கிலோ 200 ரூபாய்" என்றான் அந்த பையன்.

எல்லோருமே விலை அதிகம் என்று வாங்க யோசித்தார்கள்.

அவன் பேருந்தை விட்டு கீழே இறங்கிவிட்டான். அவன் இறங்கியதும் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் ஆப்பிள் கூடையுடன் அந்த பேருந்தில் ஏறினார். அவர் கூடையில் ஒரு சில நல்ல ஆப்பிள்களும், ஒரு சில சுமாரான ஆப்பிள்களும் இருந்தன.

அந்த பெரியவர் "கிலோ 150 ரூபாய்.. கிலோ 150 ரூபாய்" என்று கூவி கூவி விற்பனை செய்யத் தொடங்கினார்.

உடனே அந்த பேருந்தில் இருந்த நிறைய பேர் அவரிடம் ஆப்பிள் வாங்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட அந்த பேருந்தில் மட்டுமே ஆயிரக்கணக்கில் வியாபாரம் பார்த்தார் அந்த பெரியவர்.

அந்த பேருந்தைவிட்டு இறங்கியதும் அந்த பெரியவர் "அந்த இளைஞன் எங்கே?" என்று குறுகுறுவென்றுத் தேடினார்.

அந்த இளைஞனும் வழக்கம்போல இன்னொரு பேருந்தில் "கிலோ 200 ரூபாய். கிலோ 200 ரூபாய்" என்று கூவிக் கொண்டிருந்தான். அவன் அந்த பேருந்தைவிட்டு இறங்கியதும் அந்த பெரியவன் அந்த பேருந்தில் ஏறி "கிலோ 150 ரூபாய்.. கிலோ 150 ரூபாய்.." என்று கூவி விற்பனை செய்யத் தொடங்கினார்.

இதனையெல்லாம் பேருந்து நிலையத்திலிருந்துப் பார்த்துக் கொண்டிருந்த நடத்துனர் ஒருவர் அந்த இளைஞனை அழைத்தார்.

"தம்பி.. அந்த பெரியவன் கிலோ 150 ரூபாய் என்று தானே வியாபாரம் செய்கிறார். அவருக்கு நன்றாக வியாபாரம் நடக்குதுல. நீயும் அந்த பெரியவர் மாதிரி கிலோ 150 ரூபாய் என்று விற்பனை செய்தால் உனக்கும் நன்றாக வியாபாரம் நடக்கும்ல.. அட்லீஸ்ட் 180 ரூபாய் என்று கேட்டவர்களுக்காவது கொடுக்கலாம்ல.. இப்டி ஒரே ரேட்.. 200 ரூபாய் என்று கொடுத்தால் எப்டிப்பா வியாபாரம் நடக்கும். கொஞ்சம் விலையைக் குறைத்துக் கொடுக்கனும். அது தான் வியாபாரம்" என்று சொன்னார்.

உடனே அந்த பையன் சொன்னான்.

"சார்.. இந்த மக்கள் எப்பொழுதுமே இப்படி தான் சார். சூப்பர் மார்க்கெட் நிலையங்களில் எல்லாம் போட்டிருக்குற விலையை அப்டியே பேரம் பேசாம வாங்கிட்டுப் போய்டுறாங்க.. ஆனால், எங்களைப் போன்று ரோட்டோரமாக வியாபாரம் பண்ற காய்கறிக்காரர்கள், பழக்காரர்கள் என்று தின வியாபாரம் செய்யக்கூடிய கூலிகளிடம் தான் பேரம் பேசுவார்கள். எங்ககிட்ட 10 ரூபாயாவது குறைத்து வாங்கினால் தான் அவங்களுக்கு திருப்தியே கிடைக்கும் போல.. என்ன ஜனங்களோ சார். எப்டியோ, நான் 200 ரூபாய்க்கு விற்பதால், அந்த பெரியவர்கிட்ட பேரம் பேசாம வாங்குறாங்களே.. 150 ரூபாய் மதிப்புள்ள பழத்திற்கு 130 என்று பேரம் பேசாமல் வாங்குறாங்களே. அது வரைக்கும் சந்தோஷம் சார்" என்று சொன்னான் அந்த இளைஞன்.

"அதெல்லாம் சரிப்பா... ஆனால், அவர் கிலோ 150 ரூபாய் என்று விற்பதால், உனக்கு வியாபாரம் ஆக மாட்டேங்குதே.." என்று ரொம்ப வருத்தப்பட்டு சொன்னார் அந்த நடத்துனர்.

"சார்.. எனக்கு வியாபாரம் நடந்தா என்ன.. அவருக்கு வியாபாரம் நடந்தா என்ன.. அவர் என் அப்பா தான் சார். இதெல்லாம் ஒரு Business Trick சார்.." என்று சொல்லிவிட்டு அடுத்த பேருந்தை நோக்கி நடந்தான்..

அந்த பையனுடைய மாத்தி யோசிக்கும் திறனை பார்த்தீங்களா..! நீங்களும் உங்கள் துறையில் எப்படியெல்லாம் முன்னேறலாம் என்று வித்தியாசமாக யோசித்துக் கொண்டே இருங்கள்.. வெற்றி உங்களுக்குத்தான்...!!

  • 740
·
Added article

செட்டிநாட்டிலிருந்து எழுத்து கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர் கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.

"படு... படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.

அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.

கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு ஷூட்டிங்.

ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.

ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பிள்ளைகளை பார்த்து சொல்லியிருக்கிறார்.

"இந்தக் கார்களை கவனித்தீர்களா..?

இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது. இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது'' என்றாராம்.

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.

அவமானம் ஒரு மூலதனம்... இது புரிந்தால் வெற்றி நிச்சயம் நிச்சயம்

  • 634
·
Added a post

"என்ன வேணாலும் நடந்துட்டு போகுதுயா.. மொதல்ல அந்த நிறுவனத்தை மூட சொல்லி உத்தரவு போடு.." 1962 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் போர் நடந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த போரில் நாம் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. அப்போதைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்த தோல்வியால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். அந்த சமயம் நமது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தவர் நமது காமராஜர் ஐயா..

காமராஜர் நேருவிடம் கேட்டார்.

"ஏன்.. எதனால் நாம் தோல்வி அடைய நேர்ந்தது?" என்று கேட்டார்.

அப்பொழுது நேரு சொன்னார்.

"நமக்கு இருக்கக்கூடிய இரணுவ ஆயுதங்கள் எதுவும் அவ்வளவு வலிமையானதாக இல்லை. நாம் நவீன இராணுவ ஆயுதங்கள் எல்லாம் வாங்கி நம்முடைய இராணுவத்தை வலிமைப்படுத்தினால் தான், நாம் ஜெய்க்க முடியும்..!" என்று நேரு சொன்னார்.

"அப்டினா, முதல்ல அத பண்ணுங்க.. தேசத்தோட பாதுகாப்புதான ரொம்ப முக்கியம். உடனே அந்த இராணுவ ஆயுதங்கள் எல்லாம் வாங்கி இராணுவத்தை வலிமைப்படுத்த வேண்டியது தான..." என்று கேட்டாராம் காமராஜர்.

நேரு சொன்னார், "நாம் அமெரிக்காவிடம் இருந்து நவீன ஆயுதங்கள் எல்லாம் வாங்கிவிட்டோம்.. ஆனால், அதில் ஒரு சின்ன சிக்கல்" என்றார்.

"என்ன சிக்கல்?"- காமராஜர்,

"அந்த இராணுவ ஆயுதங்கள் அனைத்தையும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டுமென்றால், 'அங்கு அமெரிக்காவில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பேங்க் நமக்கு ஜாமீன் கையெழுத்து (அதாவது சூரிட்டி) போட்டால் தான் நமக்கு அந்த ஆயுதங்களை அனுப்பி வைப்போம்' என்று அமெரிக்கக்காரன் சொல்லிவிட்டான். ஆனால், நம் இந்தியாவை நம்பி அங்கிருக்கக்கூடிய எந்த வங்கியும் 'Assurance' உறுதியளிக்க தயாராக இல்லை. அதான் என்ன பண்றதுனு தெரியல" என்று மிகவும் கவலையோடு நேரு காமராஜரிடம் சொன்னார்.

காமராஜர் தன்னுடைய ஆட்சியில் பத்துக்கும் மேற்பட்ட அணைகளை கட்டியவர். அப்பொழுதே ஏகப்பட்ட நீர்மின் நிலையங்கள், மதிய உணவுத் திட்டம் என்று நிறைய வித்தியாசமான ஐடியாக்களை புகுத்தியவர் காமராஜர். அவருக்கா ஐடியாவிற்கு பஞ்சம் இருக்கப் போகிறது. காமராஜர் வழக்கம்போலவே சிறிது வித்தியாசமாக யோசித்தார்.

"ஒன்னும் பிராப்ளம் இல்ல நேரு. அமெரிக்க வங்கியில் கிளை ஏதாவது இந்தியாவில் இருக்கிறதா..?" என்று கேட்டார் காமராஜர்,

"இருக்கு. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்க் கிளை இந்தியாவில் இருக்கு"

உடனே காமராஜர் ஐயா, "இங்கிருக்கக்கூடிய அந்த அமெரிக்க வங்கியை முதலில் மூட உத்தரவு போடு" என்றார் காமராஜர்.

நேரு பதறிப் போய் "என்னது.. அமெரிக்க நிறுவனத்தை நாம் மூட வேண்டுமா? அப்படி செய்தால் உலகளவில் பிரச்சனை வந்துவிடும்" என்று பயந்தார் நேரு.

"என்ன வேணாலும் நடந்துட்டு போகுதுயா.. மொதல்ல அந்த நிறுவனத்தை மூட சொல்லி உத்தரவு போடு.." என்றார் காமராஜர்.

காமராஜர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நேருவும் அந்த அமெரிக்க நிறுவனத்தை அழைத்து "நீங்கள் எங்களுக்கு உதவி பண்ணாத காரணத்தால், சீக்கிரம் உங்கள் கடையை மூடிவிட்டு உங்கள் நாட்டுக்கு நடையைக் கட்டுங்கள்" என்றாராம்.

உடனே அந்த வங்கியில் மேலாளர் பதறிப்போய் அமெரிக்காவைத் தொடர்புக் கொண்டு விஷயத்தைக்கூறி, அந்த அமெரிக்க அதிகாரிகள் உடனே பதறிப் போய் இந்தியாவிற்காக சூரிட்டி கையெழுத்துப் போட்டு அடுத்த பதினைந்தாவது நாளில் அந்த நவீன ஆயுதங்கள் இந்தியாவிற்கு வந்து இறங்கின.

இதுதாங்க காமராஜர் ஐயாவின் மாத்தி யோசிக்கும் திறன்.!

'அவனுடைய கடையை இங்கு மூடினால், அவன் வழிக்கு வருவான்' என்ற அந்த மாத்தி யோசிக்கும் திறன் தான், நம் தேசத்தின் பாதுகாப்பையே நிர்ணயம் செய்திருக்கிறது.

  • 635
·
Added a post

ஒரு பாம்பு அதன் மீது ஒரு கல் விழுந்தபோது உதவிக்காகக் கூக்குரலிட்டது,

ஒரு பெண் தூரத்திலிருந்து வந்து அதைக் காப்பாற்றினாள்.

அதைக் காப்பாற்றிய பிறகு பாம்பு கூறியது எனக்கு உதவி செய்பவர்களைக் கடிக்கப் போவதாக நான் சத்தியம் செய்துள்ளேன்

அந்தப் பெண் நான் உனக்கு உதவி செய்தேன் அப்படி இருக்க நீ எப்படி என்னைக் கடிக்க விரும்புகிறாய் என்று கேட்டாள்

பாம்பு நான் உன்னை நிச்சயமாக கடிப்பேன் உனக்கு இரக்கம் காட்டவே மாட்டேன் அது என் இயல்பு என்ன நடந்தாலும் இயற்கை மாறாது என்று பதிலளித்தது

அந்தப் பெண் கூறினாள் நமது இந்த பாதையில் நாம் சந்திக்கும் முதல் விலங்கிடம் கேட்போம் அது என்னைக் கடிக்க உனக்கு உரிமை அளித்தால் அதைச் செய் என்றாள்

சிறிது தூரம் நடந்த பிறகு அவர்கள் ஒரு யானை யை சந்தித்தனர் அவர்கள் அவரிடம் முழு கதையையும் சொன்னார்கள்

யானை தந்திரமாக கூறியது நீங்கள் என் முன் அதே காட்சியை மீண்டும் நடித்து காட்டும் வரை நான் அதை நம்பவே மாட்டேன்

அதற்கு அந்தப் பெண் பாம்பின் மீது கல்லை வைத்து யானையிடம் இப்படித்தான் நான் அதை ஆரம்பத்தில் பார்த்தேன் என்றாள்

யானை கூறியது கல்லுக்கு அடியில் ஆரம்பத்தில் இருந்தது போலவே விட்டுவிடுங்கள்

ஏனென்றால் நன்றி கெட்டவர்கள் ஒருபோதும் உதவிக்கு தகுதியற்றவர்கள்

உங்களிடம் கருணையை பெரும் அனைவரும் அந்த உதவியைப் பாராட்டுவதில்லை

நன்றி கெட்டவர்களாகப் பழகியவர்கள் நீங்கள் என்ன செய்தாலும் ஒருபோதும் மாற மாட்டார்கள். நன்றி கெட்ட உலகமடா இது.

  • 637
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். மனதில் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். தேவையற்ற விரயங்களால் நெருக்கடிகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

ரிஷபம்

வருங்கால சேமிப்பு பற்றிய சிந்தனை மேம்படும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சிகள் சாதகமாக முடியும். இழுபறியான சில வழக்கு சாதகமாகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

மிதுனம்

உறவுகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாளுவீர்கள். கனிவான பேச்சுக்களால் காரியத்தை சாதிப்பீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். மனதளவில் இருந்த தயக்கத்தை தவிர்க்கவும். உணவு செயல்களில் கட்டுப்பாடு வேண்டும். கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகும். வணிக நடவடிக்கைகளில் லாபம் மேம்படும். யதார்த்தம் தாண்டிய கற்பனைகளை குறைத்து கொள்ளவும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

சிம்மம்

விலகிச்சென்ற உறவுகள் தேடி வருவார்கள். அரசு வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மறதியால் அலைச்சல் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறுவதில் தாமதங்கள் உருவாகலாம். விமர்சன பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

கன்னி

எதிர்பார்த்த சில ஒப்பந்தம் சாதகமாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். மனதளவில் தன்னம்பிக்கை உருவாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான தேடல்கள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

துலாம்

ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கவனம் வேண்டும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். நெருங்கியவர்களால் அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனம் சாதகமாகும். திட்டமிட்ட பணிகளை மாற்றியமைப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நிலம்

 

விருச்சிகம்

உடன் இருப்பவர்களால் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். கடன் சார்ந்த உதவிகளில் அலைச்சல் ஏற்படும். செயல்களில் உள்ள மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அலுவல் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

தனுசு

தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் ஏற்படும். மறைமுகமான தடைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படக்கூடும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மகரம்

குடும்ப பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு பெருகும். வியாபாரம் சிறப்பாக அமையும். கோபம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கும்பம்

சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். திடீர் செலவுகளால் சில நெருக்கடிகள் ஏற்படும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அரசாங்க காரியம் இழுபறிக்குப் பின்னர் முடியும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மீனம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் திருப்தியான சூழல் அமையும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

  • 799
·
Added a post

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 24.10.2025.

இன்று இரவு 11.49 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று அதிகாலை 04.36 வரை விசாகம். பின்னர் அனுஷம்.

இன்று அதிகாலை 04.42 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம் .

இன்று காலை 10.47 வரை தைத்தூலம். பின்னர் இரவு 11.49 வரை வரை கரசை. பின்பு வனிசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=305&dpx=2&t=1761280573

நல்ல நேரம்:

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 801