Feed Item
·
Added article

இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயவாடாவில் பிறந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பதினாறு மொழிகளில் 22000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கர்நாடக இசை பயின்றவர்.

இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய இசைக் குழுவில் துணை புரிய சென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 1985-ஆம் ஆண்டு கற்பூர தீபம் என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா வாய்ப்பு கொடுத்தார்.

1986-ஆம் ஆண்டு இளையராஜா, பூவிழி வாசலிலே என்றத் தமிழ்த் திரைப்படத்தில் “அண்ணே அண்ணே” என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். அன்றிலிருந்து இவரது பாடல் பயணம் ஆரம்பித்தது. வேலைக்காரன், சின்னத்தம்பி, காதலன், சொல்லத்துடிக்குது மனசு, உள்ளத்தை அள்ளித்தா, சின்னக்கண்ணம்மா, முத்து, எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, சிற்பி., எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், தேவா, சந்திரபோஸ் போன்றவர்களின் இசையமைப்பில் தொடர்ந்து பாடிவந்தார்.

  • 60