கவிதை
Ads
Latest Poems
"Lஎழுதியவர் யார் என்று தெரியவில்லை ஆனால்படித்துப் பாருங்கள் கரைந்து போவீா்கள்
`*"எழுதியவர் யார் என்று தெரியவில்லை ;**ஆனால்,**படித்துப் பாருங்கள் , கரைந்து போவீா்கள் ;"**********வாழைத்தோட்டத்திற்குள்வந்து முளைத்த...காட்டுமரம் நான்..!எல்லா மரங்களும்எதாவது...ஒரு கனி கொடுக்க ,எதுக்கும் உதவாத...முள்ளு மரம் நான்...!தாயும் நல்லவள்...தகப்பனும் நல்லவன்...தறிகெட்டு போனதென்னவோநான்...படிப்பு வரவில்லை...படித்தாலும் ஏறவில்லை...இங்கிலீஷ் டீச்சரின்இடுப்பைப் பார்க்க...இரண்டு மைல் நடந்துபள்ளிக்கு போவேன் .பிஞ்சிலே பழுத்ததே..எல்லாம் தலையெழுத்தென்றுஎட்டி மிதிப்பான் அப்பன்...பத்து வயதில் திருட்டு...பனிரெண்டில் பீடி...பதிமூன்றில் சாராயம்...பதினாலில் பலான படம்...பதினைந்தில்ஒண்டி வீட்டுக்காரி...பதினெட்டில் அடிதடி...இருபதுக்குள் எத்தனையோ...பெண்களிடம் விளையாட்டு...இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்
தீப திருநாள் வாழ்த்துகள்
அன்பு பூத்திடஅகலினில் நெய் விட்டு...பாசம் விரிந்திடபஞ்சு திரி இட்டு...விளக்கினில் படர்ந்துவெளிச்சம் மலர்ந்து...உள்ளத்தில் இருளாய்உறைந்திருக்கும் இன்னல்கள்அகன்று வெளியேறுவதாய்...அழகான தீப ஒளிதனில்மனம் பிரகாசமாய்மகிழ்ச்சி பெருகட்டும்!
அழகோ... அழகு
விழா காலமிதுவரவேற்கும் குதூகலத்தில்...வானமிறங்கி வந்துவாழ்த்து சொல்வதில்வண்ணக்கிளி ஒன்றிணைந்ததோவசீகரிக்கும் அழகினில்....!
சுலபமில்லை.!
கிடைத்ததுஒரு நாள் தொலைந்துபோகலாம்.பிடித்ததுஒரு நாள் வெறுத்தும்போகலாம்.நிரந்தரம்என்று ஏதுமில்லைஇவ்வுலகில்.வெறுப்பைவிதைத்த இடத்தில் அன்பைஅறுவடைசெய்ய நினைப்பது முட்டாள் தனம்.எந்தஉறவாயினும் சற்று கவனமாகவேஇருங்கள்.எதிர்பார்த்த தேவைகள் கிடைக்காதநேரத்தில்தூக்கி எறியப்படலாம்..உண்மையானஅன்பில் சட்டென விலகுதல்என்பதுஅத்தனை சுலபமல்ல.நடிப்பவர்களுக்கு மட்டுமேஅது சுலபமானதாகும்.
அற்புத குழந்தை
ஆகாய கருவினிலிருந்துஅற்புதமாய் விழுந்ததுபூமழை குழந்தையதுபூமித்தாய் பொன்மடியில்...ஓடையாய் மழலை கொஞ்சிஒய்யாரமாய் தவழ்ந்தோடி...அருவியாய் இடறி விழுந்துஆர்ப்பரித்து எழுந்து..அன்னநடை பயின்றுஆறென உருமாறி...பெருகிய வேகமதில்பெருநதி என்றாகி...பேருவகை கொண்டுகடல் சேர்ந்திடும் தண்ணீரை...கலங்காது காத்திடுவாள்நிறைவாக தாங்கிடலாய்...நிலமென்னும் அன்னை!
மன்னிப்பு
மன்னிப்பை அளித்துப்  பாருங்கள்.....மனபாரம் குறையும்...மன்னிப்பை கேட்டுப்  பாருங்கள்....பகையெல்லாம் மறையும்...மன்னிப்பை அளந்து பாருங்கள்...மனசு பூவாக மாறும்...மன்னிப்பாக வாழ்ந்து பாருங்கள்.....வசந்தம் தாலாட்டி போகும்...மன்னிப்பாரோடு இருந்து பாருங்கள்.....குதூகலம் வந்து சேரும்...மன்னிப்பை உணர்ந்து பாருங்கள்....மனசெல்லாம் லேசா தோணும்...மன்னிக்க முயன்று பாருங்கள்....முயற்சியெல்லாம் வெற்றி தரும்...மன்னிக்கவும் என சொல்லிப் பாருங்கள்....எதிரில் புன்னகை தவழும்...மன்னியுங்கள் என உரைத்துப் பாருங்கள்....எதிரில் கண்ணீர் வழிந்திடும்...மன்னிப்பின் வழியைத் தேடி பாருங்கள்....முட்டுக்கட்டைகள் முடங்கிப் போகும்...மன்னித்து வாழ்ந்துப் பாருங்கள்.....வந்த நோயும் கடந்து போகும்...மன்னிப்புடன் இணைந்துப் பாருங்கள்...
வெற்றி பாதை....
இனிமையான தருணம்இந்திய விண்கலம்விக்ரம் பதிவுதனில்வெற்றி பாதையில்...சந்திரயான்-3  அதுசந்திரனை தொட்டது...!நிலவின் ஒளியில்நிறைந்த பரவசம்...பேருவகை எதிரொலியில்பெருமையாய் பாரதம்!
கைமாறு
நம்பிக்கை வைத்தே நடந்து செல்கிறோம் ஆனால் பாதை வேறு எங்கோ திரும்பி விடுகிறது அன்பு பயணத்தில் அரவம் தீண்டி விடுகிறது பச்சோந்திகளுக்கு பழக்கப்பட்டவை அவை  அப்பாவிகள் நாம்தான் அனாதையாகி விடுகிறோம் பொய் தோரணங்களில் புதைந்து போவதால் உண்மை முகங்களை கண்டு வியந்து நிக்கிறோம் பணங்கள் குணங்களை மாற்றி விடுகிறது வசதிகள் வாய்மையை ஒழித்து விடுகிறது பகட்டும் பெருமையும் பாசத்தை அழித்து விடுகிறது போலி சேவல்களின் கூவலில் பொழுதுகள் விடியவில்லை திரோகங்கள் மட்டுமே விழித்து நிற்கிறது வசனம் பேசியவர்கள் வசதி வந்ததும் விஷமேறி விடுகிறது புதிய முகவரிகள் காணும்போது பழையவை காணாமல் போய் விடுகிறது நேர்மையாய் நடந்து பார் ஏமாளி என்பார்கள் உண்மையாய் இருந்து பார் உதவாக்கரை என்பார்கள் மனம் வைத்து பழகினாலும் குணம் காட்டி விடுவார்
சிந்திப்போம்....
குறுகிய ஆயுளில்குவியும் ஏமாற்றங்கள்கண்டு கலங்காதேகவலை கொள்ளாதேவிடிந்தால் பயணிமுடிந்தால் மெளனி
போட்டி
நீயா... நானா...நிலையாய்  போட்டியில்வெங்காயம் தக்காளிவிலைதனின் உச்சத்தில்...என்று இதன் முற்றுப்புள்ளிஎதிர்பார்ப்பில் மக்கள்...!
இன்றைய நிதர்சனம்
உச்சம் தொட்ட விலைஉட்கார்ந்திருந்தது தக்காளி...உடன் ஏறிய நிலைஉரிக்காமலேயே கண்ணில் நீர்துளிஉதிர வைத்தது சின்னவெங்காயம்...சிறு துண்டு இஞ்சியும்சில்லறைக்கு இனி இல்லை...உருண்டது அங்குமிங்குமாய்உற்சாகமாய் முட்டைகோசுஇரண்டு மாதமாய்இறங்கவில்லை அதன் மவுசு...துட்டில் மிக தூக்கலாய்துடிப்பாய் தட்டில் மிளகாய்...பரவலாய் விரிந்திருக்கும்பசுமையாய் காய்கறி அவை..வதங்கியது வியாபாரி முகம்விற்பனை களை கட்டவில்லை...!
இரட்டை குழந்தைகள்
வலிகளை வாங்குவதற்காகவே நேசங்களை செதுக்குகிறோம் ஆனால் நமக்கு கிடைப்பதோசிலைகள் அல்ல சித்திரவதைகள் பூவை வருடி விடுகிறோம் நோகாமல் இருப்பதற்காக ஆனால் அதுவோ தீ வைத்து விடுகிறது நம்மை இல்லாமல் செய்வதற்காக கவலை படுவதும் கலங்கி வாழ்வதும் நம்மோடு ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்
Ads
Popular Hashtags
Poems Categories
Featured Poems
அவள்
வார்த்தைகளின்ஒலி வடிவத்தைவற்ற செய்தவள்பட படப்பாய் என்றும் என்படர்ந்த மார்பினில் ஓர்இறுக்கத்தை தருபவள்சிந்திக்க சிந்திக்கஇதழினில் ஈரப்பதம் குறைந்திடஇரவெல்லாம் விழிக்க செய்பவள்
அப்பா...!
  •  · 
  •  · beesiva
காட்டிக் கொள்ளாத பூட்டிய அன்பினைஈட்டிய வெற்றிகள் கண்டு புழுகாமல்பூரிக்கும் பெரு மகன்..!பழுதாகாமல் இருந்திட விழுதான உந்தனைவிரட்டி விரட்டி படி படி என தினம்பாசப் பந்தாடியவன்.!பார்வையும் உறுமலும் உன் பார்வைக்கு விரும்பாத வில்லனாய் வெறுமனே நடிப்பால்புடம் போட்டவன்..தடம் மாறிய வேளைகளில் வேதனையால்நொந்தழுதவன்தனக்கு எட்டாத தூரங்களை எட்ட வைத்து வளர்த்தவன்.!உயர் நிலை தொட்டதும் ஓரமாய் ஒதுங்கிஈரமான வார்த்தைகளுக்குதவமிருப்பவன்.!நேசி!  பூசி!  யோசி ! வாசி அவர் வாழ்க்கை உனக்குபெரும் பாடம்..!
  •  · 
  •  · beesiva
உன்னை நான்மதிக்கிறேன்அதனால் நான்பேசாமல்இருக்கிறேன்பெண் என்றால்பெருமைக்குரியவளே!நானும் பெருமையாகபேசுவேன்நீயும் யாரையும்இகழ்ந்து பேசாதே!உன்னிடம்திறமையுண்டோ?செய்து காட்டுமற்றவர்களைபுகழ்ந்து காட்டுபுண்பட பேசாதே!நீயும் ஒரு பெண்ணே!பெண்ணின் பெருமைதாய்மையே!தாய்மையுனக்குமுண்டுதப்பாய் பேசாதே!தனித்திறமைகளைவெளிக்கொண்டு வரகளம்பலவுண்டுஆடு,விளையாடுஉன்னைப்போற்றபலர் வருவார்நீ பொறாமைகொள்ளாதே பெண்ணே!பொறாமையென்பதுவெற்றுத்தாள்இதில் ஏதாவதுஎழுதுபொறாமை நீங்கநீயும் முயற்சி செய்யாரையும் பிரிக்கநினைப்பதும்உன்னைப்பிரிவதும்இதில் மகிழ்ச்சியும்இகழ்ச்சியும்உனக்கே சொந்தம்...பத்தினியாள் செய்வினைக்குபழிவாங்க எண்ணாமல் புத்தகம்தனை எழுதிபுத்திதனைப்புகட்டுகிறேன்இப்படியும்பெண்கள் இப்புவியில்இருக்கிறார்கள்தப்பிடுங்கோ காளையரேதப்பிவி
  •  · 
  •  · beesiva
அன்பு வைப்பதாக இருந்தால் அதை உண்மையாக வையுங்கள் நடிக்காதீர்கள் பழகிவிட்டோம் என்பதற்காகவும் உதவி விட்டார்கள் என்பதற்காகவும் பாசமாய் பழகி பாசாங்கு செய்யாதீர்கள் காயத்தை விட வலி கூடியது மரணத்தை விட கொடியது பொய் நேசம் பொழிந்துவிட்டு மார்தட்டி சிரிப்பது மோசடிகள் ஆயிரம் செய்துவிட்டு போயிவிடுங்கள் பரவாயில்லை இதயத்தில் மட்டும் துரோகம் செய்து விடாதீர்கள் 
  •  · 
  •  · beesiva
வறுமைஉன்னிடம் தோழமை கொண்டால் பலபேர் உன்னை விட்டு தூரமாய் போய் விடுவார்கள்பாசம் வைத்தவர்கள் கூடபயந்து விடுவார்கள் மடியில் தூங்கியவர்கள்மறந்து போவார்கள் இதயத்தில் இருந்தவர்கள்இறங்கி விடுவார்கள்தலை குனிந்துதவம் கிடந்தவர்கள்தலை நிமிர்த்திதள்ளி விடுவார்கள்நலம் விசாரிக்கநடுங்குவார்கள்நீ உறவுகளைஉணர்ந்து கொள்வாய்உலகத்தைபுரிந்து கொள்வாய்அன்பைஅறிந்து கொள்வாய்மனிதர்கள் இப்படித்தான்என்பதைநீ பாடமாய் படித்துக் கொள்வாய்
Ads