Sign up
Added article
ஈரானிய இயக்குநர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நடித்தார். நடிப்பில் மாளவிகாவுக்கு கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படத்தில் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார்.
Added article
76 வயதான எஸ்.வி சேகர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள மீனாட்சி சுந்தரம் என்ற தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஷோபனா என்பவர் நடிக்கிறார். 76 வயது சேகருக்கு 26 வயது நடிகை ஜோடியாக நடிப்பதா? என வியப்பில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த சீரியலின் முன்னோட்டக் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எஸ்.வி.சேகருடன் நடிப்பது குறித்து நடிகை ஷோபனா கூறியதாவது: “எஸ். வி. சேகர் முதலில் யார் என்று எனக்கு தெரியாது. ‘ஜீன்ஸ்’ படத்தில் நடித்திருப்பார், அவரா? என்றுதான் நினைவுபடுத்தி கொண்டேன். அவரை எனது பாட்டிக்கு ரொம்ப பிடிக்குமாம். ஆனால் நான் என் பாட்டியையும் பார்த்ததில்லை. அதனால் அவரை பார்க்கும் போதெல்லாம் என் பாட்டி நினைவுக்கு வருவார். இதனால் அவரை நான் ஒரு ஏஞ்சல் போலவே பார்க்க ஆரம்பித்து விட்டேன்” என தெரிவித்துள்ளார்.
Added a news
சீனா 10G இணைய சேவையை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் ஹெபே மாகாணம், சுனான் மாவட்டத்தில் ஹுவாய் மற்றும் சீனா யூனிகோம் நிறுவனங்கள் இணைந்து, 50G PON தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 10G பிராட்பேண்டை செயல்படுத்தியுள்ளன. இதில் 9,800 Mbpsக்கும் அதிகமான டவுன்லோட் வேகம், 1,000 Mbps அப்லோட் வேகம் எனக் கூறப்படுகிறது. வெறும் 2 நொடிகளில் ஒரு திரைப்படத்தை டவுன்லோடு செய்ய முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.இத்தகைய நவீன இணையம், 8K வீடியோக்கள், கிளவுட் கேமிங், ஏஐ உள்நிறைந்த ஸ்மார்ட் ஹோம்கள், தொலை மருத்துவம் போன்ற உயர்நுட்ப சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
Added a news
தேசிய பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்த கனடா ஆபத்தான நாடாக சீனாவை அறிவித்துள்ளது.வெளிநாட்டு தலையீடு, சைபர் நடவடிக்கைகள் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் மூலோபாய அபிலாஷைகளை மேற்கோள் காட்டி, கனேடிய பிரதமர் மார்க் கார்னி சீனாவை நாட்டின் முதன்மையான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.கனடாவின் கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரம் இறு வாரத்தில் உள்ள நிலையில் , கனடா-சீனா உறவுகள் குறித்த கனடிய பிரதமர் மார்க் கார்னியின் நேரடி அறிக்கை இதுவாகும், தொலைக்காட்சி வேட்பாளர் விவாதத்தின் போது, கனடாவுக்கு மிகப்பெரிய புவிசார் அரசியல் அச்சுறுத்தல் என்னவென்று வினவியபோது, அது சீனாதான் என்று கார்னி நேரடியாகக் கூறினார்.மேலும் சீன தலையீடு கனடாவின் ஜனநாயக நிறுவனங்களுக்கு நேரடி சவாலாக அமைகிறது என்றும் கனடிய பிரதமர் மார்க் கார்னி எச்சரித்தார்.
Added a post
முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?”முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?”முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?”முல்லா சொன்னார்: “சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு எனது அத்தை இறந்துவிட்டார்.”நண்பர் கேட்டார்: “சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?”முல்லா சொன்னார்: “மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன் 50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்.”நண்பர் கேட்டார்: “கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?”முல்லா சொன்னார்: “இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்து போறதுக்கு எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்”கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்...
Added a post
ஒரு பசுமையான கிராமத்தில், மலைகளின் மடியில், ஆறு பாடிக்கொண்டு ஓடியது. செண்பக மரங்கள் மணம் வீச, வயல்களில் பச்சைப் பசேல் என்று நெற்பயிர்கள் ஆடின. இந்தக் கிராமத்தில் ஒரு சின்ன வீடு, தென்னை மரங்களின் நிழலில் அமைதியாகக் குடியிருந்தது. அந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் கண்ணன் மற்றும் மாலதி, பாசத்தால் பிணைக்கப்பட்ட கணவன்-மனைவி.கண்ணன் ஒரு விவசாயி. காலையில் சூரியன் மலையைத் தொடும்போது, கையில் கோடாலியுடன் வயலுக்கு நடப்பார். மாலதி, வீட்டு முற்றத்தில் கொலு வைத்தாற்போல காய்கறிகளை அடுக்கி, சமையலறையில் பாட்டு முணுமுணுப்பார். ஆனால், எந்தக் கிராமமும் சண்டையின்றி இருக்குமா? இவர்கள் வீட்டிலும் சின்னச் சின்ன உரசல்கள் வருவதுண்டு.ஒரு மாலை, கண்ணன் வயலில் இருந்து களைப்புடன் வந்தார். கையில் ஒரு கூடை மாங்காய்கள். “மாலதி, இந்த மாங்காயைப் பாரு, எவ்வளவு புளிப்பு இருக்கும்னு!” என்று உற்சாகமாகச் சொன்னார். மாலதி, சமையலறையில் பரபரப்பாக இருந்தவள், “என்னங்க, இவ்வளவு புளிச்ச மாங்காயை வாங்கி வந்திருக்கீங்க? இதை வச்சு என்ன செய்ய?” என்று கேட்டுவிட்டாள்.கண்ணனுக்கு முகம் சற்றே வாடியது. “நல்லா இருக்கும்னு நினைச்சேன்,” என்று மெல்லச் சொன்னார்.அந்தக் கணம், மாலதிக்கு கண்ணதாசன் தாத்தாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. “முள்ளால் குத்தினால் ஆறும், சொல்லால் குத்தினால் ஆறாது.” அவள் உடனே சிரித்தபடி, “சரிங்க, இந்த மாங்காயை வச்சு ஒரு சட்னி செய்யுறேன். நீங்க வந்து சாப்பிடும்போது ருசி எப்படி இருக்குன்னு சொல்லுங்க!” என்றாள். கண்ணனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. “நீ செய்யுற சட்னியை நான் சொல்லாமலே சாப்பிடுவேன், அம்மா!” என்று பாசமாக அழைத்தார்.மறுநாள், மாலதி காலையில் புது புடவை கட்டிக்கொண்டு, தோட்டத்தில் பூப்பறித்துக்கொண்டிருந்தாள். கண்ணன், வயலுக்கு போகும் வழியில் அவளைப் பார்த்து, “மாலதி, இந்தப் பச்சை புடவையில நீ செண்பகப் பூ மாதிரி இருக்கே!” என்று பாராட்டினார். மாலதியின் கண்கள் மின்னின. “அப்பா, இப்படி சொன்னா எப்படி வேலை செய்ய மனசு வரும்?” என்று சிரித்தாள். அந்த சின்ன வார்த்தைகள் அவர்கள் இதயங்களை இணைத்தன.ஒரு முறை, கண்ணனின் அம்மா கிராமத்துக்கு வந்திருந்தார். மாலதி அவரை அன்போடு கவனித்தாள். காலை உணவு, மாலை தேநீர் என்று பாசத்தோடு பரிமாறினாள். ஒரு நாள், கண்ணனின் அம்மா, “மாலதி, நீ இல்லேன்னா இந்த வீடு இப்படி சிரிச்சிருக்காது,” என்று ஆசீர்வதித்தார். கண்ணன், வாசலில் நின்று இதைக் கேட்டு, மனதுக்குள் நிம்மதி உணர்ந்தார். அதேபோல், மாலதியின் அப்பா வந்தபோது,கண்ணன் அவருடன் அமர்ந்து கிராமத்து கதைகளைப் பகிர்ந்து, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.ஆனால், வாழ்க்கை எப்போதும் பூக்களால் நிரம்பிய பாதையல்லவே! ஒரு முறை, கண்ணன் வயலில் பயிர்கள் வாடிப்போனதால் மனமுடைந்து வந்தார். வீட்டுக்குள் நுழைந்தவுடன், “எல்லாம் போச்சு, மாலதி. இந்த வருஷம் நமக்கு ஒண்ணுமே இல்லை,” என்று குரல் உடைந்து சொன்னார். மாலதி, அவரை அமைதியாக அருகில் அழைத்து, “அப்பா, பயிரு போனா அடுத்து விதைப்போம். நம்ம அன்பு இருக்கும்போது எதையும் சமாளிக்கலாம்,” என்று ஆறுதல் சொன்னாள். அந்த வார்த்தைகளில் கண்ணனுக்கு ஒரு புது நம்பிக்கை பிறந்தது.ஒரு மாலை, சண்டை ஒரு சிறு மேகமாக வந்தது. மாலதி செய்த பருப்பு குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டது. கண்ணன், “என்ன மாலதி, இன்னைக்கு குழம்பு சரியில்லையே,” என்று சொல்லிவிட்டார். மாலதி முதலில் முகம் சுருக்கினாள். ஆனால், உடனே சிரித்து, “சரிங்க, இன்னைக்கு கை தவறிடுச்சு. நாளைக்கு உங்களுக்கு பிடிச்ச மீன் குழம்பு செய்யுறேன்,” என்று சொன்னாள்.கண்ணனும், “அதுக்கு நான் காத்திருக்கேன், அம்மா,” என்று சிரித்தார். அந்த இரவு, சண்டை மேகம் கரைந்து, அன்பு மழையாகப் பொழிந்தது.கிராமத்தில் மாலை நேரங்களில், இருவரும் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து, ஆற்றின் பாடலை ரசிப்பார்கள். “மாலதி, வாழ்க்கை ஒரு ஆறு மாதிரிதான். சில நேரம் அமைதியா ஓடும், சில நேரம் கரையை உடைக்கும். ஆனா, நாம அன்போட இருந்தா எல்லாம் சரியாகிடும்,” என்று கண்ணன் சொல்வார். மாலதி, “நீங்க இருக்கும்போது இந்த ஆறு எப்பவும் பச்சையாதான் ஓடும், அப்பா,” என்று புன்னகைப்பாள்.இப்படி, கண்ணனும் மாலதியும், கண்ணதாசன் தாத்தாவின் “நெஞ்சுக்கு நிம்மதி”யை வாழ்ந்தார்கள். அவர்கள் வீடு, செண்பக மரங்களுக்கு நடுவே, அன்பின் வாசனையைப் பரப்பியது. சின்னச் சின்ன வார்த்தைகளால், விட்டுக்கொடுத்தலால், புரிதலால், அவர்கள் வாழ்க்கை ஒரு பசுமையான கிராமமாகவே மலர்ந்தது.வாழ்க இல்லறம்! வளர்க அன்பு!
Added a post
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உறவுகளிடத்தில் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்கள் கைகூடும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பாராட்டு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு ரிஷபம்ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு வகைகளில் ஆதாயம் ஏற்படும். சபை தலைவராக இருப்பவர் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மிதுனம்வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். பணி பொறுப்புகளால் உடல் அசதி ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பதால் மனதில் அமைதி உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : நீலம் கடகம்குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வருமானத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை சிம்மம்சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தன வருவாய் மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். பரிசு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை கன்னிஉத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். பணியாளர்களால் லாபம் மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு துலாம்சுபகாரியம் கைகூடுவதற்கான சூழல் தோன்றும். சிந்தனையின் போக்கில் தெளிவு உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். உணவு துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். அரசு வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : பச்சை விருச்சிகம்செய்யும் செயல்களில் திருப்தியான சூழல் அமையும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும். பாகப்பிரிவினையில் அனுகூலமான முடிவு கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் மறைமுகமான எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை தனுசுதம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிவட்டாரத்தில் அனுபவம் மேம்படும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உணவு செயல்களில் கவனம் வேண்டும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் சில மாற்றம் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மகரம்உத்தியோகம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை தவிர்க்கவும். புதிய முடிவுகளை எடுப்பதில் ஆலோசனை பெற்று செயல்படவும். பணியாட்களின் விஷயங்களில் நிதானத்தை கையாளவும். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். மறதி சார்ந்த பிரச்சனைகளால் குழப்பங்கள் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கும்பம்நண்பர்களின் இடத்தில் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். ஜாமீன் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். ரகசியமான சில முதலீடுகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மீனம்குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பேச்சுக்களுக்கு மதிப்பு கிடைக்கும். இலக்கியப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால வைப்பு நிதிகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தடைப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
Added a post
விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 9 ஆம் தேதி செவ்வாய்கிழமை 22.4.2025.திதி : இன்று பிற்பகல் 01.37 வரை நவமி. பின்னர் தசமி.நட்சத்திரம் : இன்று காலை 08.26 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.நாமயோகம் : இன்று மாலை 05.52 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.கரணம் : இன்று அதிகாலை 02.05 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 01.37 வரை கரசை. பிறகு வணிசை.அமிர்தாதியோகம்: இன்று காலை 06.00 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.நல்ல நேரம்காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
Added article
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி சம்பந்தமான காட்சிகள் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக அரசு சென்னை திருமயிலை பகுதியில் பிலிம் சிட்டி ஒன்றை கட்டப் போகும் நிலையில், அதற்காக அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதை அடுத்து, இந்த பணிகளை அவ்வப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.கட்டிடம் கட்டுவதற்கான தலைமை ஆலோசகராக கமல்ஹாசனை தமிழக அரசு நியமிக்க இருப்பதாகவும், அதற்காகத்தான் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அடிக்கடி கமல்ஹாசனை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் போல இந்த ஃபிலிம் சிட்டியை கட்ட இருப்பதால், கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்குள்ள கட்டிட மாடல்களை பார்த்து, அவருடைய ஆலோசனைப்படி இந்த கட்டடம் கட்ட வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.எனவே, விரைவில் கமல்ஹாசன் தமிழக அரசின் சார்பில் அரசு செலவில் அமெரிக்கா சென்று புதிய பிலிம்சிட்டி கட்டிடத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Added a news
கனடாவிலுள்ள இந்து கோவில்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் சேதப்படுத்தியுள்ளனர்.கனடாவின் வன்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை கோவில் மீது நேற்று (20) காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், மற்றுமொரு இந்து கோவிலான லட்சுமி நாராயணன் கோவிலையும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர். கோவிலின் சுவர்களை சேதப்படுத்தியுள்ளதோடு அச் சுவர்களில் மையில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதி வைத்துள்ளனர்.
Added a news
போப் பிரான்சிஸை பொருத்தவரை அவருக்கு அந்தப் பதவிக்கென சம்பளம் இருக்கிறது. மாதம்தோறும் 32,000 அமெரிக்க டாலர் சம்பளமாக பெற தகுதி பெற்றவர்.ஆனால் போப் பிரான்சிஸ் எனக்கு சம்பளம் வேண்டாம் என மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக அவருக்கு வந்த சம்பளத்தை தேவாலயங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் நன்கொடையாக வழங்க செய்தார்.இதற்கு முன்பு இருந்த எந்த போப்பும் செய்யாத ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. இவர் போப்பாக பதவியேற்பதற்கு முன்பாகவே கார்டினல் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். அப்போது கூட தனக்கு வழங்கப்பட்ட சம்பளங்களை வேண்டாம் என மறுத்துள்ளார்.
Added a news
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) காலமானார். அவருக்கு வயது 88. Pope Francis no moreஇதுதொடர்பாக, வாடிகன் கார்டினல் கெவின் ஃபாரெல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அன்புள்ள சகோதர சகோதரிகளே, நமது புனித தந்தை போப் பிரான்சிஸ் மறைவை நான் மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறேன். இன்று காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ், தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார்” என்று தெரிவித்துள்ளார்.அர்ஜெண்டினாவில் பிறந்த போப் பிரான்சிஸ், கடந்த 2013-ஆம் ஆண்டு தனது 76 வயதில் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 12 ஆண்டுகள் போப்பாக இருந்தார்.கடந்த சில மாதத்திற்கு முன்பாக அவர் நிம்மோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் தான் காய்ச்சலில் இருந்து குணமடைந்த நிலையில், ஈஸ்டர் மறுநாளான இன்று அவர் மறைந்திருப்பது உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களை சோகத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.தனது இறுதிச்சடங்கை எளிய முறையில் நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு போப் வேண்டுகோள் விடுத்தார். அதாவது… புதிய இறுதிச்சடங்கின்படி போப் உடல் துத்தநாகத்தால் மூடப்பட்ட சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்படும். இதற்கு முன்பாக மூன்று சவப்பெட்டிகளுடன் போப் உடல் அடக்கம் செய்யப்பட்டது
Added a post
ஒரு ஏலக்காய் மட்டும் போதும்! உங்கள் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு....சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இருக்கும் மருத்துவ மூலிகையில் ஒன்று ஏலக்காய். ஏலக்காய் வாசனை பொருட்கள் மட்டுமல்லாமல் . ஏலக்காயில் புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து ,பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம் ,வைட்டமின் ஏ, பி, சி , போன்றவைகள் உள்ளது.ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர என்ன பயன் என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட ஜீரணக் கோளாறு குணமாகும் பசியின்மை நீங்கும். உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.வயிற்று வலி வயிறு உப்புசம் போன்றவைகள். நீங்கும்.அதன் பிறகு மூச்சு விடுவதில் சிரமம், தொடர்ந்து இருமல் வருதல், நெஞ்சு சளி போன்றவைகள் நீங்கும். அதனை அடுத்து ஏலக்காய் மென்று சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் நீங்கும்.உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். பிறகு ஒரு சிலர் பயணம் செய்யும் பொழுது வாந்தி மயக்கம் போன்றவைகளால் அவதிப்படுவார்கள் அதனை முற்றிலும் தடுப்பதற்கு ஏலக்காயை மென்று சாப்பிட வேண்டும்.
Added a post
ஒரு அதிகாலைப் பொழுது.... கணவன் மனைவியை எழுப்பி கேட்டான். "டியர்... யோகா பண்ணப் போறேன்... நீயும் வர்றியா?"கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி , "ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்.. உடம்பை குறைன்னு சொல்றீங்க.. அப்படி தானே?"கணவன்: "அதுக்கில்லைம்மா.. யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது".மனைவி: "அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?"கணவன்: "இல்லை இல்லை.. நீ வரவேணாம். விடு".மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க"கணவன்: "ஐயோ இல்லை.. ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!"மனைவி: அப்படிதான் சொன்னீங்க.. அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"கணவன்: "தயவு செஞ்சு விடு.. காலங்காத்தால ஏன் சண்டை?"மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்".கணவன்: "Ok.. நானும் போகலை. போதுமா?"மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு.. அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க”கணவன்: "சரி, நீ தூங்கு.. நான் தனியா போய்க்கிறேன்.. சந்தோஷமா?"மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்.. அதுக்கு தானே இவ்வளவும் பேசுனீங்க?"வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை.. டயர்டாகி யோகாவுக்கு போகாமல் படுத்துவிட்டான்..
Added a news
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளது. சுகவீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், குணமடைந்து வெளியேறிய நிலையில் ஓய்வில் இருந்தார். இந்தநிலையில், இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான அவர் 12 ஆண்டுகள் இறைச் சேவையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.000
Added a news
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் "வேரிலிருந்து விழுது வரை" ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி இன்றையதினம் நடைபெற்றது .உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணி மற்றும் நடைபவனி மேற்கொள்வதற்கு தடை விதித்தே யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர் .இதன்போது ஏற்பாட்டாளர்கள் இது தேர்தல் சார்ந்த நடைபவனி அல்ல என பொலிஸாருக்கு தெளிவுபடுத்திய நிலையில் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் நடைபவனியில் பங்கேற்க முடியாது என்ற நிபந்தனையுடன் இவ் நடைபவனி இடம்பெற்றது.000
Added a news
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (21) ஆரம்பமானதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, முதல் பருவம் மே 9ஆம் திகதி முதலாம் தவணை முடிவடைய உள்ளது.2025ஆம் ஆண்டின் இரண்டாம் தவணையின் முதல் கட்டம் மே 14 ஆம் திகதி திங்கள் கிழமை மீண்டும் தொடங்கி ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை தொடரும்.மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 8 ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை தொடரும்.அத்துடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 ஆம் திகதி முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.00