·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 76
  • More

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அகல உடல் விமானம் கொழும்புக்கு வந்தடைந்துள்ளது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் முதல் அகல உடல் விமானத்தை வரவேற்கிறது - புதிய ஏர்பஸ் A330-200 கொழும்பு வந்தடைந்துள்ளது. கொழும்பு கடற்கரையில் குறைந்த உயரத்தில் பறந்த பின்னர் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சம்பிரதாய நீர் வணக்கம் செலுத்தப்பட்டது.

Comments (0)
Login or Join to comment.
·
Added a news

கனடாவில் இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்தவரான ஹர்சிம்ரத் (Harsimrat Randhawa, 21) என்னும் இளம்பெண், கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றிருந்தார். 

பகுதி நேர பணி செய்துவந்த ஹர்சிம்ரத், ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி இரவு 7.30 மணியளவில், ஹாமில்ட்டன் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார்.

அப்போது அங்கு வந்த ஒரு கருப்பு நிற காரிலிருந்த ஒருவர், சாலையின் மறுபக்கம் நின்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை நிற காரிலிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  அப்போது, அவர் சுட்ட ஒரு குண்டு, பேருந்துக்காக காத்திருந்த ஹர்சிம்ரத்தின் மார்பில் பாய்ந்துள்ளது.

துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பியோடிவிட, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹர்சிம்ரத், காயங்கள் காரணமாக பலியாகிவிட்டார்.

இந்நிலையில், ஹர்சிம்ரத் உயிரிழக்கக் காரணமாக இருந்த நபர் செவ்வாயன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள நயாகரா ஃபால்ஸ் என்னும் இடத்தில் கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் ஜெர்டைன் ஃபோஸ்டர் (Jerdaine Foster, 32).

அவர் மீது ஒரு கொலைக்குற்றச்சாட்டும், மூன்று கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  • 153
  • 154

image_transcoder.php?o=sys_images_editor&h=84&dpx=1&t=1754665091

  • 163
  • 166
  • 167

அன்பில்லாமல் பொருள்களைக் கையாள முடியும், ஆனால்

அன்பில்லாமல் மனிதர்களைக் கையாள முடியாது.

ஏனெனில்,

இயல்பான அன்புதான் மனித வாழ்க்கையின் அடிப்படை விதி.

-லியோ டால்ஸ்டாய்

  • 453
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். விவசாய பணிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பணி சார்ந்த சில முயற்சிகள் கைகூடும். கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுவது அவசியமாகும். வியாபாரத்தில் மத்தியான லாபங்கள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

ரிஷபம்

தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சூழல் உருவாகும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கால்நடை பணிகளில் ஆதாயம் மேம்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் அனுபவமும் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

மிதுனம்

உத்தியோகப் பொறுப்புகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உதாசினமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் பொறுமை காக்கவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கடகம்

மற்றவர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் கோபம் இன்றி மற்றவர்களின் கருத்தை கேட்கவும். வழக்குகளில் சில திருப்புங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் பொறுமை காக்கவும். நெருக்கமானவர்கள் பற்றிய சில புரிதல் ஏற்படும். சிரமம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

சிம்மம்

நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில வரவுகளால் திருப்தி உண்டாகும். புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஆதரவுகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

கன்னி

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். வழக்கு தொடர்பான தெளிவுகள் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பக்தி வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை

 

துலாம்

உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கடன் சார்த்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். தன வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். தெளிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

விருச்சிகம்

அதிரடியான சில வியூகம் மூலம் மேன்மை உண்டாகும். பணி சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். மனதளவில் தைரியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் ஏற்படும். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

தனுசு

கனிவான பேச்சுக்களால் காரிய அனுபவம் ஏற்படும். பயணங்கள் சாதகமாக இருக்கும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். தடைபட்ட தன வரவுகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். மனதளவில் புதிய மாற்றங்கள் கிடைக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மகரம்

சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் எதிர்பாராத சில மாற்றம் உண்டாகும். வரவுகளில் சிறுசிறு போராட்டங்கள் ஏற்படும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். கருத்துக்களை சூழ்நிலை அறிந்து வெளிப்படுத்தவும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கும்பம்

எதிர்பாராத செலவுகள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வாகன மாற்றம் சார்ந்தசிந்தனைகள் அதிகரிக்கும். கடன்களை குறைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வெளி வட்டார பயணங்களில் கவனம் வேண்டும். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அரசு விஷயங்களில் இருந்து தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

  • 531
·
Added a post

விசுவாவசு வருடம் ஆடி மாதம் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 8.8.2025.

இன்று பிற்பகல் 02.51 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

இன்று மாலை 03.47 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

இன்று காலை 06.49 வரை ப்ரீதி. பின்னர் ஆயுஷ்மான்.

இன்று அதிகாலை 02.48 வரை கரசை. பின்னர் பிற்பகல் 02.51 வரை வனிசை. பிறகு பத்தரை .

இன்று மாலை 03.47 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=83&dpx=1&t=1754616981

நல்ல நேரம் :

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 520
  • 519
·
Added a news

2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் பதவிக்கு வந்த மியன்மாரின் ஜனாதிபதியான மைன்ட் ஸ்வே காலமானார் என அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.

உடல்நல குறைவால் மருத்துவ ஓய்வில் ஒரு வருடம் காலம் இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என மியான்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி யு மியிண்ட் ஸ்வே இன்று காலை 8.28 மணிக்கு காலமானார்.

74 வயதான மியின்ட் ஸ்வே தலைநகர் நேபிடாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் உயிரிழந்தார். ஜனாதிபதி மைன்ட் ஸ்வேவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

  • 800
·
Added a news

டொராண்டோவில் இந்த வார இறுதி நாட்களில் வெப்பநிலை மாற்றம் ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் பகல்நேர வெப்பநிலை 30 பாகை செல்சியஸுக்கு மேல் இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இன்றைய தினம் டொராண்டோவில் வெப்பநிலை 27 பாகை செல்சியஸாக இருக்கும் எனவும் ஈரப்பதனை கருத்திற் கொண்டால் 32 பாகை செல்சியஸாக உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை பகல்நேர உயர்ந்த வெப்பநிலை 31 பாகை செல்சியஸாக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

  • 806
·
Added a post

தலைவலி ஒருவருக்கு வந்தால், எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. அந்த அளவில் தலைவலி இருக்கும். தலைவலியை அனுபவிக்காதவர்களே இருக்கமாட்டார்கள்... தலைவலிக்கு மாத்திரையை அடிக்கடி சாப்பிட்டால், அதனால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, கண்ட கண்ட மாத்திரையைப் போடுவதைத் தவிர்த்து, நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களை மேற்கொள்ளுங்கள்.

🎈வெற்றிலையை அரைத்து சாறு எடுத்துகொள்ளவும். கிராம்பை தூள் செய்து அதனை வெற்றிலை சாறுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, நெற்றியில் தடவினால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

🎈பசலைக்கீரையில் தலைவலியைப் போக்கத் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது. ஆகவே தலைவலி இருக்கும் போது பசலைக்கீரையை அரைத்து நெற்றியில் தடவினால், தலைவலி நீங்கும்.

🎈துளசி இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து குடித்தால், தலைவலி குணமாகும்.

  • 812
·
Added a post

கண்ணப்புரி என்ற நாட்டை, சுந்தர வரதன் எனும் அரசன், ஆட்சி செய்து வந்தான்.

ஒருநாள் இரவு அரசனும், அமைச்சரும் மாறுவேடத்தில் நகரத்தைச் சுற்றி வந்தபோது, பிச்சைக்காரர் இருவரை பார்த்தனர்.

அவர்களில், 'இறைவன் அருள்... இறைவன் அருள்...' என, பிச்சையைக் கேட்டான், ஒருவன்; 'அரசர் அருள்... அரசர் அருள்...' என, கூவி பிச்சைக் கேட்டான், மற்றொருவன்.

அவர்கள் இருவரும், மறுநாள் அரசவைக்கு அழைத்து வரப்பட்டனர்.

'உங்களில் ஒருவன் ஆண்டவன் பெயரையும், மற்றொருவன் அரசர் பெயரையும் உச்சரித்து பிச்சை எடுத்தீர்கள். எதனால்?' எனக் கேட்டார், அரசர்.

இறைவனை நினைத்து யாசித்தவன், 'உலகமனைத்தும் ஆண்டவன் அருளால் காக்கப்படுகிறது. செல்வத்தை, உடல் நலத்தை நமக்களிக்கும் வல்லமை அவருடையது. அதனால் தான் அவர் நாமத்தைக் கூறினேன்...' என்றான்.

'கடவுள் கண்களுக்குப் புலப்படாதவர். அரசர் தான் கண்கண்ட தெய்வம். அவர் எவரையும் செல்வந்தராக்கும் ஆற்றல் உள்ளவர். அதனால், அவர் பெயரால் நான் பிச்சை எடுத்தேன்...' என்றான், இரண்டாமவன்.

அதன் பின் அவர்களை அனுப்பி வைத்து, அமைச்சரிடம், 'அரசர் அருள் சிறந்ததா, ஆண்டவன் அருள் சிறந்ததா என்பதை ஆராய்ந்து அறியலாம்...' என்றார்.

அரசர் பிறந்தநாளன்று, அரண்மனைக்கு வரும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படுவதாக, நாடு முழுவதும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அரசர் பிறந்தநாளன்று பலர், பரிசுகளைப் பெற்றுச் சென்றனர். வந்தவர்களில், மேற்கூறிய இரு யாசகர்களும் இருந்தனர்.

அரசர் அருளைப் பாராட்டிய யாசகனுக்கு, ஒரு பெரிய பூசணிக்காயைக் கொடுத்து, அது அவனுக்கு மாபெரும் செல்வத்தைத் தரும் எனக் கூறினர்.

சில நாட்களுக்கு பின், அரசரும், அமைச்சரும் நகர்வலம் வரும் போது, பூசணிக்காய் பெற்ற யாசகன், முன் போலவே பிச்சை எடுப்பதைக் கண்டனர்.

'என்னிடம் பரிசு பெற்ற பின்பும் பிச்சை எடுத்து வாழ்கிறாயா?' எனக் கேட்டார், அரசர்.

'அரசே, நான் அந்த பூசணிக்காயை ஒருவனுக்கு, இரண்டு வெள்ளி நாணயங்களுக்கு விற்றேன். எத்தனை நாட்கள் அந்த பணத்தில் வாழ முடியும்? அதனால், மீண்டும் பிச்சை எடுக்கிறேன்...' என்றான்.

'மடையனே! பூசணிக்காயில் தங்கத்தையும், முத்துக்களையும் வைத்திருந்தேன். அதை நீ அறுத்துப் பார்த்திருந்தால், செல்வந்தனாகி இருப்பாய்...' என, கடிந்து கொண்டார், அரசர்.

அரசரும், அமைச்சரும் அரண்மனைக்கு திரும்பி வரும் வழியில், ஒரு பல்லக்கைப் பார்த்தனர். அதில் கடவுள் பெயரால் யாசித்தவன் அமர்ந்திருந்தான்.

அவனிடம், 'நீ எப்படி செல்வந்தன் ஆனாய்?' எனக் கேட்டார், அரசர்.

'அரசே! இது ஆண்டவன் அருளால் கிட்டியது. ஒரு யாசகனிடமிருந்து பூசணிக்காயை வாங்கினேன். அதை அறுத்த போது பொற்காசுகள், முத்துக்களைப் பார்த்து வியப்படைந்தேன். அவற்றை நான் தக்க விலைக்கு விற்றேன்; செல்வந்தனாகி விட்டேன்...' என்றான்.

ஒருவனுக்கு அரசன் அருள் இருந்தாலும், ஆண்டவன் அருள் இல்லையெனில், எந்த உதவியும் அவனை சென்றடையாது.

  • 867
·
Added article

நடிகர் சூர்யா, மற்றும் கார்த்தி குடும்பத்தினரின் அகரம் பவுண்டேஷன் விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில், அகரம் பவுண்டேஷன் மூலமாகப் படித்து, தற்போது ஒரு நல்ல நிலையில் இருக்கும் ஒரு பெண் பேசிய பேச்சு, அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. குறிப்பாக, அப்பெண் பேசியதைக் கேட்டு நடிகர் சிவகுமார் தலைகுனிந்து சிரித்தது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

விழாவில் பேசிய அப்பெண், தன்னுடைய சொந்த கிராமம் மற்றும் அங்கு நிலவிய மோசமான சூழ்நிலை குறித்துப் பேசினார். "எங்கள் ஊருக்குச் சரியான சாலை வசதி கிடையாது, மருத்துவ வசதி கிடையாது. நாங்கள் ஒரு காட்டுக்குள்தான் வசித்தோம். ஆனால் நன்றாகப் படித்துக்கொண்டிருந்தேன். தொடர்ந்து படிப்பதற்கு என் குடும்பத்தில் சரியான சூழ்நிலை இல்லை.

அப்போதுதான் என் ஆசிரியர், 'நீ அகரம் பவுண்டேஷன் மூலமாக முயற்சி பண்ணு' என்று ஒரு நம்பர் கொடுத்தாங்க," என்று கூறினார்.

"அந்த நம்பருக்குப் போன் பண்ணுவதற்குக்கூட எங்கள் ஊரில் டவர் கிடையாது. இந்த பக்கம் அந்த பக்கம் என்று அலைந்து ஒரு இடத்தில் எனக்கு டவர் கிடைத்தது. அங்கிருந்து போன் பண்ணி தகவலைச் சொன்னேன். அதன்பிறகு எனக்கு அகரம் மூலம் ஒரு போன் வந்தது. அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது.

அதுவரைக்கும் நான் தமிழ் மீடியத்தில் படித்திருந்தேன். நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் எனக்கு இன்ஜினியரிங் படிப்பதற்காக சீட் கிடைத்தது," என்று கூறினார்.

கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, அப்பெண்ணுக்கு குஜராத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இது குறித்து அவர் பேசுகையில், "குஜராத்துக்குப் போவதற்காக முதல்முறை நான் பிளைட்டில் போனேன். எனக்கு அதற்கு முன்பு பிளைட்டில் எப்படி ஏற வேண்டும், சீட் பெல்ட் எப்படிப் போட வேண்டும் என்று எந்த விஷயமும் தெரியாது.

ஏர்போர்ட்டில் நான் நின்று கொண்டிருக்கும்போதுதான் அங்கு சிவகுமார் சாரும், அவருடைய மனைவி லட்சுமி அம்மாவும் வந்தாங்க. அவங்கதான் எனக்கு ஏர்போர்ட்டில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், சீட் பெல்ட் எப்படிப் போட வேண்டும் என்று எல்லாமே சொல்லி தந்தாங்க," என்று கூறினார்.

மாணவி இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, சிவகுமார், "ஐயோ, இதையெல்லாம் சொல்லுகிறாளே," என்று சிரித்தபடியே தலையில் கை வைத்து முகத்தை மூடிக்கொண்டார். அவருடைய இந்த எதார்த்தமான செயல், பலரையும் கவர்ந்துள்ளது.

அந்தப் பெண் இப்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், அதற்கு அகரம் பவுண்டேஷனும், சிவகுமார் குடும்பத்தினரின் ஆதரவுமே காரணம் என்றும் கூறினார்.

இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, "அகரம் மூலம் மாணவர்கள் நல்ல நிலைமைக்கு வந்து, மற்றவர்களுக்கும் உதவ வேண்டும்," என்று தனது பெருமையைப் பகிர்ந்துகொண்டார். கார்த்தி, தனது அண்ணி ஜோதிகா மற்றும் அப்பா சிவகுமார் ஆகியோர் அகரம் பவுண்டேஷனுக்கு அளித்த ஆதரவு குறித்துப் பேசியிருந்தார்.

பொதுவாக, நடிகர் சிவகுமார் கோபக்காரர் என்றும், புகைப்படம் எடுக்கக்கூட அனுமதிப்பதில்லை என்றும் பேசப்பட்ட நிலையில், ஒரு மாணவிக்காக அவர் ஏர்போர்ட்டில் செய்த இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். அகரம் பவுண்டேஷன், வெறும் நிதியுதவி மட்டும் அல்லாமல், மாணவர்களுக்கு ஒரு குடும்பமாகவும் செயல்பட்டு வருகிறது என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

  • 847
·
Added a post

நான் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தப் போது..அமெரிக்காவில் இருந்து,நான் பிறந்த லண்டன் மாநகருக்கு சென்றேன்..நான் இளமையில் பசியுடன்,கிழிந்த சட்டையுடன்.. நடந்து சென்ற அந்த இலண்டன் வீதி தெருக்களில் தான் இப்போது.. என்னை காண இலட்சக் கணக்கில்மக்கள் திரண்டனர்..

ஆனால் நான் பிச்சைகாரனாய் இருந்த போது என்னை நேசித்த என் காதலியை தேடினேன்..

அவள் இல்லை..அன்று வறுமை எங்களை பிரித்தது..இன்று திரையில் என்னை இலட்சக்கணக்கில் கண்கள் காண்கின்றன..

நான் தேடுவதெல்லாம் வீதிகளில் ஏழையாய் நடந்து சென்ற போது என்னை ஐன்னல் வழியாக பார்த்து சிரித்த அந்த கண்களை தான்...பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்தசிலவற்றை பணத்தால் திருப்பி தரமுடியாது... இப்போதும் வறுமை தான் வென்றது...!!

  • 847
·
Added a post

ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க மட்டுமே படகு ஒன்று இருக்கிறது. மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச் செல்கிறார்.

கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக. இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார் என்று மாணவர்களை நோக்கி இந்த கதையைக் கூறிய ஆசிரியை கேட்டார். எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். ஏம்பா நீ சைலண்டா இருக்க, நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'. எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, உனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?

இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையே தான் சொன்னாங்க.. பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார். தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார். உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது. கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

*'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல நம்மால் புரிஞ்சிக்க இயலாம போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது. முதலில் மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, திமிறை விட உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம். என்று ஆசிரியைகூறி முடித்தார்.

  • 875
·
Added a post
  • சாதம் வடித்த கஞ்சியை அரை டம்ளர் எடுத்து, மோர் விட்டு சாப்பிட்டு வந்தால் அதிகமான ரத்தப்போக்கு நின்றுவிடும்.
  • இரவில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து மோரில் போட்டு ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, நாளடைவில் வாயுத் தொல்லைகள் நீங்கும்.
  • மூலநோய் குணமடைய முள்ளங்கியுடன் மிளகுத் தூள், எலுமிச்சைச்சாறு கலந்து உண்ண வேண்டும்.
  • சுக்கு, மிளகு, திப்பிலி போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவும்
  • நீரிழிவு நோயாளிகள் வாழைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
  • தூதுவளைக் கீரையின் சாறானது சளி, இருமல், வாயுக் கோளாறுகள் போன்றவற்றை நீக்குகிறது.
  • மகிழம்பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை முகர்ந்து வந்தால் தலைவலி குணமடையும்.
  • 877

வித்தியாசமான விளம்பரம்!

image_transcoder.php?o=sys_images_editor&h=81&dpx=1&t=1754557724

  • 924

Good Morning

  • 1024
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். முத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். தன வரவுகள் தேவைக்கு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். அலுவலகத்தில் மதிப்புகள் கூடும். மனதளவில் புதிய தெளிவுகள் உண்டாகும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

ரிஷபம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். தர்ம காரியங்களில் ஒரு வித ஈர்ப்பு ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். இறை சார்ந்த பிரார்த்தனைகள் கைகூடும். உழைப்பு அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மிதுனம்

தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். தன வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

கடகம்

வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சாதனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

சிம்மம்

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதளவில் சில மாற்றம் உண்டாகும். பேச்சு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உணவு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கன்னி

எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பொழுது போக்கு செயல்களில் ஆர்வம் ஏற்படும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

துலாம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். நேர்மை வெளிப்படும் நாள். 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

விருச்சிகம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். சில பணிகளை சூழ்நிலை அறிந்து மேற்கொள்ளவும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிந்தனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

தனுசு

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். பண விஷயங்களில் ஏற்ற இறக்கம் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. இயந்திரப் பணிகளில் சற்று கவனம் வேண்டும். தெய்வீக காரியங்களில் மனம் ஈடுபடும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மகரம்

பயனற்ற செலவுகளை குறைக்கவும். திடீர் பயணங்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். சகோதரர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் மேம்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

கும்பம்

தனம் தொடர்பான நெருக்கடிகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறு மற்றும் குறுந்தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். பணி சார்ந்த செயல்களில் புரிதல்கள் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மீனம்

மனதில் இருந்த ஆசைகள் நிறைவேறும். வாகன பழுதைகளை சீர் செய்வீர்கள். நெருக்கமானவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நினைத்து பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். சாந்தம் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 1073
·
Added a post

விசுவாவசு வருடம் ஆடி மாதம் 22 ஆம் தேதி வியாழக்கிழமை 7.8.2025.

திதி

சுக்ல பக்ஷ திரயோதசி  - Aug 06 02:08 PM – Aug 07 02:28 PM

சுக்ல பக்ஷ சதுர்தசி  - Aug 07 02:28 PM – Aug 08 02:12 PM

நட்சத்திரம்

பூராடம் - Aug 06 12:59 PM – Aug 07 02:01 PM

உத்திராடம் - Aug 07 02:01 PM – Aug 08 02:28 PM

image_transcoder.php?o=sys_images_editor&h=80&dpx=1&t=1754538557

நல்ல நேரம் :

அபிஜித் காலம் - 12:00 PM – 12:50 PM

அமிர்த காலம் - 09:04 AM – 10:45 AM

பிரம்மா முகூர்த்தம் - 04:40 AM – 05:28 AM

  • 1062

கனேடிய தமிழர் பேரவையின், தமிழர் தெருவிழா 2025 இரத்துச் செய்யப்பட்டுள்ளது!

  • 1227

image_transcoder.php?o=sys_images_editor&h=78&dpx=1&t=1754498821

  • 1327

image_transcoder.php?o=sys_images_editor&h=77&dpx=1&t=1754498731

  • 1329