Latest Posts

- · sivam
- ·
தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறிய மகளிடம் கேட்டார் அப்பா ."என்னம்மா, ஸ்கூல் எப்படி இருக்கு?""பிடிச்சு இருக்கு"...என்று சொன்னவள் மெதுவாகசில விஷயங்களை சொன்னாள்.அரசு பள்ளிகள் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் குறைவான சுகாதாரமற்ற கழிப்பறை வசதியைப்பற்றி சொன்னாள்.அது பெரும்பாலான அரசுப்பள்ளிகளிலும் உள்ள குறைதானே என சொல்லிவிட்டு வேற எப்படி இருந்தது என கேட்டார்.கொஞ்சம் தயங்கியபடி, "இல்லப்பா , யாராவது எந்த ஸ்கூலில் படிக்கிற" எனக்கேட்கும் பொழுது சொல்லுவதற்கு ஒரு மாதிரி இருக்குப்பா.. பெரிய ஃபேமஷான ஸ்கூலில் படித்துவிட்டு இப்ப கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கிறேன் என சொல்ல கூச்சமா இருக்குப்பா" எனச் சொன்னாள்.அவர் சிரித்து கொண்டே "கவர்மெண்ட் வேலை கிடைச்சால் சொல்ல கூச்சப்படுவியா.??""கவர்மெண்ட் காலேஜில்


- · sivam
- ·
மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன்.. சூரியனிடம்....“தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன்.ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.அப்போது சூரிய பகவான்,“இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.“க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால் தான் சொல்கிறோம். அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும் முரண்பாடு வருகையில் விசேஷ தர்மத்தைக் கைக்கொ

- · sivam
- ·
200 ஆண்டுகள் பழமையான ஒரு வீடு இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது...அப்போது சுவர் அலமாரி ஒன்றைப் பெயர்த்துக் கொண்டிருந்தார்கள்.சுவற்றின் மேல் காகிதம் போல் ஏதோ ஒட்டப்பட்டிருந்தது.இடித்துக் கொண்டிருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தால் அது தாமரை இலை என்று சொன்னார்கள்.தாமரை இலையை சுவற்றில் ஒட்டி அதன் பின்பே அலமாரியைக் கட்டுவார்களாம்.காரணம் என்னவென்றால் கரையான் அரிக்காதாம்.புகைப்படத்தில் இருப்பது சுவரில் ஒட்டப்பட்ட தாமரை இலை... இது போல் மிகப் பெரிய வாழை இலைகளையும் இடிக்கும் போது பார்த்திருக்கிறார்களாம்.கரையான் அரிக்காத தொழில் நுட்பத்துடன் வீடு கட்டுவது எப்படி?...என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது அன்று......

- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். ஆன்மிக பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் உயரும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் ரிஷபம்எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளை அரவணைத்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபார போட்டிகளில் பொறுமையை கையாளவும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திறமைகள்

- · sivam
- ·
விசுவாவசு வருடம் ஆடி மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 18.7.2025.இன்று மாலை 04.11 வரை அஷ்டமி. பின்னர் நவமி.இன்று அதிகாலை 03.29 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.இன்று காலை 06.58 வரை சுகர்மம். பின்னர் திருதி.இன்று அதிகாலை 05.22 வரை பாலவம். பின்னர் மாலை 04.11 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.இன்று அதிகாலை 03.29 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 09.15 முதல் 10.15 மணி வரை பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

- · sivam
- ·
அதென்ன.. மாட்டுப் பெண்?நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் நடவு செய்வதற்காக, வயலில் ஒரு சிறு பகுதியில் நாற்று விடுவார்கள். குறிப்பிட்ட நாள்கள் சென்ற பிறகு அந்த நாற்றுகளைப் பறித்து, பக்குவப் படுத்தப்பட்ட வேறு வயல்களில் நடுவார்கள்.நாற்றைப் பறித்து எடுத்துச் சென்ற பின்பு அந்த இடம் வெட்புலமாக (VACANT) இருக்கும் அல்லவா ? அந்த இடத்தைப் பக்குவப் படுத்திவிட்டு வேறு இடத்தில் விடப்பட்டிருக்கும் நாற்றைக் கொண்டு வந்து இங்கு நடுவார்கள். இது தான் வேளாண் பெருமக்கள் பின்பற்றும் நடைமுறை.இங்கு என்ன நிகழ்கிறது ? ஒரு வயலில் வளர்ந்திருக்கும் நாற்றைக் கொண்டுபோய் இன்னொரு இடத்தில் நடுகிறார்கள். அங்கு அது செழித்து வளர்ந்து பலன் தருகிறது. வளர்வது ஓரிடம்; நெல்மணியாம் வித்துக்களை விளைவிப்பது இன்னோரிடம்.நம் வீட்டில் பிறந்து

- · sivam
- ·
அசைவ உணவுகளுக்கு தடை

- · sivam
- ·
பள்ளிக்கூடங்களை திறந்தால் மட்டும் போதாதது. அவற்றின் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கும் அவர்களுக்குக் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் வேலை நாட்களை 180 லிருந்து 200 நாட்களாக உயர்த்தினார். இதன் வாயிலாக மாணவர்களின் கல்வி நலன் மேம்படும் என இதைச் செய்தார். அதோடு பள்ளிகளுக்கு விடப்படும் தேவையற்ற விடுமுறைகளும் குறைக்கப்பட்டன.பள்ளிகளின் வேலை நாட்களை உயர்த்தியதோடு ஆசியர்களுக்கான சமூக நலத்திட்டங்களையும் அறிமுகம் செய்தார் காமராஜர். ஆசிரியர்களுக்கு பிராவிடண்ட் பண்ட், இன்சூரன்ஸ், ஓய்வூதியம் ஆகிய மூவகை சலுகை அளிக்கும் திட்டத்தை வழங்க உத்தரவிட்டார். 1955இல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் கிடைத்த இந்தப் பலன்களை 1958 முதல் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்தா

- · sivam
- ·
தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கூறிய உண்மைச் சம்பவம்.... 'நீண்ட போராட்டத்திற்கு பிறகு நான் ஜனாதிபதியான பின், ஒருநாள் என் முதல் கட்ட பாதுகாப்புப் படையினருடன் நகரில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தேன். அவரவர் தமக்கு விரும்பிய உணவுக்கு ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தோம். அப்போது என் எதிர் மேசையில் ஒருவர் தனியாக தன் உணவுக்காக காத்திருந்தார். என் படைவீரனை அனுப்பி அவரை எம்முடன் வந்து ஒன்றாக உணவருந்தும் படி சொன்னேன். அவரும் தன் உணவுடன் எமது வட்டத்தில் அமர்ந்தார். எல்லோரும் உண்டு முடிய அவரும் புறப்பட்டார்.அப்போது என் படை வீரனொருவன், "அந்த மனிதர் பார்க்க நோய்வாய்ப்பட்டவராக தெரிகிறார், உண்ணும் போது அவரின் கைகள் மிகவும் நடுங்கின." என்று என்னிடம் கூறினான்.உடனே நான் குறுக்கிட்டேன். அது

- · sivam
- ·
1983ம் ஆண்டு!ஏர் கனடா விமானம் 143 (Air Canada Flight 143) பயணிகளுடன் விண்ணில் பறந்து கொண்டிருக்கிறது!. அதுநாள் வரை பவுண்டு/மைல் எனப் பழங்கால அளவை முறைகளுடன் இயங்கி வந்த ஏர் கனடா, மெட்ரிக் முறைக்கு மாறி கிமி/லிட்டர் என மாறியதுஆனால் பணியாளர்களுக்கு இதில் போதுமான பயிற்சியைக் கொடுக்கவில்லை. 23,000 கிலோ பெட்ரோலை விமானத்தில் நிரப்புவதற்குப் பதில் 23,000 பவுண்டு பெட்ரோலை நிரப்பியிருந்தனர். விமானத்தில் எரிபொருளைக் காட்டும் மீட்டர் பாதி எரிபொருள் இருப்பதாகக் காட்ட, அதில் ஏதோ பிரச்சனை என நினைத்த பைலட் விமானத்தைக் கிளப்பிக் கொண்டு பறந்தார்.பாதிவழியில் 41,000 அடி உயரத்தில் இருக்கையில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. இரு எஞ்சின்களும் செயலிழந்து நின்று விட்டன. பூமிக்கு மேலே 41,000 அடி உயரத்தில் பெட்ரோல் தீ

- · sivam
- ·
முனிவர் ஒருவர் மிகவும் கர்வம் மிக்கவர். அவர் யமுனை நதிக்கரைக்கு வந்தார். அங்கே படகோட்டி காத்திருந்தான். அக்கரைக்குச் செல்ல வேண்டும் என்றார்.படகு புறப்பட்டது."டேய், படகோட்டி! என்னடா இப்படி மெதுவா படகை செலுத்துறே! வேகமாக போ"படகோட்டி தன் முழு பலத்தையும் காட்டி படகை தள்ளினான்.முனிவருக்கு திருப்தி இல்லை ."அடேய் முட்டாள், இன்னும் வேகமா போடா" முனிவர் கத்தினார்.படகோட்டியால் அதற்கு மேல் படகை தள்ள முடியவில்லை.முனிவர் அவனிடம் "படிக்காத உன்னால் என் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை. உனக்கு ராமாயணம் தெரியுமாடா! குகன் எவ்வளவு வேகமா படகோட்டினான் தெரியுமா?""தெரியாது சாமி, என்னாலே முடிஞ்ச வரைக்கும் வேகமா தான் போறேன்""ஒழிஞ்சு போ,மகாபாரதமாவது தெரியுமாடா. அதிலே அர்ஜுனனின் அம்பு வேகமாக பாயுமே, அது மாதிரி சீறி