அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். ’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள இப்படத்தில் மம்தா மோகன்தாஸ் அருள்நிதிக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் நடித்துள்ள ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை படப்பிடிப்புக்கு இடையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘மை டியர் சிஸ்டர்’ படத்தினை தயாரித்துள்ளனர். இதில் அருள்நிதிக்கு நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றிவேல், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக வெங்கட் ராஜன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். முழுக்க காமெடி எமோஷன் பாணியில் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தினை இயக்குநர் அட்லி தயாரித்து வருகிறார்.
’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் இணையும் படம் இதுவாகும். இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பூரி ஜெகந்நாத் படத்தினை முடித்துவிட்டு,அ தற்போது பாலாஜி தரணீதரன் படத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.
அட்லி தயாரித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ் இருவருடன் வேறு யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தினை இயக்குநர் அட்லி தயாரித்து வருகிறார்.
’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் இணையும் படம் இதுவாகும். இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பூரி ஜெகந்நாத் படத்தினை முடித்துவிட்டு,அ தற்போது பாலாஜி தரணீதரன் படத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.
அட்லி தயாரித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ் இருவருடன் வேறு யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இதனை ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்து வருகிறார்.
60களில் மெட்ராஸ் மகாணத்தில் நடைபெற்ற மொழிப்போர் போராட்டம் குறித்த கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை ஜி.வி.பிரகாஷ்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “பராசக்தி படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடலை பாடியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் 100 இன்னும் ஸ்பெஷலாகிவிட்டது” என தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஹால்டன் பிராந்திய காவல் துறை (Halton Regional Police Service) அவசரமற்ற தொலைபேசி அழைப்புகளை நிர்வகிக்க தானியங்கி செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
911 அவசர அழைப்புகள் தொடர்ந்தும் மனித முகவர்கள் (live agents) மூலம் மட்டுமே பராமரிக்கப்படும் எனவும், ஆனால் அவசரமற்ற அழைப்புகள் இனி “SARA (Smart Answering Routing Assistant)” எனப்படும் நுண்ணறிவு குரல் உதவியாளர் மூலம் நிர்வகிக்கப்படும் எனவும் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அழைப்பாளர்களிடம் சில குறுகிய கேள்விகள் கேட்டு, அவர்களின் கேள்வி அமைப்பால் தீர்க்கக்கூடியதா அல்லது நேரடி அதிகாரிக்கு மாற்ற வேண்டியதா என்பதை SARA தீர்மானிக்கும். இந்த உரையாடல் நேரடியாக பதிவு செய்யப்பட்டு உரை வடிவில் மாற்றப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசரநிலை ஏற்படும் சூழ்நிலை, அழைப்பாளர் ஆங்கிலம் பேச முடியாதது, மொழிபெயர்ப்பு தேவைப்படுவது, அமைப்பு கேள்வியை புரிந்துகொள்ளாதது, அல்லது சந்தேகத்திற்கிடமான நடத்தை கண்டறியப்பட்டால் — உடனடியாக மனித முகவருக்கு (live agent) மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SARA அமைப்பின் செயல்திறனை நாங்கள் நம்புகிறோம். தற்போது ஆண்டுக்கு சுமார் 1,60,000 அவசரமற்ற அழைப்புகள் கிடைக்கின்றன. இந்த புதிய தொழில்நுட்பம் அவற்றை வேகமாக கையாள உதவும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் டொரோண்டோவில் ஒரு பெண்ணுக்கு மசாஜ் செய்த பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பதிவு செய்யப்படாத மசாஜ் நிபுணர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் டொரோண்டோ மற்றும் மார்கம் பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
முதல் சம்பவம் ஆகஸ்ட் 12 அன்று ரோஸ்மவுண்ட் அவென்யூ மற்றும் வியா இட்டாலியா பகுதிகளுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் சந்தேக நபரின் வீட்டிற்கு மசாஜ் பெறச் சென்றிருந்தார். மசாஜ் முடிந்த பின், சந்தேக நபர் அவரை பாலியல் ரீதியாகத் தொட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன் சில வாரங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 1 அன்று, பாதிக்கப்பட்ட பெண் மார்கம் நகரின் வுட்பைன் அவென்யூ மற்றும் ஹைவே 407 அருகிலுள்ள நீச்சல் கழகத்தில் அந்த நபரை மீண்டும் சந்தித்தார்.
அப்போது சந்தேக நபர் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து பாலியல் ரீதியாகத் தொட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் செப்டம்பர் 6 அன்று பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர், “சாம்” என்ற பெயரில் சந்தேக நபரை அறிந்திருந்ததாக தெரிவித்தார்.
விசாரணையின் போது, அந்த நபர் பதிவு செய்யப்பட்ட மசாஜ் நிபுணர் (RMT) அல்ல என்பதும் தெரியவந்தது.
ஒண்டாரியோ மாகாணத்தில் பதிவு செய்யப்படாத நபர்கள் “மசாஜ் தெரபிஸ்ட்” என்று தங்களை அழைப்பதற்கும், தொழில்முறை மசாஜ் சேவைகள் வழங்குவதற்கும் அனுமதி இல்லை.
டொரோண்டோவைக் சேர்ந்த 49 வயதான குவோக் வின் ட்ரான் (Quoc Vinh Tran) என்பவருக்கு இரண்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவை நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் என்பதையும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதே நபரால் வேறும் எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் து குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு குறித்த புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில், செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் அருகே மெதுவாக ஊர்ந்து சென்ற கார், திடீரென வெடித்து சிதறிய காட்சிகள் பதிவாகியுள்ளன.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் (10ஆம் தேதி) மாலை கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்த நிலையில், புதிய சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், செங்கோட்டை தெளிவாகத் தெரியும் நிலையில், கார் வெடித்து சிதறியது சிவப்பு பலூன் போன்று பதிவாகி உள்ளது.
திங்கட்கிழமை மாலை சரியாக 6.50 மணிக்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் கூடுதல் டிஜிபி விஜய் சாக்கரே தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி கார் குண்டு வெடிப்பில் இறந்த மகனை, கையில் பச்சை குத்தி இருந்ததை வைத்து, தந்தை அடையாளம் கண்டிருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாந்தினி சவுக் அருகே பாகிரத் என்ற இடத்தில் மருந்தகம் வைத்திருந்த 34 வயதான அமர் கட்டாரியா திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு கடையைப் பூட்டி விட்டு வீட்டிற்கு கிளம்புவதாக தனது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். ஆனால், அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவரது தொலைபேசி எண்ணை குடும்பத்தினர் தொடர்பு கொண்ட போது, ஒரு பெண் எடுத்து பேசியதாகவும், குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை அவர் குறிப்பிட்டதாகவும் அமர் கட்டாரியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு, நிகழ்விடத்திற்கு சென்ற தந்தை, அமர் கட்டாரியாவின் கையில் பச்சை குத்தி இருந்ததை வைத்து உடலை அடையாளம் கண்டுள்ளார். தனது முதல் அன்பு அம்மாவிற்கு என்றும், அப்பா தான் தனது பலம் என்றும் கைகளில் பச்சை குத்தி இருந்த ஒரே மகனை இழந்து பெற்றோர் தவிக்கின்றனர்.
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை 12.11.2025
இன்று அதிகாலை 04.46 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி .
இன்று அதிகாலை 01.03 வரை பூசம் . பின்னர் ஆயில்யம்.
இன்று பிற்பகல் 02.24 வரை சுப்பிரம். பின்னர் பிராம்மியம்.
இன்று அதிகாலை 04.46 வரை பவம். பின்னர் மாலை 04.42 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் முனீஷ்காந்த், கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. விஜயலட்சுமி அவர் மனைவியாக நடித்துள்ளார். கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நவம்பர் 1-ம் தேதி வெளியாகும் இப்படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “குடும்பத்தில் வேறுபட்ட மனநிலையில் இருக்கும் கணவன்- மனைவி பற்றிய படம் இது.முனீஷ்காந்த் - விஜயலட்சுமி கணவன் மனைவியாக நடித்துள்ளனர்.
முனீஷ்காந்த்துக்கு கிராமத்தில் இடம் வாங்கி வீடு கட்டி நிம்மதியாக வாழ ஆசை. விஜயலட்சுமி நகரத்திலேயே வசதியாக வாழ நினைக்கிறார். இதனாலேயே இருவருக்கும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இவர்கள் வாழ்வில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கிறேன். முதலில் குடும்ப கதையாகச் செல்லும் படம் பின்னர் வேறு டிராக்குக்கு மாறும். முனீஷ்காந்திடம் இப்படத்தில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது தயங்கினார். இந்த கதாபாத்திரம், குணச்சித்திரம், காமெடி, சென்டிமென்ட் என எல்லா பரிமாணங்களும் கொண்டது. இதற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்று விளக்கியதும் சம்மதித்தார். பார்வையாளர்களுக்கும் இப்படம் நெருக்கமாக இருக்கும்” என்றார்.
கனடாவின் வன்கூவர் பகுதியில் டாக்ஸி சாரதி ஒருவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபருக்கு நீதிமன்றம் வீட்டு காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது டாக்ஸியை பயன்படுத்தி குறித்த நபர் போதை பொருட்களை விநியோகம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
எம்.டி.ரபிக்குள் இஸ்லாம் என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போதை பொருளை வைத்திருந்தமை அவற்றை விநியோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இந்த நபர் மீது சுமத்தப்பட்டு இருந்தது. 56 வயதான குறித்த நபருக்கு 20 மாத கால வீட்டு காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மிக நுட்பமான முறையில் போதைப்பொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்கூவர் பகுதியில் போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இந்த விசாரணையின் போது போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் தண்டிக்கப்பட்டுள்ளார். இந்த கடத்தல்கள் விநியோகங்களை வேறு நபர்கள் மேற்கொண்டிருந்தாலும் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்த காரணத்தினால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் நிலை இலக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் புக்கர் விருது கனடாவை பிறப்பிடமாகக் கொண்ட டேவிட் ஸ்லே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது அண்மைய பிளெஸ் என்ற நாவலுக்கு இவ்வாறு புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஹங்கேரிய பிரஜை ஒருவர் ஈராக்கில் பணியாற்றி அதன் பின்னர் இங்கிலாந்தில் வாழும் போது அவர் எதிர்நோக்கும் சமூக பொருளாதார பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. கதைக்கரு மொழி பயன்பாடு போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த நாவலுக்கு விருது வழங்கப்பட்டதாக புக்கர் விருது வழங்கும் குழு தெரிவித்துள்ளது. புக்கர் விருதுக்காக சுமார் 153 நாவல்கள் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
டேவிட் கனடாவின் மொன்றியல் பகுதியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடிய தாய்க்கும் ஹங்கேரிய தந்தைக்கும் பிறந்தவரே இந்த டேவிட் ஸ்லே என்பதும் குறிப்பிடத்தக்கது. டேவிட் குடும்பத்தினர் பின்னர் இங்கிலாந்தில் குடியேறியதுடன் பின்னர், ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரியில் வாழ்ந்தார்.
இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டிலும் டேவிட்டின் ஆல் தட் மேன் இஸ் என்ற நாவல் புக்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அவருக்கு அதில் முதல் பரிசு கிடைக்கவில்லை. 2019 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக கனடியர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.








