- · 1 friends
-
2 followers
நல்ல திறமை
நல்ல திறமை இருக்கு, ஆனா சரியான இடம் கிடைக்கல
🌹மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.
🌹அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.
🌹இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.
🌹அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.
🌹ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....
🌹குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்
முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்..
🌹கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலீனை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்.
அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘இருளன்’ படத்தை இயக்கி வருகிறார் முத்தையா. இதில் வித்தியாசமான 2 தோற்றங்களில் நடிக்கிறார் அருண் விஜய். மிர்ணா நாயகியாக நடிக்கும் இதில் சமுத்திரக்கனி, ஜான் கொக்கென் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, மதுரை பகுதிகளில் நடைபெற்று வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது ஆக் ஷன் காட்சியில் பங்கேற்றபோது நடிகர் அருண் விஜய் காயமடைந்தார். அவருடைய தொடை பகுதியில் தசை கிழிந்ததை அடுத்து அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். இதனால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஓசூரில் 1990-களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள திரைப்படம், ‘கன்னடத்து பைங்கிளி’.
இதில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா, சிங்கம் புலி, புகழ், ஆதவன், ஜீவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை சிங்கம் புலி, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்களை இயக்கிய சாய் ரமணி இயக்கியுள்ளார். இதில் கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். எம்.பி.எம். என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்துமதி கோபி தயாரித்துள்ளார். எஸ்.ஆர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் பற்றி பேசிய இயக்குநர் சாய்ரமணி, ‘‘பாக்யராஜின் திடீர் மறைவு எங்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. படப்பிடிப்பின் கடைசி நாளன்று பாக்யராஜ் மற்றும் டி.ராஜேந்தரை வைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அன்றைய தினம் பாக்யராஜுக்கான அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. 80 மற்றும் 90-களில் பிரபலமாக இருந்த இருவரும் இணைந்து பணியாற்றிய முதல் படம் இது.
‘கன்னடத்து பைங்கிளி’ படத்தில் தனது பகுதிகள் அனைத்தையும் பாக்யராஜ் சிறப்பாக முடித்துக் கொடுத்தார். சில க்ளோஸ்-அப் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டி இருந்தது. அதை ஏ.ஐ.மூலம் உருவாக்க உள்ளோம். சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமாவும் இணைந்து நடித்த படமும் இதுதான். கணவன்-மனைவியாகவே நடித்துள்ளனர்” என்றார்.
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் காஜல் அகர்வால். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்த அவர் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்திவரும் காஜல் கடைசியாக; இந்தியன் 2, சிக்கந்தர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவரது பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மும்பையை சேர்ந்த காஜல் அகர்வால் தமிழில் நடித்த முதல் இரண்டு படங்களான பழனி, பொம்மலாட்டம் ஆகிய படங்கள் சரியாக போகவில்லை. அதுவும் பொம்மலாட்டம் படத்தின் இயக்குநர் பாரதிராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலிரண்டு படங்கள் சரியாக போகாவிட்டாலும் அவருக்கு வாய்ப்புகள் வர தொடங்கின. தொடர்ந்து, தெலுங்கில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்ததும் ராஜமௌலி இயக்கத்தில் மஹதீரா படத்தில் நடித்தார்.
ராம்சரண் ஹீரோவாக நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் அந்தப் படம் மாவீரன் என்ற பெயரில் வெளியாகி ஹிட்டாக காஜலை முழுமையாக உபயோகப்படுத்த ஆரம்பித்தது கோலிவுட்.கோலிவுட் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகமான டோலிவுட்டும் காஜலுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது.
தமிழில் சின்ன சின்ன ஹீரோக்களுடன் நடித்துவந்த அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் ஹீரோயினாக கமிட்டானார். அதில் அவரது நடிப்பும் அழகும் ரசிகர்களை கவர்ந்துவிட சூர்யா, அஜித்,கார்த்தி உள்ளிட்டோருடன் நடிக்க ஆரம்பித்தார். இவற்றில் அஜித்துடன் நடித்த விவேகம் படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி க்ளைமேக்ஸ் காட்சியில் அவரது நடிப்பை வைத்து சிலர் ட்ரோலும் செய்தனர்.
இந்தச் சூழலில் அவர் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜல் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளார். அவருடன் நேரம் செலவழித்துவந்த காஜல் அக்ரவால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து கடைசியாக இந்தியன் 2, சிக்கந்தர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக ராமாயணா படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் அந்தப் பேட்டியில், "சினிமா துறையில் பெண்களை பலர் நடத்தும் விதத்தில் எனக்கு அதிருப்தி இருக்கிறது. நடிகர்களை காட்டிலும் நடிகைகள்தான் அதிக சவாலை எதிர்கொள்கிறார்கள். அதாவது, நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டாலே அவர்களை எல்லோரும் ஒதுக்க தொடங்கிவிடுகிறார்கள்.நடிகைகளின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தாலும் அதுதான் நடக்கிறது. ஆனால் திறமையை எப்போதும் அணை போட்டு தடுக்க முடியாது. திறமை உள்ளவர்கள் எந்த வயதில் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்பதை இங்கே பலரால் புரிந்துகொள்ளப்படவே இல்லை" என்றார்.
கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அந்நாட்டின் பல்வேறு வகையான பொருட்கள் மீதான புதிய வரிகளை விதிப்பதை மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
கனடாவும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன (ஆவணங்கள் இறுதி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளன.
இதன் அடிப்படையில், நாளை (புதன்) காலை முதல் அமுலுக்கு வரவிருந்த கனடா மீதான 50% வரிகளை நிறுத்தி வைத்துள்ளேன் என்று டிரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.
சுமார் 20 பில்லியன் டொலர் (28 பில்லியன் கனேடிய டொலர்) மதிப்பிலான கனடிய இறக்குமதிப் பொருட்கள் மீது 50% வரி விதிப்பு நடைமுறைக்கு வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரமே இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.
வாகனங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் மற்றும் பல கனேடிய மாகாணங்களில் அமெரிக்க மதுபான விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே முட்டுக்கட்டை நீடிக்கிறது.
ஆகஸ்ட் 19-ஆம் திகதியை காலக்கெடுவாகக் குறிப்பிட்டு புதிய வரி விதிப்பு குறித்து டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, ஜூலை மாதம் முதல் வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்கள் தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான எடைக் குறைப்பு மருந்து கருப்பு சந்தையில் விற்கப்படுவது குறித்து முன்னணி மருந்து உற்பத்தியாளரான 'லில்லி கனடா' கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்நிறுவனம் சோதனைக் கட்டத்தில் வைத்துள்ள 'ரெடாட்ரூடைட்' என்ற மருந்து, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெடாட்ரூடைட் மருந்து, ஹெல்த் கனடா அமைப்பாலோ அல்லது உலகளவில் வேறு எந்த ஒழுங்குமுறை ஆணையத்தாலோ மனித பயன்பாட்டிற்காக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.
எனவே, இதை கனடாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ சட்டப்பூர்வமாக விற்க முடியாது. எனினும், சர்வதேச அளவில் இதற்கான கருப்புச் சந்தை இயங்கி வருகிறது என லில்லி கனடா தெரிவித்துள்ளது.
அமெரிக்க மருந்து நிறுவனமான எலி லில்லி தயாரிக்கும் இந்த மருந்து, உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போது 3-ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ள இம்மருந்து, உடல் எடையைக் குறைப்பதில் ஒரு "புரட்சிகரமான முன்னேற்றத்தை" வெளிப்படுத்தியுள்ளதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
80 வாரங்கள் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில், டைப் 2 நீரிழிவு மற்றும் அதிக உடல் எடை கொண்ட நபர்கள் சராசரியாக 22.5 கிலோ (49.6 பவுண்ட்) வரை எடையைக் குறைத்துள்ளனர்.
மற்றொரு ஆய்வில், தீவிர உடல் பருமன் கொண்ட பெரியவர்கள் சராசரியாக 25.3 கிலோ (55.8 பவுண்ட்) எடையை குறைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்... கஞ்சா கருப்பு.
சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து சினிமா ஆசையால் ஈர்க்கப்பட்டு சென்னை வந்தவர்....
பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் தனக்கென
தனி இடத்தை பிடித்தவர் ....
இன்று அவர் ''வேல்முருகன் போர்வெல்ஸ்" என்று ஒரு சொந்தப்படம் எடுத்து வெளியிட்டு விட்டார்..... சொந்தமாய் ஒரு போர்வெல் லாரியை வாங்கி படத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார் ....
பின் தான் வாங்கிய அந்த போர்வெல் லாரியை பயன்படுத்தி தென் மாவட்ட
பகுதியில் மக்களுக்காக எந்தவித பைசாவும் வாங்காமல் இதுவரை 55 போர்வெல் குழாய் அமைத்து தந்து இருக்கிறார்...
இன்னமும் தந்து கொண்டு இருக்கிறார்....
ஒரு போர்வெல் போட குறைந்தது 50,000 முதல் 70,000 வரை ஆகுமாம். அந்த பகுதியில் எந்த மக்கள் (ஏழை ) வந்து கேட்டாலும் அவர்களுக்கு தம் சொந்த செலவில் போர்வெல்
போட்டு கொடுத்து கொண்டு இருக்கிறார்...
அது போக தன் பிறந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் திறந்து இலவச
கல்வி தந்து கொண்டு இருக்கிறார் அந்த படிக்காத மேதை ...
அவரின் பள்ளியை கவனித்து வருவது அவர் மனைவி சங்கீதா. இவர் ஒரு physiotherapist...
உண்மையில் இந்த செய்தி கேள்விப்பட்டு நான் மிக மகிழ்ச்சி அடைந்தேன்....
இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார் என்றால்.....
அவரின் மனிதம் எவ்வளவு உயர்ந்தது...
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.
ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவர். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மிதுனம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை விற்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரம் சிறக்கும்.
கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள்.
சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பணியாட்கள் ஆதரிப்பர்.
கன்னி: உடன் பிறந்தவர்களால் ஆதாயமுண்டு.முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல்பேச்சு கேட்பார்கள். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். பேச்சில் தெளிவு பிறக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
துலாம்: முன்கோபத்தை தவிர்க்கவும். மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக டென்ஷன் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு கொடுத்து போகவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகளை போராடி வசூலிப்பீர்.
விருச்சிகம்: எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர் உதவி கேட்டு வருவார். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் கருத்துகளை நிராகரிக்க வேண்டாம்.
தனுசு: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிம்மதி தரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரி பாராட்டுவார்.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவர். சொந்த ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.
மீனம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வங்கிக் கடனை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். தெளிவாக பேசி பணிகளை முடித்துக் காட்டுவீர்கள்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 2 ஆம் தேதி புதன்கிழமை 19.8.2026.
இன்று இரவு 10.15 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று காலை 10.24 வரை சுவாதி. பின்னர் விசாகம்.
இன்று காலை 07.29 வரை சுப்பிரம். பின்னர் பிராமியம்.
இன்று காலை 09.40 வரை கரசை. பின்னர் இரவு 10.15 வரை வணிசை. பிறகு பத்திரை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது.
இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும்.
நாரத்தங்கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன், நியசின், வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல்,லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது.
நாரத்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.
கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.
உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.
பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.
டார்லிங் உனக்கு ஒரு ஹேப்பி நியூஸ் ! ஒரு சேட் நியூஸ்!
எது முதலில் சொல்ல!
என்னங்க! ஹேப்பி நியூஸ் ஃபர்ஸ்ட் சொல்லுங்க!
இன்னைக்கு ஆபீஸ்ல மேனேஜர் திட்டிட்டார் ! ஒரே டென்ஷன் வெளியே பெட்டிக் கடை போய் தம் அடிக்கலாம் என்று போனேன்!
அப்ப பார்த்து பெட்டி கடையில் ஆள் இல்லை! அப்புறம் வெயிட் பண்ணி தம் அடித்து கொண்டு இருந்தேனா! திடீர் என்று ஒரு பெரிய சத்தம் என்னோட ஆபீஸ் இடிந்து விழுந்து எல்லாரும் க்ளோஸ்!
நல்ல வேளை நான் தப்பித்து விட்டேன்!
அப்பா கடவுள் உங்களை காப்பாற்றி விட்டார்! ரொம்ப ஹேப்பியான நியூஸ் ! சரி சேட் நியூஸ்! என்ன என்று சொல்லுங்க!
ஆபீஸ்ல விபத்தில் இறந்தவர்களுக்கு head office ல இருந்து தலைக்கு ஐம்பது இலட்சம் இழப்பீட்டு தொகை தருவதாக அறிவித்து இருக்காங்க!
மனைவி - பாழாய் போன சிகிரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டு தொலைங்க என்று சொன்னால் கேட்கிறீங்க! எனக்குன்னு வந்து சேர்ந்தீங்க பாருங்க!
சேரன் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. தமது இருக்கை எண்ணைத் தேடிப் பிடித்து அமர்ந்தார் குமாரசாமி. தோள் பையை இருக்கையில் வைத்து, சின்ன மாம்பழக் கூடையை அலுங்காமல் சீட்டுக்கு அடியில் தள்ளிவிட்டு அமர்ந்தார்.
“அடடே... வாத்தியாரய்யா!’ எதிர் சீட்டில் தென்பட்ட முத்துராஜா சிநேகமாகச் சிரித்தார்.
“சௌக்கியமா அண்ணா?’ முத்துரஜாவின் மனைவி தமயந்தி வெகுவாகவே மகிழ்ந்தாள்.
“நல்ல சௌக்கியம்மா... அடேயப்பா... எவ்வளவு நாளாச்சு உஙகளைப் பார்த்து!’
“உங்க சன் வித்யாகர் எப்படியிருக்கான் ஸார்?’
“நல்லா இருக்கான். அவனைப் பார்க்கத்தான் சென்னைக்கு போயிட்டிருக்கேன்!’
“கல்யாணமாயிடுச்சா அண்ணா?’
“ஆமாம்மா! இப்பத்தான்.. ஒரு ஆறு மாசம் ஆச்சு. கல்யாணம் முடிஞ்ச கையோட அமெரிக்கா போயிட்டான். போன வாரம்தான் சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கான்.!’
“ஹூம்! அண்ணி செத்தப்போ வித்யாகருக்கு பத்து வயசிருக்கும். “அம்மா எழுநதிரும்மா! எழுந்திரும்மா’ என்று அவன் கதறுன கதறல் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு அண்ணா!’
♥“ஆமா ஸார்! எத்தனை பொண்ணு வந்துச்சு. எதையும் ஏறிட்டுப் பார்க்கலையே நீங்க! ஒத்து ஆளா நின்னு ஆளாக்கி, பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்க வெச்சு... உங்க மனஉறுதி, தைரியம் யாருக்கும் வராது!’ அதற்குள் டி.டி.ஈ. செக்கிங்குக்கு வந்திடவே, பேச்சு வேறு திசைக்கு மாறியது.
“குட்நைட் ஸார்... பிறகு பார்ப்போம்!’ என்று சொல்லிவிட்டுப் படுத்துக் கொண்டார் குமாரசாமி.
♥தமயந்தி சொல்வது சரிதான். வித்யாகருக்கு பத்தாவது பிறந்தநாள் வந்த மறுநாள், தலைவலி, ஜுரம் என்று படுத்தவள்தான் சிவகாமி, விஷக் காய்ச்சல் அவளை ஒரேடியாக வாரிக் கொண்டு போய்விடும் என்று யார்தான் நினைத்தார்கள்? ஒருவாரம் கூடி அழுத உறவுகள், ஒவ்வொன்றாக விலகிக் கொண்ட இரவு, சிவகாமியின் புடைவையை விரித்துக் கொண்டுபடுத்த பிள்ளையைப் பார்த்து மனசுக்குள் துக்கம் பொங்கியது குமாரசாமிக்கு.
♥ஒரு வாரம் ஹோட்டலில் சாப்பிட்டார்கள். வித்யாகருக்கு பேதி கண்டு கொஞ்சம் சீரியஸாகிப் போனதும், ஆனது ஆச்சு என்று கரண்டியைக் கையில் எடுத்துவிட்டார் குமாரசாமி. சமையற்கட்டுக்கே போகாதவராச்சே! பாத்திரம் பண்டங்களை இனம் காணவே ஒரு வாரம் ஆனது. வித்யாகரைச் சாப்பிட வைக்க அதைவிடச் சிரமப்பட்டார்.
“உம் தயிர்சாதம் வை! வேற என்ன வைக்கத் தெரியும் உனக்கு?’ எரிச்சலுடன் கத்துவான் வித்யாகர். “தாயில்லாப் பிள்ளைக்கு நாக்குக்கு ருசியாப் பண்ணிப் போட முடியாத பாவி ஆயிட்டேனே!’ என்று மனம் வெதும்பிப் போவார் குமாரசாமி.
♥“சமைத்துப் பார்’ புத்தகம் வாங்கி, தினுசு தினுசாக முயற்சி செய்வார். அக்கம் பக்கத்துப் பெண்கள், சக டீச்சர்களிடம் குறிப்புகள் கேட்டு வந்து பயந்து பயந்து சமைப்பார்.
பம்ப்பிங் ஸ்டவ்வின் “ப்ர்ர்’ என்ற சத்தமும் ஈர விறகின் புகையும் அவருக்கு ஒத்துக்கவே ஒத்துக்காது. தலைவலி வந்துவிடும். ஆனாலும், மகனுக்காக இரண்டு வேளையும், சுடச்சுட சமைத்துப் போடத் தவறமாட்டார். நெய் விட்டு தாளிப்பார், தேங்காய் அரைத்து விடுவார். இடிச்சுப் பொடிச்சுத் தூவுவார். ஆனாலும் ஆயிரம் நொட்டை சொல்வான் வித்யாகர்.
♥“நீ செய்யுற சப்பாத்தி வரட்டி மாதிரி இருக்கு. எனக்கு வயித்தை வலிக்குது!’ என்று முரண்டு பிடித்து மறுக்கும் அதே சப்பாத்தி - குருமாவை சக வாத்தியார்கள் “சூப்பரா இருக்கு ஸார்!’ என்று ரசித்து காலி செய்யும்போது குமாரசாமிக்கு மனசு வலிக்கும்.
ஒருமுறை அவர் ஸ்கூலுக்குக் கொடுத்து அனுப்பிய மாங்காய் சாதம் அப்படியே வைத்தது வைத்தபடி திரும்பி வரவே, கோபத்தில் இரண்டு அடி வைத்துவிட்டார் குமாரசாமி. அதற்காக அவரிடம் கோபித்துக் கொண்டு பாட்டி வீட்டுக்கு பெங்களூருக்கு ஓடி விட்டான். அவனைக் கெஞ்சி அழைத்துக் கொண்டு வந்தபோது, இனி சாப்பாட்டு விஷயமாக எதுவும் பேசக் கூடாது என்று முடிவெடுத்திருந்தார் குமாரசாமி.
♥நல்லவேளையாக, சென்னையில் காலேஜ் ஹாஸ்டல், அப்புறம் வேலை அப்புறம் வெளிநாடு என நாட்கள் போய்விட, எப்பவாவது சேலத்துக்கு வந்து அரை நாள், ஒரு நாள் எனத் தங்குவான். அவனுக்காகவே ஸ்பெஷலாக காளான் பிரியாணி, வடைக்கறி என்று எல்லாம் செய்து பிரியமாகப் பரிமாறுவார். ஏதோ பேருக்கு வேண்டாவெறுப்பாகக் கொறித்து விட்டு எழுந்து விடுவான் வித்யாகர். அந்த மகனைக் காணத்தான் ஆசையாகப் போய்க் கொண்டிருக்கிறார் குமாரசாமி.
♥வித்யாகரின் ஃப்ளாட் விசாலமாக இருந்தது.
“வாங்க மாமா!’ என்று முகம் மலர வரவேற்றாள் மருமகள் மானஸா.
“குளிச்சுட்டு வாங்கப்பா. சேர்ந்து டிபன் சாப்பிடலாம்!’ என்று அன்பொழுகு அழைத்தான் வித்யாகர்.
“பொங்கல் - சட்னி செஞ்சுருக்கேன் மாமா! பிடிக்குமில்லையா?’ என்றபடி பரிமாறினாள் மானஸா.
குழைந்து பேஸ்ட்டாகி, ஆறி அவலாகிப் போயிருந்தது வெண்பொங்கல். அதன் மீது குருகிப் போன முந்திரித் தூவல்! சட்னி திப்பித் திப்பியாக ஓடியது. “சூடா சாப்பிடுங்க மாமா!’ என்ற உபசாரம் வேறு. பக்கத்தில் உட்கார்ந்திருந்த மகனை ஓரக்கண்ணால் கவனித்தார். அவன் மௌனமாகப் பொங்கலை எடுத்து, ஸ்பூனால் ஸ்டைலாகச் சாப்பிட்டு முடித்திருந்தான்.
♥சாப்பாட்டு வேளை வந்தது. அதுவும் கத்துக் குட்டி சமையல்தான். வேகாத அரிசி, ரசமா? சாம்பாரா? என தெரியாதபடிக்கு கலங்கலாய் ஒரு சமாசாரம். எண்ணெய் வழிந்த அப்பளம்.... நல்ல வேளையாக கடையில் வாங்கப்பட்ட கப் தயிர் இருந்ததால் பிழைச்சுப் போனார் குமாரசாமி.
“கத்திரிக்காய் சாம்பாரா? கொஞ்சம் காய் போடு!’ என்று வித்யாகர் கேட்டு சாப்பிட்டதைப் பார்த்து, உள்ளுக்குள் திகைத்துப் போனார்.
♥“எம் புள்ள தானாடா நீ?’
எப்படியோ மூன்று நாட்கள் பல்லைக் கடித்துக் கொண்டு தள்ளிவிட்டு ஊர் வந்து சேர்ந்தார் குமாரசாமி. வரும் வழியெல்லாம் வித்யாகர் பற்றிய கவலையே நீடித்தது. “பாவம் எம்புள்ள! எப்படியெல்லாம் கமெண்ட் அடிப்பான்? என்ன செஞ்சாலும் குறைசொல்வான்? இப்ப, இப்படி எதுவும் சொல்லாம சாப்பிட்டு வெக்கிறானே! நாக்கு மரத்துப் போச்சுடா உனக்கு?’ மனசுக்குள் ஏதேதோ கேள்விகள் அலை மோத சங்கடமாய் உணர்ந்தார்.
♥உணர்ச்சிகளும், உறவுகளும் கூடிப் பிறந்த இரட்டையர்கள் போல! குமாரசாமி என்ன நினைப்பில் தவித்துக் கொண்டிருந்தாரோ, அதே நினைப்பு வித்யாகரையும் தகித்துக் கொண்டிருந்தது. அலுவலக விஷயமாக கோவை வந்தவன். அடுத்த பஸ் பிடித்து சேலத்துக்கு கிளம்பினான்.
“அப்பா.. கோயம்புத்தூரில் ஒரு க்ளையண்ட் மீட்டில் இதோ முடிஞ்சுடுச்சு.. உங்களைப் பார்க்க வர÷ம்பா!’ மொபைலில் சுருக்கமாகச் சொல்லி முடித்துவிட்டு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தான்.
தோளில் டவலும், கையில் கரண்டியுமாக சமையல் அறையில் அப்பா வேலை செய்யும் காட்சி மீண்டும் மீண்டும் தோன்றி மறைந்தது.
♥“பாவம் அப்பா! அம்மா செத்தப்போ, நாற்பது வயசுதான். எனக்காக இரண்டாவது கல்யாணமே பண்ணிக்காம, தன் ஆசைகளை துறந்தாரே! ரியல்லி கிரேட்! இப்ப கல்யாணமான இந்த வயசுலதான் அது எவ்ளோ பெரிய தியாகம்னே புரியுது. அது மட்டுமா? நான் திருப்தியா சாப்பிடணும்னு அவர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுச் சமைச்சார். எவ்வளவு தவிச்சுத் தவிச்சுப் பரிமாறினார்? ஆனா நான்...? எப்படியெல்லாம் அவரைக் கடுப்படிச்சுருக்கேன்?
அம்மா இல்லாத வெறுமை, ஸ்கூல்ல கணக்கு வாத்தியார் மேல இருந்த ஆத்திரம், பசங்ககிட்ட ஃபுட்பால்ல தோற்ற எரிச்சல், விஜய் படத்துக்கு டிக்கெட் கிடைக்காத வெறுப்பு, சைக்கிளைத் தொலைச்ச குற்ற உணர்வு... இது எல்லாத்தையும் சாப்பாட்டு மேல காட்டறதா நினைச்சு, உங்க மேலதானப்பா காட்டியிருக்கேன்? ஸாரிப்பா... ஸாரி! இப்பத்தான் என்னோட தப்பு புரியுது.. எவ்ளோ பெரிய முட்டாள் நான்! உங்களை எவ்ளோ நோகடிச்சுட்டேன்.
♥எனக்காக மானஸாவோட மகா மட்டமான சமையலைக் கூட பொறுத்துக்கிட்டீங்களே! யூ ஆர் ரியலி கிரேட்! என்னை மன்னிச்சுடுங்க அப்பா. நீங்க உண்மையிலேயே நல்ல குக். அன்பும் பாசமுமா சமைக்கிற உங்க கைமணம் வரவே வராதுப்பா!’ இப்படியெல்லாம் சொல்லி அவரது தோளில் சாய்ந்து அழவேண்டும். இந்தமுறை வெட்கமே படக்கூடாது என்று நினைத்த படி வீட்டுக்குள் நுழைந்தான் வித்யாகர்.
“வாப்பா... வாப்பா.... ரொம்ப சந்தோஷம்பா’ கைகள் நடுங்க அவன் கன்னத்தை வருடினார் குமாரசாமி.
“ராஜா... சாப்புட்டியாப்பா?’
“இல்லப்பா உங்க கையால சாப்பிடலாம்னு...’
“அடி சக்கை! எல்லாம் ரெடியா இருக்கு!’ பரிமாற எழுந்தவரைத் தடுத்து உட்கார வைத்தான். தட்டெடுத்துத் தானே பரிமாறி பிறகு சாப்பிட உட்கார்ந்தான்.
மல்லிகைப்பூ போல சாதம், கமகமத்த முள்ளங்கி சாம்பார், சேனைக்கிழங்கு ரோஸ்ட்.
♥தளரப் பிசைந்து உருட்டி, வாய் நிறைய அடைத்துக் கொண்ட வித்யாகர், தலையை ஆட்டிக் கொண்டே சொன்னான்.
“ழொம்ப நழ்ழா இழுக்குப்பா’
அவன் சொல்ல வந்த அத்தனை வார்த்தைகளும், நெஞ்சுருகி கேட்க நினைத்த மன்னிப்பும், அந்த ஒற்றை வாசகத்தில், அப்பட்டமாய் வெளிப்பட... நெஞ்சுருகி நின்றது கனிந்த தந்தையுள்ளம்!
முதன்முதலாக விமானம் மூலம் வானத்தில் பறந்தவர்கள் யாரென்று கேட்டால் பெரும்பாலோர் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் எனப் பதில் சொல்லுவார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல.
உலகில் முதன்முதலாக விமானம் ஒன்றைத் தயாரித்து அதன் மூலம் வானத்தில் பறந்துகாட்டியவர் ஷிவாகர் தல்பாதே என்கிற இந்தியர்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
1895-ஆம் வருடம் மும்பையைச் சேர்ந்த ஷிவாகர் தல்பாதே காற்றைவிடவும் எடைகூடியதொரு விமானத்தைத் தயாரித்து அதற்கு "மருட்சகா (Marutsakhā) என்று பெயரும் வைத்தார். பின்னர் அந்த விமானம் மும்பையின் செளபாத்தி கடற்கரையில் வெற்றிகரமாகப் பறக்கவிடப்பட்டது.
ஆனால் ஒரு சிலைவணங்கி ஹி!ந்து ஒருவன் வெற்றிகரமாக விமானம் ஒன்றினை உருவாக்கி அதனை விண்ணில் பறக்க வைத்ததனை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் விரும்பவில்லை. ஷிவாகருக்கு எல்லா விதங்களிலும் அவர்கள் தொல்லைகள் கொடுத்தார்கள். விமானம் தயாரிப்பதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதனைத் தடுக்க முனைந்தார்கள். இருந்தாலும் ஷிவாகர் தல்பதே மிகுந்த சிரமத்துடன் அந்தப் பணத்தைத் திரட்டினார்.
தடைகளையெல்லாம் வென்று அவரது விமானம் செளபாத்தி கடற்கரையில் வெற்றிகரமாகப் பறக்க வைத்தார். பழமையான "வ்யாமானிக சாஸ்த்ரா"வின் அடிப்படையில் கட்டப்பட்ட அந்த விமானத்தில் பாதரசம் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. அதனைக் காரணம் காட்டி, ஷிவாகர் தல்பதே பாதரசத்திலிருந்து வெடிகுண்டுகள் தயாரித்ததாகப் பொய்யான குற்றம் சுமத்தி அவரைச் சிறையில் அடைத்தார்கள் பிரிட்டிஷ்காரர்கள். ஷிவாகர் பல ஆண்டுகள் சிறையில் கழித்தார். அவர் சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் தனது விமானத்தைப் பறக்க வைப்பதற்கு முன்னால் ரைட் சகோதரர்கள் அவர்களின் விமானத்தை விண்ணில் பறக்கவைத்திருந்தார்கள்.
தன்னுடைய கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்காத மனவருத்தத்துடன் தல்பாதே 1916-ஆம் வருடம் மரணமடைந்தார்.
அன்றைய காலகட்டத்தில் பாதரசத்தை விமான எரிபொருளாக உபயோகிக்க முடியாது என பல விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்தது. இருப்பினும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா இன்றைக்கு அதன் விண்கலங்களைப் பறக்கவைக்க பாதரசத்தை உபயோகித்து வருகிறது என்பதனை வெளியில் எவரும் அதிகம் பேசுவதில்லை. அந்த உண்மை வெளிவந்தால் ஷிவாகர் தல்பதேக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டிய நிலை வரலாம்.
🌹திரையில் கவர்ச்சியின் பிம்பம் என்று சொல்லப்பட்டவர் புவனேஸ்வரி
🌹புவனேஸ்வரியின் மறுபக்கம்! விபச்சார கேஸை உடைத்து.. இன்று பலருக்கு வாழ்வளிக்கிறார்!
🌹சிலர் இவரை பூனைக்கண் புவனேஸ்வரி என்றுகூட சொல்வார்கள்.. சினிமா, டிவியில் மிகப்பெரிய ரவுண்டு வந்தவர்.. இவர்மீது அன்று விபச்சார வழக்கு தொடுக்கப்பட்டது.. ஆனால், நான் விபச்சாரி இல்லை, விபச்சாரத்தில் ஈடுபடவில்லை என்று தைரியமாக சொல்லி, அந்த வழக்கை எதிர்கொண்டார்.
🌹கடைசியில 3 வருடம் கழித்து, புவனேஸ்வரி நிரபராதி என்று தீர்ப்பு வந்தது. இதுக்கு முன்னாடி விபச்சாரி என்று அவமானப்படுத்தினாங்களே, அதையெல்லாம் எப்படி அழிப்பது? இதுதான் சட்டம். இறுதியில் தான் நிரபராதி என்று சட்டத்திலிருந்து வெளியேவந்தார்.
🌹புவனேஸ்வரி விபச்சாரத்தில் கைதான செய்தியைவிட, விபச்சார வழக்கிலிருந்து விடுதலையான செய்தியை, பத்திரிகைகளில் சின்னதாக போட்டாங்க.. இதுதான் பத்திரிகை தர்மம்.
🌹புவனேஸ்வரி? நெல்லை சங்கரன்கோவிலில் பிறந்தவர்.. வறுமையில் இருந்தவர்.. சாப்பாட்டுக்கே வழியில்லாமல், சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு, டிவி சீரியல்களில் நடித்தவர்.. பிறகு சினிமாவிலும் உயர்ந்து, நல்ல ரேஞ்சுக்கு வந்தவர்.
🌹இன்னைக்கு இவருக்கு 3, 4 ஷூட்டிங் பங்களாக்கள் இருக்கு.. ஆனால், முற்றும் துறந்த சாமியாரினி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இல்லற வாழ்விலிருந்து விடுபட்டு, துறவி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்..
🌹புவனேஸ்வரி, இன்று வளசரவாகக்கம் சிவன் கோயிலில் தினமும் இலவச சாப்பாடு வழங்கி வருகிறார். கோயம்பேடு குருகலாம்பஸ்வரர் கோயிலிலும் அன்னதானம் வழங்கி வருகிறார். ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும், 10 ஆயிரம் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை தருகிறார்.
🌹அன்று சங்கரன்கோவிலில் சோத்துக்கே வழியில்லாத நிலைமை ஏற்பட்டது. இப்போது எனக்கு வசதி வரும்போது, என்னுடைய வருமானத்தில் ஒருபகுதியை சாப்பாடு போட நினைத்தேன்.. என்னுடைய சம்பளத்தை எனக்கு பின்னாடி யாரும் அனுபவிக்க போவதில்லை. எனக்கு வரும் சம்பளத்தை தொடர்ந்து மக்களுக்காகவே செலவிட போகிறேன் என்று சொல்கிறார் புவனேஸ்வரி.
🌹ஒருநாள்... கவிஞர் வாலி ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பஞ்சு அவர்களைப்
பார்த்து ‘என்னய்யா பஞ்சு... நீரே படம் தயாரிச்சு, நீரே பாட்டெல்லாம் எழுதிட்டா, எங்க பொழப்பு என்னாகறது?’ என்று கிண்டலாகக் கேட்டார் வாலி. ‘சரிண்ணே... நம்ம படத்துல தொடர்ந்து நீங்க எழுதுங்கண்ணே.
🌹இப்ப எடுக்கப் போற படத்துல ரெண்டு பாட்டு எழுதுங்க. அதுக்கு அஞ்சு பாட்டுக்கு உண்டான சம்பளம் என்னவோ தந்துடுறேன்’ என்றார் பஞ்சு அருணாசலம். ‘ஏன் முழுசா தரமாட்டியா?’ என்று கேட்க, ‘சரிங்கண்ணே... நீங்களே இந்தப் படத்துல எல்லாப் பாட்டும் எழுதுங்க’ என்றார். அப்படியே கொடுத்தார். வாலியும் எழுதினார். பாடல்கள் மொத்தமும் பட்டையைக் கிளப்பின.
🌹அந்தப் படம்... பஞ்சு அருணாசலம் தயாரித்த ‘வைதேகி காத்திருந்தாள்’. அப்படத்தில் ஒரு பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதினார்
🌹தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் கூட, ‘பஞ்சு அருணாசலம் எப்படி இருப்பார்’ என்பது கூட தெரியாது. அப்படியொரு மிஸ்டர் எளிமை. மிஸ்டர் அமைதி.
🌹ஒரு மனிதர், எல்லோருக்கும் பிடித்தவராக இருப்பது சாத்தியமில்லை. அதுவும் திரையுலகில் சாத்தியமே இல்லை. ஆனாலும் பஞ்சு அருணாசலம் எல்லோருக்கும் இனியர். இவர் பல திரைப்படங்களில் பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார் குறிப்பாக சொல்லும் படியாக "கலங்கரை விளக்கம்" திரைப்படத்தில் "பொன்னெழில் பூத்தது புது வானில்" என்ற இவர் எழுதிய பாடல் மிகவும் பிரபலமானது.இவர் பணியாற்றிய, கதையை சீர்படுத்திய படங்களை, தயாரித்த படங்களை, வரிசையாக பார்த்தாலே போதும். அது சினிமாவுக்கான வெற்றி ஃபார்முலா என உணர்ந்துவிடலாம்.
🌹பஞ்சு அருணாசலம், சத்தமே இல்லாமல் சாதனைகள் செய்த சகலகலாவல்லவன். அவர் தொட்ட துறைகளும் எட்டிய சிகரங்களும்... இன்னொரு நூற்றாண்டு சினிமாவுக்கான பெருவிருட்சம். பஞ்சு அருணாசலம் விதை நெல்! அவர் உருவாக்கிய படங்களை சினிமா இலக்கணம் என்றும் சொல்லலாம். பஞ்சு அருணாசலம் பாணி என்றும் சொல்லலாம்.
🌹பொன்னெழில் பூத்தது புதுவானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை சென்றது எங்கே சொல்.... சொல்...
பணத்தை உனக்காக வேலை செய்ய வைக்க கற்றுக்கொள். இல்லையென்றால், நீ வாழ்நாள் முழுவதும் பணத்திற்காக ஓடிக்கொண்டே இருப்பாய்.
உன் சம்பளம் உன்னை பணக்காரனாக்காது. அது உன் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும். உன்னை உண்மையில் பணக்காரனாக்குவது உன் சேமிப்பும் முதலீடும் மட்டுமே!
ஒவ்வொரு மாதமும் செலவு செய்த பிறகு மீதமுள்ளதை சேமிக்காதே. அது ஒருபோதும் வேலை செய்யாது. முதலில் சேமி. பிறகு செலவு செய். இதுதான் வெற்றிகரமானவர்களின் ரகசியம்.
உன் எதிர்காலம் இன்று நீ எடுக்கும் நிதி முடிவுகளில் தான் இருக்கிறது. இன்று நீ எடுக்கும் ஒவ்வொரு ரூபாய் முடிவும் நாளைய உன் வாழ்க்கையை தீர்மானிக்கும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்.
ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கை யாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
மிதுனம்: குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். சோம்பல் விலகும். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் காரியங்களை விரைந்து முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கடகம்: அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் செல்லும் பயணம் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் இனி ஓடி வந்து பேசுவர். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களை புரிந்து கொள்வர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். பங்குதாரர்கள் ஆதரிப்பார்கள்.
துலாம்: பிள்ளைகளின் பிடிவாதம் கூடும். வாகனம் செலவு வைக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்புடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் குறை சொல்லாதீர். வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பண வரவு உண்டு. அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
தனுசு: திட்டமிட்ட பணியை முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பால்ய நண்பர் களை சந்தித்து மகிழ்வீர். கருத்துமோதல் நீங்கி வியாபாரத்தில் புதிய பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் பணிச்சுமை இருக்கும்.
மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: காரியத் தடைகள் வரக்கூடும். மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 18.8.2026
இன்று இரவு 09.06 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று காலை 08.50 வரை சித்திரை. பின்னர் சுவாதி.
இன்று காலை 07.47 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.
இன்று காலை 08.46 வரை கௌலவம். பின்னர் இரவு 09.06 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
‘டாக்ஸிக் படத்தின் நெருக்கமான காட்சிகளைப் பார்க்கும்போது என் மனைவி அதை முழுமையாக ஏற்றுக்கொள்வார் என்று நான் நினைக்கவில்லை’ என நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் யஷ், நடிகையுடன் தான் நெருக்கமாக நடிக்குபோது தனது மனைவி ராதிகா பண்டிட் எப்படி எடுத்துக் கொள்வார் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “கணவர் அப்படி நடிப்பதை எந்த மனைவியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எல்லா வாழ்க்கைத் துணைக்கும் அந்த எண்ணம் இருக்கும்.
ஆனால் முடிவில், இது எல்லாம் உருவாக்கப்பட்ட காட்சிகள். இது ஒரு கலை. இதன்மூலம் நாங்கள் எதை அடைய விரும்புகிறோம் என்பதுதான் முக்கியமானது.
மக்கள் சிலவற்றை தங்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், சில விஷயங்களை தங்களது அறிவின் அடிப்படையிலும் செய்கிறார்கள்.
நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது அவை எனக்கும் அசவுகரியமாகவே இருக்கும். அந்தக் காட்சிகளில் நடிப்பது எனக்கும் எளிதல்ல. கதைக்கு அந்தக் காட்சிகள் தேவையாக இருக்கும்போது அப்படி நடிக்க வேண்டியது அவசியமாகிறது.
அப்படியான காட்சிகளில் என்னைப் பார்க்கும்போது, என் மனைவிக்கு நிச்சயமாக சங்கடமகத்தான் இருக்கும். அதற்கு அர்த்தம் அவர் அதைத் தவறாக எடுத்துக்கொள்வார் என்பது இல்லை. அவர் என்னை நம்புகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக அவரும் ஒரு நடிகை என்பதால் , இந்த வேலைகளை அவர் புரிந்துகொள்வார். அங்கே தன் வேலையைச் செய்வது ஒரு நடிகன், அவரது கணவன் இல்லை என்பது அவருக்கு புரியும்” என்று தெரிவித்தார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டக்ஸிக்’. இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியானதில் இருந்து யஷ் நடித்த சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்தப் படத்தில் யஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 26-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. கன்னடம் , ஆங்கில மொழிகளில் தயாராகும் இந்தப் படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.





























