Latest Cinema
- ·
- · sivam
சிம்புவுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, டிசம்பர் 8-ம் திகதி ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குகிறது.நவம்பர் மாதத்தில் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், வேல்ஸ் நிறுவனத்துக்கு சிம்புவின் தேதிகள் எப்போது என்பது தெரியாமல் படம் தொடங்க முடியாத சூழல் உருவானது. இதனால் சிம்பு – வேல்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.அதில் வேல்ஸ் நிறுவனத்துக்கு எப்போது தேதிகள் என்பதை சிம்பு தெரிவிக்க வேண்டும் அல்லது அஸ்வத் மாரிமுத்து படத்துக்கு முன்னதாக வேல்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய அட்வான்ஸ் தொகையினை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று சிம்புவிடம் கூறப்பட்டுள்ளது.இதனால் வேல்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்பது தெ
- ·
- · sivam
‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை நகலெடுத்த ரன்வீர் சிங்கிற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ‘காந்தாரா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பூத கோலா வழிபாட்டு முறையை ரன்வீர் சிங் நடித்துக் காட்டினார். மேலும், அந்தத் தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த செயல் துளு நாடு மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘காந்தாரா’ படத்தில் வரும் காட்சிக
- ·
- · sivam
சில தினங்களாகவே மிருணாள் தாகூர் குறித்த காதல் வதந்திகள் சமூக வலைதளத்தில் உலவி வருகின்றன. கடந்த வாரம் தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தகவல்கள் பரவின. அதற்கு “இலவச விளம்பரம்” என்று கிண்டலாக பதிலளித்திருந்தார் மிருணாள் தாகூர்.அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை காதலித்து வருகிறார் மிருணாள் தாகூர் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “அவர்கள் பேசுவது எனக்கு சிரிப்புதான் வருகிறது. வதந்திகள் எப்போதுமே இலவச விளம்பரம்தான். அது எனக்கு பிடித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் மிருணாள் தாகூர்.தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மிருணாள் தாகூர். முக்கியமாக, அல்லு அர்ஜுன் – அட்லி
- ·
- · sivam
மும்பையில் உள்ள தனது மகனின் வீட்டில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்துள்ளார் வாலியின் தாய். தனது சகோதரனின் வீட்டில் இருக்கும் தாய் உங்களைக் காண விருப்பப்படுகிறார் என டி.எம்.எஸ்ஸிடம் கோரிக்கை வைத்தார் வாலி. உடனே சென்று அவரைப் பார்த்து அவருக்கு விருப்பமான இரு பாடல்களைப் பாடி விட்டு வந்திருக்கிறார் டி.எம்.எஸ். அதில்தான், தான் எத்தகையை சிறந்த மனிதாபிமானம் கொண்டவர் என்பதை மிகவும் உணர்வுபூர்வமான விதத்தில் நிரூபித்துள்ளார்.டி.எம்.எஸ்ஸின் மூத்த மகன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பாகப்பிரிவினை படத்தில் பாட அழைத்துள்ளார்கள். மகனின் நிலை கண்டு அழுதுகொண்டிருந்த டி.எம்.எஸ். பாடச் சென்றுள்ளார். வழக்கமாக பாடும்போது இரண்டு முறையாவது ஒத்திகை பார்ப்பார் டி.எம்.எஸ். அன்றைக்கு டியூனு
- ·
- · sivam
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று (நவம்பர் 24, 2025) மும்பையில் காலமானார். அவருக்கு வயது 89.பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் காலமானார். 89 வயதான தர்மேந்திரா இந்த மாத தொடக்கத்தில் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் காலமானார். அவரின் மறைவுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- ·
- · sivam
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருகிறார். அவர், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற கார் பந்தய நிறுவனத்தையும் சொந்தமாக வைத்துள்ளார்.இந்நிறுவனம், துபாய், பெல்ஜியம், ஸ்பெயினின் பார்சிலோனா போன்ற பகுதிகளில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்றது. இதில் அவரது கார் ரேஸ் அணி, இரண்டு முறை மூன்றாவது இடத்தையும், ஒருமுறை 2-வது இடத்தையும் வென்றுள்ளது.இந்நிலையில், இத்தாலியின் வெனிஸில் மறைந்த தொழிலதிபரும் கார் பந்தய வீரருமான பிலிப் சாரியோலின் நினைவாக, அஜித் குமாருக்கு 2025-ம் ஆண்டின் ‘ஜென்டில்மேன் டிரைவர் விருது’வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவிலான கார் பந்தயத்தில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியதற்காக அவருக்கு எஸ்
- ·
- · sivam
சி.வி.குமார் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘மாயவன்’. சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி நடித்த இந்த அறிவியல் புனைவு படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த ‘மாயவன்’ படத்தை 5 பாகமாக எடுக்க சி.வி.குமார் திட்டமிட்டுள்ளார்.மாயவன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அறிவியல் புனைவு படத்துக்கு ‘எக்ஸ் ஒய்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தெலுங்கு நடிகையான ரத்திகா ரவீந்தர், அனிஸ் பிரபாகர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வர்ஷினி வெங்கட், பிரனா, பிரகதீஷ், தர், ரவுடி பேபி வர்ஷு, ஹுசைன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ் சார்பில் சாம்பசிவம் மற்றும் இன்டர்நேஷனல் வழங்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரிஹரன் ஆனந்தராஜா செய்துள்ளார். காந்த், இசை அமைக்கிறார். இதன்
- ·
- · sivam
பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, அவரின் மனைவி கன்னிகா ரவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.சினேகன் தற்போது மருத்துவர்களின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து கவலைப்படும் ரசிகர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும், என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர். சினேகன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். வைரல் காய்ச்சல் பரவி வருகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். சினேகன் மருத்துவமனையில் இருப்பதால், கன்னிகாவும் தனது இரண்டு குழந்தைகளுடன் மருத்துவமனையிலேயே இருந்து கவனித்து வருகிறார். உதவிக்கு கூட யாரும் இல்லாததால். குழந்தைகளை வைத்த
- ·
- · sivam
ரஜினிகாந்த்தை வைத்து கமல் தயாரிக்கும் தலைவர் 173 படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார் சுந்தர். அவரது இந்த முடிவு அனைவருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் விலகியதால் அடுத்ததாக இப்படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்புதான் அனைவரிடமும் இருக்கிறது.தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்து வித்தைகளை கற்றுக்கொண்டு முறைமாமன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். ஜெயராம், குஷ்பூ, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்தடுத்து அவர் இயக்கிய மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட பல படங்கள் மெகா ஹிட்டாகின.இதன் காரணம
- ·
- · sivam
அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தை ஹெச்.வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் என ஏராளமானோர் நடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது ஜனநாயகன்.படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் பெரிய மைல் கல்லாக அமையும் என்பது தளபதி ரசிகர்களின் திண்ணமான நம்பிக்கை. ஜனநாயகன் வருவதால்தான் 9ஆம் தேதி வெளியாகவிருந்த சிவகார்த்திகேயனின் பர
- ·
- · sivam
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்திருக்கும் திரைப்படம் தான் 'வாரணாசி'. இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கீரவாணி இசையமைத்து இருக்கும் திரைப்படம் 1200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவிற்கு வழக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய மகேஷ் பாபு, இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன் என்றார். இந்த விழாவுக்கு மட்டும் ரூ.2
- ·
- · sivam
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் நயன்தாரா நேற்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலர் நயன்தாராவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்த நிலையில், விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு சூப்பர் கிப்டை பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.கேரளாவில் தொகுப்பாளனியாக தனது பயணத்தை தொடங்கிய நயன்தாரா, மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்த பிறகு தமிழில் அய்யா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். இவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவரின் 41வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட
Latest Cinema (Gallery View)
- ·
- · sivam
Featured Cinema