Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சவாலான சில சூழலை எதிர்கொள்ள வேண்டிவரும். வீடு மாற்றம் சிந்தனை கைகூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்குகான அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகம் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

ரிஷபம்

வீடு மாற்ற எண்ணங்கள் அதிகரிக்கும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பயணங்கள் மூலம் புது விதமான அனுபவம் உண்டாகும். கால்நடைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்களால் மாற்றமான தருணங்கள் உருவாகும். சக ஊழியர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். மகிழ்ச்சி பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மிதுனம்

திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகள் இடத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கடகம்

குடும்பத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்களால் பொறுப்புக்கள் மேம்படும். நண்பர்களின் வருகை உண்டாகும். வியாபார முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையில் மேன்மை அடைவீர்கள். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

 

சிம்மம்

சமூக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். செயல்பாடுகளில் இருந்து மந்த தன்மை குறையும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். சமூக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். மேன்மை பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

கன்னி

குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் உண்டாகும். வாகன பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

 

துலாம்

சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களிடம் விழிப்புணர்வு வேண்டும். இனம் புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் வழியில் மதிப்புகள் ஏற்படும். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

தனுசு

செயல்களில் இருந்த தடைகள் விலகும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மகரம்

குடும்பத்துடன் நேரங்களில் செலவழித்து மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மதிப்பளித்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அன்பு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

கும்பம்

எதிர்பாராத சில பணிகள் முடியும். தாய் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வரவுகளால் கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் மேன்மையை உருவாக்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிற்ப பணிகளில் திறமைகள் வெளிப்படும். துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பாராட்டு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

மீனம்

பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். செல்வ சேர்க்கை குறித்த எண்ணங்கள் உண்டாகும். மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சிறு மற்றும் குறு தொழில் குறித்த எண்ணங்கள் மேம்படும். ஆர்வம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 90