Beautiful birds
யாழ் மீசாலை. வீரசிங்கம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா Get together. Nelison road and Finch Avenue. August 10 2025 from 8AM to 7PM. All welcome
கனடாவின் மார்க்கம் மற்றும் டொரண்டோ பகுதிகளில் கார் திருட்டு சந்தேகத்தில் ஒருவரை யார்க் பிராந்தியப் பொலிஸார் (York Regional Police) துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.
மார்க்கம் பகுதியில் உள்ள கென்னடி சாலை மற்றும் கிளேட்டன் டிரைவ் சந்திப்பில் ஒரு சந்தேகத்துக்குரிய வாகனத்தை பொலிஸார் பின் தொடர்ந்துள்ளனர்.
மாலை 7 மணியளவில், டொரண்டோவின் கென்னடி சாலை மற்றும் போனிஸ் அவென்யூ அருகே (ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு பகுதியில்) அந்த வாகனத்தை நிறுத்த முயன்ற பொலிஸாருக்கும், காரில் இருந்த ஒரே ஆணுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன் போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், டொரண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபருக்கு உயிராபத்து இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் எந்தவொரு பொலிஸாரும் காயமடையவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிரமப்படும் நமக்கு எழுந்து,
தன் இடம் கொடுக்கும்
அந்த யாரோ ஒரு
*இருக்கை மனிதர்!*
ரயிலில் மேலேற முடியாத
நமக்கு தன் கீழ் இருக்கையை
கொடுக்கும் அந்த யாரோ ஒரு
*உயர்ந்த மனிதர்!*
சாலை விபத்தில் நமக்கு
முதல் ஆளாய் ஓடோடி வந்து
உதவும் அந்த யாரோ ஒரு
*சகாய மனிதர்!*
தூக்கிவிட மறந்த நம்
வண்டி சைட்ஸ்டாண்டை
தன் சைகையிலேயே
தூக்கிவிடச் சொல்லும்
அந்த யாரோ ஒரு
*சைகை மனிதர்!*
வண்டிச் சக்கரத்தில்
மாட்ட இருக்கும் துப்பட்டாவை சொருவிக்கொள்ளச் சொல்லி
எச்சரிக்கும் அந்த யாரோ ஒரு
*எச்சரிக்கை மனிதர்!*
செல்லும் வழி தெரியாமல்
முழிக்கும் நமக்கு சரியான
வழி சொல்லி உதவும்
அந்த யாரோ ஒரு
*முகவரி மனிதர்!*
திடீரென்று நின்று விட்ட
நம் வண்டியை உதைத்து
ஓட வைத்துக் கொடுக்கும்
அந்த யாரோ ஒரு
*உதை மனிதர்!*
சில்லறை இல்லாமல் நாம்
தவிக்கும்போது, சரியான
சில்லறை கொடுத்து உதவும்
அந்த யாரோ ஒரு
*நாணய மனிதர்!*
தவறவிட்ட நம் பணப்பையை
நம்மைத் தேடிவந்து
கொடுத்துச் செல்லும்
அந்த யாரோ ஒரு
*நேர்மை மனிதர்!*
ATM இயந்திரத்தில்
பணம் எடுக்கத் தெரியாமல்
தவிக்கும் போது, எடுத்துதவும்
அந்த யாரோ ஒரு
*நல்ல மனிதர்!*
உயிருக்கு போராடும்
ஆபத்தான நிலையில்,
யாருக்கென்றே தெரியாமல்
இரத்தம் கொடுக்க முன்வரும்
அந்த யாரோ ஒரு
*குருதி மனிதர்!*
இன்னும் இன்னும் இப்படி,
நம்மைச் சுற்றியே,
எத்தனையோ அந்த
*"யாரோ மனிதர்கள்!"*
எப்போதும் இருக்கிறார்கள்.
தேவையானச் சூழலில்
தங்களுக்குள் இருக்கும்
மனிதர்களை அவர்கள்
வெளிப்படுத்தி விடுகிறார்கள்.
நாமும் இருப்போம் முடிந்தவரை
யாரோ அந்த சில மனிதர்களாய்!
தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறிய மகளிடம் கேட்டார் அப்பா .
"என்னம்மா, ஸ்கூல் எப்படி இருக்கு?"
"பிடிச்சு இருக்கு"...
என்று சொன்னவள் மெதுவாக
சில விஷயங்களை சொன்னாள்.
அரசு பள்ளிகள் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் குறைவான சுகாதாரமற்ற கழிப்பறை வசதியைப்பற்றி சொன்னாள்.
அது பெரும்பாலான அரசுப்பள்ளிகளிலும் உள்ள குறைதானே என சொல்லிவிட்டு வேற எப்படி இருந்தது என கேட்டார்.
கொஞ்சம் தயங்கியபடி, "இல்லப்பா , யாராவது எந்த ஸ்கூலில் படிக்கிற" எனக்கேட்கும் பொழுது சொல்லுவதற்கு ஒரு மாதிரி இருக்குப்பா.. பெரிய ஃபேமஷான ஸ்கூலில் படித்துவிட்டு இப்ப கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கிறேன் என சொல்ல கூச்சமா இருக்குப்பா" எனச் சொன்னாள்.
அவர் சிரித்து கொண்டே "கவர்மெண்ட் வேலை கிடைச்சால் சொல்ல கூச்சப்படுவியா.??"
"கவர்மெண்ட் காலேஜில் டாக்டர் சீட், இன்ஜினியரிங் சீட் கிடைச்சால் கூச்சப்படுவியா?"
எனக் கேட்டார். "அது எப்படி அப்படி சொல்லுவேன்ப்பா? சந்தோஷமா சொல்லுவேன்' எனச்சொன்னாள். "அதே மாதிரி யார் கேட்டாலும் தைரியமா சொல்லு.. கவர்மெண்ட் ஸ்கூலா என யாராவது இழுத்தால், ஏன் கவர்மெண்ட் வேலை கிடைச்சால் இப்படி கேட்பீங்களாண்ணு நக்கலா கேளு" என்றார்.
"கேட்டவுடன் சிரித்து விட்டு இது தெரியாமல் போச்சே.. இனி யாராவது கேட்கட்டும்" என உற்சாகமாக சொன்னாள்.
"நீ படிக்கிற பள்ளியை என்றுமே குறைவா நினைக்காதே. வேலைக்கு போக இண்டர்வியூவில் எந்த ஸ்கூல் என கேட்பாங்க.. அப்பொழுது கவர்மெண்ட் ஸ்கூல் என சொன்னால் ஏதும் நினைப்பாங்களோன்னு தயங்கினால், அடுத்த கேள்விக்கு பதில் தெரிந்தாலும் தயங்கி சொல்லுவ.. ஆரம்பத்துலயே தைரியமா சொல்லு. நம்ம படிக்கிற ஸ்கூல் நல்ல ஸ்கூல் என உன் மனசுல பதியணும்.
அங்க பீஸ் கட்டலைன்னா புக் தராமல் நிக்க வைக்க கூட செய்வாங்க. ஆனால் இங்க உனக்கு புத்தகம் கொடுத்து படிக்க சொல்லுவாங்க. அங்க என்ன எக்ஸ்ட்ரா சொல்லி தருவாங்க.. இங்க நீ கேட்டு கத்துகிடணும். அதிக வேலையும் கொடுக்க மாட்டாங்க. உனக்கு என்ன கத்துகிடணும் தோணுதோ அதை கத்துக்கோ. என்ன வேணும்னு எங்கிட்ட சொல்லு. நான் வாங்கித்தர்றேன்" எனச்சொன்னார். உற்சாகத்துடன் கேட்டு கொண்டாள்.
"அங்க எல்லா பிள்ளைகளும் வசதியான, வசதியா காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பிள்ளைங்களோடு படிச்சு இருப்ப.. இங்க எல்லோரும் நடுத்தரமா, இயல்பா பழகுற பிள்ளைகளா இருக்கும்.. அதனால எல்லோரிடமும் நல்லா பழகு. டீச்சரை பார்த்து பயப்படாமல் நல்லா பேசு.. மரியாதையா பேசு. இங்க வேலை பாக்குறவங்க எல்லோரும் நல்லா படிச்சு வேலைக்கு வந்தவங்க.. அதிக விஷயம் தெரியும். அவங்ககிட்ட கத்துக்கோ" என சொல்லி முடித்தார்....
மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன்.. சூரியனிடம்....
“தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன்.
ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான்,
“இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
“க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால் தான் சொல்கிறோம். அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும் முரண்பாடு வருகையில் விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும். நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால் தான் அழிந்தாய்."
கர்ணன் தந்தையின் வார்த்தைகளில் இருக்கும் சத்தியத்தை உணர்தான்.
"தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்த தர்மம் தான். அதற்காக இரணியனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா? நரசிம்மர் என்ற விசேஷ தர்மத்தை அல்லவோ கைக்கொண்டான்!
விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி பாராட்டுதலாகிய சாமானிய தர்மத்தை விட்டு,
விசேஷ தர்மமான ராமனை வந்து பற்றவில்லையா?
தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பதற்காகக் கைகேயியின்
ஆசைக்குப் பரதன் உடன்பட்டானா?
மகனே! சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் விசேஷ தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில் விசேஷ தர்மத்தையே முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டும்.
அவ்வகையில் கண்ணனே அனைத்து தர்மங்களுக்கு சாரமான விசேஷ தர்மம் என உணர்வாயாக!” என்றார்.
வடமொழியில் ‘வ்ருஷம்’ என்றால் தர்மம் என்று பொருள். ‘வ்ருஷாகபி:’ என்றால் தர்மமே வடிவானவர் என்று பொருள்.
கர்ணனுக்கு சூரியன் உபதேசித்தபடி தர்மமே வடிவானவராகத் திருமால் விளங்குவதால் ‘வ்ருஷாகபி:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 102-வது திருநாமம்.
“வ்ருஷாகபயே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால்,
முரண்பாடான சூழ்நிலைகளில் நாம்
சிக்கிக் கொள்ளும் போது சரியான முடிவெடுக்கும் ஆற்றலைத் திருமால் நமக்குத் தந்தருள்வார்..!!
200 ஆண்டுகள் பழமையான ஒரு வீடு இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது...
அப்போது சுவர் அலமாரி ஒன்றைப் பெயர்த்துக் கொண்டிருந்தார்கள்.
சுவற்றின் மேல் காகிதம் போல் ஏதோ ஒட்டப்பட்டிருந்தது.
இடித்துக் கொண்டிருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தால் அது தாமரை இலை என்று சொன்னார்கள்.
தாமரை இலையை சுவற்றில் ஒட்டி அதன் பின்பே அலமாரியைக் கட்டுவார்களாம்.
காரணம் என்னவென்றால் கரையான் அரிக்காதாம்.
புகைப்படத்தில் இருப்பது சுவரில் ஒட்டப்பட்ட தாமரை இலை... இது போல் மிகப் பெரிய வாழை இலைகளையும் இடிக்கும் போது பார்த்திருக்கிறார்களாம்.
கரையான் அரிக்காத தொழில் நுட்பத்துடன் வீடு கட்டுவது எப்படி?...
என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது அன்று......
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். ஆன்மிக பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் உயரும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
ரிஷபம்
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளை அரவணைத்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபார போட்டிகளில் பொறுமையை கையாளவும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கலைப் பொருட்களால் லாபம் ஏற்படும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முதுநிலை கல்வியில் இருந்த தாமதங்கள் விலகும். மறைமுக எதிர்ப்புகளை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். நாவல் மற்றும் இலக்கியங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
அனுபவ பூர்வமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். சில பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உறவுகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை தரும். பிரியமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் மதிப்புகள் உயரும். முயற்சிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
சிம்மம்
கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில வரவுகள் கிடைக்கும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சில அனுபவங்கள் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். சமூக பணிகளில் மேன்மை ஏற்படும். முன்னேற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
கன்னி
குடும்பத்தில் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் திருப்தியின்மையான சூழல்கள் அமையும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய நபர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பயணங்கள் சார்ந்த செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனவருத்தம் குறையும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கோபம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
விருச்சிகம்
பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சாமர்த்தியமான செயல்பாடுகள் மூலம் நினைத்ததை முடிப்பீர்கள். கால்நடை பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். கடன் பிரச்சனைகளில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
கலைத்துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். சிறு வாய்ப்புகளிலும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பங்குதாரர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கும்பம்
தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். மனை விருத்தி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி கற்கும் நிலையில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மீனம்
குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தோற்ற பொழிவு மேம்படும். திடீரென சில முடிவுகளை எடுப்பீர்கள். குண நலன்களின் சில மாற்றங்கள் ஏற்படும். பற்களில் சிறு சிறு வழிகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விசுவாவசு வருடம் ஆடி மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 18.7.2025.
இன்று மாலை 04.11 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று அதிகாலை 03.29 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.
இன்று காலை 06.58 வரை சுகர்மம். பின்னர் திருதி.
இன்று அதிகாலை 05.22 வரை பாலவம். பின்னர் மாலை 04.11 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று அதிகாலை 03.29 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
அதென்ன.. மாட்டுப் பெண்?
நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் நடவு செய்வதற்காக, வயலில் ஒரு சிறு பகுதியில் நாற்று விடுவார்கள். குறிப்பிட்ட நாள்கள் சென்ற பிறகு அந்த நாற்றுகளைப் பறித்து, பக்குவப் படுத்தப்பட்ட வேறு வயல்களில் நடுவார்கள்.
நாற்றைப் பறித்து எடுத்துச் சென்ற பின்பு அந்த இடம் வெட்புலமாக (VACANT) இருக்கும் அல்லவா ? அந்த இடத்தைப் பக்குவப் படுத்திவிட்டு வேறு இடத்தில் விடப்பட்டிருக்கும் நாற்றைக் கொண்டு வந்து இங்கு நடுவார்கள். இது தான் வேளாண் பெருமக்கள் பின்பற்றும் நடைமுறை.
இங்கு என்ன நிகழ்கிறது ? ஒரு வயலில் வளர்ந்திருக்கும் நாற்றைக் கொண்டுபோய் இன்னொரு இடத்தில் நடுகிறார்கள். அங்கு அது செழித்து வளர்ந்து பலன் தருகிறது. வளர்வது ஓரிடம்; நெல்மணியாம் வித்துக்களை விளைவிப்பது இன்னோரிடம்.
நம் வீட்டில் பிறந்து வளரும் நமது பெண்ணும் “நாற்று”ப் போன்றவள். வளர்வது நம்வீட்டில்; வாழ்வதும் பிள்ளைகளைப் பெற்றுக் குலம் தழைக்கச் செய்வதும் இன்னொரு வீட்டில். அவள் வளர்வது ஓரிடம்; வாழ்வது இன்னோரிடம். நம் வீட்டு நாற்றினைப் பறித்து இன்னொரு வீட்டில் நடுகிறோம். நாற்று அங்கு தன் வாழ்க்கையைத் தொடர்கிறது.
“நாற்றுப் பெண்” என்ற சொல்லின் பெயர்க் காரணம் புரிகிறதா ? “நாற்றுப் பெண்” என்ற சொல் ”நாட்டுப் பெண்” ஆகி பலரது நாவிலும் பொருள் புரியாமலேயே இன்னும் புழங்கி வருவது விந்தையிலும் விந்தை !
“நாற்று” போன்ற பெண் “நாற்றி” எனப்பட்டாள். ”நாற்றி” என்பது திரிந்து “நாத்தி” ஆகிவிட்டது. “நாற்று அன்னார்” என்றால் நாற்று போன்றவள் என்று பொருள். நாற்று + அன்னார் = நாற்றன்னார் = நாற்றனார் = நாத்தனார் “நாத்தனார்” பெயர்க்காரணம் இப்பொழுது விளங்குகிறதா ?
நம் வீட்டில் விளக்கேற்றிய நமது பெண் திருமணமாகி இன்னொரு வீட்டுக்கு வாழச் சென்றுவிட்டாள். நம் வீட்டில் விளக்கேற்ற ஒரு மாற்றுப் பெண் வேண்டாவா ? நாற்றாகிச் சென்றுவிட்ட நமது வீட்டுப் பெண்ணுக்கு மாற்றாக வேறொரு ஊரில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை நம் வீட்டுக்கு மருமகளாகக் கொண்டுவருவது தானே முறை.
“நாற்று”ப் பெண் விளக்கேற்றிய வீட்டில், அவளுக்கு “மாற்று”ப் பெண்ணாக மருமகள் வருகிறாள். இந்த மாற்றுப் பெண்ணைத் தான் பலரும் “மாட்டுப் பெண்” ஆக்கி விட்டார்கள் !
சிலர் பேச்சுத் தமிழை எழுத்திலும் கொண்டு வருகிறார்கள். அதை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். இத்தகைய மொழிச் சிதைவை அனுமதித்தால், “நாட்டுப் பெண்”, “மாட்டுப்பெண்’ போன்ற பொருளற்ற சொற்கள் தமிழில் பல்கிப் பெருகிவிடும். தமிழ் ஆர்வலர்கள் புரிந்து கொள்வார்களாக !
கேரளாவில் பிறந்த இவர், அந்த மாநிலத்தில் நீண்ட நாள் பதவி வகித்த முதல்வரும் பிரபல மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஈ.கே.நாயனாரின் சொந்தக்காரர். மலையாள சினிமாவுக்குள் முதன் முதலில் கதாசிரியராக அறிமுகமான விஜயனின் கைவண்ணத்தில் உருவான 'சங்கு புஷ்பம்' படம் வசனத்துக்காகவே மலையாளத்தில் ஹிட். அப்படியே நடிப்பு, இயக்கம் என வளர்ந்த விஜயனை தமிழுக்கு அழைத்து வந்தவர், பாரதிராஜா. பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களில் விஜயனை பார்க்கலாம்.
1978ல் வெளியான 'கிழக்கே போகும் ரயில்', விஜயனை கேரள கரையில் இருந்து கோலிவுட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது. அடுத்த ஆண்டே 'முள்ளும் மலரும்' இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் 'உதிரி பூக்கள்'. இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்த படம் அதிரி புதிரி ஹிட். படத்தின் ஹீரோ விஜயன். அதாவது ஆன்ட்டி ஹீரோ.
2 குழந்தைகளுக்கு தந்தையான பின்னும் மனைவியை கொன்று விட்டு கொழுந்தியாளை அடைய துடிக்கும் வேடம், விஜயனுக்கு... (அஜித்தின் 'ஆசை' படத்தோட raw versionன்னு சொல்லலாம்) அந்த படத்தில் பின்னி எடுத்திருப்பார், விஜயன். அவரது உடல்வாகு, வில்லத் தனமான பார்வை அமைதியான தோற்றம் எல்லாம் அவரது கேரக்டரை ஹிட்டாக்கின. அதன் பிறகு, மலையாளம் கூடவே தமிழிலும் ஏராளமான படங்களில் விஜயன் நடித்தார்.
பாரதிராஜா, பாக்யராஜ், மகேந்திரன் என முன்னணி இயக்குர்களிடம் நடித்த இவர், 1980 ஒரே ஆண்டில் மட்டும் 11 படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். அவற்றில் பல லாபம் ஈட்டிய படங்கள். சின்ன பட்ஜெட்டில் நல்ல லாபம் என்றால் இவரும் சுதாகரும் தான் அன்றைய தயாரிப்பாளர்களின் சாய்ஸ். 1980களுக்கு பிறகுதான் தமிழில் ரஜினி, கமல் ஆதிக்கம் துவங்கியது. அதற்கு முந்தைய கால கட்டத்தில் இவருக்கும் அன்றைய நாளின் மற்றொரு ஹீரோவான சுதாகருக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. ஆரம்ப கால விஜயனிடம் கொஞ்சம் மம்முட்டி சாயலை பார்க்க முடியும்.
கதாநாயகன் வேடத்துக்கு பிறகு, 1992 வரை நிறைய கேரக்டர் ரோல்களிலும் விஜயன் நடித்தார். 'மண் வாசனை', 'நிறம் மாறாத பூக்கள்', 'பொண்ணு ஊருக்கு புதுசு', 'பசி', 'ஒரு கைதியின் டைரி', 'கொடி பறக்குது', 'அன்புக்கு நான் அடிமை' (ரஜினியின் அண்ணன்), 'நாயகன்' (மும்பை குடிசை வாழ் மக்கள் இடத்தை வாங்கி தரும் புரோக்கர் துரை)... இப்படி அவரது படங்களின் பட்டியல் மிக நீளம்.
இதற்கிடையே, 'புதிய ஸ்வரங்கள்' மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அப்போதெல்லாம் பிலிம் ரோல் காலம். அந்த படம் முடிந்து லேபில் இருந்த பிலிம் சுருள் தீ விபத்தில் கருகியதால் அவரது இயக்குநர் கனவும் கருகிப்போனது. இப்படி, விஜயனின் வாழ்வில் துன்பியல் அதிகம்.
1992க்கு பின் 2002 வரை பத்து ஆண்டுகள் விஜயனின் திரை பயணத்தில் பிரேக்... இந்த கால கட்டத்தில் மது, புகைப் பழக்கம் என சொந்த வாழ்க்கையில் நிறைய சோகங்களை சந்தித்தார், விஜயன். முன்னணி இயக்குநர்கள் படத்திலும் ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடனும் நடத்தது மட்டுமல்ல... 1980களில் மிகப் பிரபலமாகவும் வலம் வந்த ஒரு நடிகர், யாருமே கண்டு கொள்ளாத நிலைமையில் இருந்தார்.
அவரை மறுபடியும் 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த படம் 'ரமணா'. 2002ல் வெளியான அந்த படத்தில் விஜயகாந்துக்கு மெயின் வில்லனாக அதகளம் பண்ணியிருப்பார். அதே ஆண்டு மாதவன் நடித்த 'ரன்' படத்திலும் வில்லன் அதுல் குல்கர்னியின் வலதுகரமாக விஜயன் நடித்தார். இதுபோல, '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் நாயகனின் தந்தையாக, குண சித்திர நடிகராகவும் நிரூபித்திருப்பார்.
'உதிரிப்பூக்கள்' விஜயன், 'ரமணா' விஜயனாக இரண்டாவது சுற்று வலம் வர தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் அவரது வாழ்க்கையே முடிந்து போனது. 'ஆயுதம் செய்வோம்' படப்பிடிப்பில் மாரடைப்பால் மரணமடைந்தார். மறைந்தாலும் தமிழ் திரையுலக வரலாற்றில் 'உதிரிப் பூக்கள்' விஜயனுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.
ஈழத் தமிழரும் கனடிய பிரஜையுமான பொது பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அவர் மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆனந்தசங்கரி, தனது அமைச்சரவையில் சேருவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உறுப்பினராக கனடா உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான CBSA அடையாளம் காணப்பட்ட ஒருவருக்காக நிரந்தர குடியிருப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக கடிதம் எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கரி ஆனந்த சங்கரி தொடர்பில் கனடிய அரசியல் பரப்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கனடாவின் கியூபெக்கில் வாழும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பேருக்கு லொட்டரியில் பெரும் தொகை பரிசாக கிடைத்துள்ளது.
Montérégieயில் வாழும் Jacques Deschamps மற்றும் மொன்றியலில் வாழும் Wilhelmina Van Leeuwen ஆகிய இருவரும்தான் அந்த அதிர்ஷ்டசாலிகள்.
அதாவது, அவர்கள் இருவருமே 70 மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்த பரிசுச்சீட்டை வாங்கியுள்ளதால், அவர்கள் இருவருக்கும் ஆளுக்கு 35 மில்லியன் டொலர்கள் கையில் கிடைக்க உள்ளது.
Jacques, தனது 60 வயதுகளில் இருக்கிறார். சொந்தமாக கட்டுமானப்பணி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார் அவர்.
லொட்டரியில் பரிசு விழுந்ததைத் தொடர்ந்து, அவர் தனது பணியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தனது நிறுவனத்தை தனது மகனிடம் ஒப்படைக்க உள்ளார் Jacques.
Wilhelminaவோ தனது 70 வயதுகளில் இருக்கிறார். அவர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்.
இருவருக்குமே பெரிய ஆசைகள் ஒன்றுமில்லை. 35 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளதால் உங்கள் சொந்த ஊருக்கே போய்விடுவீர்களா என Wilhelminaவிடம் கேட்டால், இல்லை என்கிறார். முன்பெல்லாம் வருடத்துக்கு ஒருமுறை என் சொந்த நாட்டுக்குச் செல்வேன், இனி இரண்டு முறை செல்வேன். அதுவும் விமானத்தில் முதல் வகுப்பில் பயணிக்க ஆசை என்கிறார் Wilhelmina!
ஆடி மாதத்தின் முதல் நாள் தலை ஆடி என்று அழைக்கப்படுகின்றது.
புதிதாக மணமான தம்பதியினர் மணப்பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைக்கப்படுவர்.
அங்கு மாப்பிள்ளைக்கு விருந்துடன் தேங்காய் பால் வழங்கப்படுகிறது.
சில இடங்களில் தலை ஆடிக்கு மணமக்களுக்கு புது ஆடைகள் பரிசாக மணப்பெண்ணின் தாய் வீட்டிலிருந்து வழங்கப்படுகிறது.
பின் மணப் பெண் மட்டும் தாய் வீட்டில் தங்கிவிடுகிறாள்.
தாயிடம் இருந்து பொறுமை, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், சூழ்நிலையை சமாளித்தல் போன்றவற்றை திருமணமான பின்பு கற்றுக் கொள்கிறாள்.
மேலும் ஆடியில் கருவுற்றால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.
சித்திரை வெயில் குழந்தைக்கும், தாயுக்கும் உடல் மற்றும் மனரீதியாக அசௌகரியத்தைக் கொடுக்கும். எனவே தான் தலை ஆடிக்கு வரும் புது மணப்பெண் தாய் வீட்டில் ஆடி மாதம் முழுவதும் தங்கிவிடுகிறாள்.
இதனால் தான் ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையைத் தேடிப்பிடி என்ற பழமொழி இன்றும் வழக்கத்தல் உள்ளது.
பள்ளிக்கூடங்களை திறந்தால் மட்டும் போதாதது. அவற்றின் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கும் அவர்களுக்குக் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் வேலை நாட்களை 180 லிருந்து 200 நாட்களாக உயர்த்தினார். இதன் வாயிலாக மாணவர்களின் கல்வி நலன் மேம்படும் என இதைச் செய்தார். அதோடு பள்ளிகளுக்கு விடப்படும் தேவையற்ற விடுமுறைகளும் குறைக்கப்பட்டன.
பள்ளிகளின் வேலை நாட்களை உயர்த்தியதோடு ஆசியர்களுக்கான சமூக நலத்திட்டங்களையும் அறிமுகம் செய்தார் காமராஜர். ஆசிரியர்களுக்கு பிராவிடண்ட் பண்ட், இன்சூரன்ஸ், ஓய்வூதியம் ஆகிய மூவகை சலுகை அளிக்கும் திட்டத்தை வழங்க உத்தரவிட்டார். 1955இல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் கிடைத்த இந்தப் பலன்களை 1958 முதல் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்தார். அதன் பின்னர் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. கல்விக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அனைத்து விதமான சலுகைகளும் கிடைக்கும் போது அவர்களால் மாணவர்களுக்கு சிறப்பான கற்றல் செயல்பாடுகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை காமராஜர் பெற்றிருந்தார்.
தொடக்கக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்தினார். அவர்களின் பிள்ளைகள் இலவச கல்வி பெறுவதற்கு வசதி செய்தார். அரசாங்க ஊழியர்களின் பிள்ளைகளுக்கு சம்பளச் சலுகை அளித்தார். 100 ரூபாய் வருமானத்திற்கு குறைந்தவர்களின் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது.