பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை வாங்கும் கனேடிய நிறுவனம்
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம் ஒன்றை மூட கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்ததைத் தொடர்ந்து அந்நிறுவன உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்.
இந்நிலையில், அந்த உணவகத்தை கனேடிய நிறுவனம் ஒன்று வாங்கி விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
லண்டனிலுள்ள Regent Street என்னும் பிரபலமான தெருவில் அமைந்துள்ள Victory House என்னும் கட்டிடத்தில் வீராஸ்வாமி உணவகம் என்னும் இந்திய உணவகம் அமைந்துள்ளது.
சுமார் 100 ஆண்டுகளாக லண்டனின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன வீராஸ்வாமி உணவகம் அமைந்துள்ள கட்டிடத்தை அலுவலகமாக மாற்ற அதன் உரிமையாளரான Crown Estate என்னும் அமைப்பு முடிவு செய்துள்ளது.
உணவகத்துக்கு Crown Estate மாற்று இடம் தருவதாக கூறியுள்ளது என்றாலும், பாரம்பரியத்தை எப்படி இடம் மாற்ற முடியும் என பிரபல பிரித்தானிய ஹொட்டல் துறை நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆக, இந்த விடயம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், Fairfax Financial Holdings Limited என்னும் கனேடிய நிறுவனம் அந்த உணவகத்தை வாங்கி விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
உண்மையில், வீராஸ்வாமி உணவகம், சட்னி மேரி, அமயா என்னும் மூன்று உணவகங்களும் MW Eat Ltd என்னும் நிறுவனத்துக்கு சொந்தமானவை. MW Eat Ltd நிறுவனத்தை நிறுவியவர்கள் நமிதா பஞ்சாபி மற்றும் ரஞ்சித் மத்ரானி என்னும் இந்திய வம்சாவளி தம்பதியர்.