Feed Item
·
Added article

ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு, அந்த நிறுவனத்தை அவரது மகன் ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வந்தார். "நானும் ஒரு பெண்", "சம்சாரம் அது மின்சாரம்", "சிவாஜி", "வேட்டைக்காரன்", "மின்சார கனவு", "அயன்" உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட உலகின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஏ.வி.எம். சரவணன். வயதுமூப்பு காரணமாக அவர் இன்று காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக, ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது. 1958 ஆம் ஆண்டு முதல் சினிமா தயாரிப்பில் சரவணன் ஈடுபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்போதும் கைகளை கட்டிக் கொண்டே நிற்கும் அவர் பணிவின் சிகரம் என்றும் அழைக்கப்படுகிறார்.

  • 16