·   ·  167 news
  •  ·  0 friends

இலங்கையில் டிட்வா புயலுக்கு உயிரிழந்தோர் 334 ஆக அதிகரிப்பு; 400 பேரை காணவில்லை

டிட்வா புயல் பாதிப்பு காரண​மாக இலங்​கை​யில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 334 ஆக அதி​கரித்​துள்​ளது.

இலங்கை கடல் பகு​தி​யில் கடந்த மாதம் 26ம் தேதி உரு​வான டிட்வா புயல் இலங்​கையை தாக்​கிய பின் வங்​கங் கடல் பகு​தி​யில் கடந்த 29-ம் தேதி நுழைந்​தது. இந்த புயல் காரண​மாக இலங்​கை​யில் கன மழை பெய்து வெள்​ளப் பெருக்கு மற்​றும் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. ஆறுகளில் வெள்​ளம் கரைபுரண்டு ஓடியது. லட்​சக்​கணக்​கான வீடு​கள் சேதம் அடைந்​தன.

இதையடுத்து இலங்​கை​யில் அவசர நிலை அறிவிக்​கப்​பட்டு மீட்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​ பட்​டன. பாதிக்​கப்​பட்ட 59 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் 1,500 முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​டனர்.

புய​லால் பாதிக்​கப்​பட்ட இலங்​கைக்கு இந்​தியா சார்​பில் நிவாரண பொருட்​கள் கடற்​படை கப்​பல்​கள் மற்​றும் விமானப்​படை ஜம்போ விமானங்​களில் அனுப்பி வைக்​கப்​பட்​டன. நெருக்​கடி நிலையை சமாளிக்க சர்​வ​தேச அமைப்​பு​களின் உதவியை இலங்கை நாடியது.

இதையடுத்து மேலும் 10 டன் நிவாரண பொருட்​கள் இலங்​கைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​ட​தாக இந்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் தெரி​வித்​தார். இலங்​கை​யில் மழை பாதிப்பு குறைந்​தா​லும், தாழ்​வான பகு​தி​கள் எல்​லாம் வெள்​ளத்​தில் மூழ்​கி​யுள்​ளன.

இங்கு வெள்​ளத்​தால் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 334 ஆக உயர்ந்​துள்​ளது. சுமார் 400 பேரை புயலுக்​குப்​பின் காண​வில்​லை. இவர்​களை தேடும் பணி நடை​பெறுகிறது.

வெள்ள பாதிப்பு காரண​மாக பலர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு வரு​கின்​றனர். இங்கு நாள் ஒன்​றுக்கு 1,500 யூனிட் ரத்​தம் தேவைப்​படு​கிறது. அதனால் மக்​கள் அதி​கள​வில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்​டும் என இலங்கை அரசு வேண்​டு​கோள்​ விடுத்​துள்​ளது.

  • 47
  • More
Comments (0)
Login or Join to comment.