·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 486
  • More

கனடா நாளில் நயாகரா நீர்வீழ்ச்சி

கனடா நாளில் நயாகரா நீர்வீழ்ச்சி

Comments (0)
Login or Join to comment.
·
Added a news

 கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்கு சுனாமி தொடர்பில் ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் Petropavlovsk நகரை ரிக்டர் அளவுகோலில் 8.8ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, ஜப்பான், அமெரிக்கா முதலான பல நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வடக்கு மற்றும் மத்திய கரைப்பகுதிகள், வான்கூவர் தீவின் மேற்கு மற்றும் வடகிழக்கு கரைப்பகுதிகளுக்கும் சுனாமி தொடர்பில் ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.

ஜோர்டன் நதி முதல் கிரேட்டர் விக்டோரியா வரையிலான ஜுவான் டி ஃபூகா ஜலசந்தி, Saanich தீபகற்பம் உட்பட பல இடங்களுக்கும் சுனாமி ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவைப் பொருத்தவரை, மக்கள் கடலுக்குள் இறங்கவேண்டாம் என்றும், அலைகளை வேடிக்கை பார்க்க கடற்கரைக்குச் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அலைகளும் நீரோட்டமும் தண்ணீரில் இறங்கும் மக்களை மூழ்கடிக்கவும், காயப்படுத்தவும் கூடும் என்பதால் அதிகாரிகள் அனுமதிக்கும் வரை, தாழ்வான கடற்கரை பகுதிகள், துறைமுகங்கள் முதலான இடங்களைத் தவிர்க்குமாறும் சுனாமி ஆலோசனையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • 11
  • 11
  • 12
·
Added a post

சிறுநீரக கற்கள் உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளன. உங்கள் கற்கள் எந்த வகையானவை என்பதை தீர்மானிப்பதற்கும், அவற்றை கரைக்க அல்லது வெளியேற்ற சிறந்த உணவுகளை பரிந்துரைப்பதற்கும் உங்கள் மருத்துவரை அணுகுவது முக்கியம்.

பொதுவாக, சிறுநீரக கற்களை கரைக்க உதவும் சில உணவுகள் பின்வருமாறு:

1. தண்ணீர்:

  • தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது சிறுநீரை நீர்த்துப்போகச் செய்து, கற்கள் உருவாவதைத் தடுக்க உதவும்.

2. சிட்ரஸ் பழங்கள்:

  • எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் சிட்ரிக் அமிலம் நிறைந்தவை. சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்களின் முக்கிய பகுதியான கால்சியம் சிட்ரேட்டை உடைக்க உதவும்.

3. பச்சை காய்கறிகள்:

  • கீரை, பசலைக் கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகள் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்தவை. இந்த தாதுக்கள் சிறுநீரக கற்களை உருவாக்குவதைத் தடுக்க உதவும்.

4. ஆப்பிள் சீடர் வினிகர்:

  • ஆப்பிள் சீடர் வினிகர் சிறுநீரின் pH ஐ சமநிலைப்படுத்த உதவும், இது சிறுநீரக கற்களை உருவாக்குவதைத் தடுக்க உதவும். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து தினமும் இரண்டு முறை குடிக்கவும்.

5. தர்பூசணி:

  • தர்பூசணி 92% தண்ணீர் ஆகும், இது சிறுநீரை அதிகரிக்கவும், சிறுநீரக கற்களை வெளியேற்றவும் உதவும்.

6. நறுமணப் பொருட்கள்:

  • புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்ற நறுமணப் பொருட்கள் சிறுநீரக கற்களை கரைக்க உதவும். இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது தேநீராக குடிக்கலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  • சில உணவுகள் சிறுநீரக கற்களை மோசமாக்கும். சிவப்பு இறைச்சி, உப்பு, சர்க்கரை மற்றும் ஆக்ஸலேட் அதிகம் உள்ள உணவுகள் (பீட்ரூட், சாக்லேட், கொட்டைகள்) போன்றவற்றை குறைவாக உட்கொள்ளவும்.
  • உங்கள் சிறுநீரக கற்கள் எந்த வகையானவை என்பதை தீர்மானிக்கவும், அவற்றை கரைக்க அல்லது வெளியேற்ற சிறந்த உணவுகளை பரிந்துரைக்கவும் உங்கள் மருத்துவரை அணுகுவது முக்கியம்.
  • சிறுநீரக கற்கள் கடுமையான வலியை ஏற்படுத்தும். உங்களுக்கு கடுமையான வலி, இரத்தம் கலந்த சிறுநீர், குமட்டல் அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
  • 14
  • 13
·
Added a post

சிறு பீளைச்செடி........

இதன் தாவரப் பெயர் : Aervalanata.

தாவரக்குடும்ப பெயர்: Amarantaceae.

இதன்வேறுப் பெயர்கள்: சிறு பீளை, சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்பார்கள்.

இதை பொங்கலன்று பெரும்பாலான வீடுகளில் வாசலில் கட்டி வைப்பார்கள்.

இது சிறு செடிவகையை செர்ந்தது. ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக சிறிது நீண்ட வட்டவடிவில் இருக்கும்.ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் தண்டுடன் ஒட்டியவாறு அவல் போன்ற வடிவத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும்.இதன் தண்டு, பூ, இலை, வேர் அனைத்தும் மருந்தே!

இதன் பலன் சிறு நீரைப் பெருக்கி கற்களை கரைக்கும்.!

ஈரப்பாங்கான இடங்களில் இது நன்றாக வளர்ந்து இதன் இலைகள் பசுமையாக இருக்கும்.

மற்ற இடங்களில் இலைகள் சிறுத்து பூக்கள் மட்டும் அதிகமாக இருக்கும்.

சாப்பிடும் முறை: இதன் பூ,இலை,தண்டு,வேர் எதுவாகினும் எடுத்து சுமார் 10 கிராம் அல்லது இவைகளை அரைத்தால் நெல்லிக்காய் அளவு . இதனுடன் கரு மிளகு 7 அரைத்தால் கிடைக்கக் கூடிய தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்டும். சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு உணவு சாப்பிடலாம்! பத்தியம் கிடையாது!

இது போன்று இரவும் சாப்பிடனும்.இது நோய்க்கு தக்கவாறு ஏழு நாட்களிருந்து பத்து நாட்கள் வரை சாப்பிடலாம்.

மற்றொரு சாப்பிடும் முறை: இதை வேறுடன் எடுத்து பனை வெள்ளம் சம அளவில் சேர்த்து அரைத்து 200 ml

பாலுடன் கலந்து இருவேளை சாப்பிடலாம்.

இதை உட்கொள்ளும் போது மருந்து வேளை செய்தால் சிலருக்கு வலி வரலாம் பயப்பட வேண்டாம். டாக்டர் வலிக்காக பரிந்துரைத்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.இதை ஆடு, மாடுகள் உண்பதில்லை.

இச்செடி உங்கள் ஊரில் இல்லை என்றால் கவலை வேண்டாம் நாட்டு மருந்து கடைகளில் பவுடராகவும் கிடைக்கிறது.அதை வாங்கி உபயோகப்படுத்தலாம்.

சிறு நீரகக்கல் வந்தவர்கள் ஆபரேஷன் செய்திருப்பினும் மருந்து உட்கொண்டு சரியாகி இருப்பினும் மீண்டும் மீண்டும் தொல்லை தரும்! அப்பொழுதெல்லாம் இதனை உட்கொண்டு உங்கள் உடலையும், பணத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

  • 15
  • 1
·
Added a post

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..

அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்….

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,

உடனே ஒரு ஆப்பிளைக் கடித்து விட்டாள்…பின் இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்... தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்…

உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்.. அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ இதை எடுத்துக்க என்றாள்…

நீஙகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் உங்களுக்கு இருக்கலாம். அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம்.

ஆனால், ஒருவரை பற்றிக் கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும். அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

நீங்கள் அவரைபற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம். எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.

  • 30
  • 17
  • 18
  • 20
·
Added a post

பவளமல்லிமரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. பவளமல்லி சிறுநீரகத்தை காப்பாற்றக்கூடிய மருத்துவத்தன்மை உடையதாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து.

கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. பவளமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது. பவளமல்லி மரத்தின் வேரை மென்றுதின்றால் பல் ஈறுகளில் உருவாகும் வலியை குணப்படுத்தும்.

விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும். இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் உள்ளது. பவளமல்லி விதையை பொடி செய்து அதை எண்ணெய்யில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கையும் மறைந்து முடி வளரும்.

பவளமல்லியை பெண்கள் தலையில் வைப்பதால் பொடுகு பிரச்சனை தீரும். இத்தகைய மூலிகை குணமுடைய பவளமல்லி பல்வேறு வீடுகளில் அழகுப் பொருளாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.

சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்த வட்ட அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும். பவளமல்லி இலைகள் நோய் நீக்கியாக விளங்குகிறது.

பவளமல்லியின் இலைகளில் செய்யப்படும் கசாயம், பருவ காலத்தில் ஏற்படும் படர்தாமரை நோயையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது. வியர்வையை தூண்டக்கூடியது. காய்ச்சலை தணிக்க கூடியது. வலி, வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

பவளமல்லி தேநீர் தயாரிக்க: பவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷ காய்ச்சல்கள் அனைத்தும் விலகிப்போகும். இடுப்பு வலி, கைகால் வலி உள்ளிட்ட வலிகளையும் போக்க கூடியதாக பயன்படுகிறது. பூஞ்சை காளான்களை போக்குகிறது.

  • 33
·
Added a post

பேரரசன் ராஜராஜசோழனின் அரண்மனை. ஒருநாள் மன்னனைப் பார்த்து ‘சோழப்பேரரசே கோவிலுக்காக கொடுத்த நன்கொடைகள் ஏராளம். இருந்தாலும், உங்கள் திருமுகத்தில் தீராத கவலை படிந்திருக்கிறதே என்ன காரணம்?’ என்றார் அமைச்சர்.

மன்னர் கண்மூடி யோசித்தார். நெடுங்காற்றை உள்வாங்கி சீராக மூச்சுவிட்டார். கண் திறந்தார். நிதானமான குரலில் பேசத்தொடங்கினார்.

‘சோழப்பேரரசின் அடையாளம் இந்தப்பெருவுடையார் கோவில். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அழியக்கூடாது என்று தான் கவலைப்படுகிறேன். அரண்மனைகள் தனிச்சொத்து, ஆலயங்கள் மக்கள் சொத்து என்று கருதப்படுமாயின் மக்களுக்கும் இதில் பங்கிருக்க வேண்டும். சோழமண்டலத்தில் கடைக்கோடியில் சிற்றூரில் வாழும் மக்களும் இந்த ஆலயத்தின் பங்குதாரர்களாக மாற்றிவிடும் திட்டத்தைத்தான் சிந்தித்து கொண்டிருக்கிறேன்’ என்றார்.

திட்டம் என்ன மன்னா? அமைச்சர் கேட்டார்.

அதோ அந்த திருவிளக்குகள் செல்வந்தர்களின் நேர்த்தி கடன்களால் எரிகின்றன. தினந்தோறும் கோவில்களில் தீபங்கள் எரிய வேண்டும். அதற்காக ஆடுகளையும், மாடுகளையும் ஏழைகளுக்கு வழங்கப் போகிறேன். அதற்குப்பதிலாக அவர்கள் திருவிளக்குகள் எரிய நெய் தந்தால் மட்டும் போதும். மொத்த வருமானமும் அவர்களுக்கே. அதாவது ஏழையின் அடுப்பும், ஆலயத்தின் திருவிளக்கும் ஒரே திரியில் எரியும். இந்த ஆலயத்தோடு அடித்தட்டு மக்களுக்கு உறவு மேம்படும். இதுதான் என் திட்டம், சரியா?’ என்றார்.

‘மிகச்சரியானது மன்னா’ என்று வணங்கினார்.

அரசன் ஆணை பிறப்பித்தான். ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கால்நடைகளை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள். எந்த நிலையிலும் நிபந்தனை வழங்காது கட்டுப்பாடு வகுத்து கண்காணியுங்கள் என்றான்.

ஒருநாள் கோவில்களை சுற்றி வரும் பொழுது ஒரு கோவிலில் மட்டும் விளக்கு எரியவில்லை. காரணம் கேட்டறிந்தார்.

எவத்தூர் மாராயன் என்பவனுக்கு 42 பசு மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவனுடைய கட்டுப்பாட்டில் எரிய வேண்டிய விளக்கு கடந்த ஏழு நாட்களாக எரியவில்லை என்பதை அறிந்தார்.

‘எவனவன், இறைவன் கட்டளையை நிறைவேற்ற மறுப்பவன். பூட்டுங்கள் தேரை, ஓட்டுங்கள் எவத்தூருக்கு’ என்றான்.

காலி மனையால் சூழப்பட்ட ஒரு குடிசையின் முன் மன்னரின் தேர் நின்றது. ‘பேரரசன் வந்திருக்கிறேன், மாராயா வெளியே வா’ என்று குரல் கொடுத்தார்.

உள்ளே ஒரு பெண்ணின் விசும்பலும், குழந்தையின் அழுகுரலும் கேட்டது.

சற்று நேரத்தில் கதவைத்திறந்து கசங்கிய சேலையும், கலைந்த கூந்தலும், கலங்கிய கண்களுமாய் பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளது இடுப்பில் நாராய் தொங்கிக் கொண்டிருந்தது, சவலை பாய்ந்த குழந்தை ஒன்று. பேரரசரை கண்டதும் அஞ்சி நடுங்கி கீழே விழுந்தாள்.

‘எழுந்திரு பெண்ணே! நீ யார்?’

‘நாந்தாங்க மாராயன் பொஞ்சாதி’

‘உன் கணவன் எங்கே?’

‘என் புரு‌ஷனும், ராசா கொடுத்த மாடுகளும் போன மாசம் காவிரி வெள்ளத்தில் ஆத்தோடு போயிருச்சி...’

அவள் சொல்வது மெய்யா என்பது போல திரும்பிப்பார்த்தார். ஆம்! என்று வருத்தத்தோடு தலை அசைத்தனர் பொதுமக்கள்.

‘உனக்காக வருந்துகிறேன். ஆனால் ஒரு கேள்வி. கடந்த மாதம் இறந்தார் என்கிறாய். ஏழு நாட்களுக்கு முன்பு வரை திருவிளக்கு எரிந்திருக்கிறது. கணவனும், மாடுகளும் இறந்தபின் இருபத்து மூன்று நாட்கள் எப்படி நீ விளக்கு எரித்தாய்?’.

அவள் தேம்பித் தேம்பி அழுதாள். இடுப்பில் நழுவிய குழந்தையை மார்போடு கட்டிக்கொண்டு, ‘அதை மட்டும் கேட்காதீர்கள் மன்னா’ என்று கண்கலங்கினாள்.

‘பெண்ணே! அஞ்சாதே உண்மையைச் சொல்’.

‘சொல்கிறேன் மன்னா! புரு‌ஷன் செத்துப் போயிட்டாலும் ராசாவுக்குக் கொடுத்த வாக்கை மீறக்கூடாது பாருங்க. அதனால என் தாய்ப்பாலை விற்று மூணு ஆளாக்கு நெய் வாங்கி தீபத்தை எரிய வச்சேன். ஒரு வாரமாய் தாய்ப்பால் வத்திப்போச்சு, திரு விளக்கு அத்துப்போச்சு. எங்களை மன்னிச்சிருங்க மகராசா’ என்று குழந்தையோடு தேரின் காலடியில் விழுந்தாள்.

நடந்ததை அறிந்த பெருமூச்சுவிட்ட மன்னன் ராஜராஜன் துடிதுடித்துப்போனான் .கண்கள் கலங்கியது தேகம் சிலிர்த்தது.

தேரைவிட்டு கீழிறங்கி தாயையும் குழந்தையையும் சேர்த்தெடுத்து ‘உன்னைப் போன்றவர்களால் தான் பெருமை அடைகிறது என் சோழப்பேரரசு. இன்று முதல் இந்தத்தாயை திருமஞ்சனப் பணிப்பெண்ணாக நியமிக்கின்றேன். அரண்மனை சிற்பியை அழைத்து #தாய்ப்பாலால் விளக்கெரித்த இவள் பெயரை கல் வெட்டில் பொறித்து விடுங்கள்’ என்றான்.

  • 30
·
Added a post
  • டுகு எண்ணெய் எண்ணற்ற ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவ குணம் கொண்டது. அதில் ஒன்றுதான் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் பண்பு.
  • காரணம் இது தலை முடி வளர்ச்சிக்கு உதவும் பிட்டா கரோட்டின்( beta-carotene) என்ற ஊட்டச்சத்து உள்ளது.
  • இதனால் தலை முடி வேர்கள் ஆரோக்கியமடைந்து முடி உதிராமல் இருக்கும் என்று நம்பபடுகிறது.
  • இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து தலை முடி வேர்களில் தேங்கியிருக்கும் நச்சுகளையும் நீக்கக் கூடியது.
  • கடுகு எண்ணெய்யில் இருக்கும் ஃபேட்டி ஆசிட் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஒமேகா 3 இருப்பது கூடுதல் வலிமையை அளிப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • எனவே கடுகு எண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது மட்டுமன்றி தலையில் தேய்த்து மசாஜும் செய்யலாம்.

பயன்படுத்தும் முறை

  • கடுகு எண்ணெயை பயன்படுத்தும்போது நேரடியாக அப்படியே தலையில் தேய்க்கக் கூடாது.
  • கடுகு எண்ணெய்க்கு சமமாக தேங்காய் எண்ணெய்யும் கலந்து தலையில் தேய்த்து குளிப்பது நல்லது.
  • 41
·
Added a post
  • சமீப காலமாக, இந்தியாவில் - சென்னை பாரிமுனையில், பர்மா உணவுகள் பிரபலம். இங்குள்ள செகண்ட் பீச் லைன் என அழைக்கப்படும் தெரு, அத்தோ கடைகளால் பிசியாக இருக்கிறது.
  • மாலை, 4:00 மணிக்கு துவங்கும் வியாபாரம், இரவு, 10:00 மணி வரை, களை கட்டுகிறது.
  • அத்தோ, மொய்ஞா, தவுசா மற்றும் பேஜோ என, நான்கு வகைகள் மட்டுமே பர்மா உணவு பட்டியலில் உள்ளன. அப்பளம் போல இருக்கும் பேஜோவை நொறுக்கி, வாழைத்தண்டு சூப் மற்றும் முட்டை சேர்த்து, கலக்கி தருகின்றனர்; மற்றவற்றில் சூப் சேர்த்து சாப்பிடலாம்.
  • நமக்கு, இட்லி, தோசை மாதிரி, பர்மாவில் பிரதான காலை உணவு, அத்தோ. இது, சென்னைக்கு அறிமுகமாகி, 50 ஆண்டுகள் ஆகின்றன.
  • மியான்மரில் வசித்த, பாத்திமா பீவி என்ற தமிழ் பெண் அகதியாக சென்னை வந்தார்.வட சென்னையின், சர்மா நகரில், சாலையோரத்தில், சிறிய கடை ஆரம்பித்தார். அதன்பின், தற்போது, பல கடைகள் பெருகியுள்ளன.
  • அரிசி மற்றும் பொட்டுக் கடலை மாவு சேர்த்து, சப்பாத்தி போல் பிசைந்து, அதை அச்சில் இட்டு நூடுல்ஸ் போன்று பிழிகின்றனர். அதனுடன், பூண்டு, வெங்காயம், கொத்துமல்லி, புளி, எலுமிச்சை, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறினால், மொய்ஞா தயார்.
  • இதனுடன், முட்டைக்கோஸ் சேர்த்தால் அத்தோ. இதில் சேர்க்கும் அனைத்தும், வேக வைக்காத பச்சைக் காய்கறிகள் என்பதால், உடலுக்கு தீங்கு விளைவிக்காது; எளிதில் ஜீரணம் ஆகும்.
  • இதை சாப்பிட்டவர்கள் கூறக் கேட்டு, பலரும் வந்து சாப்பிட, இப்படியே, இந்த உணவு பிரபலமாகியது. அசைவ விரும்பிகளுக்காக முட்டை மசாலா மற்றும் சிக்கன் வகைகளும் இருக்கிறது
  • . திரை பிரபலங்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் என பலரும், அத்தோ உணவை தேடி வந்து சாப்பிடுகின்றனர்.
  • சென்னை, செங்குன்றம், வியாசர்பாடி, பாரதியார் நகர், எண்ணுார் மற்றும் கும்மிடிப்பூண்டி போன்ற பகுதிகளிலிருந்து, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் என, தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் பிரபலமாகி வருகிறது, அத்தோ!
  • 40
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

தந்தையுடன் அனுசரித்து செல்லவும். எதிர்காலம் குறித்த கவலைகள் தோன்றி மறையும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். மற்றவர்களை பரிந்துரை செய்வதை தவிர்க்கவும். சக ஊழியர்கள் இடத்தில் சூழ்நிலையறிந்து செயல்படவும். நீணட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

 

ரிஷபம்

அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்கல்வி குறித்த தெளிவுகள் உண்டாகும். யூக வணிக செயல்களில் கவனம் வேண்டும். கலை துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

மிதுனம்

மனை சார்ந்த வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் மாற்றம் ஏற்படும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கடகம்

சொத்து விற்பது வாங்குவதில் லாபமான சூழல் அமையும். புதிய மின்சார பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் வழியில் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். அக்கம் பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் பிறக்கும். உற்சாகம் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

சிம்மம்

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்களின் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். இழுபறியான வேலைகளை சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். கனிவான பேச்சுக்களால் நன்மைகள் உருவாகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கன்னி

பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வெளி ஆட்களுடன் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

துலாம்

குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் நலத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். வியாபாரத்தில் மத்தியான லாபங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுகமான தடைகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மறதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

விருச்சிகம்

உயர்கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். அரசால் ஆதாயம் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தனம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

தனுசு

செயல்களில் துரிதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

மகரம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சகோதர வகையில் காரிய அனுகூலம் ஏற்படும். நன்மை பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கும்பம்

மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். உடல் நலத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். நெருக்கடியான சூழல்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். உத்தியோகத்தில் கேலி பேச்சுகள் ஏற்பட்டு நீங்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

மீனம்

மனதை உருத்திய சில கவலைகள் குறையும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை மேம்படும். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். வெளியூர் தொடர்பான பொருள்கள் மூலம் ஆதாயம் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

  • 39
·
Added a post

விசுவாவசு வருடம் ஆடி மாதம் 14 ஆம் தேதி புதன்கிழமை 30.7.2025

இன்று அதிகாலை 02.29 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று இரவு 11.52 வரை வரை அஸ்தம். பின்னர் சித்திரை.

இன்று அதிகாலை 04.42 வரை சிவம். பின்னர் சித்தம்.

இன்று அதிகாலை 02.29 வரை பாலவம். பின்னர் மாலை 03.14 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று அதிகாலை 05.55 வரை சித்த யோகம். பின்னர் இரவு 11.52 வரை மரண யோகம். பிறகு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=60&dpx=1&t=1753880983

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 45

Good Morning...

  • 31
  • 154
  • 165
  • 155
·
Added a news

கனடாவில் வன்கூவரின் டவுன்டவுன் பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், வன்கூவர் நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள ஹவ் தெருவில், இரவு 11.40 மணியளவில் வழியே சென்ற ஒருவர் 911-ஐ அழைத்ததினால் வெளியாகியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரும், பிற அவசர சேவை ஊழியர்களும் சிறுவனுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

ஆனால், சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வன்கூவர் பொலிஸ் திணைக்களத்தின் பேச்சாளர் சார்ஜென்ட் ஸ்டீவ் அடிசன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்க முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தையடுத்து, ராப்சன் சதுக்கம் மற்றும் சுற்றியுள்ள தெருக்கள் காவல்துறையினரால் மூடப்பட்டன. இவ்வழக்கைச் சார்ந்த மேலதிக தகவல்களுக்கோ அல்லது உதவிக்கோ, வன்கூவர் காவல்துறையிரை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 1195

டோரி தீவு, அயர்லாந்து

  • 1198
  • 1209
  • 1245