·   ·  2 videos
  •  ·  3 friends
  • B

    S

    3 followers
  • 1583
  • More

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோமாதுளையின் பூப்போலே

மலருகின்ற இதழோ

மாதுளையின் பூப்போலே

மலருகின்ற இதழோ

மானினமும் மீனினமும்

மயங்குகின்ற விழியோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ

நீந்துகின்ற குழலோபுருவமொரு வில்லாக

பார்வையொருக் கணையாக

புருவமொரு வில்லாக

பார்வையொருக் கணையாக

பருவமொரு களமாகப்

போர் தொடுக்கப் பிறந்தவளோ

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

தேன் சுவையைத் தான் குழைத்து

கொடுப்பதெல்லாம் இவள் தானோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோபவழமென விரல் நகமும்

பசுந்தளிர் போல் வளை கரமும்

தேன் கனிகள் இருபுறமும்

தாங்கி வரும் பூங்கொடியோஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ

ஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ

யாழிசையின் ஒலியாக

வாய்மொழி தான் மலர்ந்தவளோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோசெந்தழலின் ஒளி எடுத்து

சந்தனத்தின் குளிர் கொடுத்து

பொன் தகட்டில் வார்த்து வைத்த

பெண்ணுடலை என்னவென்பேன்

மடல் வாழைத் துடையிருக்க

மச்சம் ஒன்று அதிலிருக்க

மடல் வாழைத் துடையிருக்க

மச்சம் ஒன்று அதிலிருக்க

படைத்தவனின் திறமை எல்லாம்

முழுமை பெற்ற அழகியென்பேன்நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோ

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

மேஷம்: மனதில் இருந்த அச்சம், கவலைகள் நீங்கி, நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று காசாக்குவீர்கள்.

ரிஷபம்: உங்கள் மனதுக்குப் பிடித்த புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுங்கள். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும்.

மிதுனம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். வெளி உணவுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டி அதிகரித்தாலும், சமாளிப்பீர்கள். பல வகையிலும் பொருட்கள் சேரும்.

கடகம்: வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும். புதியவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். பேச்சில் பொறுமை தேவை.

சிம்மம்: பழைய பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்த கடன் உதவி கிடைக்கும்.

கன்னி: இழுபறியாக இருந்த வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடியும். பெற்றோர் உடல்நலம் சீராகும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பண வரவு உண்டு.

துலாம்: வெகு நாட்களாக மனதை வாட்டிய பிரச்சினைக்கு முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். தொழில், வியாபாரத்தில் ஊழியர்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்றுவார்கள்.

விருச்சிகம்: போட்டிகள், சவால்களை எதிர்கொள்வீர்கள். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வெளி உணவுகளை தவிர்ப்பது அவசியம். வியாபாரத்தில் நிதானம் தேவை.

தனுசு: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் நீங்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரி அன்பு காட்டுவார். சுறுசுறுப்பாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள்.

மகரம்: உங்களது எதார்த்தமான, சாமர்த்தியமான பேச்சால், தடைபட்ட காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் போட்டி விலகும்.

கும்பம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வாகனச் செலவுகள் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் மறையும். ஆன்மிகம், யோகா, தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மீனம்: எதிர்மறை எண்ணங்கள் மறையும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். கையில் காசு பணம் புரளும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

  • 17
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 1 ஆம் தேதி திங்கட்கிழமை 15.6.2026.

இன்று காலை 09.27 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

இன்று இரவு 09.05 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.

இன்று காலை 10.17 வரை சூலம். பின்னர் கண்டம்.

இன்று காலை 09.27 வரை நாகவம். பின்னர் இரவு 08.12 வரை கிமிஸ்துக்கினம். பிறகு பவம்.

இன்று அதிகாலை 05.53 வரை சித்தயோகம். பின்னர் இரவு 09.05 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=545&dpx=2&t=1781505595

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 19

Good Morning...

  • 22
·
Added a post

குரு ஒருவரிடம் பல சீடர்கள் குருகுலத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்தார்கள். வேதங்கள், புராணங்கள், கடவுளரது தர்ம தத்துவங்கள் போன்றவற்றை குரு தன் சீடர்களுக்கு தினமும் போதித்து வந்தார்.

ஒருநாள் அவர் கடவுளைப் பற்றி சில மெய்ஞான விளக்கங்களைக் கற்பித்துக்கொண்டிருந்தார். அப்போது மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சீடர்களில் ஒரு சீடன் மட்டும் கேள்வி ஒன்றை எழுப்பினான்.

சீ டன் கேட்ட கேள்வி இதோ!

"குருவே! கடவுள் உண்மையிலேயே இருக்கின்றாரா? அப்படியெனில் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்?"

குரு சற்றே புன்னகைத்தார். அவர் தன் சீடனை நோக்கி, "சீடனே! கடவுள் அனைத்து இடங்களிலும் வீற்றிருக்கிறார். மேலும் அனைத்து உயிர்களுக்கு உள்ளே உரைந்துள்ளார். இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து உயிருள்ள ஜீவராசிகள் மற்றும் உயிரற்ற பொருட்களிலும் வாசம் செய்கிறார். எல்லாமே கடவுளின் அம்சம்தான். அதை உணரும் அறிவையும் ஞானத்தையும் நாம் இன்னும் பெறவில்லை." என்று பக்தி மனம் கமழ விடையளித்தார்.

சீடன் அகம் மகிழ்ந்து "அருமையான விளக்கம் அளித்தீர் குருவே! என் ஐயம் தீர்ந்தது. நான் இனி அனைவற்றிலும் இறைவனைக் காண்பேன்!" என்று கூறினான்.

மறுநாள் சீடர்கள் அனைவரும் குருகுலப் பாடங்கள் முடிவடைந்து மாலை நேரத்தில் தினமும் வரும் கானகத்தின் வழியே வீட்டிற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக யானையின் முரட்டுப் பிளிரல் சத்தம் ஒன்று கேட்டது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று சீடர்கள் ஆராய்வதற்கு முன்னரே மதம் கொண்ட யானை ஒன்று சற்று தொலைவிருந்து சீடர்கள் நடந்து வந்த திசை நோக்கி ஓடி வந்தது. யானையின் மேல் அமர்ந்திருந்த பாகன் வழியில் நடந்துகொண்டிருந்த சிலரை கவனித்து உரத்த குரலில் "யானைக்கு மதம் பிடித்துவிட்டது. அனைவரும் ஓடிவிடுங்கள்! வழியில் நிற்கவேண்டாம்!" என்று எச்சரித்தான்.

இதைக் கேட்ட நமது குருவின் சீடர்களும் மற்றவரும் தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர். சிலர் தாம் எடுத்து வந்திருந்த உடைமைகளைக் கூட பொருட்படுத்தாமல் கீழே போட்டுவிட்டு ஓடினர்.

ஆனால் நமது குருவிடம் சந்தேகம் கேட்ட ஆர்வக்கோளாறு சீடனோ யானையின் வழித்தடத்தில் பொம்மைபோல் அசையாமல் நின்றுகொண்டிருந்தான். மற்ற சீடர்களுள் ஒருவன், "நீ ஏன் மரம் போல் நின்று கொண்டிருக்கிறாய்? எங்களுடன் வா!" என்று அவன் கையைப் பிடித்து இழுத்தான்.

ஆனால் ஆர்வக்கோளாறு சிறுவனோ தனது நண்பனின் கையை உதறிவிட்டான். "என்னை விடு! நான் வரமாட்டேன்! குரு கூறியதை நீ மறந்துவிட்டாயா? கடவுள் அனைத்து உயிர்களிலும் வாசம் செய்பவன். இந்த மதம் கொண்ட யானையிலும் கடவுள் இருக்கின்றார். அவர் என்னை எதுவும் செய்யமாட்டார். நீ செல்! நான் இங்கேயே இருப்பேன்!" என்று பொறுமையுடன் கூறினான்.

உடனே நண்பன், "அடே மூடனே! உன் அறிவீனச் செயலுக்கு இது நேரமில்லை. வா ஓடலாம்!" என்று பதட்டத்துடன் கூறினான். அப்பொழுதும் ஆர்வக்கோளாறு சீடன் செல்லமறுத்துவிட்டான்.

யானை சீற்றத்துடன் சீடனை நோக்கி வேகமாக வந்தது. நண்பன் பயந்து ஓடத்தொடங்கினான். "நண்பா! வேகமாக ஓடிவிடு! நிற்காதே!" என்று கூவிக்கொண்டே நண்பன் ஓட்டம் பிடித்தான். யானை மிக அருகில் வந்துவிட்டது. பாகனோ, "பாலகா! நான் கூறுவது உன் செவியில் விழவில்லையா? யானை என் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. வேகமாக ஓடிவிடு!" என்று கத்தியதோடு செய்கையிலும் சீடனை ஓடச்சொன்னான்.

யார் கூறியும் நமது சீடன் கல்தூண் போல் அசையாமல் நின்றார்.

யானை சீடனருகில் வந்து பலுதூக்கும் வீரரைப் போல் சீடனைத் தூக்கி, சிலம்பாட்ட வீரரைப் போல் சீடனை சில முறை சுழற்றி, கம்பு எரியும் வீரரைப் போல் சீடனை தூக்கி வீசியது. மட்டைப்பந்து போட்டியில் எப்படி பந்து எல்லைக்கோட்டைத் தாண்டி பறந்து செல்லுமோ அப்படி சீடனும் பறந்து சென்று மாமரக்கிளைகளுக்கிடையில் சிக்கி கீழே விழுந்தான். அவனது நல்ல நேரம் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினான்.

யானை பிளிரிக்கொண்டே வெகுதூரம் சென்றுவிட்டது. சீடனை யானை தூக்கி வீசியதைக் கண்ட சீடனின் நண்பர்கள் காயங்களுடன் மயங்கியிருந்த அவனை அருகிலிருந்த கிராமத்தில் உள்ள வைத்தியசாலைக்கு விரைவாக அழைத்துச்சென்றனர். பல மூலிகைகளை உடலின் காயங்களுக்குத் தடவி வைத்தியர் சீடனுக்குச் சிகிச்சை செய்தார்.

சீடன் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பிதற்றிக்கொண்டிருந்தான்.

சீடனின் நண்பர்கள் அவனுடன் நாள் முழுவதும் இருந்தனர். இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வைக் கேள்வியுற்று குருநாதர் சீடனைக் காண வைத்தியசாலைக்கு வந்தார். அவர் சீடனிடம், "ஏன் இப்படிச் செய்தாய்? யானை அருகில் வருமுன் ஓடியிருக்கலாமல்லவா? இத்தனை துயரம் உனக்குகெதற்கப்பா?" என்று அன்புடன் வினவினார்.

சீடன் குருவிடம், "குருவே! நீங்கள் சொன்ன போதனையின்படி மதம் கொண்ட யானையிலும் கடவுள் உள்ளார் அல்லவா? அப்படியிருக்க யானை என்னை தூக்கி வீசியதையும் யானையின் உள்ளிருந்து கடவுள் ஏன் வேடிக்கை பாத்துக்கொண்டிருந்தார்? அவர் என்னை காப்பாற்றியிருக்கலாமல்லவா? யானையின் கோபத்தை நீக்கியிருக்கலாமல்லவா?" என்று வலியுடன் கேட்டான்.

குருநாதர் அளித்த விடை சீடனுக்கு சரியான ஞானத்தை வழங்கியது.

"சீடனே! மதம் பிடித்த யானையில் கடவுளைக் கண்ட நீ , உன்னை பல முறை எச்சரித்த யானைப்பாகன் மற்றும் உனது நண்பனுக்குள்ளும் கடவுள் இருப்பதை உணர மறுத்தது ஏன்? அந்த இரு கடவுளரும் உன்னைக் காப்பாற்ற நினைத்தார்களல்லவா? அவர்களுக்குள் கடவுள் வந்து உன்னை காப்பாற்ற முயன்றபோதும் நீ செவிசாய்க்காமல் யானையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாயல்லவா? நான் நேற்று என்ன கூறினேன்? கடவுள் அனைத்திலும் உள்ளார். அவரை கண்டறியும் அறிவையும் ஞானத்தையும் பெற முயலவேண்டும் என்றேன். இப்போது புரிகிறதா? கடவுள் நம்மைச் சுற்றியே எப்போதும் வீற்றிருக்கிறார். நாம்தான் கடவுளின் கட்டளையைப் பகுத்தறிவைக் கொண்டு புரிந்துகொள்ளாமல் எங்கேயோ வேடிக்கை பார்ததுக்கொண்டிருக்கின்றோம். இதுவே அனைத்து துன்பங்களுக்கும் காரணமாகும்! உடலை நன்கு தேற்றிக்கொண்டு பின்னர் பாடசாலைக்கு வா!" என்று குருநாதர் கூற சீடனுக்கு தெளிவு பிறந்தது.

  • 101
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். உத்தியோகப் பணிகளில் மேன்மை ஏற்படும். பயனற்ற சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். மனதை உறுத்திய கவலைகள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

ரிஷபம்

தற்பெருமை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈர்ப்புகள் உண்டாகும். சில செயல்களில் கட்டுப்பாடுடன் இருக்கவும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றங்கள் உருவாகும். விலையுயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வேலையாட்களிடம் ஒத்துழைப்பு உருவாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மிதுனம்

தாய்மாமன் வழியில் அனுசரித்து சென்றால் சாதகமான சூழ்நிலைகள் அமையும். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரப் பணிகளில் முக்கியமான சில பிரமுகர்களின் அறிமுகங்கள் ஏற்படும். இனம் புரியாத சில நினைவுகள் மூலம் கவலைகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்

கடகம்

சபை சார்ந்த துறைகளில் பொறுமையை கையாள வேண்டும். மனதில் நினைத்த எண்ணங்களை செய்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்புடன் இருப்பார்கள். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உயர்கல்விகளில் இருந்த குழப்பங்கள் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். பெருந்தன்மையான செயல்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி

வியாபாரப் பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூரப் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

துலாம்

தனவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர்

விருச்சிகம்

சுபகாரிய எண்ணங்கள் கைக்கூடும். மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். தவறிப்போன சில பொருட்களைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் உண்டாகும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். அரசு பணிகளில் ஆதரவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

தனுசு

திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். புதிய பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய தொடர்பான முயற்சிகள் கைகூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மகரம்

பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் ஏற்படும். கால்நடைகள் மூலம் லாபம் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கும்பம்

வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு செயல்பாடுகளில் இருந்த தாமதங்கள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

மீனம்

உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். தந்தையின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இழுபறியான செயல்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். செய்கின்ற முயற்சிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

  • 200
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 14.6.2026.

இன்று காலை 11.49 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

இன்று அதிகாலை 12.15 வரை கிருத்திகை. பின்னர் இரவு 1041 வரை ரோகிணி. பிறகு மிருகசீரிடம்.

இன்று பிற்பகல் 01.17 வரை திருதி. பின்னர் சூலம்.

இன்று அதிகாலை 01.01 வரை பத்திரை. பின்னர் பின்னர் காலை 11.49 வரை சகுனி. பின்பு இரவு 10.38 வரை சதுஷ்பாதம். பிறகு நாகவம்.

இன்று இரவு 10.41 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=544&dpx=2&t=1781409068

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை: 02.00 முதல் 03.00 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 209

Good Morning...

  • 205
·
Added article

சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இதில், சுஹாஸ், மஹிமா நம்பியார் , சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக் ஷன் ட்ராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

கடலின் பிரமாண்டமான பின்னணியிலும், பரபரப்பான படகுப்பந்தய உலகத்தையும் மையமாகக் கொண்டு நகரும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர். 4ஆம் தேதி வெளியாகிறது.

  • 268
·
Added a news

கனடாவுக்கு எதிராக டொரண்டோ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற பி குழுவுக்கான பீபா உலகக் கிண்ணப் போட்டியை 1 - 1 என்ற கோல்கள் கணக்கில் பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

இப்போட்டி முடிவை அடுத்து இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுக்கொண்டன. ஆரம்பம் முதல் கடைசிவரை விறுவிறுப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியின் 21ஆவது நிமிடத்தில் ஜோவோ லூக்கிக் கோல் போட்டு பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினாவை முன்னிலையில் இட்டார்.

இதனைத் தொடர்ந்து வரவேற்பு நாடான கனடா தனது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது. போட்டியின் 77ஆவது நிமிடம் வரை பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா முன்னிலையில் இருந்தது.

போட்டியின் 78ஆவது நிமிடத்தில் கய்ல் லெரின் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தி கனடா அணிக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. ஆனால் அந்த முயற்சிகள் கைகூடாமல் போக போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

  • 266
  • 265
  • 268
  • 267
  • 267
  • 264
  • 265
  • 263
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வீட்டை விரிவு படுத்தி கட்டுவீர். அண்டை அயலாருடன் இருந்து வந்த கருத்துமோதல் விலகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

ரிஷபம்: மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று அலைச்சல் இருக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பீர். அலுவலகரீதியான பயணங்கள் அலைச்சல் தரும்.

மிதுனம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

கடகம்: விலையுயர்ந்த கலைப் பொருட்கள் வாங்குவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சி மேற்கொள்வீர். மனைவிக்காக புது ஆபரணங்களை தேர்ந்தெடுப்பீர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் அதிரடியாக செயல்பட்டு நல்ல லாபமீட்டுவீர்கள்.

சிம்மம்: சேமிக்கும் அளவுக்கு பணம் வரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி உண்டு. புது சிந்தனையால் தெளிவு பெறுவீர். பூர்வீக சொத்து பிரச்சினையில் தீர்வு கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கன்னி: வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திடீர் யோகம் உண்டாகும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

துலாம்: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகவும். தம்பதிக்குள் மனக்கசப்புகள் வரக்கூடும். பூர்வீக சொத்து வழக்கில் இருந்த இழுபறி நீடிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் ஆதரவு தருவார்கள்.

விருச்சிகம்: பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் உயரதிகாரி விஷயங்களை பகிரும் அளவுக்கு நெருக்க மாவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.

தனுசு: தாயாரின் மருத்துவச் செலவு குறையும். உடன் பிறந்தோர் ஒத்தாசையாக நடந்து கொள்வார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மகரம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவர். சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். கடையில் சில மாற்றங்களை செய்து வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். தந்தைவழியில் நிம்மதியுண்டு. உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மீனம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர். மனைவியின் சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வரும். சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

  • 340
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை 13.6.2026.

இன்று பிற்பகல் 02.12 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. 

இன்று அதிகாலை 01.47 வரை பரணி. பின்னர் கிருத்திகை.

இன்று மாலை 04.15 வரை சுகர்மம். பின்னர் திருதி.

இன்று அதிகாலை 03.19 வரை கரசை. பின்னர் பிற்பகல் 02.12 வரை வணிசை. பிறகு பத்திரை.

இன்று அதிகாலை 05.51 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=543&dpx=2&t=1781329650

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 343

Good Morning...

  • 345
·
Added a news

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள கார்டன் ரிவர் பழங்குடியினப் பகுதியில், கஞ்சா புகைப்பதாக நினைத்து வீரியமிக்க போதைப்பொருள் கலந்த கலவையைப் பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒருவர் இதேபோன்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனிஷினாபெக் காவல்துறை எச்சரித்துள்ளது.

கடந்த வார இறுதியில் இந்த இரண்டு அதிர்ச்சிகரமான சம்பவங்களும் நடந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் கஞ்சா விற்பனை நிலையத்தில் இருந்து வாங்கப்பட்ட கஞ்சாவையே பயன்படுத்தியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, கார்டன் ரிவர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் சில இளைஞர்கள் இணைந்து, 'பாங்' எனப்படும் புகைபிடிக்கும் கருவி மூலம் கஞ்சா புகைத்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு இளைஞருக்கு போதை தலைக்கேறி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த அந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது. அவருடன் புகைபிடித்த மற்றவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கடுத்ததாக நடந்த இரண்டாவது சம்பவத்திலும், ஒரு குழுவினர் கஞ்சா என நினைத்து அதேபோன்று புகைத்துள்ளனர்.

அதில் ஒரு சிறுவனுக்கு கடுமையான வலிப்பு (Seizures) மற்றும் போதை அதிகரித்ததற்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அச்சிறுவன் இன்னமும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுன்றது.

இந்த விவகாரம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

  • 436
  • 431
  • 428
  • 430
  • 430