ஒருவர் தனது வயிறு சரியில்லை என்று ஒரு மருத்துவமனைக்கு செல்கின்றார்..அங்கு ஒரு மருத்துவரை சந்திக்கின்றார்...
பேஷண்ட் :- டாக்டர் எனக்கு கொஞ்ச நாளாவே வயிறு சரியில்ல'''' ஒரே காத்தா போகுது டாக்டர் """"
டாக்டர் :- ""என்ன காத்தா போகுதா ?"""எந்த கலர்ல போகுது வெள்ளையாவா ?"""
பேஷண்ட்::- """கலர்லம் இல்லை டாக்டர் இல்லை டாக்டர் கொஞ்சம் சத்தமா போகுது """""".
டாக்டர் :-- அப்போ இது கொஞ்சம் சீரியஸான விஷயம்தான்....நீங்க அரைஞாண் கயிறு கட்டியிருக்கீங்களா?""
பேஷண்ட் :- ஹ்ம்ம் ஆமாம் டாக்டர் கட்டியிருக்கேன்..
டாக்டர் :- அப்போ நான் கொடுக்கிற இந்த மாத்திரையை நீங்க உங்க அரைஞாண் கயிறுல தாயத்து மாதிரி கட்டிக்கோங்க அப்புறம் மஞ்சள் அது கூட மஞ்சள் துணி குங்குமம் எல்லாம் வெச்சி சேர்த்துக் கட்டிக்கோங்க...காத்து கருப்பெல்லாம் உங்களை அண்டவே அண்டாது
பேஷண்ட்:- குழப்பத்துடன் """ஹ்ம்ம் என்ன இந்த டாக்டர் """ஒரு """மாதிரியா பதில் சொல்றார் ????""""மெதுவாக டாக்டரை பார்த்துவிட்டு சொல்கின்றார் சார் நான் கொஞ்சம் தண்ணீர் குடிச்சிட்டு வந்துடறேன்...
டாக்டர்:- சரி போங்க போங்க....
பேஷண்ட்: வெளியே வந்ததும் இருவரை விசாரிக்கின்றார்...அவர்கள் சொன்ன பதில் நீங்க வந்தது சரியான ஆஸ்ப்பிட்டல் தான் ஆனா நீங்க பார்த்தது ஒரு மனநோயாளிகள் பிரிவில இருந்து தப்பிச்சிட்டு வேற ஒரு பிரிவிற்கு ஓடி வந்துட்ட மன நிலை பாதிக்கப்பட்ட "சாமியாடி "..தான்...நல்ல வேளை நீங்க தப்பிச்சிட்டீங்க என்றதுமே பேஷண்ட் தலை தெறிக்க ஓடுகின்றார்....
