என்ன ஒரு அழகான நடை
நேர்த்தியான நடைபயிற்சி
கனடாவின் எட்ம;ண்டன் நகரத்தின் வடக்கே உள்ள நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பீவர் ரிவர் பாலம் அருகே ஹைவே 897-ல், ஃபோர்டு F-350 வாகனமும் ஒரு மினிவேனும் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அந்த மினிவேனில் 5 வயது சிறுமி, 10 மாத குழந்தை, 27 வயதான தாய் மற்றும் 30 வயதான ஆண் ஒருவர் பயணம் செய்திருந்தனர்
இந்த விபத்தில் மூவரும் பல்வேறு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கனடிய பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மேற்கொண்ட விசாரணையில், விபத்தில் ஈடுபட்ட ஃபோர்டு F-350 வாகனம், மூன்று நாட்களுக்கு முன்பு சாஸ்காட்சுவானின் லாஷ்பர்ன் பகுதியில் திருடப்பட்டதாகவும், விபத்துக்குப் பிறகு அதன் ஓட்டுநர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரியவந்தது.
காயமடைந்த குடும்பத்துக்கு உதவுவதற்காக நின்றிருந்த ஒருவரின் காரையும் அந்த நபர் திருடிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.அந்த திருடப்பட்ட வாகனம் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதுவும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. இதையடுத்து, அடிக்கடி குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் வசிக்கும் இடங்களில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
புதியதாக திருமணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ திடீரென ஒரு நாய் குரைத்துக்கொண்டு ஓடி வந்தது.
தங்கள் இருவரையும் கடிக்கப் போகிறது என தம்பதிகள் நினைத்தார்கள். மனைவி பயந்து நடுங்கினாள்.. ஆனால் நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர் தன் மனைவியை தூக்கி கொண்டார். நாய் கடித்தால் தன்னை மட்டும் கடிக்கட்டும். தன் மனைவி தப்பி விடுவாள் என நினைத்தார்.
ஓடிவந்த நாய் வேறு திசையில் ஓடிச் சென்றது. நிம்மதியான கணவன் பிறகு மனைவியை இறக்கி விட்டார்.
தன்னுடைய நற்செயலுக்காக தன்னுடைய புது மனைவி தன்னை பாராட்டுவாள் என எதிர்பார்த்தார். அடுத்த கணமே மனைவி கோபமாக, "எல்லோரும் நாய் வந்தால் கல்லைத் தூக்கி எறிவார்கள்.... ஆனால் தன் மனைவியையே தூக்கி நாய் மேல் எறியும் கணவனை இப்போதுதான் நான் பார்க்கிறேன்" என்றாள்.
-------
நீதி: இப்படிதான் பல அப்பாவி கணவன்மார்கள் நல்லது செய்யப்போய் கெட்ட பேர் வாங்குகிறார்கள்...!
முற்காலத்தில் தென்பாண்டி நாட்டை வசுசேனன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது. மன்னனும் அவர் மனைவி காந்திமதியும் சிறந்த சிவபக்தர்கள். பரிபூரண ஆயுள் கொண்ட இருவருக்கும் இந்த ஜன்மத்தில் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்த அன்னை பார்வதி தேவியார், "உங்களை அனுதினமும் மறக்காது பூஜிக்கும் பக்தர்களை இப்படி மனம் வாடவிடலாமா? அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் அருளக்கூடாதா?" என்று ஈசனிடம் கேட்டார்.
அதற்குச் சிவபெருமான், "இந்த ஜன்மத்தில் அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது விதி. ஆனால், நீ பூலோகத்தில் பிறந்து, அவர்களுடைய குழந்தையாக வளர்வாயாக. உரிய நேரத்தில் யாம் வந்து உம்மைத் திருமணம் செய்துகொள்வோம்!" என்று அருள் வழங்கினார்.
அதே தினத்தில், வசுசேனரும் காந்திமதியும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது, தாமரை மலர் மேல் ஒரு சங்கைக் கண்டெடுத்தார்கள். அவர்கள் கையில் எடுத்ததும் அது அழகிய பெண் குழந்தையாக மாறியது. அது, ‘இறைவனே அனுப்பிய குழந்தை’ என்றுணர்ந்து அதற்கு ‘ராஜராஜேஸ்வரி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
சக்தியே குழந்தை வடிவாக பூமியில் இருப்பதால், குழந்தையை கவனமாக வளர்ப்பதற்கென, சப்தமாதாக்களில் ஒருவரான சாமுண்டியையும் பூமிக்கு அனுப்பினார் இறைவன். குழந்தையின் வளர்ப்புத் தாயாக உருவெடுத்து வந்த சாமுண்டீஸ்வரி, ஆய கலைகள் அனைத்தையும் குழந்தை ராஜராஜேஸ்வரிக்குக் கற்றுக்கொடுத்தாள். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த இளவரசி, குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னிகரற்று விளங்கினாள்.
அவள் திருமண வயதை எட்டியபோது, "என் மகளை சதுரங்க விளையாட்டில் யார் வெல்கிறார்களோ, அவர்களுக்கே அவளை மணம் முடித்துத் தருவேன்" என்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார் மன்னர்
பல நாட்டு இளவரசர்களும் இளைஞர்களும் வந்தபோதிலும், யாராலும் ராஜராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வெல்ல முடியவில்லை. அனைவரும் தோற்றுப் போயினர். இதனால் கவலையுற்ற மன்னர், ‘யாருமே அவளை வெல்லமுடியவில்லையே! தம் மகளுக்குத் திருமணமே முடியாமல் போய்விடுமோ?’ என்று சஞ்சலமடைந்தார். ‘இனி சிவபெருமானிடமே முறையிடுவோம்’ என்று எண்ணியவராக, குடும்பத்தோடு காவிரியின் தென்கரையிலுள்ள சிவாலயங்களைத் தரிசிக்க தல யாத்திரை கிளம்பினார். பல சிவாலயங்களைத் தரிசித்த பின்னர் திருபூவனூர் வந்தனர். புஷ்பவன நாதரைத் தரிசித்து, தன் மனதின் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு, குடும்பத்துடன் அந்த ஊரிலேயே தங்கினார் மன்னர்.
மறுநாள் காலையில், வயோதிகர் ஒருவர் மன்னரைச் சந்தித்து, ‘‘என்னுடன் உங்கள் மகளால் சதுரங்கம் ஆடமுடியுமா?’’ என்று கேட்டார். அரசன் சம்மதிக்க, ஆட்டம் தொடங்கியது. அதுவரை சதுரங்கத்தில் தோல்வியே கண்டிராத ராஜராஜேஸ்வரி, அந்த முதியவரிடம் தோற்றுவிட்டாள்.
அரசருக்கு தனது அறிவிப்பு நினைவில் வந்தது. "இப்படி வயதில் முதிர்ந்த ஒருவருக்கு தன் இளம் மகளை எப்படித் திருமணம் செய்து கொடுப்பது?" என்று பெருங்கவலை ஏற்பட்டது. மீண்டும் அவர் சிவனாரைத் தியானிக்க, அங்கே முதியவர் மறைந்து சாட்சாத் சிவபெருமானே தோன்றினார். சதுரங்க ஆட்டத்தில் வென்று, ராஜராஜேஸ்வரியை மணந்ததால், அவருக்குச் ‘சதுரங்க வல்லபநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. அன்னை ராஜ ராஜேஸ்வரிக்கும் வளர்ப்புத் தாயாக வந்த சாமுண்டீஸ்வரிக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. இங்கு வந்து சதுரங்க வல்லப நாதரை வேண்டிக்கொண்டால் சதுரங்க விளையாட்டில் நல்ல தேர்ச்சி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பாகற்காயை ஜுஸ் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். நீரழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது.
சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை சிறப்பாக செயல்படுவதற்கு பாகற்காயானது உதவுகிறது. பாகற்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் நீக்கபடுகிறது.
சிறு நீரகத்தில் உள்ள கற்களை கரைப்பதற்கும் உதவுகின்றது. பாகற்காயானது உடலின் செரிமான மண்டலத்தை நன்றாக தூண்டுகிறது. இதனால் உணவு நன்றாக செரிமானம் ஆகின்றது.
கல்லீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமடைகிறது. பாகற்காய் ஆஸ்துமா, இருமல் போன்றவற்றை தீர்ப்பதில் மிகச் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.
பாகற்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும். பாகற்காயை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
விவேகானந்தர் இங்கிலாந்தில் இருந்தபோது ஒரு பண்ணையைப் பார்க்கச் சென்றிருந்தார். அப்போது அந்தப் பண்ணையில் இருந்த ஒரு காளை, கட்டை அவிழ்த்துக் கொண்டு ஆவேசமாக ஓடி வந்தது.
அங்கிருந்த அனைவரும் தலை தெறிக்க ஓடினர். ஆனால் விவேகானந்தர் மட்டும் அசையாமல் நின்று காளையையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காளை அவருக்குப் பக்கத்தில் வந்து சிறிது நேரம் அவரை ஏறிட்டுப் பார்த்து விட்டுத் திரும்பிப் போய்விட்டது.
பின்னர் அங்கிருந்த பணியாளர்கள் விவேகானந்தரை “சுவாமி! எந்த தைரியத்தில் நெருங்கி, "சுவாமி! அசையாமல் நின்று கொண்டிருந்தீர்கள்..? என்று கேட்டனர்.
அதற்கு விவேகானந்தர், என்னைத் தூக்கி எறிந்தால் நான் எவ்வளவு உயரம் மேலே போயிருப்பேன் என்று கணக்கிட்டுக்கொண்டு இருந்தேன்..'என்றாராம் அமைதியாக.
விவேகானந்தரின் உடல் பலமும் மனோ பலமும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சிவாஜி ஒரு பாடலை இரண்டு முறை கேட்டவுடன் அதற்கு ஏற்றது போல நடிக்க அரங்குக்கு வந்து விடுவார். ஆனால் ஒரு பாடலை 11 முறை கேட்டும் அவரால் நடிக்க முடியவில்லை
'கௌரவம்' படத்திற்காக அவர் பாடிய அந்தப் பாடல்.
'நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா...'
11 தடவைக்கும் மேல் ஆழ்ந்து கேட்ட சிவாஜி..... இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்திடம்
'சுந்தரா...
கொஞ்சம் டைம் கொடு. சூட்டிங்கை அப்புறம் வச்சிக்கலாம்னு சொல்ல,
டைரக்டர் ஒரே பதற்றம்...
ஏதும் பிரச்சனையா...'ன்னு கேட்டாராம்.
அதற்கு சிவாஜி,
'இல்லை சுந்தரா...
இந்தப் பாடலுக்கு டிஎம்எஸ் அண்ணா எனக்கு ஒரு சவால் விட்டுள்ளார்.
அவரே நடிகருக்கான வேலை அத்தனையையும் குரலில் செய்து விட்டார். அப்படி என்றால் நான் எப்படி நடிக்க வேண்டும்?
பாடலின் பல்லவியை ஒரு இடத்தில் ஒரு மாதிரியும், இன்னொரு இடத்தில் வேறு மாதிரி உணர்ச்சிகளுடனும் பாடி அசத்தியுள்ளார்.
பல்லவியில் ஒருவித பாவம், ஆக்ரோஷம்...
சரணத்தில் வேறு விதமான தொனி என பல பரிமாணங்களைப் பாடலில் கொண்டு வந்துள்ளார். நான் இன்னும் அதிகமாக இந்தப் பாடலுக்கு மெனக்கிட வேண்டும். அதனால் எனக்கு ரெஸ்ட் தேவை. அப்புறமா நடித்துக் காட்டுகிறேன்' என்றாராம்.
சூரியன்: குதிரைக்கு உணவு அளிப்பதன் மூலம் சூரிய பகவானால் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.
வியாழன்: மாடுகளுக்கு தீவனமும் யானைகளுக்கு உணவும் அளிக்க கல்விப் பிரச்னை நீங்கும். கல்விக்கு அதிபதி வியாழன்.
சந்திரன்: சந்திரன் பார்வை உக்ரமாக இருந்தால் மீன், ஆமை போன்ற உயிரினங்களுக்கு உணவு அளிக்கலாம்.
செவ்வாய்: ஆடு, செம்மறியாடு மற்றும் குரங்குகளுக்கு உணவு கொடுக்க, வாழ்வின் தடைகள் நீங்கும்.
புதன்: சிறந்த பேச்சாளராக கிளிகளுக்கு உணவு தர வேண்டும்.
சுக்ரன்: செல்வத்தை அள்ளித்தரும் கிரகம் சுக்ரன், புறாக்களுக்கு தானியம் கொடுக்க செல்வம் அதிகரிக்கும்.
சனி: சனி பகவானின் அருள் பெற எருமை, கருப்பு நாய், காகம் ஆகியவற்றுக்கு உணவு அளிக்கலாம்.
ராகு கேது: ஜாதகத்தில் ராகு, கேது வலு பெற நாய்களுக்கு ரொட்டி, எறும்புகளுக்கு சீனி கொடுக்க நல்ல பலன் உண்டு.
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான்.
அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.
ஒரு நாள் அவனுக்கு பூர்வஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான். அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார். அவன் கூசாமல் உண்மையைச் சொன்னான்: “நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல் திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்”
சாமியார் : "அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா?"
திருடன்: "இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது ஒன்றுதான். மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்யும் தொழில் இது."
சாமியார்: "சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல அம்சங்களிருப்பதை உணர்கிறேன். இன்று, வேதத்திலுள்ள, எல்லோருக்கும் சொல்லித் தரும் முதலாவது மந்திரத்தை உனக்கும் போதிக்கிறேன். அதைப் பின்பற்றினால் அந்த மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்."
திருடன்: "சரிங்க சாமி! அப்படியே செய்வேன்."
சாமியார்: "முதல் மந்திரம்: ‘சத்தியம் வத’ – அதாவது, ‘உண்மையே பேசு”
திருடன்: "சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம். பின்பற்றுவதும் எளிது. கைகள் தானே திருட்டுத் தொழில் செய்யும்; வாய், உண்மையைப் பேசுவது ஒன்றும் கடினமில்லையே’' என்றான்.
சாமியார் புன்னகை பூத்தார்; அவனும் விடை பெற்றுச் சென்றான்.
மனைவியிடம் போய் நடந்ததைச் சொன்னான். அவளுக்கு ஒரே சிரிப்பு. "இது என்னங்க? நெசவாளி குரங்கு வளர்த்த கதையாய் இருக்கு’' என்றாள்.
"அது என்னடி கதை?" என்றான்.
"ஒரு நெசவாளி குரங்கு வளர்க்க ஆசைப்பட்டு குரங்கை வாங்கினான். அது அவன் செய்த ஒவ்வொரு துணியையும், நூலாக இருக்கையிலேயே பிய்த்துப் போட்டது. அது போல நீர் உண்மை பேசினால் திருடும் முன்னரே அகப்பட்டுக் கொள்வீர்” என்றாள்.
“கண்மணி! கவலைப்படாதே, குருவருள் கிட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
இரவு நெருங்கியதும், கன்னக் கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாரை, அளவுபார்க்கும் நூல் எல்லாவறையும் எடுத்துக்கொண்டு போனான்.
இன்று மந்திர உபதேசம் இருப்பதால், பெரிய இடத்தில் கைவைத்து பெரிய சாதனை புரியவேண்டுமென்றெண்ணி, அரண்மனையில் திருடப் போனான். நள்ளிரவுக்குப் பின், கும்மிருட்டு. அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு மன்னரும் கையில் விளக்குடன் மாறு வேடத்தில் வந்தார். ராஜாக்கள் நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்க இப்படி நள்ளிரவில் மாறுவேடத்தில் நகர் வலம் வருவதுண்டு.
ராஜா: "நில், யார் அங்கே?"
திருடன்: "ஐயா, நான் பக்காத் திருடன்."
ராஜா: "அட நான் பாக்தாத் திருடன். அசலூரிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கும் பணம் வேண்டும். உன்னுடன் வரட்டுமா? பங்கில் பாதி கொடுத்தால் போதும்"
திருடன்: "மிக நல்லது. வா போவோம்" என்றான்.
ராஜாவுக்கு அவரது அரண்மனை வழியெல்லாம் அத்துபடி என்பதால் திருடனை நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார்.
இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன.
திருடன்: "இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு ஒன்று , எனக்கு ஒன்று. மூன்றாவது ரத்தினக் கல்லை அதன் சொந்தக் காரனுக்கு இந்தப் பெட்டியிலேயே வைத்துவிடுவோம்." என்றான்.
ராஜா: "அட உனக்கு என்ன பைத்தியமா? நாமோ திருடர்கள் இதில், சொந்தக்காரனுக்கு ஒரு பங்கா?"
திருடன்: "நண்பா! நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன். இப்பொழுது இந்த மூன்றாவது ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும், 50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும். அதுமட்டுமல்ல. இதை இவ்வளவு காலம் கஜானாவில் வைத்திருக்கும் மன்னன் , ஒரு கல்லாவது திருடுபோகாமல் இருந்ததே என்று சந்தோஷப் படுவானில்லையா?"
ராஜாவும் அவன் சொன்ன வாதத்தை ஒப்புக் கொண்டு "வீடு திரும்பலாம் என்றார்". அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்றபோதும், அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான் என்பதை குறித்துக்கொண்டார்.
மறுநாள் அரசவை கூடியது.
ராஜா: "ஒரு முக்கிய அறிவிப்பு! நமது அரண்மனை கஜானாவில் திருடு நடந்திருப்பதாக் நமது உளவாளிகள் எனக்கு தகவல் தந்துள்ளனர்." என்றார்.
நிதி அமைச்சர்: "மன்னர் மன்னவா! சிறிது நேரத்துக்கு முன் நாங்கள் மந்திரிசபை கூட்டம் நடத்தினோம். அதில் கூட யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை. இதோ, உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிப்பேன்."
அவர் கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன் ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டார். திடீரென அவருக்குப் பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடிந்து வைத்துக் கொண்டார்.
அரசவைக்கு ஓடோடி வந்தார்.
நிதியமைச்சர்: "மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள், ராஜ விசுவாசிகள். அவர்கள் சொன்னது சரியே. கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன." என்றார்.
ராஜா: "அப்படியா? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச் செல்லவில்லையா?"
நிதியமைச்சர்: "மன்னவா, திருடர்கள் என்ன முட்டாள்களா? ஒரு கல்லை நமக்கு விட்டுச் செல்ல. இருப்பதையெலாம் சுருட்டுவதுதானே அவர்கள் தொழில்.."
ராஜா: "போகட்டும் எனக்கு இன்னும் ஒரு உளவுத் தகவலும் வந்துள்ளது. யார் அங்கே? காவலர்கள் எங்கே?"
அவர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க, "இதோ இந்த முகவரியிலுள்ள திருடனை உடனே பிடித்து வாருங்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள்."
குதிரை மீது விரைந்து சென்ற காவலர், அந்தத் திருடனைப் பிடித்துவந்து, அரசன் முன்னர் நிறுத்தினர்.
திருடன்: "ராஜா, வணக்கமுங்க" (நடுங்கிக் கொண்டே)
ராஜா: "நேற்று இரவு என்ன நடந்தது? சொல்."
திருடன்:" நானும் இன்னொருவனும் உங்கள் அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன. நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன் வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுத்தேன். மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன். இதோ நான் எடுத்த மாணிக்கம்." (அதை அரசர் முன் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறான்)
ராஜா: "உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த மாணிக்கக் கல்" (அரசனும் அதை முதல் கல்லுடன் வைக்கிறார்.)
பின்பு, "நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்."
நிதியமைச்சர்: "மன்னர் மன்னவா! என்ன அபவாதம் இது? மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் உங்களுக்குச் சேவை செய்து வருகிறது. ஒரு நிமிடத்தில் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே. அந்த கல்லையும் இந்த திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக் கண்கட்டு வித்தை தெரியும்... "
ராஜா: "நிதியமைச்சரே! இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரத்தினக்கல்லை சமர்ப்பிக்கவில்லையானால், உமது வேட்டியை உருவி சோதனை செய்ய உத்தரவிடுவேன். உமது வீடு முழுவதையும் சோதனையிட உத்தரவிடுவேன்."
நிதியமைச்சர் (நடுங்கிக் கொண்டே): "மன்னவா! என்னை மன்னித்து விடுங்கள்; அரை நிமிட காலத்தில் பேராசை என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான் திருடினேன்; இதோ அந்தக் கல்" என்று வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து வைத்தார்.
ராஜா: "யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்); இந்த நிதியமைச்சரை சிறையில் தள்ளுங்கள்."
முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன் கேட்கின்றனர்); "இன்று முதல் நமது நாட்டின் நிதியமைச்சராக இந்த திருடனை நியமிக்கிறேன். உங்கள் அனைவரையும் விட உண்மையுடனும் ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக அவரே இப்பகுதிக்குத் தகுதியுடையவர்."
அனைவரும்: "புதிய நிதி அமைச்சர் வாழ்க! வாழ்க, வாழ்க; மன்னர் மன்னவர் வாழ்க, வாழ்க!!"
புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்), மறு நாளைக்கு சாமியாரைச் சந்தித்து உண்மை விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளைக் குருநாதரிடம் ஒப்புவித்தார்.
சாமியார்: "சத்தியம் வத (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை. நீ அதைக் கடைபிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை. “எனைத்தானும் நல்லவை கேட்க”- என்று வள்ளுவர் சொன்னார் . நீயும் அப்படிச் சிறிது உபதேசம் கேட்டு இந்நிலைக்கு உயர்ந்தாய்"... என்றார்...
1)மன நோய் அகற்றும் " திருவிடை மருதூர் "
சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் " மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம்.
2)புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன் குடி அருமருந்தம்மை "
புற்று நோய்தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்.
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கடன் தொல்லைகள் தீர்க்கும் " திருச்சேறை ருண விமோச்சனர் "
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது " திருச்சேறை உடையார் கோவில் ". இங்கு தனி சந்நதியில் " ருணவிமோச்சனராய் " அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று " கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்
3) சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம் " சூலினி, பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர் "
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட, வழக்குகளில் வெற்றியடைய, பில்லி, சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும் " திருபுவனம் " சென்று வழிபடலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11 வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.
பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய "ஸ்ரீவாஞ்சியம்"
காசிக்கு இணையான தலம் இந்த ஸ்ரீவாஞ்சியம். காசியில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால், இத் தலத்திலோ புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே சிலையில் காட்சி தரும் இத் தலத்தில் உள்ள குப்த கங்கையில் நீராடி வாஞ்சிநாதரையும், மங்களநாயகியையும், மஹாலஷ்மியையும் வழிபட்டால், பிரிந்திருக்கும் தம்பதியர், பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர். கால சர்ப்ப தோஷம் நீக்கும், பாவங்கள் தீர்த்து முக்தி அருளும் இது சனி தோஷ பரிகாரத்திற்கு சிறந்த திருத்தலம்.
4 )அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்
அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது. குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும் வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.
5) தடைபட்ட திருமணம் நடக்க
கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் " திருநல்லம் "முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் " மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் "அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் "என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.
6) தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் "
மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர், தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார். 18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன.
7) செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை"
கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.
சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்
மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும், கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழிபட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்". நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.
நாக,புத்திர,மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோவில் கல் கருடன் காரியங்கள், திருமணம் கைகூட திருநந்திபுர விண்ணகரம் நாதன் கோவில்
9) கடும் வியாதிகளின் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கடும் ஜூரம் விலகிட காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் "ஜூரகேஸ்வரர் "
10) பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கும்பகோணம் ஆதி வராகப் பெருமாள்
11)ராகு தோஷம், எம, மரண பயம் நீங்க திருநீலக்குடி எனும் தென்னலக்குடி
12)மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீர திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்
13)குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்
14)விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகன்
15) உப்பிலியப்பன்
திருநாகேஸ்வரத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவில் கும்பகோணத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இத்தல இறைவனுக்கு, ‘உப்பிலியப்பன், விண்ணகரப்பன்’ என்று பெயர். இத்தல இறைவனை வேண்டிக் கொண்டால், தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது, 13-வது திவ்யதேசம்.
16) நாகநாதர்
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் சிறப்பு வாய்ந்தது. இங்கு இறைவன் ‘நாகநாதர், நாகேஸ்வரர்’ என்றும், இறைவி, ‘பெரியநாயகி, பிருஹந்நாயகி’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்கிறார். இந்தச் சன்னிதியில் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு கால வேளையில் பூஜைகள் செய்தால் சகல நோய்களும் தீரும். சித்திரை மாதத்தில் வரும் 11, 12, 13 தேதிகளில் சூரியனின் ஒளி, இத்தல லிங்கத்தின் மீது படும் விதத்தில் சோழர்கள் அமைத்துள்ளனர்.
17)கும்பேஸ்வரர்
கும்பகோணம் நகரின் மையத்தில் உள்ளது கும்பேஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவன், ‘அமுதேஸ்வரர், குழகர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவன், சுயம்புமூர்த்தியாவார். கல்வியில் சிறந்து விளங்குபவர்கள், தொழில் தொடங்குபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குபேர வாழ்வு விரும்புபவர்கள், இத்தல இறைவனை வழிபடலாம்.
18)சாரங்கபாணி
கும்பகோணம்- தஞ்சாவூர் சாலையில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது சாரங்கபாணி ஆலயம். இத்தல இறைவன், ‘சாரங்கபாணி, ஆராவமுதன்’ என்று அழைக்கப்படுகிறார். இவ்வாலய கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், 12-வது திய்வ தேசம் இது.
19)பட்டீஸ்வரர்
கும்பகோணம் நகரின் அருகில் உள்ளது பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயம். இத்தல இறைவன் பட்டீஸ்வரர் என்று பெயர்பெற்று விளங்குகிறார். அம்பாளின் திருநாமம், ‘பல்வளைநாயகி, ஞானம்பிகை’ என்பதாகும். ‘பட்டி’ என்ற பசு, மணலால் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால், இத்தலத்துக்கு ‘பட்டீச்சரம்’ என்று பெயர் வந்தது. இங்குள்ள துர்க்கை அம்மனை வழிபட்டால் ராகு-கேது தோஷங்கள் விலகும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்
20)பெண்கள் ருது ஆவதற்கும்,
ருது பிரச்சினைகள் தீரவும் - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை),
21)திருமணத்தடைகள் நீங்க - திருமணஞ்சேரி,
22) நல்ல கணவனை அடைய - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை,
23) மனைவி, கணவன் ஒற்றுமை பெற - திருச்சத்திமுற்றம்,
24) பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - திருவலஞ்சுழி, தவறவிடாதீர்!
25)பில்லி சூனியம் செய்வினை நீக்க - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி,
26) கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர்,....
சிவபக்தன் ஒருவன்,
மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து சிதம்பரம் நடராஜரை தரிசித்தான்.
அவனது ஆயுட்காலம் முடிந்ததும்,
சிவ கணங்கள் அவனை சிவலோகத்திற்கு அழைத்து சென்றனர்.
மண்ணில் வாழும் காலம் வரைக்கும் பக்தனை விட்டு விலகாமல்,
தான் உடனிருந்ததை தெய்வீக சக்தியால் எடுத்துக்காட்டினார் சிவன்.
கடந்து வந்த பாதை எங்கும் அவனுக்கு பின்னால் இரண்டு பாதங்களின் தடம் இருப்பதைச்சுட்டிக் காட்டிய சிவன்,
“பக்தனே...
எப்போதும் உன் பின்னால் நான் தொடர்ந்து வந்ததைப்பார்” என்றார்.
உன்னிப்பாக பார்த்த அவனுக்கு மகிழ்ச்சியை விட கவலை மேலிட்டது.
“ஏன் கவலைப்படுகிறாய் மகனே...” என்றார் சிவன்.
“சுவாமி....
தாங்கள் சொல்வது உண்மை என்றாலும், சில இடங்களில் எனக்கு பின்னால் உங்களின் காலடிச்சுவடு தெரியவில்லை.
அந்த காலம் நான் துன்பப்பட்ட நேரமாக இருந்ததை என்னால் உணர முடிகிறது.
மகிழ்ச்சியில், உடனிருக்கும் நீங்கள் துன்பத்தில் காணாமல் போனது நியாயமா?
இதற்காகவா நான், இமைப்பொழுது கூட மறக்காமல் தினமும் பக்தியுடன் சிவபுராணம் படித்தேன்” கேட்டான்.
அதைக் கேட்டு பலமாக சிரித்தார் சிவன்.
“அட... பைத்தியக்காரா, எப்போது நான் உன்னை தனியாக விட்டேன்?
முன் வினைப்பயனால் நீ கஷ்டப்பட்ட காலத்தில் கூட, உன்னைத்துாக்கிக் கொண்டு நடந்தேன்.
துன்ப காலத்தில் தெரிவது உன் காலடிகள் அல்ல.
உன்னை தோளில் சுமந்து கொண்டு நடந்த என் காலடித்தடங்கள்” என்றார்.
பரவசம் அடைந்த பக்தன்,
'நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என சிவபுராணம் பாடி சிவனை வணங்கினான்.
விசுவாவசு வருடம் தை மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 16.1.2026,
இன்று இரவு 11.43 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி
இன்று காலை 07.21 வரை கேட்டை. பின்னர் மூலம்.
இன்று இரவு 10.46 வரை துருவம். பின்னர் வியாகாதம்.
இன்று காலை 10.44 வரை கரசை. பின்னர் இரவு 11.43 வரை வனிசை. பின்பு பத்தரை.
இன்று காலை 06.33 வரை சித்தயோகம். பின்னர் காலை 7.21 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ஒரு பெரிய அரங்கம் - 25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.
நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்துகொண்டார்கள்.
அதில் ஒரு மனைவி
'அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்!
கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது, கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள்
அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும் விட்டுகொடுத்தலும் எல்லாமே நிறைந்திருந்தது.
அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100! எல்லோருக்குமே தெரிந்துவிட்டது அவர்கள் தான் ஜெயிக்கப்போகிறார்கள் என்று,
எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்தபின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும்
மிகக்குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள்!
பூஜ்ஜியம் வாங்கியது வேறுயாரும் இல்லை, வரும்போதே சண்டைபோட்டுக்கொண்டு வந்தார்களே அவர்கள் தான்.
இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள்,
ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க, இல்லை arranged marriage என்றார்கள்.
எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள், திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு
35 வருடங்கள் என்று சொல்ல, எல்லோரும் சிரித்துவிட்டார்கள்!
35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள், அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்கள்
ஆனால் போட்டியின் நடுவர்,
இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள்தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்!
காரணம்...
எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரியவிஷயம் கிடையாது,
எந்த ஒரு மனஒற்றுமையும் புரிதலும் இல்லாவிட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இதுதான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார்!
இருவரும் ஆனந்தக்கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக்கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்!
மருதாணி உடலுக்கு குளிர்ச்சி தரும், பெண்கள் கைகளில் அழகுக்காக வைத்துக் கொள்ளும் மருதாணியில் , மருத்துவ பல குணங்கள் நிறைந்துள்ளன .
* மருதாணி இலையுடன் சிறிது வசம்பு , மஞ்சள் , கற்பூரம் சேர்த்து அரைத்து , உள்ளங்காலில் ஆணி உள்ள இடத்தில் இடத்தில் பூசினால் , ஒரு வாரத்தில் கட்டி குணமாகும்
* மருதாணி இலையை அரைத்து , கைகளுக்கு வைத்தால் , உடல் வெப்பம் தணியும் * மருதாணி இலை மிகச்சிறந்த கிருமி நாசினி . இது , நம்மிடயே கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது .
நகசுத்தி வராமல் தடுக்கும் இருக்குமருதாணி இலை , பித்தத்தை அதிகமாக்கும் .
கை , கால்களில் தோன்றும் சேற்றுப் புண்கள் , அழுக்குப்படை , கட்டி . பித்தவெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும் மருந்து !
* மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் , தலைவலி குணமாகும் . அரிப்பு , படை போன்ற தோல் நோய்களுக்கு மிகவும் சிறந்தது , மருதாணி
* மருதாணி இலையை அரைத்து , அம்மைப் புண்களுக்கு பூசினால் , நான்கைந்து நாளில் குணமாகும் .
கட்டிகளுக்கும் அரைத்துப் பூசலாம் இள நரையை அகற்றுவதற்கு பயன்படுகிறது .
இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் , அரை லிட்டர் விட்டு , மருதாணி இலை , 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும் . இலையின் சாறு எண்ணெயில் சேர்ந்து சிவப்பாக மாறிவிடும் . இந்த தைலத்தை தினமும் தலைக்கு தேய்க்க , முடி வளரும் , நரை மறையும் மருதாணி இலையை நன்கு நீர் விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை , கால்களிலும் , உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் , கை , கால் எரிச்சல் உடனே நீங்கும் .
கங்கைக்கரையோரம் ராமகிருஷ்ணர் சீடர்களுக்கு தத்துவ உபதேசம் செய்து கொண்டு இருந்தார்.
அவரது சீடர் விவேகானந்தர், குருநாதரின் வாய் அசைவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தார்.
திடீரென அவர்களின் கவனம் திருப்பும் விதத்தில், நாய்கள் வேகமாகக் குரைத்தன.
குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்பைக் கவ்விக்கொண்டு ஒரு முரட்டு நாய் வெளியில் குதித்து ஓடியது.
அந்த நாயைச் சுற்றிக்கொண்ட மற்ற நாய்கள் வேகமாகக் குரைத்தன.
முன்பற்கள் தெரிய ஆக்ரோஷமாக நாய்கள் குரைப்பதை முரட்டு நாய் சட்டை செய்யவே இல்லை.
வாயிலிருக்கும் எலும்பைச் சுவைக்க வேண்டும் என்பதிலேயே அதன் கவனம் இருந்தது.
இதைக்கண்ட ராமகிருஷ்ணர் தன் சீடர்களிடம், இந்த நாயிடமிருந்து என்ன தெரிந்து கொள்கிறீர்கள்?, என்றார்.
ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள்.
ஒரு சீடர், நாய்களின் இயல்பு இதுதானே.
மற்ற நாய்கள் பார்த்திருக்க ஒரு நாய் தின்றுகொண்டிருக்கும், என்றார்.
வலிமை தான் எப்போதும் ஜெயிக்கும்.
வலிய நாய் ஜெயித்து விட்டது அவ்வளவே, என்றார் மற்றொருவர்.
**விவேகானந்தரோ தத்துவரீதியாக இந்த காட்சியை விவரித்தார்.
நாய் அமைதியாக உணவைச் சுவைப்பது போல, கடவுளை அறிந்த ஞானிகளும் அமைதியில் ஒன்றி விடுவார்கள்.
உணவு கிடைக்காத மற்ற நாய்கள் குரைப்பதைப் போல, கடவுளை அறியாதவர்கள் மட்டுமே, அவரைப் பற்றி எதையாவது பிதற்றிக் கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல் ஆரவாரம் செய்வார்கள், என்றார்.
ஆம்...கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை.
பக்திவழியில் செல்பவர்களுக்கு பிதற்றல்காரர்களைப் பற்றி என்ன கவலை !!
























