சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர்.
அனிருத் இசை அமைக்கும் இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதில் இந்தி நடிகரான ஷாருக்கானும் நடிக்க இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. ‘கூலி’ படத்தில் நடிக்க ஷாருக்கானிடம் கேட்டதாகவும் பல்வேறு காரணங்களால் அவர் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதனால் ஆமிர்கான் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இப்போது ஜெயிலர்-2 படத்தில், ஷாருக்கான் நடிப்பார் என்றும் அவர் தொடர்பான காட்சிகள் மார்ச்சில் படமாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
