- · 1 friends
-
2 followers
யாரிடமும் சொல்ல முடியாத விஷயம்
1970-களில் இந்தி திரையுலகில் டாப் ஸ்டாராய் ஜொலித்த நடிகை பர்வீன் பாபியும் அப்படிப்பட்ட பரிதாப லிஸ்ட்டில் ஒருவர் தான். அழகிய நட்சத்திரம் எரிந்து சாம்பலாகிப்போன கதை..
டீன் ஏஜ் வயதில் கதாநாயகி ஆகாமல் இருபத்தைந்தை நெருங்கும்போதுதான் திரைக்கு வந்து சேர்ந்தார் பர்வீன்.
50-களிலும் 60-களிலும் கிளாமர் விஷயத்தில் இந்தி திரை உலகமே தட்டு தடுமாறிக் கொண்டிருந்த சமயம்.
அப்போது நடை உடை பாவனைகளில் கிளாமர் வித் ஸ்டைல் என ஹாலிவுட் ரேஞ்சுக்கு பாலிவுட்டை கொண்டு போன நடிகைகள், ஜீனத் அமன், நீத்து சிங் மற்றும் பர்வீன் பாபி.
மனைவி ஜெயாவுக்கு அடுத்து அமிதாப்பச்சன் அதிகமாக தனக்கு படங்களில் ஜோடியாய் சேர்த்துக்கொண்டது பர்வீன் பாபியைத்தான்.
மஜ்பூர், தீவார், அமர் அக்பர் ஆண்டனி, நமக் ஹலால், காலியா மஹான், காலா பத்தர், ஷான் என போகும் அந்த பட்டியல். எல்லா படங்களும் மெகா ஹிட்.
அதிலும் இந்தி திரையுலகின் மெகா பிளாக் பஸ்டரான தீவார் படம் (தமிழில் ரஜினி நடித்த தீ) அமிதாப்புக்கு மட்டுமல்ல பர்வீனுக்கும் ஒரு மைல்கல்.
இன்னொரு ஹீரோயின் நீத்துசிங்குடன் கிளாமரில் போட்டி போடவேண்டிய நிலையில், அற்புதமான நடிப்பாலும் கிளாப்சை அள்ளிக்கொண்டு போவார் பர்வீன்.
அதிலும் வில்லனால் சிதைக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் அமிதாப் ஓடிவருவார். அமிதாப் கரங்களில் அழுதபடியே பர்வீன் பாபி உயிரை விடும்போது தியேட்டரே நிசப்தமாகிவிடும்.
படத்தில் பர்வீன்பாபியை எந்த அளவுக்கு கதாநாயகன் நேசித்திருக்கிறான் என்பதை காட்டும் வகையில் காட்சிகள் ஓடும்.. பர்வீன் உயிர்போனதுமே வில்லன் இடத்தை தேடிப்போய் சராமாரியாக அனைவரையும் சுட்டுத்தள்ளுவார் அமிதாப்.
பர்வீனை கொன்ற வில்லனை அடித்து உதைத்து கடைசியில் குண்டுக்கட்டாக தூக்கி பல பலமாடி கட்டிடத்திலிருந்து ஜன்னல் வழியாகவீசியே கொன்று விடுவார் அமிதாப்.. (தளபதி படத்தில் மம்முட்டியை கொன்ற வில்லன் கரிவரதனை ரஜினி உடனே வெறியோடு தேடிப்போகும் சீன் இங்கிருந்து உருவப்பட்டதுதான்) அந்த அளவுக்கு தீவாரில் அமிதாப் -பர்வீன்பாபி அட்டாச்மெண்ட் கெமிஸ்ட்ரி கரைபுரளும்.
ஷான் படத்தில் அவர் தோன்றும் பியார் கர்னே வாலா பாட்டெல்லாம் ஒரு காலத்தில் தேசிய கீதம்போல இருந்தது.
அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உச்சத்தில் தகதகவென மின்னிய பர்வீன்பாபி, இயல்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு திடீரென மர்ம தேசத்து மகராணியாகிப்போனார்.
படஉலகைவிட்டு விலகினார், அமெரிக்கா போனார், வலம் வந்தார், ஏர்போர்ட்டில் உரிய ஆவணங்களை காட்டமுடியாமல் கண்டபடி உளறி மனநோய் மருத்துவனைக்கு அனுப்பப்பட்டார்.
இந்திய அரசே நேரடியாக தலையிட்டு மீட்டுவந்தது. மறுபடியும், அமெரிக்க அதிபர் உட்பட உலகத்தலை வர்கள் தன்னைக்கொல்ல சதி செய்வதாக சொல்ல சாரி, பிதற்ற ஆரம்பித்தார்.
அமிதாப்பச்சனை, அண்டர் கிரவுண்ட் தாதா என்று குற்றம் சாட்டினார். எல்லாவற்றையும்விட, நோய்வாய் பட்டு வீல் சேரே கதியானார்
கடைசியில் மும்பை வீட்டில் 2005 ஜனவரி 22-ந்தேதி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
மூன்று நாட்களாக பால்பாக்கெட்டுகள், டெய்லி பேப்பர்கள் எடுக்கப் படாமல் வீடு மூடியே கிடைந்ததை பார்த்து சந்தேகப்பட்டு அக்கம்பக்கத்தினர் தகவல் சொன்னார்கள்.
போலீசார் வந்து பார்த்தபோது, கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த பர்வீன் பாபி, வீல் சேரிலிருந்து விழுந்து இறந்துபோய், சடலம் அழுகிக்கொண்டிருந்தது.
பிரேத பரிசோதனையில்தான் ஜனவரி 20ந்தேதியே பர்வீன்பாபி இறந்துவிட்டது தெரியவந்தது. (இந்தப் பதிவு ஏன் என்று இப்போது புரிகிறதா?)
காதல் தோல்வி, மாபியா கேங் பிடியில் அடிமையாக சிக்கினார் என பர்வீன் பாபி வரலாற்றில் பல பக்கங்கள் செவி வழிச்செய்தியாகவே இருந்தன.
1940களில் லேடி சூப்பர் ஸ்டராக விளங்கிய தங்கத்தாரகை நடிகை சுரையாவும் தேவ் ஆனந்த்துடனான காதல் தோல்வியால், இப்படித்தான் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும் ஒற்றை ஆளாய் அவ்வளவு பெரிய பங்களாவில் அனாதையாக இறந்துபோனார். அவரது சடலமும் சில நாட்கள் கேட்பாரற்று கிடந்தது..
சராசரி ஆட்களுக்கு கிடைக்கும் கௌரவமான மரணம்கூட, நாடே வியந்த பிரபலங்களுக்கு சில நேரம் கிடைப்பதில்லை..
காலத்தின் கைகளில்தான் எத்தனை வகையான கோலங்கள், அலங்கோலங்கள் உள்பட!
வெள்ளரி விதை
வெள்ளரி விதையை பழத்துடனோ, சமைத்தோ உண்ணலாம். வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளன.
சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், முடி வளர்ச்சிக்கும் உதவும். புற்றுநோயைத் தடுக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
சப்ஜா விதை
சப்ஜா விதைகளை நீரில் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும். சப்ஜா விதையில் துத்தநாகம், சல்ஃபர், ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
இது, பித்தத்தைக் குறைக்கும். உடல்சூட்டைத் தணிக்கும். ஜீரணப் பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். மலச்சிக்கலைப் போக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும். அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச் சோகை வராமல் காக்கும்.
1. சீக்கிரம் தூங்கி அதிகாலை சீக்கிரம் எழுந்திருப்பது மருந்து.
2. காலையில் கடவுளை நினைப்பது,கோவிலுக்கு சென்று வழிபடுவது மருந்து.
3. யோகா, பிராணயாமம் மற்றும் , உடற்பயிற்சி ஆகியவை மருந்துகள்.
4. காலை மற்றும் மாலை கைகளை வீசி நடக்கும் நடைப்பயிற்சிகளும் மருந்துகளாகும்.
5. வாரத்திற்கு ஒருநாள் உண்ணாவிரதம் அனைத்து நோய்களுக்கும் மருந்து.
6. அதிகாலை சூரிய ஒளி சிறந்த மருந்து.
7. நன்னாரி ,இராமச்சவேர் பயன்படுத்திய மண் பானை நீரைக் குடிப்பதும் மருந்து.
8. கைதட்டுவதும் மருந்து.
9.வாயில் நன்றாக அரைத்து உமிழ்நீருடன் மெல்லுவதும் மருந்து.
10. தண்ணீர் குடிப்பதும்(குறைந்தது 3லிட்டர்) .போதும் என்ற மனநிறைவுடன் சாப்பிடுவதும் மருந்துகள்.
11. சாப்பிட்ட பிறகு வஜ்ராசனத்தில் அமர்ந்திருப்பது மருந்து.
12. மன அழுத்தத்திற்கு ஆளாகாமல்,மகிழ்ச்சியாக இருக்க முடிவு செய்வது மருந்து.
13. சில நேரங்களில், மௌனம்(அமைதி) மருந்து.
14. சிரிப்பும் நகைச்சுவையும் மருந்துகள்.
15. மனநிறைவு மருந்து.
16. மன அமைதியும் உடல் அமைதியும் மருந்து.
17. நேர்மையும் நேர்மறையும் மருந்துகள்.
18. தன்னலமற்ற அன்பும்
உணர்ச்சிகளும்
மருந்துகளே.
19. மற்றவர்களுக்கு நன்மை செய்வது மருந்து.
20.நல்லொழுக்கத்தைத் தரும் ஒன்றைச் செய்வது மருந்து.
21. மற்றவர்களுடன் இணக்கமாக வாழ்வது மருந்து.
22.குடும்பத்துடன்
சாப்பிடுவது, மற்றும் நேரத்தைச் செலவிடுவது மருந்து.
23. ஒவ்வொரு உண்மையான மற்றும் நல்ல நண்பரும் பணம் இல்லாத முழுமையான மருந்தகம்.
24. உடலை குளிர்ச்சியாகவும், பிஸியாகவும், ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் வைத்திருப்பது மருந்து.
25. ஒவ்வொரு புதிய நாளையும் முழுமையாக அனுபவிப்பது மருந்து
"அப்பா... என் போன்ல ஏதோ மெசேஜ் வந்திருக்கு, 'உங்க மின்சார கட்டணம் கட்டல, இன்னைக்கு நைட்டு கரண்ட் கட் ஆகிடும்-னு' போட்டிருக்கு" என்று பதற்றத்துடன் ஓடி வந்தான் ரகு.
அவன் அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. "நேத்துதானே கரண்ட் பில் கட்டினோம்?" என்றார்.
அடுத்த 5 நிமிடத்தில் ஒரு போன் கால் வந்தது. "சார், நாங்க மின்சார வாரியத்துல இருந்து பேசுறோம். நீங்க கட்டின பணம் அப்டேட் ஆகல.
இப்போ நான் சொல்ற ஒரு App-ஐ டவுன்லோட் பண்ணி 10 ரூபாய் மட்டும் கட்டுங்க, எல்லாம் சரியாயிடும். இல்லைன்னா 7 மணிக்கு கரண்ட் கட் ஆகிடும்" என்றார் அந்த நபர்.
அப்பாவும் ரகுவும் பயந்துபோய், அவர் சொன்ன அந்த 'Screen Sharing' செயலியை (App) டவுன்லோட் செய்தார்கள். ரகு தன் போனில் 10 ரூபாயை கட்டினான்.
அடுத்த 10-வது நிமிடம்...
ரகுவின் அப்பாவின் போனுக்கு வரிசையாக மெசேஜ்கள் வந்தன.
* 50,000 ரூபாய் எடுக்கப்பட்டது...
* 30,000 ரூபாய் எடுக்கப்பட்டது...
மொத்தம் 1 லட்சம் ரூபாய் அவர் வங்கிக் கணக்கில் இருந்து மாயமானது!
எப்படி நடந்தது இந்தத் திருட்டு?
அவர்கள் டவுன்லோட் செய்த அந்த ஒரு App மூலமாக, ரகுவின் போன் திரையை (Screen) அந்தத் திருடன் தன் இடத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தான். ரகு பாஸ்வேர்டு (Password) போடும்போது அதை நோட்டம் இட்டு, மொத்த பணத்தையும் திருடிவிட்டான்.
> உஷாராக இருக்க வேண்டிய விஷயங்கள்:
* யாரோ தெரியாத நபர் சொல்லும் எந்த ஒரு செயலியை (App) உங்கள் போனில் ஏற்றாதீர்கள்.
* உங்கள் போன் திரையை மற்றவர் பார்க்கும் வசதியை (Screen Sharing) யாருக்கும் கொடுக்காதீர்கள்.
பாடம்:
திருடர்கள் இப்போது உங்கள் வீட்டின் பூட்டை உடைப்பதில்லை, உங்கள் அறியாமையைப் பயன்படுத்தி உங்கள் போன் வழியாகவே உள்ளே வருகிறார்கள்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். தவறிய முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். செலவுகளில் தன்மைகளை அறிந்து செய்லபடவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
ரிஷபம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். உயிர் அதிகாரிகளிடம் வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் நிலவும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கும். துணைவர் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் மறையும். சுபகாரிய முயற்சிகள் வெற்றிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வர்த்தகம் செயல்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். தந்தை வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். புது வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கன்னி
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தன வரவுகள் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். இலக்கிய பணிகளில் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டாகும். அனாவசிய செலவுகளை குறைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
உத்தியோக பணிகளிலிருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். உறவினர் வழியில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும். கட்டுமான பணிகளில் அலைச்சல் ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்வீர்கள். இனம்புரியாத சிந்தனைகள் மூலம் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். கால்நடை தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். வாழ்வு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
தனுசு
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். ரகசியமான செயல்பாடுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். நீண்ட நேரம் கண் முழிப்பதை குறைத்துக் கொள்ளவும். உணவு சார்ந்த துறைகளில் லாபங்கள் மேம்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மகரம்
குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். புதுமையான செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
வாக்கு சாதுரியம் மூலம் தடைப்பட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். மனதிற்க்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மீனம்
வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சமூக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கலைப்பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விசுவாவசு வருடம் தை மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 20.1.2026.
இன்று அதிகாலை 03.11 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று பிற்பகல் 02.03 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.
இன்று இரவு 09.02 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.
இன்று அதிகாலை 03.11 வரை பவம். பின்னர் மாலை 03.15 வரை பாலவம். பிறகு கௌலவம்.
இன்று காலை 06.34 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
திரு.சுகி சிவம் ஐயா சொன்ன, மேடை பேச்சு செய்தி.
ஒருவர் ஒரு ஊருக்கு சில வேலையா போனார். அங்கு அவருடைய நண்பர் இருப்பது நினைவுக்கு வந்தது. அவரை பார்த்து விட்டு போகலாம்னு தோணித்து. உடனே ஏதாவது பழம் வாங்கிகிட்டு போகலாம்னு கைவண்டில பழம் விக்கிறவர் கிட்ட போனாரு.
ஆப்பிள் பழம் நல்லா இருந்தது. என்ன விலைன்னு கேட்டாரு. கடைக்காரர் ₹200.00 ஒரு கிலோன்னு சொன்னாரு. கொஞ்சம் விலை குறைச்சு கொடுப்பீர்களா? ₹180.00 க்கு தரேன். வாங்கிகிட்டு ₹200.00 தாளை கொடுத்தார். கடைக்காரர் சரியாய் மீதி ₹20.00 கொடுக்கும் போது ஒருவர் பிச்சை போடுங்கன்னு கையை நீட்டினார்.
கையில் ₹20.00 நோட்டு என்ன செய்ய. வேற வழி இல்லை அப்படியே அந்த மீதி காசை பிச்சை காரருக்கு கொடுத்துவிட்டார்.
அப்பறம் நடந்தது தான் சுவாரசியம். அப்பபார்த்து அந்த கடைக்காரர் ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சார். ஏன் சிரிக்கிறீங்க?
எங்கிட்ட பேரம் பேசினீங்க.எனக்கு வர வேண்டிய காசு, அவருக்கு பிச்சை. ஆனா இதில் என்ன விஷயம் என்றால், என் கடை அவரு கிட்ட கடன் வாங்கி தான் நடக்குது.
ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்.பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறு குறுப்பு…!
அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது..!!? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! 'ஒருவேளை மாயாஜாலக் கண்ணாடியோ..!!?’
அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை...
பெரியவரை நெருங்கினான்.
ஐயா…!
என்ன தம்பி?
உங்கள் கையில் இருப்பது கண்ணாடி தானே..?
ஆமாம்..!
அதில் என்ன தெரிகிறது..?
நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்..!
அப்படியானால் சாதாரணக் கண்ணாடி தானே அது..?
ஆமாம்..!
பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்..?
பெரியவர் புன்னகைத்தார்.
சாதாரணக் கண்ணாடி தான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய..!
பாடமா… ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்..?
அப்படிக் கேள். உங்களில் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் கண்ணாடி போன்றவர்கள்..
எனக்கு ஒன்றும் புரியவில்லை..!
ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இது தெளிவுபடுத்துகிறது...
எப்படி..?”
நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா..?
ஆமாம்..
அதே போல் உன் சகோதரனிடம் - நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்.!
அடுத்து…?
கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா..?
ஆமாம்!
அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக் கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்..!
அப்புறம்..?
ஒருவருடைய முகக்கறையை கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா..?
இல்லையே…! மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்..!
சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக் கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்..!
ஐயா…! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா…! அப்பப்பா..!யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்...!” என்று அந்த பெரியவரிடம் சொல்லி விட்டு அவரை வணங்கிச் சென்றான்
நடிகை பூஜா ஹெக்டே பேசியதாக இன்று காலை முதல் சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது. பான் இந்திய படத்தில் நடித்துவந்தபோது அந்த படத்தின் நடிகர் தனது காரவானில் அனுமதி இன்று நுழைந்ததாகவும். தன்னிடம் அத்துமீற முயன்ற அவரை தான் கன்னத்தில் அறைந்ததாகவும் பூஜா அதன் பின் அந்த நடிகர் தன்னுடன் நடிக்கவில்லை என நடிகை பூஜா ஹெக்டே சொன்னதாக இணையத்தில் தகவல் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் , சமூக வலைதள பிரபலங்கள் உள்ளிட்டோர் இன்று காலை முதல் இந்த தகவலை பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சிலர் பூஜா ஹெக்டேவிடம் அத்துமீறிய அந்த நடிகர் இவர் தான் என சிலரது பெயரை குறிப்பிட்டு வருகிறார்கள்.
இந்த தகவல் உண்மையில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. பூஜா ஹெக்டே அப்படி பேசியதாக எந்த ஒரு ஆதாராமும் இல்லை என்று இது திட்டமிட்டு பரப்பப்பட்ட போலியான தகவல் என்று தெரியவந்துள்ளது.
காபி, தேநீர் போன்ற பானங்கள் வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல் மனித உணர்வுகளோடு நெருங்கி நிற்கும் துணையாக வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது அதன் மீது மக்கள் கொண்டுள்ள தீராத காதலும் அதனை அருந்துவோரின் எண்ணிக்கையும் எத்தனைக் காலங்கள் கடந்தாலும் குறையாது என்பதை கடைகளில் அலைமோதும் கூட்டமே சாட்சியாக அமைந்து விடுகிறது.
மகிழ்ச்சியைச் சேர்த்து சோகத்தைக் தொலைக்கும் தருணங்களில் மனிதன் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள காபி தேநீரைத் தேடுவது வழக்கம் என்பதை மறுக்க முடியாது. எதுவும் அளவோடு இருப்பதே உடல் நலத்திற்கு நல்லது என்று சொல்லலாம்.
காபி காபி கொட்டைகளின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது (கொட்டை), தேநீர் தேயிலை இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இரண்டும் காஃபின் கொண்டவை, ஆனால் வேறுபட்ட சுவை மற்றும் நன்மைகளைக் கொண்டுள்ளன இந்த இரண்டு பானங்களும் புத்துணர்ச்சி தரும் பானங்களாகும்.அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப் பொருட்கள் இருப்பதால் அப்பானங்களை அருந்தியதும் நாம் உற்சாகமாக உணர்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு முறை தேநீரோ அல்லது காபியோ குடிப்பது உடல்நலத்துக்குப் பெரிதாகக் தீங்கு விளைவிக்காது.அதுவே எல்லை மீறினால் அந்த அமிர்தம் நாளடைவில் நஞ்சாக மாறிவிடும் என்கிறார் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மூத்த ஆலோசகர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ரிஷா மாணிக்கம்.
அதிக அளவில் காபி-டீ அருந்துவது இதயத் துடிப்பை வேகப்படுத்துவதோடு உடல் வியர்த்தல், கை கால் நடுக்கம் மற்றும் தூக்கமின்மை போன்ற பல உடல்நலப் பாதிப்புகளை உண்டாக்கும். ஆதலால், தினசரி காபி-டீ குடிப்பவர்கள் அதன் அளவை ஒரு கப்பாகக் குறைத்து பின்னர் அந்த ஒரு கப்பையும் நண்பர்களுடன் பகிர்ந்து குடிப்பதன் மூலம் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாவதை சுலபமாக தவிர்க்கலாம் என்கிறார் பேராசிரியர் டத்தோ டாக்டர் ரிஷா மாணிக்கம்.
சத்தான உணவு, தேவையான உடற்பயிற்சி, போதிய அளவு நீர், குறைந்த அளவு உப்பு மற்றும் இனிப்பு ஆகியவற்றுடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையே புத்துணர்விற்கான சிறந்த வழி என்பதால் அவ்விரு பானங்களையும் முடிந்த வரையில் தவிர்ப்பதே விவேகமானது என்றும் டாக்டர் ரிஷா ஆலோசனை கூறினார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
ரிஷபம்
நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனை விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் வேண்டும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேம்படும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். தந்தை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் வரவுகள் சிலருக்கு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மிதுனம்
புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணம் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். கால்நடை சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கடகம்
எதிலும் புத்துணச்சியுடன் ஈடுபடுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் லாபம் மேம்படும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் வருமான உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த ஆர்வமின்மை விலகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். உயரதிகாரிகள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்கள் வழியில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கலை பணிகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். வாகன பயணங்களின்போது விவேகம் அவசியமாகும். அரசு காரியங்களில் இருந்து வந்த இழுபறி குறையும். தேர்வுகள் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கன்னி
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த இலக்குகள் பிறக்கும். உயர் கல்வியில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். நெருக்கம்வர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பு மேம்படுத்துவீர்கள். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
குடும்ப பெரியவர்ளிடத்தில் அனுசரித்து செல்லவும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனை கிடைக்கும். எடுத்து செல்லும் உடமைகளில் கவனம். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். சுபகாரிய பேச்சுக்கள் சாதகமாக முடியும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழுவீர்கள். சமூக பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தடைப்பட்டு வந்த சொத்து விற்பனை சாதகமாக முடியும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளால் வியாபார சரக்குகளை விற்று லாபம் அடைவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
தனுசு
பழக்கவழக்கங்களில் சில மாற்றம் காணப்படும். பொன் பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். வாக்கு சாதுர்த்தியம் மூலம் ஆதாயமடைவீர்கள். பெருந்தன்மையான பேச்சுக்கள் மூலம் புதிய அறிமுகமும் செல்வாக்கும் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மகரம்
தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உடல் தோற்றத்தில் சில மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. நண்பர்களிடத்தில் சூழ்நிலையறிந்து செயல்படவும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆவண சார்ந்த பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கும்பம்
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வியாபர போட்டிகள் ஓரளவு குறையும். அலுவல் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மீனம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொதுவாழ்வில் செல்வாக்கு மேம்படும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். பணிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விசுவாவசு வருடம் தை மாதம் 5 ஆம் தேதி திங்கட்கிழமை 19.1.2026
இன்று அதிகாலை 02.31 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.
இன்று பிற்பகல் 01.04 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
இன்று இரவு 10.02 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.
இன்று அதிகாலை 02.31 வரை நாகவம். பின்னர் பிற்பகல் 02.51 வரை கிமிஸ்துக்கினம். பிறகு பவம்.
இன்று காலை 06.34 வரை அமிர்த யோகம். பிறகு பிற்பகல் 01.04 வரை மரண யோகம். பிறகு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30.30 முதல் 07.30 மணி வரை
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
பொதுவாக நாம் தரிசிக்கும் முருகப்பெருமான் திருவுருவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் ஒரு அபூர்வமான காட்சியைக் காணலாம்.
✨ பாதரட்சை அணிந்த பரமன்!
இந்தத் தலத்தின் ஆகச்சிறந்த விசேஷமே, முருகப்பெருமான் தனது திருவடிகளில் பாதரட்சை (காலணி) அணிந்த நிலையில் அருள்பாலிப்பதுதான்.
🦶 வலது பாதம் முன்னே வைத்த கோலம்:
சுவாமி தாமரைப் பீடத்தின் மீது நின்றிருந்தாலும், அவர் சும்மா நிற்கவில்லை! தனது வலது பாதத்தை ஒரு அடி முன்னெடுத்து வைத்து, "உனக்காக நான் வருகிறேன்" என்று அபயம் அளிப்பது போலவும், பக்தர்களுக்கு அருளை வாரி வழங்க விரைந்து வருவது போலவும் இந்தக் கோலம் அமைந்துள்ளது.
🌟 ஏன் வடபழநிக்குச் செல்ல வேண்டும்?
பழநிக்கு நிகரான தலம்: பழநி வரை செல்ல முடியாதவர்கள், சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவரைத் தரிசித்தால் அதே பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.
தொழில் வெற்றி: புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் மற்றும் வியாபாரம் விருத்தியடைய வேண்டுபவர்களுக்கு வடபழநி முருகன் ஒரு பெரும் வழிகாட்டி.
அங்காரக தோஷ நிவர்த்தி: முருகனுக்கு மிகவும் பிடித்த செவ்வாய் (அங்காரகன்) பகவானுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது ஒரு தனிச்சிறப்பு.
📜 பக்தியின் தொடக்கம்:
அண்ணாசாமி தம்பிரான் என்ற பக்தர், பழநியிலிருந்து முருகனின் படத்தை வாங்கி வந்து சிறிய கொட்டகையில் வைத்து வழிபடத் தொடங்கியதுதான் இன்று சென்னை மாநகரின் அடையாளமாகத் திகழும் இந்த பிரம்மாண்ட ஆலயம்.
நேரம்: 📍 காலை 5:00 மணி முதல் 12:00 மணி வரை 📍 மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
முருகனின் இந்தப் பாதரட்சை தரிசனம் காண்போம்; வாழ்வில் சகல தடைகளும் நீங்கி வெற்றி பெறுவோம்!
இருபடங்கள்
ஒன்று வெனிசுலா அதிபராக உணவுமேசை முன்
மற்றொன்று கைதியாக உணவுமேசை முன்
காலம் நம்கையில் இல்லை
காலம் யாரை வேண்டுமானாலும்
எப்போது வேண்டுமானாலும்
சுழற்றி அடிக்கலாம்
அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ஆட்டம் போடுவோருக்கு காலம் கற்பிக்கும் பாடம்
நடப்பது தர்மமா? அதர்மமா? என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும்
கால சுழற்சி யாரையும் விடுவதில்லை என்பதுதான் உண்மை.
கொஞ்சம் எச்சரிக்கையுடன் நிமிர்ந்து அமர்ந்தார் பாலச்சந்தர்.
அவருக்கு எதிரே ஒரு பத்திரிகை நிருபர்.
இதுவரை அந்த நிருபர் கேட்ட கேள்விகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது அவர் கேட்ட கேள்வி கொஞ்சம் தர்மசங்கடமானது.
இதற்கு பதில் சொன்னால்,
தான் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்பது பாலச்சந்தருக்கு தெள்ளத்தெளிவாக புரிந்து போயிற்று. அதனால்தான் அவர் கொஞ்சம் உஷார் ஆனார்.
அந்த நிருபர் கேட்ட கேள்வி இதுதான்.
“ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் பல இருக்கும்.
ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு, அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன ?”
எடக்கு மடக்கான இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, இதற்கு பாலச்சந்தர் என்ன பதில் கூறப் போகிறார், அதைத் தனது பத்திரிகையில் எப்படி தலைப்பு வைத்து வெளியிடலாம், எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தலாம் என ஆவலோடும் பரபரப்போடும் எதிர்பார்த்துக் காத்திருந்தார் அந்த பத்திரிகை நிருபர்.
ஆனால் இதற்கு பாலச்சந்தர் சொன்ன பதில் என்ன தெரியுமா ?
"நான் இயக்கிய 'நூற்றுக்கு நூறு' படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார்.
ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லட்சுமி கறுப்புப் புள்ளி என்பார். நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன்.
அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன்.
அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.
அதைத்தான் நான் பார்க்கிறேன்.”
இப்படி ஒரு பக்குவமான பதிலை கொஞ்சமும் எதிர்பார்த்திராத அந்த பத்திரிகை நிருபர், பணிவோடு எழுந்து பாலச்சந்தரை வணங்கி விட்டு புறப்பட்டுப் போனார்.
பாலச்சந்தர் நினைத்திருந்தால்
அந்த நிருபரின் கேள்விக்கு என்ன பதில் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம். அதற்கான முழு உரிமையும், தகுதியும் அவருக்கு இருக்கிறது.
ஆனால் தனக்கு என்று ஒரு இமேஜ் இருக்கிறது. அதைவிட மிகப்பெரிய இமேஜ் கமலுக்கும் ரஜினிக்கும் இருக்கிறது. அந்த இமேஜ் கெடுவதற்கு, தான் பேசும் வார்த்தைகள் காரணமாகி விடக்கூடாது.
தான் பேசும் எந்த ஒரு வார்த்தையும், எந்த ஒரு மனிதரையும் காயப்படுத்தி விடக்கூடாது, எவர் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் பாலச்சந்தர்.
பாலச்சந்தர் தன் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்ததற்கான காரணம் என்ன என்பதை இந்த ஒரு சம்பவமே நமக்கு புரிய வைக்கிறது.
“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.”
பாலச்சந்தர் நினைவு தினம் 23 டிசம்பர் 2014.
மார்ஷ்மெல்லோ தியரி
ஒரு ஆசிரியர் வகுப்பின் அனைத்து குழந்தைகளுக்கும் அழகான டோஃபி கொடுத்து பின்னர் ஒரு விசித்திரமான விஷயத்தைச் சொன்னார்
கேள், குழந்தைகளே! நீங்கள் அனைவரும் உங்கள் டாஃபியை பத்து நிமிடங்கள் சாப்பிட வேண்டாம் என்று கூறிவிட்டு அவர் வகுப்பறைக்கு வெளியே சென்றார்.
வகுப்பறையில் சில நிமிடங்கள் அமைதி நிலவியது, ஒவ்வொரு குழந்தையும் தங்களுக்கு முன்னால் இருந்த டோஃபியைப் பார்த்துக் கொண்டிருந்தது, ஒவ்வொரு கணமும் தங்களைத் தடுத்து நிறுத்துவது கடினம். பத்து நிமிடங்கள் முடிந்து ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மதிப்பாய்வு செய்யப்பட்டது. முழு வகுப்பிலும் ஏழு குழந்தைகள் இருந்தனர், அவர்களுடைய டோஃபிகள் அப்படியே இருந்தன, மற்ற எல்லா குழந்தைகளும் டோஃபி சாப்பிட்டு அதன் நிறம் மற்றும் சுவை பற்றி கருத்து தெரிவித்தனர். இந்த ஏழு குழந்தைகளின் பெயர்களை ஆசிரியர் தனது நாட்குறிப்பில் ரகசியமாகப் பதிவு செய்து, குறிப்பெடுத்த பிறகு படிக்கத் தொடங்கினார்.
இந்த ஆசிரியரின் பெயர் பேராசிரியர் வால்டர் மிஷல். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில்-
சில வருடங்களுக்குப் பிறகு, பேராசிரியர் வால்டர் தனது சொந்த நாட்குறிப்பைத் திறந்து ஏழு குழந்தைகளின் பெயர்களை அகற்றி அவர்களை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.
ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ஏழு குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைந்துள்ளனர் மற்றும் அவர்களின் சொந்த வயதினரிடையே மிகவும் வெற்றிகரமானவர்கள் என்பதை அவர் அறிந்து கொண்டார். பேராசிரியர் வால்டர் தனது மீதமுள்ள வகுப்பு மாணவர்களை மதிப்பாய்வு செய்தார், அவர்களில் பெரும்பாலோர் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்று கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் கடுமையான பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை எதிர்கொண்ட சிலர் இருந்தனர்.
இந்த முயற்சியும் ஆராய்ச்சியும் பேராசிரியர் வால்டரின் ஒரு வாக்கியத்தை விளைவித்தது.
"பத்து நிமிடங்கள் பொறுமையாக இருக்க முடியாத ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற முடியாது"
பேராசிரியர் வால்டர் குழந்தைகளுக்கு கொடுத்த டோஃபிக்கு "மார்ஷ்மெல்லோ" என்று பெயரிடப்பட்டதால் இந்த ஆராய்ச்சி உலக அளவில் முக்கியத்துவம் பெற்றது மற்றும் "மார்ஷ்மெல்லோ தியரி" என்று பெயரிடப்பட்டது. அது நுரை போல மென்மையாக இருந்தது.
இந்த கோட்பாட்டின் படி, உலகின் மிக வெற்றிகரமான நபர்களில் ஒருவர் 'பொறுமை' சிறப்புத் தகுதியுடன் காணப்படுகிறார், ஏனென்றால் இந்த தரம் மனிதனின் வலிமையை அதிகரிக்கிறது, இதன் காரணமாக மனிதன் கடினமான சூழ்நிலைகளில் ஏமாற்றமடையவில்லை, அவன் அசாதாரண ஆளுமை.
மூளையின் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு இது மூளைக்கான சிறப்பு உணவாகும். ஒமேகா-3 குறைபாடு அதிக மன அழுத்தத்தையும், அறிவாற்றல் இழப்பினையும் ஏற்படுத்துகிறது.
இக்கொட்டையில் உள்ள ஒமேகா-3 அமிலமானது மன அழுத்தத்தைக் குறைத்து மூளையின் நினைவாற்றலை கூட்டுவதோடு சிந்தனை செயலாக்கத்தையும் அதிகரிக்கிறது.
இதனால் இதனை சீராக உணவில் சேர்த்துக் கொண்டு மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
ஆரோக்கியமான இதயத்திற்கு :
இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம், லினோலிக் அமிலம், ஆல்பா லினோலெனிக் அமிலம், அராச்சிடோனிக் அமிலம் ஆகியவை இதயநோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.
இதனை சீராக உணவில் உட்கொள்ளும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நரம்புகளில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது.
மேலும் இது இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எண்டோடெலியல் செல் செயல்பாடுகளை பாதுகாக்கிறது. ஆரோக்கிய இதயத்திற்கு இதனை அளவோடு உண்ணலாம்.
எலும்புகளின் பலத்திற்கு :
வால்நட்டில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் பலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதிபடுத்துகிறது. இது உடலானது கால்சியம் உறிதலை ஊக்குவிக்கிறது.
உடலின் எடையை பராமரிக்க :
இதனை உட்கொள்ளும்போது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.
ஊட்டச்சத்து மிகுந்த இதனை உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுஉப்புகள், கொழுப்புகள் கிடைப்பதால் இடைவேளை உணவாகவும் உட்கொள்ளலாம்.
இதனை அதிகமாக உட்கொண்டால் இதில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். ஆதலால் இதனை அளவோடு உட்கொள்வது அவசியம்.
ஆன்டி ஆக்ஸிஜென்ட் மையம் :
ஆன்டி ஆக்ஸிஜென்ட் அதிகமுள்ள உணவுப்பொருட்களின் பட்டியலில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது.
மிகவும் அரிதான ஆன்டி ஆக்ஸிஜென்டுகளான குயினோன் ஜுக்லோன், டானின் டெல்லிமாக்ராண்டின் மற்றும் ஃபிளாவனோல் மோரின் ஆகியவை இக்கொட்டையில் உள்ளன.
இந்த ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் வேதிப்பொருட்களால் கல்லீரல் பாதிப்படைவதை தடுக்கிறது.
உடல் வளர்சிதை மாற்றம் மேம்பாடடைய :
இதில் உள்ள பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் மாங்கனீஸ், காப்பர், இரும்புச்சத்து, செம்புச்சத்து, துத்தநாகச்சத்து போன்றவை உடலின் சீரான வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.
செரிமானம், நியூகிளிக் அமில தொகுப்பு உள்ளிட்ட சீரான உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு வால்நட்டினை உண்ணலாம்.
உணவுப் பாதையின் ஆரோக்கியத்திற்கு :
இது உட்புற செரிமான மண்டலத்தின் நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய உதவுகிறது.
இதனை சீராக உட்கொள்ளும்போது லாக்டோபாசில்லஸ், ரூமினோகாக்கஸ் மற்றும் ரோஸ்புரியா போன்ற குடலின் ஆரோக்கியத்திற்கு காரணமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து உணவுப்பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
சரும பாதுகாப்பிற்கு :
இதில் உள்ள விட்டமின் இ ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளிலிருந்து சருமத்தினைப் பாதுகாக்கிறது. மேலும் இதனை உண்ணும் போது சருமச் சுருக்கங்கள் மற்றும் வறண்ட சருமம் உண்டாவது தடுக்கப்படுகிறது.
கண்களுக்கு அடியில் கருவளையத்தை நீக்க வால்நட் உள்ள பொருட்களைப் பயன்படுத்தவும். பளபளக்கும் இளமையான சருமத்தைப் பெற இக்கொட்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான கூந்தலைப் பெற :
இக்கொட்டையில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் மயிற்கால்களை வலிமையடையச் செய்து பொடுகு உள்ளிட்ட சருமப் பிரச்சினைகளை போக்குகிறது. மேலும் அடர்த்தியான, நீளமான, வலிமையான கூந்தலையும் வழங்குகிறது.
முறையான உறக்கத்திற்கு :
இக்கொட்டையினை உண்ணும்போது மெலாட்டானின் என்னும் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. மெலாட்டனின் தூக்கத்தைத் தூண்டுவதோடு அதனை முறைப்படுத்துகிறது.
முறையான ஆழ்ந்த தூக்கத்திற்கு இக்கொட்டையினை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.
வால்நட்டினைப் பற்றிய எச்சரிக்கை :
ஒருநாளைக்கு ஏழு முதல் ஒன்பது வால்நட்டுகளை உண்ணலாம். இதனை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது வயிறு வலி, வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமல், நெஞ்சு எரிச்சல் ஆகியவை உண்டாகும். அளவுக்கு அதிகமாக உண்ணும் போது உடலின் எடை அதிகரிக்கும்.













