ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வடகொரியா விஜயம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வடகொரியாவுக்கு பயணிக்கவுள்ளார். ரஷ்ய ஜனாதிபதியின் வடகொரிய விஜயத்தின் போது அவர் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இருநாட்டு தலைவர்களுக்கிடையில் தலைவர்களும் இறுதியாக செப்டம்பம் மாதம் ரஷ்யாவில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
அதேசமயம் கடந்த 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதி வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை குறித்த சந்திப்பின் போது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சில கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகியவற்றுக்கிடையிலான நெருக்கமான உறவுகள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
000