இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு பாரதப் பிரதமர் மோடி வாழ்த்து
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாட்டுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் விஷன் சாகர் ஆகியவற்றில் இலங்கை விசேட இடத்தைப் பிடித்துள்ளது என அனுரகுமார திஸாநாயக்கவுக்கான வாழ்த்து செய்தியில் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்கவுடன் நெருக்கமாக இணைந்து இரு நாடுகளினதும் மற்றும் முழுப் பிராந்தியத்தினதும் நலனுக்காகப் பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம்
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (JulieChung) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற அனுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்கா தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.
இலங்கை மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்தியமைக்கு நாமும் வாழ்த்துகிறோம்.” என பதிவிட்டுள்ளார்
000