
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படம் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று சென்னையில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. தற்போது கூலி படம் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ள நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் ஆடியோ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அப்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வரப்போவதாக எழும் தகவல்கள் குறித்து கருத்து கேட்டபோது, டென்ஷன் ஆன ரஜினிகாந்த் அரசியல் பத்தி என்கிட்ட கேள்வி கேக்காதீங்கன்னு பல தடவை சொல்லிருக்கேன் என கண்டித்தார்.
அதன்பின்னர் சினிமா சம்பந்தமாக சில கேள்விகளை பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். சமீபத்தில் திமுக விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டபோது சீனியர் திமுகவினர் குறித்து கிண்டலாக பேசியதும், அதற்கு திமுக அமைச்சர் துரைமுருகன் எதிர்வினையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva